Tuesday, August 30, 2011

ஏல‌க்கா‌யி‌ன் மரு‌த்துவ குண‌‌ங்க‌ள்


ஏல‌க்கா‌யி‌ன் மரு‌த்துவ குண‌‌ங்க‌ள்

ஏல‌க்கா‌ய் எ‌ன்பது இ‌ஞ்‌சி செடி வகை‌யை‌ச் சே‌ர்‌ந்தது. ப‌ச்சை ‌நிற‌க் கா‌ய்களை‌க் கொ‌ண்டது. ஏல‌க்கா‌ய் ப‌ச்சை ‌நிற‌த்‌திலு‌ம், அட‌‌ர் பழு‌ப்பு ‌நிற‌த்‌திலு‌ம் இரு‌க்கு‌ம்.

ஏல‌க்கா‌ய் நறுமண‌ப் பொருளாக ம‌ட்டு‌ம் இ‌ல்லாம‌ல், பல மரு‌த்துவ‌க் குண‌ங்களை‌க் கொ‌ண்டதாகு‌ம்.

மன இறு‌க்க‌த்தை‌க் குறை‌த்து உட‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சி பெற ஏல‌க்கா‌ய் பய‌ன்படு‌கிறது.

ப‌ல் ம‌ற்று‌ம் வா‌ய் தொட‌ர்பான பல ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ஏல‌க்கா‌ய் ந‌ல்ல ‌தீ‌ர்வாக அமையு‌ம்.

செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உதவு‌ம். இதனா‌ல்தா‌ன் நெ‌ய் சே‌ர்‌த்து செ‌ய்ய‌ப்படு‌ம் இ‌னி‌ப்பு‌க‌ளி‌ல் அவ‌சியமாக ஏல‌க்காயை சே‌ர்‌ப்பா‌ர்க‌ள்.

குர‌ல் வளை ம‌ற்று‌ம் தோ‌ல் தொட‌ர்பான நோ‌ய்களை‌த் ‌தீ‌ர்‌க்கு‌ம் ‌ஆ‌ற்ற‌ல் ஏல‌க்கா‌ய்‌க்கு உ‌ண்டு.

மல‌ட்டு‌த் த‌ன்மையை‌ப் போ‌க்குவத‌ற்கு‌ம் ஏல‌க்கா‌‌ய் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.
Download As PDF

பொடுகை ‌விர‌ட்ட இய‌ற்கை முறை


பொடுகை ‌விர‌ட்ட இய‌ற்கை முறை

அருகம்புல்லின் சாறர தேங்காய் எண்ணெ‌யுட‌ன் காய்ச்சி ஆறவைத்துத் தலையில் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.

வெள்ளை மிளகு 4 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு கு‌ளி‌த்து வ‌ந்தா‌ல் பொடுகு நீங்கு‌ம்.
சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்துக் குளித்தா‌ல் ந‌ல்ல‌து.

வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டித் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும்.

தேங்காய் பால் - 1/2 கப், எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி, வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்து மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீளமாக வளரும்.

பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதுட‌ன் கண்டிஷனராகவும் இரு‌க்கு‌ம்.

இ‌தி‌ல் ஒன்றை பயன்படுத்திப் பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறுங்கள். நீங்களும் அழகுடன் திகழ்வீர்கள்.
Download As PDF

நோய் எதிர்ப்புக்கு நெல்லிக்காய்


நோய் எதிர்ப்புக்கு நெல்லிக்காய்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை.

நெ‌ல்‌லி‌க்காயை ‌பிறை ‌நிலா வடிவ‌த்‌தி‌ல் வெ‌ட்டி தே‌னி‌ல் ஊறவை‌த்து எடு‌த்து காயவை‌த்து ப‌த்‌திர‌ப்படு‌த்‌தி தேவை‌ப்படு‌ம்போது சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

நெ‌ல்‌லி‌க்கா‌ய் ஊறுகா‌ய் போ‌ட்டு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை.

