Wednesday, July 25, 2012

வீண் பிடிவாதம் ஏன்??

     லயத்திற்கு சென்று இறைவனை வழிபட்ட பிறகு நேராக வீட்டுக்கு வரவேண்டும் வழியில் வேறெங்கும் செல்ல கூடாது என்று பெரியவர்கள் சொல்வது ஏன்?


கோயிலுக்கு போனபிறகு வீட்டுக்கு தான் வரவேண்டுமே தவிர மற்ற இடங்களுக்கு போகக்கூடாது என்று எந்த சாஸ்திரமும் தடை சொல்லவில்லை கோயிலுக்கு சென்று வரும் வழியில் யாரோ ஒருவர் சாலையில் நோய்வாய்பட்டு கிடக்கிறார் என்று வைத்து கொள்வோம் அவரை அப்படியே விட்டு விட்டு வீட்டுக்கு வரமுடியுமா? அப்படி வந்தால் அது மனிதாபிமானம் ஆகுமா? என்னை கேட்டால் கோவிலுக்கு போய் இறைவனை வழிபடுவதை விட திக்கற்றவருக்கு உதவி செய்வதையே கடவுள் சிறந்த வழிபாடாக எடுத்துகொள்வார் என்று சொல்வேன் 

ஆனாலும் நமது பெரியவர்கள் இப்படி சொல்வதற்கு எந்த காரணமும் இல்லாமலா இருக்கும் எதையும் யோசித்து பேசுவதே நமது பெரியவர்களின் இயல்பாகும் அதனால் இதற்குள்ளும் நல்ல காரணம் மறைந்திருக்க வேண்டும் அதை ஆழமாக சிந்தித்தால் உண்மை தெரியவரும் 

ஆலய வழிபாடு முடித்தவுடன் நமது மனம் குழப்பங்கள் நீங்கி மிகவும் தெளிவாக இருக்கும் நான் படும் கஷ்டங்களுக்கெல்லாம் கடவுள் நிச்சயம் நல்வழி காட்டுவார் என்ற நம்பிக்கை இதயம் முழுவதும் வியாபித்து இருக்கும் அந்த தெளிவோடும் நம்பிக்கையோடும் நேராக வீட்டிற்கு வந்தால் வீட்டில் காத்திருக்கும் பிரச்சனைகளை சிக்கல்களை மன தைரியத்தோடு எதிர்கொள்ளலாம் அல்லது நம் மனதில் இருக்கும் சாந்தி வீட்டில் உள்ளவர்களையும் பற்றிக்கொள்ளலாம் மாறாக வேறு எங்கோ செல்வோம் என்றால் ஆலயத்தில் பெற்ற நல்ல சிந்தனைகள் தடமாறி போக வாய்ப்புண்டு அதை தவிர்க்கவே நேராக வீட்டிற்கு வாருங்கள் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கலாம்.

எனவே சாதரணமான நேரங்களில் பெரியவர்கள் சொன்னப்படி வீட்டிற்கு வந்துவிடலாம் தவிர்க்க முடியாத காரியங்கள் நம் முன்னால் இருக்கும் போது வீட்டுக்கு தான் போவேன் என்று அடம்பிடிக்க வேண்டிய அவசியமில்லை சிலர் இந்த மாதிரி விஷயங்களில் வீண் பிடிவாதம் பிடித்து அவசியமான அவசரமான காரியங்களை செய்யாமல் இருப்பது தவறு மட்டுமல்ல அறியாமையும் ஆகும்.
Download As PDF

