சமையல் டிப்ஸ்

தக்காளி சாதம் - இரண்டாம் வகைஇந்த சாதம், பூண்டு, வெங்காயம் சேர்க்காமல், அதிக காரமில்லாமல், விரைவில் செய்யக்கூடிய ஒன்று. விரதம் மற்றும் பண்டிகை நாட்களுக்கு ஏற்றது.

தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
தக்காளி (நடுத்தர அளவு) - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


தாளிக்க:
நெய் அல்லது எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
முந்திரிப்பருப்பு - 5 அல்லது 6

செய்முறை:
தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு மூன்றரைக் கப் தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 முதல் 6 விசில் வரும் வரை வேக விடவும்.

சிறிது நேரம் கழித்து, குக்கரைத் திறந்து, நன்றாகக் கிளறி விடவும்.

ஒரு சிறு வாணலியில் நெய் அல்லது எண்ணையை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், சீரகம், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து சாதத்தில் கொட்டிக் கிளறவும்.

சூடாக அப்பளம், சிப்ஸ் போன்றவற்றுடன் பரிமாறவும்.
Download As PDF

தக்காளி சாதம் - முதல் வகைதேவையானப்பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - 1" துண்டு
பூண்டுப்பற்கள் - 4
பட்டை - ஒரு சிறு துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை இலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்


செய்முறை:

அரிசியைக் கழுவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற விடவும்.

வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இலேசாகக் கீறி வைக்கவும்.

முழு தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், பாத்திரத்தை மூடி வைத்து, அடுப்பை அணைத்து விடவும். சற்று நேரம் கழித்து, தக்காளியை எடுத்து அதன் தோலை உரித்து விட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். அரைத்த தக்காளிச் சாற்றுடன் தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து 4 கப் அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பிலேற்றி அதில் எண்ணையை விடவும். எண்ணை காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பட்டை இலை ஆகியவற்றைச் சேர்த்து சற்று வறுத்து, பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று மினுமினுப்பாக வதங்கியவுடன், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும். பின்னர் அதில் ஊற வைத்துள்ள அரிசியை, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு சேர்க்கவும். அரிசியைத் தொட்டால் சுடும் அளவிற்கு வரும் வரை கவனமாகக் கிளறி விடவும். பின்னர் அதில் தக்காளிச் சாற்றையும், எலுமிச்சம் சாற்றையும் சேர்த்துக் கிளறி மூடி போட்டு 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக விட்டு, குக்கர் ஆறியதும், திறந்து கவனமாகக் கிளறி விடவும்.

விருப்பப்பட்டால், கொத்துமல்லித்தழையைத் தூவி அலங்கரிக்கலாம்.

வறுத்த முந்திரிப்பருப்பு, வேக வைத்தப் பட்டாணி 
ஆகியவற்றையும் இத்துடன் கலந்துப் பரிமாறலாம்.
Download As PDF

பூண்டு சாதம்


தேவையானப்பொருட்கள்:

சாதம் - 2 கப் (இருவருக்கு தேவையான அளவு)
பூண்டு பற்கள் (சிறிய அளவு) - 10 முதல் 15 வரை
காய்ந்த மிளகாய் - 2
தனியா - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


செய்முறை:

ஒரு சிறு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். கடைசியில் 4 அல்லது 4 பூண்டு பற்களைப் போட்டு சற்று வதக்கி எடுத்து ஆற விடவும். ஆறிய பின், வறுத்த அனைத்தையும் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு அதில் மீதமுள்ள பூண்டுப்பற்களைப் போட்டு சிவக்க வதக்கி எடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.  அதே எண்ணையில் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.  அடுப்பை தணித்து வைத்துக் கொண்டு, சாதம் மற்றும் பொடித்து வைத்துள்ளப் பொடி, உப்பு  ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும்.  கடைசியில் வதக்கி வைத்துள்ளப் பூண்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

வெள்ளரிக்காய் பச்சடியுடன் பரிமாறவும்.