மேலும், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம்.
Download As PDF

ஆஸ்துமாவிற்கு மருந்தாகும் மிளகு


ஆஸ்துமாவிற்கு மருந்தாகும் மிளகு

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ வைத்தியம் செய்தும் குணமாகவில்லை என்று புலம்புபவர்களுக்கு இது நல்ல செய்தியாகும்.

அதாவது, ஆஸ்துமா நோயுற்றவர்களுக்கு மிளகு ஒரு அருமருந்தாக அமைகிறது.

மிளகு, கிராம்பு மற்றும் எருக்கம்பூ ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து மை போல அரைத்து, மிளகு அளவிற்கு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.

இதில் ஒரு மாத்திரை வீதம் இரு வேளை வெந்நீரில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இருமல், சளி, கபம் ஆகியவை குணமாகும்.

இதேப்போல, ஆஸ்துமா நோயினால் மூச்சு விட சிரமப் படும்போது ஒரு பழுத்த வாழைப்பழத்தை அனலில் வேக வைத்து, மிளகுத்தூளில் தொட்டு உட்கொள்ள உரிய நிவாரணம் பெறலாம்
Download As PDF

ஆவாரையின் மருத்துவ குணங்கள்!


ஆவாரையின் மருத்துவ குணங்கள்!

ஆவாரை ‌பி‌த்த‌த்‌தி‌ற்கு‌ம், வாத‌த்‌தி‌ற்கு‌ம் அரு‌மரு‌ந்தாகு‌ம்.

ஆவாரை முழுச்செடியையும் நிழலில் உலர்த்தி சூரணமாக செய்து கொள்ளவும். இதனை 1-2 கிராம் அளவு மோரில் கலந்து உண்ண பித்தம் தணியும்.

பாலில் கலந்து உண்ண வாதம் தீரும். வெற்றிலைச் சாற்றில் உண்ண ஆஸ்துமா குணமாகும். அரிசி கழுவிய நீரில் உண்ண நீரிழிவு தீரும்.

நெய்யில் கலந்து உண்ண குஷ்டம் தீரும். கஞ்சியுட‌ன் சே‌ர்‌த்து உண்ண மயக்கம் தீரும். வெந்நீருடன் கலந்து உண்ண கழுத்துவலி தீரும்.

ஆவாரம் பூவுடன் பச்சைப்பயறு சேர்த்து பொடி செய்து தினமும் தேய்த்துக் குளித்துவர கடும்புள்ளி முகப்பரு போன்றவை நீங்கி தேகம் மினுமினுக்கும்
Download As PDF

கா‌ய்க‌றி ம‌ஞ்சூ‌ரிய‌ன்


கா‌ய்க‌றி ம‌ஞ்சூ‌ரிய‌ன்

தேவையான பொருட்கள்:-

கேர‌ட் - 1
கோ‌ஸ் - 1 து‌ண்டு
உருளை‌க் ‌கிழ‌ங்கு - 2
‌ப‌ச்சை ‌மிளகா‌ய் - 2
பூ‌ண்டு - 4 ப‌ல்லு
சோள மாவு - 4 தே‌க்கர‌ண்டி
எ‌ண்‌ணெ‌ய் - பொ‌றி‌க்க‌த் தேவையான அளவு
சோயா சா‌ஸ் - 1 தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு - ‌சி‌றிது
‌மிளகு தூ‌ள் - 1 தே‌க்கர‌ண்டி


செ‌ய்யு‌ம் முறை:-

கா‌ய்க‌றிகளை நறு‌க்‌கி‌ப் போ‌ட்டு வேக வை‌த்து எடு‌‌த்து ம‌சி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். அ‌தி‌ல் சோள மாவு, அரை‌த்த ப‌ச்சை ‌மிளகா‌ய் ‌விழுது, உ‌ப்பு சே‌ர்‌த்து‌ ‌பிசை‌யவு‌ம்.

அதனை ‌சிறு ‌சிறு உரு‌ண்டைகளாக உரு‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி இ‌ந்த உரு‌ண்டைகளை அ‌தி‌ல் போ‌ட்டு ந‌ன்கு வேக‌வி‌ட்டு எடு‌க்கவு‌ம்.

