Friday, February 28, 2014

சமையல் சமாளிப்புகள்

Posted Image


இட்லி மாவில் உளுந்து போதாமல், மாவு கெட்டியாயிருந்தால் பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து விடுங்கள். இட்லி மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும்.

சமைக்கும்போது உருளைக்கிழங்குகளை மிக அதிகமாக வேகவிட்டு விடுவது உண்டு. இம்மாதிரி சமயங்களில் உருளைக்கிழங்குகள் மாவுபோல ஆகிவிடாமல் தடுக்க, பால் பவுடர் தூளைக் கொஞ்சம் கிழங்குகள்மேல் தூவி விடுங்கள் - சிறிது நேரத்தில் கிழங்குகள் கெட்டிப்பட்டுவிடும்.


"சொத சொத'வென்று சப்பாத்தி மாவு ஆகிவிட்டதா? கவலையே வேண்டாம். ஃப்ரீசரில் ஓர் அரைமணி நேரம் வைத்த பின் எடுத்து உருட்டி சப்பாத்திகளாக இடுங்கள். மாவு இறுகி விடுவதால் சுலபமாக இட வரும்.

கோதுமை, மைதா போன்ற மாவுகளைப் பயன்படுத்திப் பூரி, சப்பாத்தி செய்யும்போது, மாவு தேவையான அளவு இல்லை என்று தெரிந்தால், உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் அகற்றிப் பிசைந்து அதை கோதுமை அல்லது மைதாவுடன் சேர்த்துப் பிசைந்து பூரி, சப்பாத்தி செய்யலாம்.
சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். அதிகமாக உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும்.

வத்தக் குழம்பு மற்றும் காரக் குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். சிறிது தேங்காய்ப்பால் விட்டு இறக்குங்கள். காரம் குறைவதுடன் சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.

தக்காளி சூப் நீர்த்து இருந்தால், மாவு கரைத்துவிடுவதற்குப் பதில் அதில் ஒரு வெந்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும். சத்தும், ருசியும் அதிகரிக்கும்.


தோசை வார்க்கும்போது தோசை ரொட்டி போல் வந்தால், சாதம் வடித்த கஞ்சியைச் சிறிதளவு தோசை மாவில் கலந்து தோசை வார்த்துப் பாருங்கள். தோசை பூப்போல் மிருதுவாய் இருக்கும் 
Download As PDF

Thursday, February 27, 2014

உங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் புதுமனை புகுதல், காதுகுத்துதல், திருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம். ஒரு சிலர் ஏதாவது ஒரு ஜோசியர் அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்பார்கள். மேல்நோக்கு நாள், அமிர்தயோக நாள், சுபமுகூர்த்த நாள் என பொதுவாகப் பார்த்து நாள் குறிக்காமல் அவரவர் ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி, கிழமை இவற்றை அடிப்டையாகக் கொண்டு நாமே நல்ல நாள் பார்க்கலாம்.

நாள் என்ன செய்யும்?
நாள் (வாரம்), திதி, நட்சத்திரம், யோகம், கர்ணம் என்ற ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம். இந்த ஐந்தும் அடங்கிய பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது வாரம் அதாவது கிழமை அல்லது நாட்கள். பஞ்சாங்கத்தில் நம் முன்னோர்கள் என்றைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பதற்குக் கூட நாள் குறித்து வைத்திருக்கிறார்கள். ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் திருமணம், ஹோமம், சாந்திகள் போன்ற நற்காரியங்களுக்கு விசேஷமானவை. செவ்வாய் நெருப்பு கிரகம் என்பதால் செவ்வாய்க் கிழமை அக்னி சம்பந்தமான செயல்களுக்குரியது. சனிக்கிழமை இயந்திர சம்பந்தமான பணிகளுக்கு உரிய நாள். 
ஞாயிற்றுக்கிழமை: சூரியன் ஆரோக்கியத்தை அளிப்பவன். அதனால் நீண்டகால பிணிகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து உண்ண ஆரம்பிக்கலாம். வடக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். அரசுப்பணித் தொடர்பான விஷயங்களுக்காக உரிய அலுவலர்களை நேரில் சந்திக்கலாம்.
திங்கட்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். கிருகப் பிரவேசம் நடத்தலாம். காதுகுத்துதல், பெண் பார்த்தல், ருது சாந்தி செய்தல் (சாந்தி முகூர்த்தம்), சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற விசேஷங்களை செய்யலாம். ஆடுமாடு வாங்குதல், விதையிடுதல், உரமிடல், வியாபராம் துவங்குதல் ஆகியவையும் செய்யலாம்.
செவ்வாய்க்கிழமை: கிழக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். வாங்கிய கடனை அடைத்தல், வயலுக்கு உரமிடல், செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல் ஆகியன செய்ய ஏற்ற நாள் இது. செவ்வாய்க்கிழமைகளில் பொருள் வாங்கினால் அது வருவாயைப் பெருக்கும். அதனால் வீட்டில் செல்வம் பெருகும்.
புதன் கிழமை: மேற்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். புதிய ஆராய்ச்சி, எழுத்துப் பணிகளைத் துவங்கலாம். வழக்குகள் சம்பந்தமாக வழக்கறிஞரை சந்தித்தல், புதுமனை புகுதுல், குளம், ஏரி, கிணறு வெட்டுதல், நிலத்தை உழுதல், விதையிடுதல், அறுவடை செய்தல், காது குத்துதல், சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற சுபகாரியங்கள் செய்யலாம். கல்வி, கலை போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் ஆகியவற்றுக்கு ஏற்ற நாள் இது. 
வியாழக்கிழமை: மேற்குதிசையில் பயணிக்கலாம். புதிய பணியில் சேரலாம். வங்கிப் பணிகள் கவனித்தல், பெரிய மனிதர்களை சந்தித்தல், சீமந்தம், ருது சாந்தி, காது குத்துதல், கிருகப் பிரவேசம், விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள் இவற்றைச் செய்ய ஏற்ற தினம்.
வெள்ளிக்கிழமை: வடதிசை நோக்கி பயணம் செய்யலாம். பெண் பார்க்கச் செல்லலாம். காது குத்துதல், சாந்தி முகூர்த்தம், புதிய வாகனங்கள் வாங்குதல், நிலத்தினை உழுதல், உரமிடல் இவற்றைச் செய்ய ஏற்ற நாள் இது.
சனிக்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். பூமி தொடர்பான விஷயங்கள் அதாவது வீடு, நிலம், மனை வாங்குதல், விற்றல் போன்ற செயல்களுக்கும், இயந்திரங்கள் வாங்குதல் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் உகந்த நாள்.
திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களை சுபநாட்கள் எனவும்; ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய நாட்களை அசுப நாட்கள் எனவும் சிலர் கூறுவர். சுப நாட்களிலும் பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகள் வரும் நாட்களை தவிர்ப்பது நல்லது. சில கிழமைகளில் வரும் நட்சத்திரங்களைப் பொறுத்தும் அன்று சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஞாயிறு-பரணி, கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம், அனுஷம், கேட்டை, பூரட்டாதி
திங்கள்-சித்திரை, கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம், பூரட்டாதி
செவ்வாய்-உத்திராடம், திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம்
புதன்-அவிட்டம், அசுபதி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம்
வியாழன்-கேட்டை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி
வெள்ளி-பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், விசாகம், அஸ்தம், அனுஷம், அவிட்டம்
சனி-ரேவதி, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், ரேவதி
ஆகிய நட்சத்திரங்கள் வரும் கிழமைகள் சுபகாரியம் செய்ய ஏற்றவை அல்ல.
திதிகள்: திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.
1. பிரதமை, 2. துவிதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அ) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன. அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.

