Monday, October 24, 2011

இனிய நண்பர்களுக்கு

இனிய நண்பர்களுக்கு;

                                          படித்ததில் பிடித்தது பேஸ்புக்கில் கிடைத்தது 

பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது..

நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.


முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை.. மற்றவர் இறந்துவிட்டார்.

ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்

நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.


தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
Download As PDF

Sunday, October 16, 2011

Channa masala - Mookadalai masala
Ingredients:

Gorbanzo beans - Konda kadalai/Mookadalai - 1 cup
Onions - Vengayam - 1 no. (Medium size)
Tomatoes - Thakkali - 2 nos.
Cumin seeds - Jeeragam - 1 tea spoon
Asafoetida - Perungayam - a pinch
Green chillies - Pachai milagai - 2 nos.
Ginger - Inji - small quantity
Garlic - Poondu - 3 flakes
Besan flour - Kadalai mavu - 1 table spoon
Red chilly powder - Kaintha milagai thul - 1 table spoon
Coriander powder - Dhania thul - 2 table spoons
Turmeric powder - Manjal podi - 1 tea spoon
Garam masala - Masala thul - 1/2 table spoon
Curry leaves - Karuvepilai - small quantity
Corinader leaves - Kothamali - small quantity
Lemon juice - Elumichai pazham saru - few drops
Salt to taste
Oil for frying

Method:
 1. Wash and soak garbanzo beans in water for about 8 to 10 hours. Then keep it in pressure cooker adding water and a pinch of salt. Keep it for 15 minutes in a medium flame. Once it is cooked keep it aside.
 2. Chopp onions, smash tomatoes in a blender, make ginger-garlic paste, grind green chillies and little curry leaves.
 3. Now heat oil in a pan/kadai, add asafoetida, cumin seeds, besan flour, add onions fry them well, now add green chilly paste, ginger-garlic paste, little turmeric and salt and finally smashed tomatoes and fry them for some 5 minutes.
 4. Now add boiled garbanzo beans. Add red chilly powder, corinader powder, garam masala powder and mix them well. Add little salt. Add curry leaves and garnish with corinader leaves. Squeeze little lemon juice over it. You can even decorate it with raw onions and tomatoes.
Tasty channa masala is ready to be served. It can be served with chappathis or pooris. It can be served for 2 people. It requires hardly20 minutes to cook.
Note: Garbanzo beans should not be boiled for too long time since it may get smashed. Add only little salt and little garam masala as it may spoil the entire food if we add more.

Optional: Ingredients can be added/removed. Grated/Shredded coconut can be added if desired.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=tUiv8lVD0S0
Download As PDF

செட்டிநாடு சூப்


தேவையான பொருட்கள்:
 • லவங்கம் — 1
 • தக்காளி — 1 (பொடியாக நறுக்கியது)
 • பச்சைமிளகாய் — 1 (பொடியாக நறுக்கியது)
 • வெங்காயம் — 1 (பொடியாக நறுக்கியது)
 • துவரம் பருப்பு நீர்– 2 கப் (பருப்பு வேகவைத்த நீர் மட்டும் போதும் பருப்பு வேண்டாம்)
 • பூண்டு — 2 பல் (நசுக்கியது)
 • பால் — 1 கரண்டி
 • உப்பு — தே.அ
செய்முறை:
 • வாணலியில் 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு லவங்கம் போட்டு பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
 • அதனுடன் துவரம் பருப்பு நீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
 • இறக்கும் சமயத்தில் பூண்டு போட்டபின் காய்ச்சி நன்கு ஆறிய பாலை ஊற்றி இறக்கவும்.
 • செட்டி நாடு சூப் தயார். 
Download As PDF