வேறொரு வாண‌லி‌யி‌ல் ‌சி‌றிது எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி சூடானது‌ம் பூ‌ண்டு ‌விழுது, ப‌ச்சை ‌மிளகா‌ய், வெ‌ங்காய‌த் தா‌ள் போ‌ட்டு வத‌க்கவு‌ம். அ‌தி‌ல் ‌சி‌றிது த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி உ‌ப்பு, ‌மிளகு தூ‌ள், சோயா சா‌ஸ் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க ‌விடவு‌ம்.

இ‌ந்த கரைச‌ல் சு‌ண்டி வரு‌ம் போது வறு‌த்த உரு‌ண்டைகளை‌ப் போ‌ட்டு மெதுவாக ‌கிள‌றி ‌விடவு‌ம்.

5 ‌நி‌மிட‌ம் க‌ழி‌த்து கொ‌த்தும‌ல்‌லி தூ‌வி ப‌ரிமாறவு‌ம்.
Download As PDF

தூதுவளை‌யி‌ன் மக‌த்துவ‌ம்


தூதுவளை‌யி‌ன் மக‌த்துவ‌ம்

குளிர் காலங்களில் சளித்தொல்லை அதிகமாக இருக்கும். மூக்கடைப்பு ஏற்படும். தொண்டையில் முள் மாட்டியது போன்ற உணர்வும், கிச்..கிச்.. என்ற நெருடலும் ஏற்படும். இதெல்லாவற்றையும் நீக்க தூதுவளை அருமருந்தாகப் பயன்படுகிறது.

தூதுவளை இலை, தண்டு இவற்றிலுள்ள முட்கள் மற்றும் காம்பு, நடுநரம்பு ஆகியவற்றை நீக்கி நிழலில் உலரவைத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும். தினமும் 2 வேளை உணவுக்குப்பின் 1 கிராம் தூதுவளை இலைப்பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட மார்புச்சளி, தொண்டைக்கட்டு, குரல் கம்மல், மூக்கடைப்பு நீங்கும். நன்கு பசியும் ஏற்படும். பாலில் கலந்தும் சாப்பிடலாம்.

(அ) தூதுவளை துவையல்
தூதுவளை இலை - 1 கைப்பிடி (காம்பு, நடுநரம்பு, முள் நீக்கி) மிளகாய் வற்றல் - 2 பூண்டு - 2 பல் நல்லெண்ணெய், புளி, உப்பு - தேவையான அளவு

செய்முறை :

தூதுவளை இலையுடன் மிளகாய் வற்றல் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு வதக்கியபின் அவற்றுடன் பூண்டு, புளி, உப்பு கலந்து அரைத்துக் கொள்ளவேண்டும். இட்லி, தோசை, சாதம் இவற்றுடன் தொட்டுச்சாப்பிட சளி, தொண்டை கரகரப்பு நீங்கி கலகலவென்றிருக்கும்.
Download As PDF

கோ‌‌‌ழி‌க்க‌றி கார வறு‌வ‌ல்


கோ‌‌‌ழி‌க்க‌றி கார வறு‌வ‌ல்

தேவையானவை:-

கோழிக்கறி - அரை ‌கிலோ
பூண்டு - 5
பச்சைமிளகாய் - சிறிதளவு
எண்ணெய் - 1 தே‌க்கர‌ண்டி
வினிகர் - 1 தே‌க்கர‌ண்டி
உப்பு - சிறிதளவு


செ‌ய்யு‌ம் முறை:-

கோழிக்கறியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பூ‌ண்டையு‌ம், ப‌ச்சை ‌மிளகாயையு‌ம் ‌விழுதாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

ஒரு பாத்திரத்தில் கோழிக்கறி, வினிகர், உப்பு, பூண்டு, பச்சை மிளகாய் ‌விழுது சே‌ர்‌த்து ‌‌கிள‌றி அரை ம‌ணி நேர‌ம் ஊற ‌விடவு‌ம்.


ஒரு வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு அ‌தி‌ல் ஊ‌றிய கோ‌ழி‌க்க‌றியை‌க் கொ‌ட்டி வத‌க்கவு‌ம். சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும்.

கோழிக்கறி வெந்ததும் திறந்து மீண்டும் கிளறவும்.

எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக வெந்து சுண்டி வரும்போது இறக்கி வைக்க வேண்டும். சுவையான கோ‌ழி‌க்க‌றி கார வறுவ‌ல் தயார்
Download As PDF

அனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த


அனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த

ஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒன்றைத் தயாரித்து சென்ட் பட்டனை அழுத்தியபின்னர், உடனே அதனை அனுப்புவதை ரத்து செய்திட முடியும். மெயில் செய்தியில் தவறு இருப்பதை உணர்ந்து திருத்த விரும்புபவர்கள், கோபத்தில் மெயில் எழுதி, அனுப்பிய அந்த நேரத்திலேயே முடிவை மாற்றிக் கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவுகிறது. சென்ட் பட்டனை அழுத்திய பின்னர் 5 விநாடிகளில் அதற்கான அன்டூ (Undo) பட்டனை அழுத்த வேண்டும். ஏனென்றால் ஜிமெயில் 5 விநாடிகள் கழித்தே மெயிலை அனுப்பும் வேலையைத் தொடங்குகிறது. ரத்து செய்யத் தரப்படும் இந்த நேரம் மிகவும் குறைவாக இருப்பதாகப் பலர் தெரிவித்ததனால், ஜிமெயில் இந்த கால அவகாசத்தினை அதிகமாக்கியுள்ளது. 
30 விநாடிகள் வரை மெயில் அனுப்புவதை ரத்து செய்திடும் வசதியைத் தந்துள்ளது. 30 விநாடிகள் ஏன்? என்று நீங்கள் எண்ணினால், இதனைக் குறைத்துக் கொள்ளலாம். 5,10,20, 30 நொடிகள் என கால அவகாசத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனை அமைத்திட Gmail > Settings > General > Undo Send என்று சென்று மாற்றவும்
Download As PDF

தே‌ள், பா‌ம்பு‌க் கடி‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்


தே‌ள், பா‌ம்பு‌க் கடி‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்

பிரமத் தண்டு இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, மேக ரணங்கள், குட்டம் குணமாகும்.

பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ கடுப்பு நீங்கும்.

பிரமத்தண்டு இலைச் சாறு 30 மில்லியளவு குடிக்கக் கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட பேதியாகி பாம்பு விஷம் இறங்கும்.

பிரமத் தண்டு இலையை அரைத்துக் கட்டிவரக் கரப்பான், பேய்ச் சொறி, சிரங்கு, உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் குணமாகும்.

‌பிர‌ம த‌ண்டு பூக்களை 20 எடுத்து நீரில் ஊற வைத்து குளித்து வர 50 நாட்களில் கண் நோய் குணமாகும்.
Download As PDF

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் எலுமிச்சை!


உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் எலுமிச்சை!

நோய் வராமல் தடுத்து, உடல் நலத்தை காக்கக்கூடிய பல சத்துக்கள் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ளது. எலுமிச்சம் பழம் புளிப்பு சுவை கொண்டது.

புளிப்பு சுவையுள்ளவை ஜீரணத்தை தூண்டி உணவை நன்கு செரிக்க செய்யும். உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்றும் தன்மையும், புளிப்பு சுவைக்கு உண்டு. எலுமிச்சை புளிப்பு சுவையுடையதாக இருந்தாலும், இதில் காரத்தன்மையும் இருக்கிறது. அதனால் ரத்தத்தை தூய்மை செய்யும் சிறப்பு இதில் இருக்கிறது.

எலுமிச்சை பழத்தில் உள்ள "சிட்ரிக் அமிலம்" நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாக இருப்பதால் சளி, இருமல், தொண்டை வலி போன்றவைகளுக்கு நல்ல மருந்தாகிறது. எலுமிச்சை சாறுக்கு பித்தநீரை சுரக்கும் தன்மை உண்டு. அதனால் காமாலை நோய்களுக்கும் இது மருந்தாக பயன்படுகிறது.

ரத்தப் போக்கை தடுத்து நிறுத்தும் சக்தி எலுமிச்சை சாறுக்கு உள்ளதால் மூக்கில் ரத்தம் வடிதல், மூலநோயில் உண்டாகும் ரத்தக் கசிவு போன்ற நிலைகளில் இது பலனளிக்கிறது.