நற்பலன் தரும் திதிகள்: ஞாயிறு-அஷ்டமி, திங்கள்-நவமி, செவ்வாய்-சஷ்டி, புதன்-திரிதியை; வியாழன்-ஏகாதசி, வெள்ளி-திரயோதசி, சனி-சதுர்த்தசி திதி. இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அது வெற்றியே கிட்டும்.
சுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள்: ஞாயிறு-சதுர்த்தசி, திங்கள்-சஷ்டி, செவ்வாய்-சப்தமி, புதன்-துவிதியை, வியாழன்-அஷ்டமி, வெள்ளி-நவமி, சனி-சப்தமி மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது. வளர்பிறை, தேய்பிறை ஆகிய காலங்களில் சில திதிகளுக்கு இரண்டு கண்கள் உண்டு. இத்திதிகளில் நற்காரியங்கள் செய்தால் நலந்தரும்.
வளர்பிறை காலம் : அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள்.
தேய்பிறை காலம் : துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி திதிகள்.
ஒரு கண்ணுள்ள திதிகள்: வளர்பிறை, தேய்பிறை காலங்களில் சில திதிகளுக்கு ஒரு கண்மட்டுமே உண்டு. அதாவது இந்த சமயத்தில் செய்யப்படும் செயல்கள் பூரண பலன் தராது. எனவே இத்திதிகளில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது. அந்தத் திதி காலங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
வளர்பிறை        தேய்பிறை
பஞ்சமி                பிரதமை
சஷ்டி                    அஷ்டமி
சப்தமி                   நவமி
சதுர்த்தசி             தசமி
பவுர்ணமி              .....

பொதுவாக பலரும் தவிர்க்கும் திதிகள்: வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலுமே அஷ்டமி, நவமி திதிகளையுமே தவிர்ப்பர். அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தசியும், அடுத்த நாளாக வரும் பிரதமையும் ஆகாத திதிகளாகும். இவ்விரண்டு திதிகள் வரும் நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தைத் துவங்கினாலும் பொருள் நஷ்டம், எதிர்ப்பு, விரோதம், நோய் போன்ற பாதிப்புகள் வரக்கூடும்.
நட்சத்திர பலன்கள்: பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததுமே பலரும் பார்ப்பது அன்று என்ன நட்சத்திரம் என்பதைத் தான். காரணம், ஜோதிட ரீதியான 27 நட்சத்திரங்களுள் ஏதாவது ஒன்றுதான் எல்லோருடைய வாழ்க்கையிலுமே ஆதிக்கம் செலுத்தும். அது அவரவர் பிறந்ததினத்தில் அமையும் நட்சத்திரமே. தனிப்பட்ட நபருக்கு உரியது என்றில்லாமல் பொதுவாக எல்லோருக்கும் நன்மை அளிப்பன என்றும் ஆகாதவை எனவும் சில நட்சத்திரங்கள் கூறப்பட்டுள்ளன. திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதேநாட்களில் வெளியூர்ப் பிரயாணம் மேற்கொள்வது கூடாது. கடுமையான நோய்வாய்ப்பட்டவர் அன்று சிகிச்சையை ஆரம்பிக்கக் கூடாது.
யோகங்கள்: பொதுவாக பலருக்கும் தெரிந்தது அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் எனும் மூன்று யோகங்கள். இந்த யோகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையில் கணிக்கப்படுபவை. பரணி, புனர்பூசம், பூரம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி எல்லா கிழமைகளிலும் நற்பலன்களைத் தரக்கூடியவையாகும்.  அசுவினி-புதன், மிருகசீரிஷம்-வியாழன், பூசம்-வெள்ளி, சித்திரை-சனி, அனுஷம்-ஞாயிறு, மூலம்-புதன், உத்திராடம்-திங்கள், திருவோணம்-வெள்ளி இந்த நட்சத்திரங்கள் இந்தக் கிழமைகளில் வருவதைத் தவிர, இதர கிழமைகளில் எல்லாம் நற்பலன்களை கொடுக்கக்கூடியவையாகும்.
ராகுகாலம்: சர்ப்ப கிரகங்கள், சாயா கிரகங்கள் என்றெல்லாம் அழைக்கப்படுபவை ராகு, கேது கிரகங்கள். ஒவ்வொரு நாளிலும் சுமார் ஒன்றரை மணி நேரம் ராகுவுக்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது. ராகு காலத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நலம். கூடிய வரையில் இயன்றவரை அந்த சமயத்தில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
ராகுகாலம் என்று எப்போது?
ஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை
திங்கள் 7.30 மணி முதல் 9 மணி வரை
செவ்வாய் 3 மணி முதல் 4.30 மணி வரை
புதன் 12 மணி முதல் 1.30 மணி வரை.
வியாழன் 1.30 மணி முதல் 3 மணி வரை
வெள்ளி 10.30 மணி முதல் 12 மணி வரை
சனி 9 மணி முதல் 10.30 மணி வரை.