Sunday, July 22, 2012

உடல் பலம் பெற

உடல் மெலிந்து காணப்படுவோர் குண்டாக வேண்டுமானால், வேப்பம்பூவை ஊறவைத்து குடிநீர் தயாரித்து காலையில் பருகி வந்தால் சிறுகச்சிறுக உடல் மெலிவு நீங்கி உடல் குண்டாகத் தொடங்கும்.
பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது. எந்த காரணத்தினால் உடல் இளைத்து இருந்தாலும் பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால் மெலிந்த உடல் தேறும். போகக் களைப்பு நீங்கும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.
முருங்கை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால்கள் உடல் அசதிகள் நீங்கும். உடலில் பலமும் ஏறும். உடலைத் தேற்றும் நல்ல உணவாகும்.
அருகம்புல்லை வேரோடு பறித்து சுத்தம் செய்து, சிறிது தண்ணீர் சேர்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து, காலை மாலை என நீண்ட நாட்கள் சாப்பிட்டு வர உடலில் பலம் ஏறும்.
வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொரி சிறங்கை அகற்றும் மேலும் அஜீரணத்தை போக்கும்.
வேப்பம்பூ, நிலவேம்பு ஒரு அவின்ஸ் எடுத்து இரண்டையும் நன்றாக நசுக்கி அதில் 1 டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி வைத்து விட்டு, இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வடிகட்டி வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர பலஹீனங்களும் காய்ச்சலுக்கு பின் உண்டாகும் பலஹீனங்களும் சரியாகிவிடும்.
அரிசி தவிட்டுடன் பனை வெல்லத்தை கலந்து சிறு உருண்டை செய்து வாயில் போட்டு சாப்பிட்டால் உடல் நல்ல பலன் பெறும்.
கல்யாணபூசணி சாறு 1 டம்ளர் எடுத்து அதில் பனை வெல்லத்தைப் போட்டுக் கலக்கி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் உடம்பில் ஏற்படும் தளர்ச்சி களைப்பு, மூளச்சோர்வு அத்தனையும் சரியாகிவிடும்.
நீண்ட நாள் வியாதியில் வாடுவோருக்கு ஆரஞ்சுபழ ரசமும், ஆரஞ்சு தோல் சேர்த்து நீரும், தக்காளிபழ ரசமும் முன்றும் சமமாக கலந்து குடித்தால் சீக்கிரத்தில் ரத்தம் அபிவிருத்தி அடைகிறது. நல்ல பலத்தையும் சுறுசுறுப்பையும் பெறலாம்.
Download As PDF

Sunday, July 01, 2012

பெண்ணைத் தாயாகப் பாருங்கள-(அமிர்தானந்தமயி)ருசியான மாங்காய் ஊறுகாயைப் பார்த்ததும் வாயில் நீர்
சுரக்கும். மாற்றினத்தவரைக் காணும்போது (அதாவது ஆண்
பெண்ணையும், பெண் ஆணையும்) நம்மையறியாமலே அப்படியொரு
உணர்வு ஏற்படும். அது இயல்பான விஷயம் தான். மழை இலேசாய்
பெய்தால் தரை ஈரமாகிறது, அதே மழை பலமாக பெய்துவிட்டால் தரை
சகதியாகி விடுகிறதில்லையா?
சாதனையை தொடங்கிய காலத்தில் மாற்றினத்தவருடன் அதிகம்
நெருங்கிப் பழகாமல் இருப்பது சாதகருக்கு நல்லது. எப்போதுமே
ஒரு இடைவெளி இருக்க வேண்டும். பெண்ணை தாயாகவோ, சகோதரியாகவோ
கொள்ள வேண்டும். ஆணை தந்தையாகவோ, சகோதரனாகவோ பாவித்துப்
பழக வேண்டும்.
எவ்வளவுதான், எச்சரிக்கையாக இருந்தாலும், இடறி விழுகிற
சந்தர்ப்பங்கள் இருக்கவே செய்யும். அவரவரின்
புறத்தோற்றங்களில் ஈடுபடாமல், உன்னதமான அம்சத்துக்கு
முக்கியத்துவம் தர வேண்டும். அந்நிலையில் ஒவ்வொரு
பெண்ணையும் இறைவியின் வடிவமாகவே பார்க்க வேண்டும். பெண்ணை
வெறும் பெண்ணாக மட்டுமே பார்க்கிறபோது நீங்கள் தவறான
பாதையில் கால் வைத்து விடுகிறீர்கள்.
ஒரு ஆண் சாதகருக்கு பரம எதிரி பெண், ஒரு பெண்
சாதகருக்கு பயங்கர எதிரி ஆண். அதுமட்டுமல்ல, பெண்
இயற்கையில் பலவீனமானவள். ஆனால், பல நற்பண்புகளை வளர்த்துக்
கொண்டு ஆணை விடத் திடமானவளாகி விடுவாள்.
பாலுணர்வைக் கடந்து பெண்கள் இருக்கிறார்கள். ஆனால்,
அவர்களுடைய எண்ணிக்கை லட்சத்துக்கு ஒன்றிரண்டாக மட்டுமே
இருக்கிறது. லட்சியத்தில் ஒரு பெண் தன்னை காம
விவகாரத்துடன் ஒரு ஆண் நெருங்கினாலும் அவனுக்கு ஆன்மிகக்
கொள்கைகளைப் போதிக்கக் கூடியவளாய் இருக்கிறாள்.
Download As PDF