துளசியின் மருத்துவ குணங்கள்


துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.
அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.
1. தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும். மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.
2. கண் பார்வைக் குறை உடையவர்கள் கண்களில் நேரடியாக இரண்டு சொட்டுத் துளசிச் சாற்றை விட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
3. துளசியைத் தினமும் உட்கொண்டு வந்தால் காது வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.
4. துளசி கஷாயம் வாய் துர்நாற்றத்தையும் பால்வினை நோய்களையும் நீக்கும்.
5. துளசிச் செடி அதிக அளவில் வளரும் இடங்களில் காற்றில் இருக்கும் புகை, கிருமிகள் போன்ற மாசுகள் அழிந்து காற்று மண்டலம் தூய்மை அடையும்.
6. வீடுகளில் துளசிச் செடிகளை வளர்ப்பதால் தூய்மையான காற்றைப் பெறலாம்.
7. துளசிச் செடியின் வாடையின் காரணமாக கொசுக்கள் வருவதில்லை. இதனால் மலேரியா நோய் பரவுவது தடுக்கப்படுகிறது. மலேரியா நோய் கண்டவர்கள் துளசி இலையைத் தினமும் மென்று உட்கொண்டு வந்தால் மலேரியா நோய் நீங்கும்.
8. தொழு நோயைக் குணமாக்கும் மருந்துகளில் அதிக அளவில் துளசி சேர்க்கப்படுகிறது.
9. உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கு துளசி உதவுகிறது. துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும்.
10. துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
11. இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது.
Download As PDF

Friday, October 14, 2011

உங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்குஎப் எம் வானொலி கேட்டு அலுத்து விட்டதா? எப் எம் வானொலியில் அலறும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் அர்த்தமில்லா பேச்சுக்களால் வெறுத்து இருக்கிறீர்களா? பாடல்களின் தேர்வில் அதிருப்தி இருக்கிற‌தா?
ஆம் என்றால் நீங்களே ஏன் தனியாக ஒரு இணைய வானொலி ஆரம்பிக்க கூடாது? ஓடியோ பிரியர்களுக்கான வானொலியாக ஏற்கனவே பாட்காஸ்டிங் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். மேலும் வானொலி நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள உதவும் இனைய சேவைகள் இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வரிசையில் புதிதாக நேர்ந்திருக்கிறது ஸ்பிரிக்கர்.
உலகோடு பேசுங்கள் என அழைக்கும் இந்த இணையதளம் உங்களுக்கான இணைய வானொலியை நடத்தி கொள்ள வழி செய்கிற‌து. அதிலும் எப்படி, இதோ இந்த நிமிடத்தில் இருந்து உடனடியாக உங்கள் வானொலி சேவையை துவக்கி விடலாம்.
ஆம் பேசுவதற்கோ பகிர்ந்து கொள்வதற்கோ விஷயம் இருக்கிற‌து என்றால் இந்த தளத்தில் உறுப்பினராக உடனேயே உங்களுக்கான வானொலியை துவக்கி விடலாம்.
நேரடி ஒலிபரப்பு என்பார்களே அதே போல நீங்கள் பேச பேச நிகழ்ச்சி உங்கள் வானொலியில் ஒலிபர‌ப்பாகும். இல்லை என்றால் அழகாக திட்டமிட்டு ஒரு நிகழ்ச்சியை தயார் செய்து இங்கு பகிர்ந்து கொள்ளலாம். பதிவு செய்யவும் சிறப்பு சப்தங்களை சேர்க்கவும் வசதி உள்ளது.
நீங்கள் கேட்டு ரசித்த பாடல்கள், நாட்டு நடப்புகள் மீதான விமர்சனம், கிரிக்கட் வர்ணனை என்று எதை வேண்டுமானாலும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
வானொலி நடத்தும் அளவுக்கு குரல் வளம் எல்லாம் இல்லை என்று நீங்கள் நினைத்தால் மற்றவர்கள் வானொலியை கேட்டு பாருங்கள். உருவாக்கி வைத்திருக்கும் விதவிதமான வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு ர‌சிக்கலாம். நிறுவனங்களால் நடத்தப்படும் வணிக ரீதியிலான வானொலி நிகழ்ச்சிகளை விட இவை மாறுபட்டதாக இருக்கும்.
உறுப்பினர்களின் நிகழ்ச்சிகள் அவற்றின் வகைகளுக்கேற்ப தனித்தனியே வகைப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் விரும்பும் பிரிவை தேர்வு செய்து கேட்கலாம்.
சொந்தமாக வானொலியை நடத்துபவர்கள் தங்களுக்கான நேயர்களை தேடி கொள்ளும் வசதியும் இந்த தளத்தில் இருக்கிற‌து. வானொலியை உருவாக்கிய பிறகு அதனை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் வழியே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அதே போல் நிகழ்ச்சியின் வகைகளை அதற்கேற்ற சொற்கள் மூலம் வகைப்படுத்தலாம்.
வானொலியை நடத்துபவர்களுக்கான தனி பக்கமும் தரப்படுகிறது. அதில் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் பின்தொடரலாம். இணையம் ஏற்படுத்தி தந்துள்ள எல்லையில்லா வாய்ப்பின் அடையாளமாக இணையவாசிகள் தங்களுக்கான வானொலி நிலையத்தை நடத்தி கொள்ள உதவுகிற‌து இந்த தளம்.
Download As PDF

