Wednesday, August 29, 2012

மென்பொருள் செய்தி கோப்பறைகளை தேவையான நிறத்தில் மாற்றுவதற்கு

உங்களது கணனியில் உள்ள கோப்பறைகளுக்கு விதவிதமான கலர்களை தரலாம். இதன் மூலம் குறிப்பிட்ட கோப்பை தேடுவது மிக எளிது.
உதாரணமாக புகைப்படங்களுக்கு நாம் சிகப்பு நிறத்தினை வைத்து விட்டால், புகைப்படம் உள்ள கோப்பறைகளை எல்லாம் சிகப்பு நிறம் என கண்டுகொள்ளலாம்.
அதைப் போலவே நமது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், அவர்கள் சம்பந்தப்பட்ட கோப்பறைகளுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் என நிறங்களை கொடுத்து விட்டால் தேடுவதற்கு வசதியாக இருக்கும்.
1.5 எம்.பி கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதனை நிறுவிய பின்னர், உங்கள் கணனியில் உள்ள கோப்பறையை ரைட் கிளிக் செய்து ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கு வேண்டிய நிறத்தினை கிளிக் செய்து, மாற்றலாம்.
Download As PDF

Saturday, August 11, 2012

ஆலயமாகும் வீடுவீட்டை அலங்கரிப்பது சிறந்த கலை. சிறிய வீடோ, பெரிய வீடோ இருக்கும் இடத்திற்கு ஏற்ப சின்ன, சின்னதாய் அலங்கரித்தால் மனத்திற்கு பிடித்த மாதிரி வீடு அழகாகும். வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே அழகுதான்.
சின்ன குழந்தைகள் இருந்தால் கண்டதையும் எடுத்து கொட்டி கவிழ்த்து விடுவார்கள். அவ்வப்போது அதை ஒதுக்கி சுத்தம் செய்தால் போதும் வீடு பளிச்தான். அந்தந்த அறைக்கு உரிய பொருட்களை மட்டும் வைத்து கசகச என மற்ற பொருட்களை சேர்த்தாமல் இருந்தாலும் அழகாய் இருக்கும்.
சுவற்றில் படம் வரைவது என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை இஷ்டம்.
அதை துடைத்தாலும் போகாது. மனதைக் கவரும் வர்ணங்களும், இயற்கை காட்சிகளும் நிறைந்த பேப்பர்களை ஒட்டலாம். வீட்டை அழகு படுத்தும் இன்னொரு பொருள் க்ரோட்டன்ஸ் செடி.. என்னதான் செடியில் பூ இருந்து அழகு கொடுத்தாலும், பூக்காத க்ரோட்டன்ஸ் வாங்கி வத்தால் அது ஒரு அழகு தான்.
மீன் தொட்டி வாங்கி வைத்து அதில் கோல்ட் ஃபிஷ் மட்டும் இருந்தால் பார்க்க ரிச் ஆக அழகாய் இருக்கும். பாட் (மண் பானை)பெயிண்டிங்கை வீட்டின் மூலை மற்றும் ஷோ கேஸில் வைத்தாலும் அழகாய் இருக்கும். வீட்டை அழகு படுத்துவதில் பிள்ளையாருக்கு அதிக பங்கு உள்ளது.பிள்ளையார் மட்டும் எந்த வடிவிலும் வேண்டுமென்றாலும் வருவார்.
அங்கங்கே பிள்ளையார் மார்டன் சிலை இருந்தால் கொள்ளை அழகுதான். ஒரு பெரிய உருளி வாங்கி வைத்து நிறைய பூக்கள் போட்டாலும் அழகாய் இருக்கும். எல்லா அறைகளுக்கும் சுவரின் கலருக்கு கான்ட்ராஸ்ட்டான ஸ்க்ரீன் கட்டிவிட்டால் பார்க்க அட்ராக்டிவ் ஆக இருக்கும்
Download As PDF

Wednesday, August 01, 2012

நிறைவான வாழ்க்கை வேண்டுமா?


ஒருவருக்குத் தீங்கு செய்பவர்கள் தம்மால் தீங்கு
செய்யப்பட்டவர்களின் கண்களின் முன்பாகவே கேடு அடைவது
திண்ணம்.
தூரத்திலிருந்து துன்பம் செய்கிறவனை வெறுப்பதைக்
காட்டிலும் அருகிலிருந்து துன்பம் செய்கிறவனை அதிகம்
வெறுக்க வேண்டும். புறப்பகையைவிட உட்பகையே
அபாயகரமானது.
புண்ணியத்தினால் கிடைத்த தனம் குறைவுபடாது. தன்னுடைய
தனத்தைத் தான் மட்டுமே அனுபவிப்பது தகுதியுடையதல்ல.
யாசகர்கள் எதைக் கேட்க நினைத்தார்களோ அதைக் கொடுத்தால்
அல்லாமல் அவரால் தரப்பட்ட புகழ் நில்லாது.
ஒருவருக்கு லாபத்துக்குக் கொடுப்பதைக் காட்டிலும்
இரப்பவர்க்குக் கொடுப்பதில் அனேகங்கோடி
இன்பமுண்டாகும்.
சிங்கத்துக்கு தான் வந்த வழியைத் திரும்பிப் பார்த்தல்
இயற்கை.
யார் எதைச் சொன்னாலும் குற்றமுடையோர் தம்மைப்பற்றித்
தாம் சொல்கிறார்கள் என்ற எண்ணிக் கொள்வார்கள். அவர்களிடம்
குற்றம் இருக்கிற குற்றம்தான் இதற்குக் காரணம்.
இருவர் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கும் போது, அதில்
அன்னியர் தலையிடுவது அறிவுடைமையாகாது.
ஒருவனுக்குப் பிறக்குமிடம், பழகும் இடம், உறையும் இடம்
ஆகியவை நல்ல இடங்களாக இருப்பின் நன்மை பயக்கும்.
நல்ல குலத்தில் நல்லோருக்குப் பிறந்து, நல்லோருடன்
வளர்ந்து, பெரியோர்களுடன் சேர்ந்து பெருமைகொண்டு வாழ்பவன்
வாழ்க்கையில் குறையேதுமில்லாமல் நிறைவே
நிறைந்திருக்கும்.
நல்லது செய்பவன் எந்நாளும் மனத்திருப்தியோடு வாழலாம்.
பொல்லாங்கு செய்பவன் புழுங்கி புழுங்கிச் செத்துக்
கொண்டிருப்பான்.
-அதிவீரராமபாண்டியன்-
Download As PDF