எமகண்டம்
எமகண்டம் என்பது மரணத்திற்கு சமமான விளைவினை ஏற்படுத்தக்கூடியது எனக்கருதப்படுகிறது. எமகண்ட நேரத்தில் ஒரு செயலை மேற்கொள்வது ஆபத்து. விபத்து, பிரச்னைகள் ஆகியவற்றை உருவாக்கும். இரவில் வரும் எமகண்ட காலத்தில் துவக்கும் காரியங்கள்கூட எதிர்மறை விளைவையே தரும். பகலில் வரும் எமகண்ட நேரம் பலருக்கும் தெரிந்திருக்கும். இங்கே ஒவ்வொரு நாளிலும் இரு வேளைகளிலும் வரும் எமகண்ட நேரத்தின் பட்டியல் இதோ...
கிழமை பகல் நேரம் இரவு நேரம்
ஞாயிறு 12.00-1.30 6.00-7.30
திங்கள் 10.30-12.00 3.00-4.30
செவ்வாய் 9.00-10.30 1.30-3.00
புதன் 7.30-9.00 12.00-1.30
வியாழன் 6.00-7.30 10.30-12.00
வெள்ளி 3.00-4.30 9.00-10.30
சனி 1.30-3.00 7.30-9.00
குளிகன் அல்லது குளிகை காலம்: குளிகன், சனிபகவானின் மகன் எனச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்தக் குளிகனுக்கென ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கப்பட்டுள்ள நேரமே குளிகை காலம். தினசரி பகலில் ஒன்றரை மணி நேரமும், இரவில் ஒன்றரை மணி நேரமும் நடைபெறும். குளிகை காலத்தில் நற்காரியங்களை மட்டுமே செய்யலாம். ஏனெனில் இந்த நேரத்தில் செய்யப்படும் செயல் தடை இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்பது நியதி. எனவே அசுப காரியங்களைத் தவிர்ப்பது அவசியம். 
கரிநாள்: ஒவ்வொரு வருடமும் வரும் 365 நாட்களில் 34 நாட்கள் கரி நாளாக அமையும். இந்த நாட்களில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

மாதம்                          தேதிகள்
சித்திரை                        6, 15
வைகாசி                       7, 16, 17
ஆனி                               1, 6
ஆடி                                 2, 10, 20
ஆவணி                         2, 9, 28
புரட்டாசி                      16, 29
ஐப்பசி                             6, 20
கார்த்திகை                    1, 10, 17
மார்கழி                           6, 9, 11
தை                                   1, 2, 3, 11, 17
மாசி                                 15, 16, 17
பங்குனி                            6, 5, 19

