Monday, June 18, 2012

ஜிம்முக்குப் போக சரியான வயசு


ஜிம்முக்குப் போக சரியான வயசு


உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தசைகள் வலுப்பெறவும் அழகான உடல் அமைப்பு கிடைக்கவும் வழி செய்வதுதான் உடற்பயிற்சி. ஆனால், 'ஜிம்’ செல்வதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. ஆனால், ஒவ்வொரு வயதினரும் அவரவர் உடல்வாகுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பது இங்கே முக்கியம். உடற்பயிற்சிகளில், கார்டியாக் ஃபிட்னெஸ் (Cardiac fitness), ஏரோபிக்ஸ் (Aerobics), வெயிட் லிஃப்டிங் ட்ரெயினிங் (weight lifting training) என மூன்று விதங்கள் இருக்கின்றன. 
சைக்கிளிங், ரெகம்பென்ட் பைக் (Recumbent Bike), ட்ரெட் மில் (Treadmill) போன்ற பயிற்சிகள் கார்டியாக் ஃபிட்னெஸ் உடற்பயிற்சிகள். ஏரோபிக்ஸ் பயிற்சிகளில், உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளுக்கும் அதன் அதன் அசைவுகளுக்குத் தகுந்தாற்போன்று (எடை எதுவும் இன்றி) பல்வேறு திசைகளில் பயிற்சி மேற்கொள்ளப்படும். வெயிட் லிஃப்டிங் பயிற்சிகளில், அதிகமான எடை தூக்கி உடற்பயிற்சி செய்வார்கள். 

18 வயதில் இருந்து 21 வயது வரையிலும் உடம்பில் உள்ள எலும்புகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். எனவே, இத்தகையப் பருவத்தில் இருப்பவர்கள், கார்டியாக் ஃபிட்னெஸ் மற்றும் ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்வது மிகவும் நல்லது!
Download As PDF

Friday, June 15, 2012

எனக்குள்ளும் ஒருவன்


எனக்குள்ளும் ஒருவன்


நான் ஜதார்த்தவாதியாம்
சுயநலவாதியாம் - இல்லை
நான் நடைமுறைவாதியடா 
என்னை வாழவிடு


மனிதமே..!!!
மேவிய இரு
பனிக்கட்டிகளுக்குள்ளும்
துடிக்கிறது ஒரு நுண்ணுயிர்
நீல வானச் சுவர்
எல்லை கடந்து - எனை
அழைக்கிறது ஓர் கூக்குரல்
எனக்குள்ளே ஒருவன்
அவன் கைகாலிழந்து
முடமாகிப் போனவனா - இல்லை
இதயமிழந்தவன்
இரக்கமிழந்தவன்
பெண்ணின்
அந்தரங்கப் படுசுடுகாடு
தனித்து நான்
பிணமாகிப் போனேன்
மரணத்தை முத்தமிட
ஓர் யுத்தம் தொடங்கப்போகிறேன்
சிரிப்பை அம்மணமாக்கி
குதூகலிக்கிறது
ஓர் காதல் நாடகம்
அழிக்கபடுகிறது
ஏதுமறியாப் பச்சைக்கரு
சந்நியாசப் பாதைவழி
நான் சறுக்கிக் கொள்வேன்
அன்றென்னை அந்நியனாய்
உணரப் போகிறது இந்தப்
பெண்கள் கூட்டம்
திருமணத்திலும்
மரண ஊர்வலத்திலும்
ஒருகிளையில் பூத்த
பூக்கள் தானே - அவை..!!
அதை அதிஷ்டம்
என்றனர் சிலர்...
தாவரங்களும்
உயிர்களாமே...?
விஞ்ஞானம் சொல்கிறது
உயிர்வதை
கொடிய பாவம்
சமயவழி காட்டியது...!!!
மூடவாழ்வின்
முட்டாள்த் தனத்தில்
மூழ்கிக் களிப்பதற்காய்
எனக்குள்ளும்
ஒரு மாற்றான்
மனது முடமாகிப் போனவன்.
நன்றி lankasri இணையம் 
Download As PDF