கவனிக்க: எண்ணைக்கு பதில் சிறிது நெய்யிலும் பூண்டை வதக்கி போடலாம். கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பிற்குப் பதிலாக, பொட்டுக்கடலை, வேர்க்கடலை ஆகியவற்றைப் பொடித்தும் சேர்க்கலாம். பொட்டுக்கடலை/வேர்க்கடலை சேர்ப்பதென்றால் வறுக்கத் தேவையில்லை.
Download As PDF

Friday, January 31, 2014

லட்டு செய்வது எப்பெடி

திருப்பதி என்ற பெயரை கேட்டாலே எல்லோருக்கும் லட்டுதான் ஞாபகத்து வரும். அந்த அளவுக்கு பிரபலமான ஒரு இனிப்பு வகை என்று கூட சொல்லலாம். சுவை அணைவருக்கும் பிடித்த சுவையானதாகவே லட்டு இருக்கிறது. நீங்களும் உங்க வீட்டில் லட்டு செய்து சுவைக்க விருப்பமா, இதோ செய்து உங்கள் உறவுகளுக்கும் கொடுத்து கொண்டாடி மகிழுங்கள்!

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 கிலோ

சர்க்கரை – 1-1/4 கிலோ

முந்திரி – 15

விதையில்லா திராட்சை – 10

சோடா – 1 சிட்டிகை

கற்கண்டு – 10 கிராம்

பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை

எண்ணெய் – வறுப்பதற்கு

குங்குமப்பூ – 1 சிட்டிகை

ஏலக்காய் – 5

செய்முறை:


மாவு, சோடா, நீர் சேர்த்து மாவு போல் கரைத்து சூடான எண்ணெயில் ஜார்னியின் மூலமாக விழ வைத்து வறுத்து எடுத்து பூந்தி செய்யவும்.

சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்க வைத்து சர்க்கரை சிரப் செய்யவும்.

இந்த சிரப்பில் ஒரு சிட்டிகை கேசரிப்பவுடர் சேர்க்கவும்.

பூந்திகளை அந்த சர்க்கரை சிரப்பில் போட்டு நன்கு கலக்கவும்.

முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து இந்த கலவையில் சேர்க்கவும்.

ஏலக்காய் பவுடர் விதையில்லா திராட்சை சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த கலவையானது கையில் பிடிக்கும் அளவிற்கு சூடு குறைந்து விடும். இப்பொழுது சீரான உருண்டைகளாக கையில் இலேசாக அழுத்தி பிடிக்கவும். ஆற விடவும்.


குறிப்பு:
சர்க்கரை சிரப் சூடாக இருக்கும் போது சிரப்பில் பூந்தியை சேர்க்கவும். 
Download As PDF

Tuesday, January 28, 2014

புதினா சாதம்தேவையானப்பொருட்கள்:

அரிசி - 2 கப்
தேங்காய் பால் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைக்க:

புதினா இலை - 2 கப்
கொத்துமல்லி இலை - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
இஞ்சி - 1" துண்டு
பூண்டு பற்கள் - 2


தாளிக்க:

எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
பட்டை - 2 சிறிய துண்டு
கிராம்பு - 2
முழு ஏலக்காய் - 2
பட்டை இலை - சிறு துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்


செய்முறை:
அரிசியைக் கழுவி 15 நிமிடங்கள் ஊற விடவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பிரஷ்ஷர் குக்கரில் எண்ணையை விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பட்டை இலை, சோம்பு அக்கியவற்றைப் போட்டு சற்று வறுக்கவும். பின் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள புதினா விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் அதில் அரிசியை தண்ணீரை நன்றாக வடித்து விட்டு போடவும். அத்துடன் தேங்காய் பால், மூன்று கப் தண்ணீர் (தேங்காய் பால் மற்றும் தண்ணீர் இரண்டும் சேர்ந்து 4 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.) விட்டு கிளறி விடவும். மூடி வைத்து, மூன்று விசில் வரும் வரை வேக விட்டு இறக்கி வைக்கவும்.