வாரசூலை: வாரசூலைக்கு சூலதோஷம் என்றும் பெயர். வாரசூலையை நிருவாணி சூலம் என்றும் களரி காலன் என்றும் அழைப்பதுண்டு. பகலில் வாரசூலை நேர் திசைகளிலும் இரவில் மூலை திசைகளிலும் இடம்பெற்று இருக்கும் என்பது ஜோதிட நியதி. வாரசூலை உள்ள திசையை நோக்கிப் பயணம் செய்வது கூடாது. அவசியம் பயணம் செய்ய வேண்டுமென்றால் பரிகாரம் மேற்கொண்டு பிரயாணம் செய்யலாம். வார சூலைக்கான பரிகாரம் செய்வது குறிப்பிட்ட பரிகாரப் பொருளை சிறிதளவு உண்டுவிட்டுப் பயணத்தைத் தொடங்குவது தான். சிலர் அப்பொருளை தானம் செய்வது வழக்கம்.
தின ஓரையில் பயன்கள்:  ஒவ்வொரு மாதமும் தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதைத்தான் அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை என்று சொல்வர். எந்தக் கிழமையில் சூரிய உதயம் ஆகிறதோ, அந்தக் கிழமைக்கு உரிய கிரகமே சூரிய உதய முதல் ஒரு மணி நேரத்துக்கான ஓரைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறது.  உதாரணமாக திங்கட்கிழமை காலை 6 மணிக்கு சூரிய உதயமானால், அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில் சந்திரனே ஆதிபத்தியம் செய்வதால், அது சந்திர ஓரையாகிறது. அடுத்தடுத்த ஒரு மணி நேரம் உரிய வரிசைப்படியான கிரகத்திற்கு உரியதாகிறது. அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை சூரிய உதயத்தின் போது செவ்வாய் ஓரை ஆரம்பாகிறது. இப்படியாக கிரக ஓரைகள் ஒரு வட்டம் போல ஒன்றையடுத்து மற்றொன்று என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றுக்கு ஓரைகள் இல்லை. மாறாக ராகு காலம் என தனிக் காலம் உண்டு.
சூரிய ஓரை: விண்ணப்பம் செய்ய, அதிகாரிகளை சந்தித்தல், மருந்துண்ணல், சொத்துப் பிரிவினை செய்தல், வேலைக்கு முயற்சித்தல், அரசு அனுமதி பெறுதல், பதவி ஏற்றிடல் ஆகியன செய்யலாம்.
சந்திர ஓரை: திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கல்வி கலை கற்றிட ஆரம்பித்தல், தொலைதூரப் பயணம் தொடங்குதல், கால்நடைகள் வாங்குதல் நலம் தரும்.
செவ்வாய் ஓரை: போர்க்கருவிகள் செய்தல், வாகனங்கள் பழுது பார்த்தல், போர் தொடுத்தால், வீடு மனை நிலம் வாங்குதல், விற்றல், மருந்துண்ணல், ஏரிக்கரை அல்லது அணை கட்டுதல் செய்யலாம். சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
புதன் ஓரை: ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், போட்டி பந்தயங்களில் பங்கேற்றல், கடிதத் தொடர்பு கொள்ளுதல், புதிய பொருள்களை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல் செய்யலாம்.
குரு ஓரை: புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், அணிதல், சேமிக்கத் தொடங்குதல், வர்த்தகக் கொள்முதல் செய்தல், விதை விதைத்தல், நாற்று நடுதல், குரு உபதேசம் செய்தல், பெரியோர்களை சந்தித்து ஆசி பெறல் ஆகியவற்றுக்கு ஏற்ற காலம்.
சுக்கிர ஓரை: கலைகளைக் கற்கத் தொடங்குதல், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தல், காதல் புரிதல், மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் செய்யலாம்.
சனி ஓரை: உழுதல், எருவிடுதல், இரும்பு, மின்சாதனங்களை வாங்குதல், தோப்பு துரவு (கிணறு) அமைத்தல், பயணம் செய்தல் போன்றவை செய்யலாம்.
சந்திராஷ்டமம்: நம் ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொருவருடைய ஜனன கால ஜாதகமும் சந்திரனை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது. அதாவது ஒருவர் பிறந்த போது சந்திரன் எந்த ராசியில் இருக்கிறதோ, அதுவே அவரது ஜனன ராசி என்றும், சந்திர லக்கினம் என்றும் கூறப்படுகிறது. கோள்களின் இயக்கத்தின் படி அதாவது கோசாரத்தின்படி சந்திரன் ஒருவரது ஜனன ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் காலமே அவரது சந்திராஷ்டம காலம் ஆகும். சந்திரன் ஒருவரின் எட்டாவது ராசிக்கு உரிய இரண்டேகால் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் அந்த சந்திராஷ்டம நாட்களில் அந்த நபர் இயன்றவரை புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும். அவருக்கான சுபகாரியங்களை அதாவது திருமணம், பெண் பார்த்தல், பணியில் சேருதல் போன்ற மங்கள நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. திட்டமிடாத திடீர் பயணங்களையும் வெளிநாடு, வெளியூர் பிரயாணங்களையும் தவிர்ப்பது அவசியம்.
(உதாரணமாக.. மேஷ ராசியினருக்கு எட்டாம் இடமான விருச்சிக ராசிக்கு உரிய விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் சந்திரன் வரும் தினங்கள் சந்திராஷ்டம நாட்களாகும்.)
2 அமாவாசை 2 பவுர்ணமி: அமாவாசை ஒரு நல்லநாள் என்றாலும், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு உகந்ததல்ல. அமாவாசையை விலக்குவதைப் போலவே ஒரே மாதத்தில் இரு அமாவாசை வந்தால் அதனை மல மாதம் என்பார்கள். இப்படிப்பட்ட அமைப்பு அநேகமாக 18 வருடங்களுக்கு ஒரு முறையே வரும். மல மாதத்தினை மட்டுமல்லாமல், மல மாதமுள்ள தமிழ் ஆண்டும் திருமணம் போன்ற நற்காரியங்களுக்கு ஏற்றதல்ல என்பது பொதுவிதி. ஒரே மாதத்தில் இரு பவுர்ணமிகள் வந்தால் அதுவும் மலமாதமே. ஆனால் பவுர்ணமி திதியில் சுபகாரியங்கள் மட்டுமே செய்யப்படுவதால் அந்த மாதத்தினை விலக்குவது இல்லை. 

கல்யாணத்திற்கு நாள் பார்ப்பது எப்படி?
1. முதல் விதி, திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. அடுத்ததாக சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிகமிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. இது 4வது விதி.
5. அடுத்த வித... ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்.
6. துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது ஆறாவது விதி.
7. அடுத்ததாக முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
8. அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது. இது 9வது விதி.
9. திருமணத்தின்போது குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது என்பது 10ம் விதி.
10. திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
11. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது என்பது 12வது விதி.
12. கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள். அனைத்துக் காரியங்களும் தடையின்றி இனிதே நிறைவேறிட இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
Download As PDF

உடலை தூய்மை படுத்தும் உணவு வகைகள்

உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. ஏனெனில் கல்லீரல் தான் உடலுக்கு தேவையான நொதியான பைல் என்பதை உற்பத்தி செய்கிறது. இந்த நொதி இல்லாவிட்டால், உடல் இயங்காது. கல்லீரலில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், அவற்றை பிலிரூபின் என்னும் இரத்தக்கூறு கொண்டு கண்டறியலாம். அதிலும் மஞ்சள் காமாலையா அல்லது ஏதேனும் கொழுப்புகள் சேமிக்கப்பட்டுள்ளதா என்பதை அறியலாம்.

இத்தகைய பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் ஜங்க் உணவுகள், அதிகமான கொழுப்புள்ள உணவுகள் மற்றும் ஆல்கஹால் பருகுவது தான். சுவாரஸ்யமான வேறு: கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்!!! எனவே கல்லீரலில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு, சிலவற்றை தினமும் மேற்கொண்டு வந்தால், எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாமல் தடுக்கலாம். குறிப்பாக கல்லீரலை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய சுத்தத்தை உணவுகள் மூலமாகவே சரிசெய்யலாம்.

ADVERTISEMENT மேலும் இந்த உணவுகள் கல்லீரலை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, உடலையே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இப்போது அந்த கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

தானியங்கள் 
:


Posted Image


கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உண்ணும் போது, அந்த கொபப்புகள் கல்லீரலில் தங்கிவிட்டால், பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே தானியங்களை அதிகம் சாப்பிடும் போது அதில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், அந்த கொழுப்புகளை கரைத்துவிடும்.
ஆலிவ் ஆயில் :


Posted Imageஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டில் உள்ள கொலஸ்ட்ராலானது உடலுக்கு மிகவும் சிறந்தது. மேலும் அந்த கொழுப்பானது வளர்ச்சிதை மாற்றத்திற்கு பெரிதும் உதவுவதோடு, கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கிறது. எனவே ஆலிவ் ஆயிலை அதிகம் பயன்படுத்துவது நல்லது.