பீட்ரூட் மசால்..


BEETROOT MASAL. பீட்ரூட் மசால்..

BEETROOT MASAL:-

NEEDED:-


BEETROOT - 250 GMS


CHANNA DHAL - 1 CUP PARABOILED
TO GRIND:-


RED CHILLIES - 4 NOS.


SOMPH - 1/2 TSP


GRATED COCONUT - 2 TSP


FRIED CHANNA DHAL- 1 TSP


SALT - 1 TSP
SMALL ONION - 2 NOS


GARLIC - 1 POD


FOR FRY :-


OIL - 2 TSP


MUSTARD - 1 TSP


ORID DHAL - 1 TSP


KALPAASIPPUU - I INCH


BAY LEAF - 1 INCH


CURRY LEAVES - 1 ARK


METHOD :-
PEEL ., WASH AND SQUARES THE BEETROOTS. GRIND ALL THE INGREDIENTS WITH LITTLE WATER. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD KALPASIPPUU., BAY LEAF AND CURRYLEAVES. THEN ADD THE BEETROOTS AND SAUTE WELL. AFTER 5 MINUTES ADD THE MASALA AND SAUTE WELL. ADD LITTLE WATER AND COVER THE PAN WITH A LID. AGAIN COOK FOR 5 MINUTES THEN ADD THE CHANNA DHAL. STIRR WELL. KEEP IT FOR 2 MINUTES IN FIRE AND OFF THE GAS. SERVE HOT WITH CURD RICE. CHILDREN LIKE THIS HOT AND SWEET BEETROOTS.

பீட்ரூட் மசால்:-


தேவையானவை :-

பீட்ரூட் - 250 கிராம்


கடலைப்பருப்பு - 1 கப் பதமாக வேகவைத்தது.


அரைக்க:-


வரமிளகாய் - 4


சோம்பு - 1/2 டீஸ்பூன்


துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்


பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்


உப்பு - 1 டீஸ்பூன்


சின்னவெங்காயம் - 2


பூண்டு - 1
தாளிக்க:-


எண்ணெய் - 2 டீஸ்பூன்


கடுகு - 1 டீஸ்பூன்


உளுந்து - 1 டீஸ்பூன்


கல்பாசிப்பூ - 1 இஞ்ச்


பட்டை இலை - 1 இஞ்ச்


கருவேப்பிலை - 1 இணுக்கு
செய்முறை:-
பீட்ரூட்களைத் தோல்சீவிக் கழுவி சின்ன சதுரங்களாக நறுக்கவும். எல்லா மசாலா சாமன்களையும் ஒன்றாகப் போட்டு லேசாக தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., பட்டை இலை., கல்பாசிப்பூவைப் போடவும். பின் பீட்ரூட்டைப் போட்டு வதக்கவும். 5 நிமிடம் வதக்கிய பிறகு அதில் மசாலாவைப்போட்டு நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். 5 நிமிடம் கழித்து கடலைப்பருப்பைப் போட்டு நன்கு கிளறவும். 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து சூடாக தயிர் சாதத்தோடு பரிமாறவும். இனிப்பும் உறைப்புமான இந்த பீட்ரூட் மசாலாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Download As PDF