சற்று ஆறிய பின் குக்கரைத் திற்ந்து, எலுமிச்சம் சாறு சேர்த்து கிளறவும்.

அதன் மேல் சிறிது புதினா இலைகள் மற்றும், எலுமிச்சம் பழத்துண்டுகளை வைத்து பரிமாறவும்.

குறிப்பு: இதை பாசுமதி அரிசியிலும் செய்யலாம். எண்ணைக்குப் பதில் நெய்யையும் சேர்க்கலாம். தேங்காய்பால் சேர்க்காமல், வெறும் தண்ணீரிலும் செய்யலாம்.

குருமாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

ன்றி அடுப்பங்கரை இணையம் ...
Download As PDF

எலுமிச்சம்பழ சாதம்தேவையானப்பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
எலுமிச்சம் பழம் - 2
சிவப்பு அல்லது பச்சை மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)
நல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பச்சரிசியைக் கழுவி, குழைய விடாமல் சாதமாக வேக வைத்தெடுக்கவும். ஒரு தட்டிலோ அல்லது வாயகன்ற பாத்திரத்திலோக் கொட்டி பரப்பி விடவும். அதன் மேல் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் எண்ணையை தெளிக்கவும்.

எலுமிச்சம் பழத்திலிருந்து சாற்றைப் பிழிந்தெடுத்துக் கொள்ளவும். அதில் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பைப் போட்டு இலேசாக சிவக்கும் வரை வறுக்கவும். பின் அத்துடன் முந்திரிப்பருப்பு, மிளகாய் (ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போடவும்), பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு சற்று வதக்கி, எலுமிச்சை சாற்றில் கொட்டவும். இத்துடன் ஆற வைத்துள்ள சாதத்தைச் சேர்த்து கவனமாகக் கிளறவும்.

குறிப்பு: நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதானால், தாளிப்பிலேயே மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதிலேயே சாதத்தையும் கொட்டி சிறு தீயில் வைத்து, ஓரிரு நிமிடங்கள் கிளறி விட்டு, கீழெ இறக்கி வைக்குமுன், எலுமிச்சைச் சாற்றை சேர்த்து கிளறி, இறக்கி வைக்கவும்.

கொத்துமல்லித்தழை மற்றும் சிறிதாக நறுக்கிய காரட் துண்டுகளைத் தூவி அலங்கரிக்கலாம்.

ன்றி அடுப்பங்கரை இணையம் ....
Download As PDF

புளிச்சாதம்


தேவையானப்பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
புளி - எலுமிச்சம் பழ அளவு
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி விதை - 1 டீஸ்பூன்
நல்லெண்ணை - 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியைக் கழுவி குழையாமல், பொல பொலவென்று சாதமாக வேக வைத்தெடுத்து, ஒரு தட்டில் கொட்டி பரப்பி விடவும். அதன் மேல் ஓரிரு டீஸ்பூன் எண்ணையை தெளித்து விடவும்.

புளியையும் உப்பையும் ஊறவைத்து, திக்காக பிழிந்தெடுக்கவும். 2 கப் புளித்தண்ணீர் கிடைக்கும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். பின் அதில் வேர்க்கடலை, மிளகாய் (மிளகாயை 4 அல்லது 5 துண்டுகளாகக் கிள்ளிப் போடவும்), கறிவேப்பிலைச் சேர்த்து சற்று வதக்கி அத்துடன் புளித்தண்ணீரை ஊற்றவும். அதில் மஞ்சள் தூள், பெருங்காய்த்தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இதனிடையே, இன்னொரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் ஒரு காய்ந்த மிளகாய், கொத்துமல்லி விதை மற்றும் வெந்தயத்தை வறுத்தெடுத்து, ஆறியவுடன் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

புளிக்கரைசல் நன்றாகக் கொதித்து சற்று திக்கானதும், பொடித்து வைத்துள்ள வெந்தய-தனியாப் பொடியைச் சேர்த்துக் கிளறி விடவும். புளிக்காய்ச்சல் கெட்டியாகி, எண்ணை மேலே மிதந்து வரும் பொழுது, இறக்கி விடவும்.