பூண்டு :

Posted Image


பூண்டில் சுத்தப்படுத்தும் பொருள் அதிகம் உள்ளது. குறிப்பாக அல்லிசின் மற்றும் செலினியம் போன்றவை இருப்பதால், அவை கல்லீரலில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றிவிடும்.
ஆப்பிள் :


Posted Imageஆப்பிள் கல்லீரலை சுத்தப்படுத்தும் பொருள் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த பழத்தில் உள்ள பெக்டின் என்னும் பொருள் வயிற்றில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரலில் டாக்ஸின்கள் தங்காமல் தடுக்கும்.இலைக் காய்கறிகள் :


Posted Imageஇலைவகைக் காய்கறிகளான காலிப்ளவர், முட்டைகோஸ், ப்ராக்கோலி போன்றவற்றில் குளுக்கோஸினோலேட் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.

பீட்ரூட்
 :Posted Imageபீட்ரூட்டில் அதிகமாக நிறைந்திருக்கும் ப்ளேவோனாய்டுகள், கல்லீரலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கும்.
அவோகேடோ :


Posted Imageஅவோகேடோவை சாப்பிட்டால், அவை உடலில் குளுதாதையோனை உற்பத்தி செய்து, கல்லீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது.

பச்சைக் காய்கறிகள் :


Posted Imageகாய்கறிகள் பச்சை நிறங்களை பெறுவதற்கு, அவற்றில் குளோரோபில் இருக்கிறது. எனவே இத்தகைய பச்சை காய்கறிகளை சாப்பிட்டால், அவற்றில் உள்ள குளோரோபில் கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை உறிஞ்சி, வெளியேற்றும்.
பம்பளிமாஸ் :


Posted Imageகல்லீரலில் உள்ள அழுக்குகளை நீக்க வைட்டமின் சி என்னும் சத்து பெரிதும் உதவும். இத்தகைய சத்து கிரேப் ப்ரூட் என்னும் பம்பளிமாஸ் பழத்தில் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின் சி கிடைத்து, கல்லீரலில் அழுக்குளை நீக்கும் நொதிகளை உற்பத்தி செய்து, கல்லீரலை சுத்தம் செய்யும்.
மல்லி :


Posted Imageமல்லியை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடலானது குளிர்ச்சி அடைவதோடு, கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும்.

மஞ்சள் :


Posted Imageமசாலாப் பொருட்களில் ஒன்றான மஞ்சள் கிருமிகளை அழிக்க சிறந்தது. ஆகவே வயிற்றில் ஏதேனும் பிரச்சனை என்றால், அப்போது மஞ்சளை உணவிலோ அல்லது பாலிலோ கலந்து சாப்பிடலாம். இதனால் அனைத்தும் சரியாகும்.

வால்நட் :


Posted Imageபொதுவாக கல்லீரலில் மாசுக்கள் தங்குவதற்கு அம்மோனியா அதிகம் இருப்பதே ஆகும். வால்நட்டில் அர்ஜினைன் என்னும் அமினோ ஆசிட் இருப்பதால், அவை அந்த அம்மோனியாவை கல்லீரலில் இருந்து வெளியேற்றி, கல்லீரலை சுத்தமாக வைக்கும்.

க்ரீன் டீ :


Posted Imageக்ரீன் டீயில் அதிகமான அளவில் நன்மைகள் அடங்கியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய எண்ணற்ற நன்மைகளில், கல்லீரலில் உள்ள அழுக்குளை வெளியேற்றும் கேட்டச்சின்கள் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உள்ளன.

எலுமிச்சை :


Posted Imageஎலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிடும் போது, அதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலை சுத்தப்படுத்தும் குளுதாதையோனை உடலில் உற்பத்தி செய்கிறது. ஆகவே தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சையை பிழிந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
சீமைக் காட்டுமுள்ளங்கி :


Posted Imageகல்லீரலில் உள்ள பழுதடைந்த செல்களை சரிசெய்து, அவற்றை சீராக இயங்க வைப்பதற்கு, சீமைக் காட்டுமுள்ளங்கி மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
Download As PDF

Tuesday, February 18, 2014

உங்கள் செல் போனின் கதிர்வீச்சு “எஸ்.ஏ.ஆர். வேல்யூ’ (சிறு பார்வை )

செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பின்விளைவுகளை அவ்வப்போது ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. இவை ஊகங்கள்தான் என புறந்தள்ளுவோரும் உண்டு. இருந்தாலும், பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, அதன் விளைவுகளை இத்தகைய அலட்சியப் போக்குள்ளவர்கள் உணர்ந்து வருகிறார்கள்.

செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி இனமே அழிந்துவருகின்றன. செல்போன் டவர்களுக்கு மட்டும்தான் கதிர்வீச்சு உள்ளதா? செல்போனை சட்டைப்பையிலும் இடுப்புக்கு அருகிலும் வைத்துக் கொண்டு செல்பவர்களுக்கு எச்சரிக்கையை அளிக்கிறார்கள் வல்லுநர்கள். அது, செல்போனில் இருந்தும் வெளிப்படும் கதிர்வீச்சு, மனிதனையும் பாதிக்கும் என்பதுதான்.


Posted Image

இந்தக் கதிர்வீச்சை எப்படி அளக்கிறார்கள்? 


