Wednesday, March 09, 2016

தினமும் ஏதேனும் ஒரு வகை பழச்சாறுகள் குடியுங்கள்,,,,,

தினமும் ஏதேனும் ஒரு வகை பழச்சாறினை அருந்தி பயன்களை பெறுங்கள்!

தினமும் ஏதேனும் ஒரு வகை பழச்சாறினை அருந்தி வந்தால் ஆரோக்கியம் கிடைக்கும்.
மேலும், நோயெதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
ஆப்பிள் பழச்சாறு
ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது.
ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை குணமாகும்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை சாப்பிட்டால் பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுத்தால் உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.
திராட்சை சாறு
திராட்சை சாறு தொடர்ந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), மஞ்சள் காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.
திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.
ஆரஞ்சு சாறு
தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்ச் சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம். இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது.
ஆரஞ்சு சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுத்தால் குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்தும் அருந்தலாம்.
எலுமிச்சை சாறு
நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்ற பயன்படுகிறது. எலுமிச்சை சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.
தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும்.
வெள்ளை வெங்காய சாறு
வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்தினாலும் மற்றும் எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.
உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சை சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.

நன்றி lankasri இணையம் ,,,,,
Download As PDF

மண்ணுலக அமிர்தம் ,,, இதை எவ்வாறு பயன் படுத்தலாம்,,?

அட...தயிரை வைத்து இதெல்லாம் செய்யலாமா,,?
சிறந்த அருமருந்தான தயிர், பாலை விட வெகு சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும் சக்தி கொண்டது.
உதாரணத்திற்கு பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
அதுமட்டுமின்றி பாலைத் தயிராக மாற்றும் பக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
மேலும் நன்மை தரும் பக்டீரியாக்களை உருவாக்குவதால், ஜீரணி சக்தியை தூண்டி வயிற்று உபாதைகளை சரி செய்கிறது.
இதன் மற்ற பலன்கள்,
* ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
* அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது வெந்தயம் மற்றும் ஒரு தயிர் கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
* மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
* வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும். புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
* தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 23 நாட்கள் வரை புளிக்காது.
* வெண்டைகாய் வதக்கும்போது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
* வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
* மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

நன்றி lankasri இணையம் ,,,
Download As PDF