Sunday, October 09, 2011

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்குஉடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறைய பேர் உள்ளனர்.
உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப் போவதும் உண்டு.
இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:
1. தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.
2. எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
3. வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.
4. இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.
5. உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.
6. மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.
7. அவ்வப்போது பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.
8. புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.
பழங்கள் சாப்பிடும் முறை:
1. காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.
2. இதனால் உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.
3. சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.
4. உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில் உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.
அதனால் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
5. பழங்களை தனியாக சாப்பிடாமல் அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.
பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.
Download As PDF

வாழைத்தண்டும் மருத்துவமும்


`பாஸ்ட் புட்' கலாசாரத்திற்கு மாறிவிட்ட இன்றைய மனிதர்கள் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதன்விளைவு... சிறுநீரக சம்பந்தப்பட்ட பல நோய்களின் வருகை அதிகரித்து விட்டது.
பொதுவாக சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளால் சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதாலோ அது பல பிரச்சினைகளைத்
தோற்றுவிக்கிறது. அதில் ஒன்று... சிறுநீரகத்தில் கல் ஏற்படுவது.
அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தேக்கப்பட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன.
வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. அதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
 

வாழைத்தண்டு மேலும் பல நன்மைகளையும் மனிதனுக்கு தருகின்றது. அவை...
வாழைத்தண்டு நார்ச்சத்து கொண்ட உணவு என்பதால் அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
உடலைக் குளிர்ச்சி அடைய வைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு இருப்பதால் கோடை காலத்திலும் இதை உணவாக பயன்படுத்தலாம். வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது.
பெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல் பலம் பெறும். மேலும், மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்களும் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். 
Download As PDF