இதனை “எஸ்.ஏ.ஆர். வேல்யூ’ என்கிறார்கள். இப்படிச் சொன்னதும், ஏதோ இது செல்போனின் விலை மதிப்பு என்று நினைக்காதீர்கள். “ஸ்பெசிபிக் அப்சர்ப்ஷன் ரேட்’ என்பதன் சுருக்கமே “எஸ்.ஏ.ஆர்.’ என்பது. அதாவது, ஒரு செல்போன் தொடர்பில் இருக்கும்போது, அதில் இருந்து வெளியாகும் “எலக்ட்ரோ மேக்னடிக்’ அலைகள் அல்லது ரேடியோ கதிர்கள் உடலுக்குள் ஊடுருவும் அளவை நிர்ணயிப்பதே “எஸ்.ஏ.ஆர்.’.இது, செல்போனில் இருந்து வெளியாகும் சக்தியை அல்லது கதிர்வீச்சை உடல் உட்கிரகிக்கும் அளவைக் குறிப்பது. இது நாம் பயன்படுத்தும் செல்பேசியின் “வாட்ஸ் பெர் கிலோ கிராம்’ என்பதை அடிப்படையாக வைத்து மதிப்பிடப்படுகிறது.Posted Image

“எஸ்.ஏ.ஆர். வேல்யூ’ குறைந்திருந்தால், உங்கள் செல்பேசி மிகவும் பாதுகாப்பானது. குறைந்த அளவு கதிர்களே செல்போனில் இருந்து வெளியேற்றப்பட்டு, அது உடலுக்குள் ஊடுருவுகிறது என்பதைக் குறிக்கிறது இது.

ஒவ்வொரு செல்போனும், செல்பேசி டவர்களுடன் இணைக்கப்படும்போது, அதில் இருந்து ரேடியா கதிர்கள் வெளியாகின்றன. இந்தக் கதிர்கள், உடலில் உள்ள திசுக்களால் ஈர்க்கப்படுகின்றன. இது எந்த அளவில் இருக்கிறது என்பதைக் குறிக்கும் எஸ்.ஏ.ஆர். வேல்யூவை, வெளிநாடுகளில் உள்ள பல முன்னணி செல்போன் நிறுவனங்கள், செல்பேசியின் விவரப் பக்கத்தில் உண்மையாகவே குறிப்பிடுகின்றன. செல்பேசி நிறுவன இணைய தளங்களில் அது பற்றிய விவரத்தில் ஒவ்வொரு செல்பேசிகளின் எஸ்.ஏ.ஆர். மதிப்பும் தவறாமல் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை வைத்து பாதுகாப்பான செல்பேசிகளைத் தேர்வுசெய்து நாம் வாங்கமுடியும்.
இந்தியாவில் இந்த “எஸ்.ஏ.ஆர்.’-இன் அதிகபட்ச மதிப்பு 1.60 வாட்ஸ் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் தயாராகும் செல்பேசிகளில் எஸ்ஏஆர் மதிப்பு பற்றிய விவரம் இல்லாததாலும், அது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாததாலும், உடலுக்குத் தீமை பயக்காத, பாதுகாப்பான செல்பேசிகளைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இதுவரை கிடைக்காமலே இருந்தது.

செல்பேசி என்பது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்புதான் பிரபலமாகத் துவங்கியது. அதனால் இதன் மூலம் அடையும் பாதிப்புகளைக் கண்கூடாக இன்னும் காணவில்லை. ஆனால், ஓர் எச்சரிக்கையாக, செல்பேசிகளில் இருந்து வெளியாகும் அதிகப்படியான கதிர்வீச்சுக்களால், அதனைப் பயன்படுத்தும் மனிதர்களுக்கு சாதாரண சரும நோய் முதல், புற்றுநோய் வரை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Posted Image

செல்பேசிகளின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தும் அளவுக்கு இதன் பாதிப்புகள் குறித்து இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

இந்த விழிப்புணர்வால், இந்தியாவிலும் குறைந்த எஸ்.ஏ.ஆர். மதிப்பைக் கொண்ட செல்பேசிகளின் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். செல்பேசிகளை விற்கும்போது, அதில் தவறாமல் “எஸ்.ஏ.ஆர். மதிப்பு’ தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட உள்ளது. வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல், அனைத்து செல்பேசிகளின் எஸ்.ஏ.ஆர். மதிப்பும் வெளிப்படையாகத் தெரியும்படி பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

செல்போனை வாங்கச் செல்லும்போது அதிகப்படியான பயன்பாடு, சேமிக்கும் திறன், புதிய மாடல், விலை குறைவு என பல்வேறு விஷயங்களைப் பார்த்துப் பார்த்து வாங்கும் நாம், இனி எஸ்.ஏ.ஆர். மதிப்பையும் பார்த்து, உடலுக்குத் தீமை பயக்காத செல்பேசிகளைத் தேர்வு செய்து வாங்க வேண்டும். இது நம் கடமை – உரிமையும் கூட!

பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டுமே அவர்களின் டவர்களில் குறிப்பிட்ட அளவு சிக்னல்களை வெளியிடுகின்றனர். ஆனால், தனியார் நிறுவனங்களோ, ‘இந்தப் பகுதியில் சிக்னல் குறைவாக உள்ளது’ என்று வாடிக்கையாளர் புகார் அளித்தால், அடுத்த நாளே சிக்னல் பவரை உயர்த்துகின்றனர்

Posted Image

செல்போன் டவரில் இருந்து வெளிப்படும் சிக்னலின் அளவு 600 மில்லி வாட்ஸ் என்று இருக்க வேண்டும். ஆனால், 4,000 மில்லி வாட்ஸ் வரைக்கும் இவர்கள் சிக்னல்களை அதிகப்படுத்தி விடுகிறார்கள்! – இது தனியார் தொலைக் காட்சி நிறுவனம் சமீபத்தில் எடுத்த சுற்றுச்சூழல் குறித்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டது.