இந்தப் புளிக்காய்ச்சலை சாதத்தின் மேல் சிறிது சிறிதாகச் சேர்த்து கலந்து விடவும். கலக்கும் பொழுது தேவைப்பட்டால் மேலும் சிறிது எண்ணை விட்டுக் கொள்ளலாம்.

குறிப்பு: இதில் மற்ற எண்ணையையும் உபயோகிக்கலாம். ஆனால் புளிச்சாதத்திற்கு நல்லெண்ணை சேர்த்தால்தான் வாசமாக இருக்கும். இதில் வேக வைத்த கறுப்பு கொண்டைக்கடலையையும் புளிக்காய்ச்சல் கொதிக்கும் பொழுது சேர்த்து செய்யலாம்.

நன்றி அடுப்பங்கரை இணையம் ....
Download As PDF

Sunday, January 19, 2014

உருளைக்கிழங்கு பட்டாணி குருமாதேவையானப்பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
பச்சை பட்டாணி - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


அரைக்க:
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 2 அல்லது 3
பூண்டுப்பற்கள் - 2
இஞ்சி - 1" துண்டு
பச்சை மிளகாய் - 1 அல்லது 2

தாளிக்க:
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - ஒரு சிறு துண்டு
கிராம்பு - 2

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பட்டாணியையும் வேக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவல், கசகசா, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்றாக அரைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றைப் போடவும். சோம்பு சற்று சிவந்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் வத்ங்கியவுடன், தக்காளியைச் சேர்த்து அத்துடன் உப்பு மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக மசிந்தவுடன் சாம்பாரி பொடியைச் சேர்த்து கிளறவும். பின்னர் அதில் உருளைக் கிழங்கு, பட்டாணியைச் சேர்த்து கிளறி விடவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து பிரட்டி விடவும். பின்னர் அதில் கிழங்கு மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்க்கவும். நன்றாக கிளறி விட்டு, மூடி வைத்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன், இறக்கி வைத்து எலுமிச்சை சாற்றை சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறி விடவும்.

நன்றி அடுப்பங்கரை இணையம் 
Download As PDF

Sunday, January 05, 2014

வாழைத்தண்டு சூப்

Posted Image

வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால் கீழ்கண்ட நோய்களுக்கு கண்கண்ட மருந்தாகும். மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும். இதற்கு எல்லாம் வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி பயங்கரமான வலி ஏற்படும். இந்த கற்களை அகற்ற வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும். வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.

மேலும் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உபாதைகளையும், வெள்ளைப்படுதலையும் குணப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றும். தோல் நோய்களைக் குணப்படுத்தும்.

உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும். நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும்.

இடுப்பில் கையை வைத்து பின்னோக்கி வளைய வேண்டும்.

கையை பிரித்து குதிகால் அல்லது கணுக்காலை பற்றி பிடிக்க வேண்டும். வயிற்றை முன்னோக்கி தள்ளி ஆசனத்தை சரி செய்யவும்.

30 எண்ணிக்கை சாதாரண மூச்சில் இருக்கவும்.

குதிகால்கள் மீது அமர்ந்து ஓய்வு எடுத்து திரும்பவும் செய்யவும். மூன்று முறை செய்தால் போதும்.