பெண்களை கவர சில ஆணழகு ரகசியங்கள்!
அலங்காரம் என்றால் பெண்களுக்குதான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால், ஆண்களும் தங்களை அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். அலங்காரத்தை விரும்பும் ஆண்கள் கவனிக்க வேண்டிய ரகசியங்கள்...
முகம்:
பெரும்பாலான ஆண்கள் முக அலங்காரத்தில் அதிகப்படியான அக்கறை காட்டுவதில்லை. அவர்களின் முக அலங்காரம் பெரும்பாலும் ஷேவிங் செய்வது, மீசையை அழகுபடுத்திக் கொள்வதோடு முடிந்துவிடுகிறது. அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஒருசில ஆண்கள் மட்டும் அவ்வப்போது பெண்களைப்போல `பேசியல்' செய்து முக அழகை பொலிவுபடுத்திக் கொள்கிறார்கள்.
அதிகாலையில் முகச்சவரம் செய்து பளிச்சென்று வரும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. எனவே குறைந்தபட்சம் ஷேவ் செய்வதில் இருந்து உங்களால் முடிந்தவரை முகஅழகை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.
சருமம்:
பெண்கள் ஆண்களிடம் ஆண்மைத்தன்மையை மட்டும் விரும்பமாட்டார்கள். அழகிற்கும் அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஆண்களின் சருமம் இயல்பாகவே சற்று கரடுமுரடாக காணப்படும். சிலருக்கு பரு, தோலில் சுருக்கம் போன்ற பிரச்சினைகளும் இருக்கும். அவர்கள் போதிய கவனம் செலுத்தி சரும பராமரிப்பை பின்பற்ற வேண்டும். சருமத்தில் எங்கேயும் தேவையில்லாமல் முடியை அதிகம் வளரவிடக்கூடாது.
இதில் கவனமாக இருந்தால் நீங்கள் சருமத்தில் காட்டும் நேசத்தை பெண்கள் உங்கள் மீது காட்டுவார்கள்.
அழகுசாதனப் பொருட்கள்:
லிப்ஸ்டிக், புருவ மை, ஜிகினா துகள்கள், சென்ட், பவுடர் என ஏராளமான அழகுசாதனப் பொருட்கள் கிடைக்கின்றன. இருந்தாலும் அனைத்தையும் பெண்களைப்போல ஆண்கள் பயன்படுத்துவதில்லை. ஆனாலும் அழகுசாதனப் பொருட்களை அளவோடு பயன்படுத்துவது ஆண்களை அழகோடு வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
பற்கள்:
புன்னகையே மனிதர்களின் அணிகலன். வெண்மை நிற பற்கள் சிரிப்பின் அழகைக் கூட்டும். டீ- காபி பருகுவது, புகைபிடிப்பது, பலவித உணவுகளை உண்பதால் பற்களின் நிறமும், வளமும் பாதிக்கப்படுகிறது.
பற்களின் நிறத்தை திரும்பக் கொண்டு வர பலவித சிகிச்சை முறைகள் இருக்கின்றன. சாதாரணமாக தினமும் இருமுறை பல்துலக்குவதே பற்களின் பாதுகாப்புக்குப் போதுமானது.
கூந்தல்:
ஆண்களும் தலைமுடியை பராமரிப்பதில் நல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். கவர்ச்சிகரமாக முடிவெட்டிக் கொள்வது, அவ்வப்போது ஸ்டைலை மாற்றிக் கொள்வது இளைஞர்களின் வாடிக்கையாக இருக்கிறது. இதுமட்டும் கேசப் பராமரிப்பிற்குப் போதுமானதல்ல.
முடிகள் உடைந்து, உதிர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். தலையில் பொடுகுகள் பெருகுவது இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே சீயக்காய், ஷாம்பு போன்ற ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கூந்தலைப் பராமரிக்கலாம்.
உடை:
உடை அலங்காரம் என்பது மற்ற அலங்காரங்களைவிட முக்கியமானது. எளிதானதும்கூட. கோட்-சூட், டை என்று வருவதுதான் ஆடை அலங்காரம் என்று எண்ணிவிடாதீர்கள். சாதாரண உடைகளையும் நன்கு சலவை செய்து அணிந்தால் போதுமானது. அழுக்கு இல்லாமலும், பட்டன்கள் அறுந்து போகாமலும் உள்ள உடைகளை அணியுங்கள். துணிகளை `அயர்னிங்' செய்து அணிவது சிறந்தது.
இதுவும் அணிகலன்தான்:
கலகலப்பாகப் பேசுங்கள். இதுதான் ஒருவரை அங்கீகரிக்கும் உண்மையான அலங்காரம். நீங்கள் ஒரு இடத்தைவிட்டு நகர்ந்தாலும் அங்கு உங்களின் நினைவை நீங்காமல் இடம்பெறச் செய்வது உங்களது கனிவான பேச்சுதான்.
நடை, உடையில் அலங்காரம் இருந்தால் அது உங்களுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். நல்ல மனநிலையைக் கொண்டு வரும். பிறகு இயல்பாகவே நீங்கள் கலகலப்பானவராக மாறிவிடுவீர்கள்.
Download As PDF

ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா இதோ சில உணவுப் பொருட்கள்!"அச்சச்சோ மறந்து போச்சே" என்று பலரும் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். இதற்கு காரணம் நினைவாற்றல் இல்லாதது தான்.
நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப்பொருட்களை தொடர்ந்து சாப்பிட வேண்டும். 
உங்களுக்காக சில குறிப்புகள்:
1. ஞாபகசக்தியை அதிகரிக்கம் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீட்சை,திராட்சை, மாதுளை,ஆரஞ்சு முதலியன.
2. சமையலில் சீரகம்,மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.
3. பள்ளிக் குழந்தைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்து கொள்வது மிகவும் அவசியம். அதற்கு தினமும் இரவில் 12  பாதாம் பருப்புகளை ஊறப்போட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் நரம்புகளும் பலமாகின்றன. அரைக்கும் முன் பாதாமின் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாமில் 490 கிராம் பாஸ்பரஸ், தாதுஉப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் இதில் உள்ளது.
4. கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பீட்ரூட், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா ஆகியவற்றிலும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இதை தவிர பால், தயிர் முதலியவற்றையும் உணவில் சோ்க்க வேண்டும்.
நினைவாற்றல் குறைவதற்கு மிக முக்கிய காரணம் கவலைகள் தான். இரத்த ஓட்டக்குறைவும், நோய்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூனளக்கு சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளையை சோர்வடையால் பார்த்துக் கொள்வது நினைவாற்றலை அதிகரிக்கும்.
Download As PDF

தயிர் தொடர்ந்து சாப்பிட்டால்...


தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும். இதனால் ஏற்படும் நன்மைகள் சில

1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது. 

4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து. 
 
5. அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும். 

6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.
7. சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில் க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.
Download As PDF

நடைப்பயிற்சியின் அவசியங்கள்

நமது இயல்பான வாழ்வுக்கு உழைப்பும், உணவும் அவசியத் தேவைகளாகின்றன. பயிற்சிகளும், இயற்கை உணவுகளும் இனிய வாழ்வுக்கு உத்திரவாதம் தருகின்றன.
கடின உழைப்பும், விளையாட்டும் இலகுவாக நமது உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மேலும் உடல் உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி உடல் தலை இறுக்கம் மற்றும் அழுத்தம் சீர்படுவதுடன், மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையைத் தருகின்றன.
மகிழ்ச்சி தரும் மற்றும் சுகம் தரும் ஹார்மோனை சுரக்கும் ஆற்றல்களைப் பெறுகிறோம். மெட்டாபாலிசம் மேம்படுகிறது. நன்றாக பசி எடுக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது. எனவே நமது அன்றாட இயக்கங்களில், தினசரி நடை முறையில் வாழ்நாள் முழுமைக்கும் கடின உழைப்பு, விளையாட்டு, கராத்தே, நடனம், யோகா, ஓட்டம், தோட்ட பணிகள் இவற்றில் ஏதாவது ஒன்று அவசியம் தேவை.
ஆனாலும் போட்டிகளில் பங்கேற்கும் அளவில் பயிற்சி மேற்கொள்ளத் தேவை இல்லை. அவசர அதிவேக உலகில் தினமும் உழைப்பு, விளையாட்டு, பயிற்சிகளைச் செய்திட மயங்குகிறோம். சோம்பேறி ஆகிவிடுகிறோம். மறந்து விடுகிறோம். நாளை செய்வோம் என நினைக்கிறோம். இவைகளை ஒரு நாள் தவற விட்டாலும் பின் தொடர்வதில்லை சோம்பல் வயப்படுகிறோம்.
இதனால் நமது சுறுசுறுப்புக் குறைகின்றது. மெட்டாபாலிசம் சீர்குலைகிறது. உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது. மனதில் அழுத்தம் உருவாகிறது. சோம்பல், அசதி, கூடி வாழ்வின் உத்வேகம் குறைகிறது. பிணிகள் எளிதில் நம்மை அடிமைப்படுத்துகின்றன.
எனவே உழைப்பு, பயிற்சிகள், விளையாட்டு, நடை பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். நடப்பது நமது கால்களுக்கு, உடலுக்கு, மனதிற்கு ஒரு புதுசக்தியையும், உற்சாகத்தையும் தருகின்றது. உடல் நலிவைக் குறைத்து உடல் வலிவைத் தருகின்றது. பிணிகள் குறைய, மறைய வாய்ப்பை உருவாகித் தருகின்றது. எப்போதும், எந்த வயதிலும் நடக்கலாம். வாழ்நாள் முழுவதும் நடக்கலாம். அதற்கான அமைப்பில் நமது உடல் உறுப்புகள், இயக்கங்கள் அமைந்துள்ளன என்கின்றனர் நடைவல்லுனர்கள். நடப்பதற்கு தடையே இல்லை. இயன்றவரை நடக்கலாம்.
75 மில்லியன் அன்பர்கள் நடைப் பயிற்சியை ஆரோக்கியம் பெறும் பொருட்டு தினமும் கடைப்பிடிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பல மருத்துவ வல்லுனர்கள் மாத்திரை, மருந்துகளை நம்புவதைவிட நடைப்பயிற்சிகளை இயன்றவரை கடைப்பிடிக்க வற்புறுத்துகின்றனர்.
Download As PDF