இந்திரா காந்தி அணுமின் ஆராய்ச்சி நிலையம் போன்ற பெரும் நிறுவனங்கள் இது தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, இவற்றை முறைப்படுத்த வழிவகுக்க வேண்டும். 60 மீட்டர் சுற்றுவட்டாரத்துக்கு ஒரு செல்போன் டவர் மட்டுமே அமைக்க வேண்டும் என்று பன்னாட்டு விதிமுறைகள் (இன்டர்நேஷனல் நான் அயனைஸிங் ரேடியேஷன் ஸ்டாண்டர்டு) கூறுகின்றன.nantri tamil rookers inayam,,,, 
Download As PDF

Sunday, February 09, 2014

என்னென்ன காய்கறிகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது?மனிதனுக்கு தேவையான சத்துக்களை அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே அதிகம் அள்ளித்தருகின்றன.
சைவ உணவுகளான காய்கறிகளை சாப்பிடும் போது மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன.
அந்த வகையில் என்னென்ன காய்கறிகளில் என்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை பார்ப்போம்,
வாழைத் தண்டு
கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்கள், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. இது சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருந்தால் கரைக்க உதவும்.
பீட்ரூட்
இதில் துத்தநாகம், கால்ஷியம், சோடியம், பொட்டாஷியம் ஆகியவை உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். உடல் வளர்ச்சிக்கு ஏற்றது.
வாழைப்பூ
கால்ஷியம், பாஸ்பரஸ், புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி உள்ளன. மலச்சிக்கலை போக்க உதவும்.
உருளைக்கிழங்கு
இதில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.
வாழைக்காய்
இரும்புச் சத்து, போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகையைத் தடுக்க உதவும்.
பாகற்காய்
இந்த காயில் வைட்டமின் சி, ஏ, பி, பாஸ்பரஸ், கால்ஷியம் உள்ளன. இந்த காயை சாப்பிடுவதன் மூலம் பசி அதிகரிக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.
கேரட்
இதில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. குழந்தைகளின் உணவில் அதிகமாக சேர்த்தால், பிற்காலத்தில் பார்வை கோளாறு எதுவும் வராது. மாலைக்கண் நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.
கத்தரிக்காய்
பாஸ்பரஸ், போலிக் ஆசிட், வைட்டமின் பி, சி உள்ளன. ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
வெண்டைக்காய்
போலிக் ஆசிட், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளது. மூளை வளர்ச்சிக்கு உதவும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும். தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கில் புலி ஆகலாம்.
பீன்ஸ்
புரதச்சத்து, கால்ஷியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.
புடலங்காய்
வைட்டமின் ஏ, பி, இரும்புச் சத்து, தாமிரம், கால்ஷியம் உள்ளன. எலும்பு உறுதிக்கு இதை சாப்பிடலாம்.
அவரைக்காய்
புரதச்சத்து, நார்ச்சத்து உள்ளன, உடல் வளர்ச்சி பெறும், மலச்சிக்கலை போக்கும்.
முருங்கைக்காய்
வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. ஆண்களுக்கு விந்து அதிகரிக்க உதவும், பெண்களுக்கு உதிரப் போக்கை கட்டுப்படுத்தும்.
வெங்காயம்
இரும்புச்சத்து, கால்ஷியம் உள்ளன. தினமும் சாப்பாட்டில் வெங்காயம் சேர்த்தால், உடல் கொழுப்பை கரைக்க உதவும்.
சுண்டைக்காய்
புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன. எலும்புகளுக்கு வலு சேர்க்கவும், ரத்தசோகை வராமல் தடுக்கவும் உதவும்.
கருணைக் கிழங்கு
கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி ஆகியவை உள்ளன. இதை சாப்பிட்டால், உடல் வளர்ச்சிக்கு நல்லது. மூல நோய் வராமல் தடுக்கவும், மூலத்தை கட்டுப்படுத்தவும் உதவும்.
தக்காளி
வைட்டமின், ஏ, பி, சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. உடல் உறுதிக்கும், ரத்தவிருத்திக்கும் உதவும்.
Download As PDF

Saturday, February 08, 2014

எண்ணெய் குளியல் எடுக்கும் போது... ஒரு பார்வை

தீபாவளிக்கு மட்டுமே நினைவுக்கு வருகிற விஷயமாக மாறி விட்டது எண்ணெய் குளியல். ‘தலை வலி வரும்... ஜலதோஷம் பிடிக்கும்... முகமெல்லாம் எண்ணெய் வழியும்... தலைமுடியை அலசறது கஷ்டம்...’’ - இப்படி எண்ணெய் குளியலைத் தவிர்க்க இன்றைய தலைமுறையினருக்கு எத்தனையோ காரணங்கள்.


Posted Image

‘‘எண்ணெய் குளியலைத் தவிர்க்க எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஏன் தவிர்க்கக்கூடாதுங்கிறதுக்கு ஒரே ஒரு காரணம்தான்... கூந்தலுக்கும் உடலுக்கும் மனதுக்கும் அது தரும் ஆரோக்கியம்’’ 

எண்ணெய் குளியலில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன. யாருக்கு, என்ன தேவை என்பதைப் பொறுத்து அந்தக் குளியலும் வேறுபடும்
அதன்படி...

சளி பிடிக்காமலிருக்கச் செய்யும் குளியல்

கால் லிட்டர் நல்லெண்ணெயில் 50 கிராம் ஓமம் போட்டுக் காய்ச்சி, வடிகட்டி வைக்கவும். தலைக்குக் குளிப்பதற்கு முன், இந்த எண்ணெயை வெதுவெதுப்பாக்கி, தலையில் தடவி, மசாஜ் செய்து வெந்நீரில் குளிக்கவும். தலை குளித்தால் உடனே ஜலதோஷம் பிடித்துக் கொள்பவர்களுக்கும், தும்மல் போடுவோருக்கும் இந்த வகையான எண்ணெய் குளியல் ஏற்றது. குளிர்ச்சியைக் கிளப்பாது. தலைமுடியை நன்கு கண்டிஷன் செய்வதோடு, முடியையும் அழகாக வைக்கும்.

வாசனை தரும் குளியல்


சம்பங்கி, மருக்கொழுந்து, தவனம், செண்பகப்பூ, பன்னீர் ரோஜா மற்றும் வெட்டிவேர் ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து, எல்லாம் மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் கொதிக்கக் கூடாது. ஓசை அடங்கியதும், அடுப்பை அணைத்து, ஒரு நாள் அப்படியே ஊற விடவும். மறுநாள் தேவையான எண்ணெயை வடிகட்டி எடுத்து லேசாக சூடாக்கி, தலையில் தடவிக் குளிக்கவும். அடுத்த முறை தலைக்குக் குளிக்கிற வரை கூந்தல் நல்ல நறுமணத்துடன் இருக்கும். கூந்தலில் இருந்து வந்து கொண்டே இருக்கும் மெல்லிய நறுமணமானது உங்களுக்கு புத்துணர்வையும் மன அமைதியையும் கொடுப்பதை உணர்வீர்கள்.