பலன்கள்:

ஆஸ்த்மா, ரத்த சோகை போக்கும். சிறு வயதில் ஆரம்பித்தால் உயரம் பெறலாம். கண் பார்வை தெளிவடையும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. கூன் முதுகு நிமிர்கிறது. 
Download As PDF

Friday, December 27, 2013

சமையலில் செய்யக்கூடாதவை... ....செய்ய வேண்டியவை....


சமையலில் செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

....செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்
நன்றி தமிழ் rokkers இணையம் 

Download As PDF

Tuesday, April 30, 2013

பானகம்:-மற்றும் , BUTTERMILK. நீர்மோர்.தேவையானவை:-

வெல்லம் - 1 கப்
எலுமிச்சைச் சாறு - 1/2 டேபிள் ஸ்பூன்
சுக்குப் பொடி - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்
புளி - 1 சுளை ( விரும்பினால்)
தண்ணீர் - 1 லி

செய்முறை:-
வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். புளி சேர்ப்பதாக இருந்தால் இந்தத் தண்ணீரில் புளியையும் போட்டுக் கரைத்து வடிகட்டலாம். எலுமிச்சைச்சாறு, சுக்குப் பொடி, உப்பு, ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்கு கலக்கி வழங்கவும். 


PAANAGAM.  பானகம்.:-

NEEDED:-

JAGGERY - 1 CUP
LEMON JUICE - 1/2 TBLSPN,
SUKKUP PODI - 1 PINCH
SALT - 1 PINCH
CARDAMOM POWDER - 1/2 TSP
TAMARIND - 1 POD ( OPTIONAL)
WATER - 1LITRE.

METHOD:-
SOAK JAGGERY IN WATER AND FILTER IT. ( IF DESIRED SOAK AND SQUEZE THE TAMARIND IN THIS WATER . ) ADD LEMON JUICE, SUKKUP PODI, SALT, CARDAMOM POWDER. MIX WELL AND SERVE. நீர்மோர்

தேவையானவை:-
தயிர் - 1 கப்
தண்ணீர் - 5 கப்
ஜீரா - 1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை - 1 டீஸ்பூன் பொடியாக அரிந்தது
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:-
தயிரை மத்துக் கொண்டு நன்கு கடையவும். அதில் உப்பு, இரண்டாகக் கீறிய பச்சைமிளகாய், ஜீரகம் பெருங்காயப் பொடி, கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை போட்டுத் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வழங்கவும். தேவைப்பட்டால் ஐஸ்துண்டுகள் சேர்க்கவும்.

BUTTERMILK.  நீர்மோர்.

BUTTERMILK:-

NEEDED:-
CURD -  1 CUP
WATER - 5 CUPS
JEERA - 1 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH
CURRY, CORIANDER LEAVES - 1 TSP CHOPPED
GREEN CHILLY - ( OPTIONAL). 1 NO.
SALT - 1 TSP

METHOD:-
BEAT CURD WELL WITH A LADDLE/ MATHU. ADD SALT, HALVED GREEN CHILLY, JEERA, ASAFOETIDA POWDER, CURRY, CORIANDER LEAVES. ADD WATER, MIX WELL AND SERVE. IF DESIRED ADD ICE CUBES.

நன்றி தேனுஸ் recipe இணையம் 
 photo newnew.gif
Download As PDF

மணத்தக்காளிக் கீரை மண்டி :-தேவையானவை:-

மணத்தக்காளிக் கீரை அல்லது பொன்னாங்கண்ணிக் கீரை அல்லது அரைக்கீரை, அல்லது முளைக்கீரை அல்லது அகத்திக் கீரை. - ஒரு கட்டு.
சின்ன வெங்காயம் - 10 தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.
அரிசி களைந்த கெட்டித்தண்ணீர் - 2 கப்
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் நைசாக அரைக்கவும்.
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளி வைக்கவும். 
உப்பு - 1/2 டீஸ்பூன்


செய்முறை:-
கீரையை நன்கு கழுவி ஆய்ந்து நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும், சீரகம் போட்டுப் பொறிந்ததும், வரமிளகாய் சின்ன வெங்காயம் தாளிக்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் கீரையை சேர்க்கவும்.  2 நிமிடம் கீரையை வதக்கியபின் அரிசி களைந்த கெட்டித் தண்ணீரை ஊற்றவும். கொதித்து வரும்போது சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். 