தூங்காமல் இருந்தால்....


மனிதர்களின் தினசரிச் செயல்களில் குறிப்பிடத்தக்கது, தூக்கம். தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்கி ஓய்வெடுக்கவில்லையெனில், மறுநாள் ஒழுங்காக வேலை பார்க்க முடியாது.
நாள் முழுவதும் உழைக்கும் நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கத்தான் இந்தத் தூக்கம் அவசியமாகுது (சில உறுப்புகள் 24 மணி நேரமும் இயங்குவது தனிக்கதை.). எனவே, ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது ரொம்ப அவசியம்.
சாப்பிடாம கூட சில நாட்களுக்கு உயிரோடு இருந்துவிடலாம். ஆனால், தூங்காமல் இருக்க முடியாது. ஒருவேளை நம்மால் தூங்க முடியவில்லை எனில் என்ன நடக்கும்?
சில நாட்களுக்கு மனிதன் தூங்காமல் இருந்தால், அவன் ரத்தத்துல இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து நோய் எதிர்ப்புத் தன்மையும் குறையும். தசைகளோட வலிமை குறையும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. உடல் வெப்பநிலை மாறுபடும். இதுமாதிரி உடலுக்குச் சிக்கலை உண்டாக்கும் தூக்கப் பிரச்சினை, உள்ளத்துக்கும் சிக்கலை உண்டாக்கும்.
தூங்காமல் இருப்பதால் இரத்தத்தில் இருக்கும் மனஅழுத்தத்துக்கு காரணமான `கார்ட்டிசோல்' என்னும் இரசாயனத்தின் அளவு கூடுகின்றது. ஞாபகசக்தி குறைவு, வேலைகளில் தவறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். உடலையும், மனசையும் ஒருசேர பாதிக்கும் ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு. எனவே, தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுப்பது முக்கியம்.
Download As PDF

தண்ணீரை சுத்தமாக்க இனி வாழைப்பழ தோல் போதும்


குடிநீரை சுத்தப்படுத்த இனி வாழைப்பழ தோல் போதுமாம். குடிநீரில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரை விட வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனத்தின் குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான குழுவினர் குடிநீரை சுத்தப்படுத்துவது குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இன்று குடிநீராக பயன்படும் தண்ணீரில் காரீயம், செம்பு உள்ளிட்ட உலோகம் மற்றும் ரசாயன பொருட்களால் மாசடைந்து காணப்படுகின்றது. இத்தகைய நச்சுப் பொருட்கள் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
அவற்றை நீக்குவதற்கு பியூரிபையர் உட்பட பல்வேறு ரசாயன முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றுக்கு செலவு அதிகமாவதுடன் நச்சுத் தன்மை உள்ளதாகவும் இருக்கின்றன.
இந்நிலையில் தேங்காய் நார் மற்றும் கடலை தோல் உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் தோல் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழ தோலைக் கொண்டும் தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்று இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதாவது தண்ணீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால் போதும் அதில் உள்ள உலோக நச்சுப் பொருட்களை உடனடியாக தன்னகத்தே உறிஞ்சிக் கொள்ளும். எவ்வித ரசாயனப் பொருளையும் சேர்க்கத் தேவையில்லை.
தண்ணீரை சுத்தப்படுத்துவதில் மற்ற முறைகளை விட இம்முறை சிறப்பானதாகவும் செலவு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழ தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Download As PDF