வறண்ட கூந்தலை மிருதுவாக்கும் குளியல்

அரை கப் ஆலிவ் ஆயிலில், உதிர்த்த புதிய பன்னீர் ரோஜா இதழ்கள் ஒரு கப் சேர்த்துக் காய்ச்சவும். அதை வடிகட்டி, தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும். இந்தக் குளியலின் மூலம் கூந்தலின் பளபளப்பு கூடும். கருப்பான கூந்தலாக இருந்தால் இன்னும் அடர் கருமையுடனும், பிரவுன் நிற கூந்தலாக இருந்தால் அழகிய பிரவுன் நிறத்துடனும் மாறும்.

குளிர்ச்சியைக் கொடுக்கும் குளியல்

பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் தலா கால் கப் எடுத்து, அதில் 1 டீஸ்பூன் கல் உப்பு போட்டுக் காய்ச்சவும். இந்த எண்ணெயை தலை நிறைய சொதசொதவென தடவவும். இந்தக் குளியலின் மூலம் கண்களும் உடலும் குளிர்ச்சியடையும். ஒற்றைத் தலைவலி வராது. மன அழுத்தமும் படபடப்பும் நீங்கி, மன அமைதி கிடைக்கும். வாரத்தில் 2 நாட்கள் இப்படிக் குளிக்கலாம். 

இதம் தரும் இயற்கைப் பொடி

எண்ணெய் குளியல் எடுக்கும் போது ஷாம்பு உபயோகிக்காமல், இயற்கையான முறையில் தயாரித்த பொடியை உபயோகித்து தலையை அலசுவதே சரியானது. அந்தப் பொடியையும் அவரவர் தேவை மற்றும் கூந்தலின் தன்மைக்கேற்ப தயாரித்து வைத்துக் கொள்ளலாம்.

கால் கிலோ பூந்திக் கொட்டையை விதை நீக்கி, கால் கிலோ வெந்தயம் சேர்த்து அரைத்து சலித்துக் கொள்ளவும். எண்ணெய் குளியல் எடுக்கும் போது, இந்தப் பொடியில் 2 டீஸ்பூன் எடுத்து சிறிது தயிர் மற்றும் வெந்நீர் கலந்து பேக் மாதிரி தலையில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து அலசலாம்.

200 கிராம் சீயக்காய், 100 கிராம் பச்சைப்பயறு, 100 கிராம் கடலைப்பருப்பு, டீ தூள் 100 கிராம் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து, சலித்துக் கொள்ளவும். தனித்தனியே அரைத்தும் கலந்து கொள்ளலாம். 3 டீஸ்பூன் பொடியை வெந்நீரில் கரைத்து, தலையில் எண்ணெய் இருக்கும் போதே தடவி, அலசலாம். இதிலுள்ள டீ தூள் முடியை மென்மையாக்கும். மற்ற பொருட்கள் கண்டிஷன் செய்யும்.

கடலைப்பருப்பு 50 கிராம், பச்சைப்பயறு 50 கிராம், துவரம் பருப்பு 50 கிராம், வெந்தயம் 50 கிராம், வெட்டிவேர் 50 கிராம், பூலாங்கிழங்கு 50 கிராம் - இவை எல்லாவற்றையும் நைசாக அரைத்து சலித்துக் கொள்ளவும். இதை சின்னக் குழந்தைகளுக்குக் கூட தலைக்கும் உடம்புக்கும் தேய்த்துக் குளிப்பாட்டலாம். தினமுமே குளியலுக்கு உபயோகிக்கலாம். 


Posted Image

எண்ணெய் குளியல் எடுக்கும் போது...


எண்ணெய் குளியல் எடுப்பதால் ஒருவருக்கு ஜலதோஷம் பிடிக்காது. அதை ஒரு முறையான பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தலைவலி இருப்பவர்கள், எண்ணெயில் நிறைய ஓமம் சேர்த்துக் காய்ச்சி உபயோகிக்கலாம். சைனஸ் அல்லது ஜலதோஷப் பிரச்னை இருந் தால், தலைக்குக் குளித்து முடித் ததும், ஈரம் போகத் துடைத்து, அகன்ற பற்கள் கொண்ட சீப்பால், சூடு கிளம்பும் அளவுக்கு நன்கு வாரி விட வேண்டும். எண்ணெய் குளியலே ஆகாது என்பவர்கள், சிறிதளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து, மேலே சொன்ன மூலிகைகளை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிப் போட்டு, அதன் சாரம் இறங்கியதும், அந்தத் தண்ணீரைத் தலை குளிக்க உபயோகிக்கலாம்.

எண்ணெய் குளியலை முறைப்படுத்திக் கொண்டால் மன அமைதி கிடைக்கும். உடல் குளிர்ச்சியடையும். கண்கள் குளுமை பெறும். பொடுகு நீங்கும். அதன் விளைவாக இள நரை வராமலிருக்கும். முன்னந்தலையில் வழுக்கை விழாது.

எண்ணெய் குளியலுக்கு பொடியே சிறந்தது.ஆனாலும், ஷாம்புதான் வேண்டும் என நினைப்பவர்கள், பொடியுடன் சில துளிகள் ஷாம்புவையும் சேர்த்துக் குளிக்கலாம். சிலருக்கு சுருட்டை முடி இருக்கும். முடி சுருண்டு மேலே இழுத்துக் கொள்ளும். அடிக்கடி எண்ணெய் குளியல் எடுத்து வந்தால், முடி நீண்டு நன்கு வளரும். ஏசி அறையில் வேலை செய்பவர்களுக்கு எண்ணெய் குளியல் மிகமிக அவசியம். வாரம் இருமுறை அவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது கூந்தல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். 
Download As PDF