வெங்காயமும் கீரையும் வெந்தபின் உப்பு,  அரைத்த தேங்காய் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும். இதை சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். சூப் போல அப்படியேயும் குடிக்கலாம்.


NEEDED:-
MANATHAKKAALIK KEERAI - 1 BUNCH
SMALL ONION - 10 NOS PEEL AND HALVED
RICE WASHED WATER - 2 CUP
COCONUT - 1 TBLSPN. GROUND FINELY
OIL - 2 TSP
ORID DHAL - 1 TSP
JEERA - 1/2 TSP
RED CHILLIE -1 NO HALVED
SALT - 1/2 TSP


METHOD:-

CLEAN, WASH AND CHOP THE GREENS. HEAT OIL IN A PAN ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN  ADD JEERA, RED CHILLIE AND SMALL ONIONS. SAUTE FOR A MINUTE THEN ADD THE GREENS. SAUTE FOR ANOTHER 2 MINUTES THEN ADD THE RICE WASHED WATER. BRING TO BOIL AND SIMMER IT FOR ANOTHER 5 MINUTES. ADD THE SALT AND COCONUT PASTE AND REMOVE FROM FIRE.
WE CAN DRINK THIS OR CAN EAT THIS MIXED WITH PLAIN RICE. 


நன்றி தேனுஸ் recpie இணையம் 
 photo newnew.gif
Download As PDF

குடை மிளகாய் சட்னி

குடை மிளகாய் சட்னிகுடை மிளகாயில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. 

தேவையான பொருட்கள்... 
குடை மிளகாய் - 2 
எண்ணெய் - 1 ஸ்பூன் 
கடுகு- அரை ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கடலை பருப்பு - 1 ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 
தனியா - அரை ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 2 
எள்ளு - அரை ஸ்பூன் 
சீரகம் - சிறிதளவு 
கறிவேப்பிலை - சிறிதளவு 


செய்முறை.... 
• குடை மிளகாயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

• கடாயில் எண்ணெய் ஊற்றாமல் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, எள்ளு, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும் 

• பின்னர் அதே கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி குடைமிளகாயை போட்டு நன்றாக வதக்கவும் 

• வதக்கியவை ஆறியவுடன் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் 

• கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து சட்னியில் கொட்டவும் 

• சுவையான குடைமிளகாய் சட்னி ரெடி.


நன்றி மாலைமலர் இணையம் 
 photo newnew.gif
Download As PDF

0Comment Count
10View count
25/10/2012
0Comment Count
6View count
25/10/2012
0Comment Count
16View count
25/10/2012
0Comment Count
101View count
25/10/2012
0Comment Count
11View count
01/05/2012
0Comment Count
12View count
03/04/2012
0Comment Count
109View count
07/02/2012
0Comment Count
29View count
30/01/2012
0Comment Count
11View count
30/01/2012
0Comment Count
18View count
18/01/2012
0Comment Count
9View count
18/01/2012
0Comment Count
9View count
18/01/2012
0Comment Count
255View count
18/01/2012
0Comment Count
49View count
18/01/2012
0Comment Count
20View count
18/01/2012
0Comment Count
45View count
18/01/2012
0Comment Count
11View count
18/01/2012
0Comment Count
12View count
18/01/2012
0Comment Count
27View count
05/01/2012
1Comment Count
38View count
29/11/2011
0Comment Count
33View count
16/10/2011
0Comment Count
11View count
16/10/2011
0Comment Count
2View count
14/10/2011
0Comment Count
31View count
07/09/2011
0Comment Count
10View count
07/09/2011
Download As PDF

No comments:

Post a Comment