Friday, June 08, 2012

உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு நன்கு உண்ண வேண்டும். ஆனால் அந்த உணவே அளவுக்கு அதிகமாக உண்டால் உடல் பெருத்து விடும்.
சிலருக்கு வயிறு நிறைய சாப்பிட்டு 2-3 மணி நேரத்திலேயே மீண்டும் பசி எடுத்துவிடும். அப்படி பசி எடுக்கும் போதெல்லாம் சாப்பிட்டால் குண்டு தான் ஆக நேரிடும்.
அந்த பசியைக் கட்டுப்படுத்த ஒரு சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகள் பசியைக் அடக்குவதோடு, உணவுக் கட்டுப்பாட்டோடும் வைக்கிறது.
ஆப்பிள்: ஆப்பிளானது உடலுக்கு ஆரோக்கியமானது மட்டுமல்லாமல், பசியையும் கட்டுப்படுத்துகிறது. ஏனென்றால் ஆப்பிளில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளது, இதனால் வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.
ஏனெனில் ஆப்பிளை சாப்பிடும் போது நீண்ட நேரம் மென்று திண்பதால், நம் வயிறு நிறைந்துவிடும். மேலும் இதை நாம் சாப்பிட்டால் நம் எடையும் குறையும்.
காய்கறிகள்: காய்கறிகள் உடலுக்கு மிகவும் சிறந்த அதிகமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருள். அந்த காய்கறிகளில் கீரை வகைகள், முட்டைக் கோஸ், பசலைக் கீரை, கேரட் போன்றவற்றை அதிகம் உண்பதால் பசி குறைவதோடு, உடலானது நன்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
மேலும் காய்கறிகளை சூப் அல்லது ஜூஸ் செய்து குடித்தால் மிகவும் நல்லது.
வாழைப்பழம்: தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டால் பசி எடுக்காமல் இருப்பதோடு, சுறுசுறுப்பாகவும் இருக்கும். இது ஒரு எனர்ஜி பூஸ்டர் பழம், ஆகவே பசி வந்தால் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுங்கள். ஏனென்றால் இதில் உள்ள இனிப்புப் பொருள் பசியைக் கட்டுப்படுத்தும். மேலும் ஒரு நாளைக்கு இரண்டு பழத்திற்கு மேல் சாப்பிட வேண்டாம்.
இறால்: இதில் கலோரி குறைவாக இருப்பதால், பசியை நன்கு கட்டுப்படுத்தும். மேலும் இது உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு மிகச்சிறந்த உணவு. இந்த இறாலை வேக வைத்து, சாஸ் அல்லது சீஸோடு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டால் சுவையாக இருப்பதோடு, எடையையும் குறைக்கிறது.
நட்ஸ்: நட்ஸில் ஒன்றான அல்மண்ட்ஸ் மற்றும் பைனில் அதிகமாக புரோட்டின் மற்றும் இரும்புச்சத்து இருக்கிறது. இது உடலில் உள்ள பசியைத் தூண்டும் ஹார்மோனின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
இதை காய்கறிகளோடு சேர்த்தும் சாப்பிடலாம். இதிலும் கலோரி குறைவாக இருப்பதால் எடையை குறைக்கவும் உதவுகிறது.
Download As PDF

Thursday, June 07, 2012

ஔவையார் (பிறரை பழித்துப் பேசாதீர்)


பிறரை பழித்துப் பேசாதீர்

* உங்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர் களோ, அதே
அளவிற்கு பிறர் மீதும் நேசம் காட்டுங்கள். அவர்கள்
உங்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை
புரிந்து கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும், பிறரை இழிவாக
பேசுதலும், வீண்பழி சுமத்துதலும் கூடாது. இத்தகைய
செயல்களால் வீண் பகை வளருமே தவிர, பெயருக்குக் கூட நன்மை
உண்டாகாது. மேலும் இத்தகைய குணமுடையவர்களிடம் பாசம்,
பரிதாபம், இரக்கம், கருணை என எத்தகைய நற்பண்புகளும்
இருக்காது.

* மனிதர்களுக்கு ஏற்படும் துன்பமானது, வெளியில்
எங்கிருந்தோ வருவதில்லை. அவரவர் நடந்து கொள்ளும்
விதத்திற்கேற்ப அவர்களுக்கு திரும்பக்கிடைக்கிறது. பிறரை
பழிப்பதாலும் நமக்கு துன்பம் வரும். ஆகவே, பழிச்சொல்லை
விட்டு, அனைவரிடமும் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
அத்தகையவர்களே இறைவனால் விரும்பப்படுவர்.

* சிலர் மற்றவர்களை பற்றி குற்றம் சொல்லுவதையே வழக்கமாக
கொண்டிருப்பர். பிறர் செய்யும் நல்ல செயல்களைக்கூட மாற்றி
திரித்து பேசுவர். இப்படி செய்யவே கூடாது. அடுத்தவர்களை
குற்றம் சொல்லிக் கொண்டிருப்பவர்களிடம் யாரும் நெருங்க
மாட்டார்கள். ஒருகட்டத்தில் அவர் தன் சுற்றத்தார்
அனைவரையும் இழந்து தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலைதான்
வரும். இறுதிவரையில் அவருடன் சொந்தம், உறவு என யாரும்
இல்லாமலேயே போய்விடுவர். ஆகவே, ஒருவர் எத்தகைய செயல்
செய்தாலும், அதை விமர்சனம் செய்து பேசாதீர்கள்.
Download As PDF

தொப்பையைக் குறைப்பதற்கான மிகவும் எளிமையான முறை
தொப்பையைக் குறைப்பதற்கான மிகவும் எளிமையான முறை இது. முதலில் தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தலையில் இரு பக்கமும் விரல்களால் தொட்டபடியே தலையை மேலே கொண்டு வந்து நன்றாக முதுகை வளைக்க வேண்டும். இந்தப் பயிற்சியினால் வயிற்றிக் மேல் பகுதிக்கு நல்ல அழுத்தம் கிடைக்கிறது.

இதனால் வயிற்றின் மேல் பகுதியில் உள்ள தசை இறுகி தொப்பை குறையும். முதுகு வலி உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி ஏற்றது. இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து வந்தால் தொப்பையும் படிப்படியாக குறையும். மற்றும் முதுகு வலி உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த உடற்பயிற்சியாகும்.  
Download As PDF

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்


இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.
15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.
நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.
மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES (Monitor Energy Saver). இதனைhttp://monitores.googlecode.com/files/ MonitorES_05.exe என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன் http://greenutils.com/ Site/GreenUtils.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.
Download As PDF