Monday, August 22, 2011

சிக்கன் பிரியாணி செய்முறை


சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள்:-

பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு,
பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்காளி - தலா 2, பெரிய வெங்காயம் - 2, புதினா - 1/2 கட்டு, கொத்துமல்லி - 1/4 கட்டு, பட்டை கிராம்பு ஏலக்காய் - தலா 3, பிரியாணி இலை - 2, மிளகாய்தூள் உப்பு - 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன், கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன், எலுமிச்சை - 1, நெய் - 1 ஸ்பூன், சமையல் எண்ணெய் - 2 ஸ்பூன்.

செய்முறை:- 

பாசுமதி அரிசியை ஊறவிடவும். கோழிக் கறியை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து வைக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு, வெங்காயம், தக்காளியைத் தனித்தனியாக அரைத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு சூடாக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு, பொரிய விடவும்.
பச்சை மிளகாய் விழுதைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். புதினா, சிறிது கொத்து மல்லி சேர்க்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்துள், கரம் மசாலாதூள் சேர்த்து வதக்கி, அதில் கோழிக்கறியைப் போடவும். கறி வதங்கியதும் அரை கப் தண்ணீர் விட்டு, குறைந்த தீயில் வேக விடவும். கறி பாதி வெந்ததும் அரிசியைப் போட்டு வதக்கி, எலுமிச்சை சாறு சேர்த்து, 4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கறை மூடிவிடவும். ஒரு விசில் வந்ததும் கொத்துமல்லி இலை தூவிப் பரிமாறவும்
Download As PDF

No comments:

Post a Comment