சைவம் ஏன் உடலுக்கு நல்லது?


சைவ உணவுகளை எடுத்துக் கொள்வது நமது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நன்மை பயக்கும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நச்சுக்களை அகற்றுபவை: நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை.
எலும்புகளை வலுவாக்குபவை: இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.
மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.
கார்போஹைட்ரேட் பற்றாக்குறை: அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.
எளிதில் ஜீரணம்: சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
ஆரோக்கியமான மேனி: பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.
Download As PDF

உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறுஇஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
Download As PDF

Friday, October 07, 2011

வெள்ளைப்பூண்டின் மருத்துவ குணங்கள்


அல்லியம் சடைவம் என்பது இதன் அறிவியல் பெயர். இதை உடைத்தால் சிறுசிறு பற்கள் போன்ற பகுதிகள் வெளிவரும்.
இதை நசுக்கினால் ஒரு வாசம் வரும். இதுதான் மருந்து தயாரிக்க மிகவும் உதவி புரிகிறது. இது நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது.
ஜீரணக்கோளாறுகளை பூண்டு நன்றாக குணப்படுத்திவிடும். பூண்டு பற்களை நேராகவோ அல்லது கேப்சூல் மற்றும் மாத்திரைகளாகவோ பயன்படுத்தலாம்.
இதன் எண்ணெயை கேப்சூலாக்கி கார்லிக் பெர்ல் என்ற பெயரில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. குடல் பூச்சிகளை வெளியேற்றுகிறது. மார்பு வலி மற்றும் மூச்சுக்குழல் அழற்சிக்கு சிறந்த மருந்து இது.
சளி, ப்ளூ காய்ச்சல், காது வலிக்கும் பயன்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்க பயன்படுகிறது.
Download As PDF

வெளிநாட்டு வாழ்கை

படித்ததில் பிடித்தவை ;

முழுத் தூக்கம்
முழுமை பெற்று
பல வருடங்களாகின்றன
கடமையழைக்க
களைந்த தூக்கம்
கனவுகள் பல இருந்தும் - அதை
காற்றோடு கரைத்து விட்டு
காலத்தின் முகவரியை
தேடியலைகிறோம்
இப்பாலைவனத்தில்
வந்தாரை வாழவைக்கும்
வல்லவன் கிருபையால்-இங்கு
எல்லாமே இருந்தும்
ஏதும் இல்லாமலேயே
வாழ்கிறோம் நாங்கள்
வாரத்தில் ஒரு நாள்
சிந்திய கண்ணீரை
சொந்த சுமையாக்கி
துன்பம் மறைத்து
உரையாடுவோம் உறவுகளோடு
எம் இதயம்
அழுவது யாருக்கு கேட்கும்
வேண்டாத வாழ்கையை
விலை கொடுத்து
வேண்டித்தான் வந்திருக்கிறோம்
விதி செய்த விளையாட்டிதுவோ...?
ஆறு தசாப்த வாழ்கையை
அரைகுறையாய் வாழ்ந்தென்ன பயன்
சொந்த நாட்டில்
சொந்தங்களோடு
பழு சுமந்து வாழ்தாலும்
பல கோடி இன்பம் அதில் உண்டடா
இனியும் வேண்டாமடா
இந்த இம்சை வாழ்கை
இனிதே தொடரட்டும்
எம் தேசத்து வாழ்கை. 
Download As PDF