உடலில் காற்றை சீராக்கி இயக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. இதனால் எலுமிச்சை சாறு பருகினால் இதயம், நுரையீரல் போன்றவை நன்றாக இயங்கும். மலை ஏற்றம் செல்பவர்கள், எலுமிச்சம் சாற்றை நீரில் கலந்து குடித்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும், களைப்பு நீங்கும். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய படபடப்பை நீக்கும். அதனால் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களும், மன பதட்டம் கொண்டவர்களும் எலுமிச்சை சாறில் நீர் கலந்து பருகலாம்.

எலுமிச்சை கழிவுகளை வெளியேற்றும் தன்மை வாய்ந்ததால் முக பருவால் துன்பப்படும் இளம் பருவத்தினர், ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 சிட்டிகை மிளகு தூள், 2 தேக்கரண்டி தேன் கலந்து பருக வேண்டும். இதனால் ரத்தத்தில் காரத் தன்மை அதிகரிக்கும். அதை தொடர்ந்து கழிவுகள் வெளியேறி, ரத்த ஓட்டம் சீர்படும். முகப்பரு போன்றவைகளும் மறையும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் காலை எழுந்தவுடன் இளம் சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் மலச் சிக்கல் நீங்கும். உடல் புத்துணர்ச்சி பெறும்.

சிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அத்துடன் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுதூள் அல்லது பச்சை மிளகாய் கலந்து சாலட் ஆக சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த சாலட்டை நீரிழிவு நோயாளிகள் தினமும் 1 கப் அளவிற்கு சாப்பிட்டு வருவது உடலுக்கு மிக நல்லது.

நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுப்பவர்கள் பருகும் நீரில், 1 கப்புக்கு 1 தேக்கரண்டி என்ற அளவில் எலுமிச்சை சாறு கலந்து அடிக்கடி குடித்து வந்தால், ரத்தத்தின் காரத்தன்மை அதிகரித்து நோய் பாதிப்பு விரைவில் சீராகும். உடலுக்கு புத்துணர்ச்சியும் மனதிற்கு தெளிவும் கிடைக்கும்.

கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குரு, சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்களிலிருந்து விடுபட எலுமிச்சை சாற்றை உடலில் தேய்த்து சூரிய ஒளியில் சிறிது நேரம் நின்றிருந்துவிட்டு பின்பு குளிக்கவேண்டும். கோடை காலத்தில் உடல் புத்துணர்ச்சி பெற குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு, குளிக்க வேண்டும்.

எலுமிச்சையை மழை, கோடை, பனி போன்ற எல்லா காலங்களிலும் உபயோகிக்கலாம். எலுமிச்சை சாறை காய்கறிகளில் கலந்து சாலட் ஆக செய்யும் பொழுது, அந்த காய்கறிகளின் சத்து அதிகரிக்கிறது.
Labels: dnamalar, health
Download As PDF

கொழுக்கட்டை

கொழுக்கட்டை
* தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலத்தூள் சேர்த்து பூரணம் செய்யலாம்.
* உப்புக் கொழுக்கட்டைக்கு உளுத்தம் பருப்பை ஊற வைத்து, பச்சை மிளகாய், உப்பு போட்டு அரைத்து, இட்லி தட்டில் வேக வைத்து உதிர்த்து, கடுகு தாளித்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, கொழுக்கட்டை மாவினுள் வைத்து, சோமாசி போல அரை வட்டமாக செய்து, ஆவியில் வேக வைக்கலாம்.
* பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, முத்துக் கொதி வந்ததும், பச்சரிசி மாவு போட்டு, சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கிளறி, கொழுக்கட்டை செய்தால், உருண்டை மிருதுவாக இருக்கும்; மேலாக வெடிக்காது.
* அதிக நேரம் கொழுக்கட்டையை அடுப்பில் வைத்தால் கெட்டியாகி விடும். கொழுக்கட்டை வைக்கும் பானையிலிருந்து ஆவி வரும் போது, இறக்கி விடலாம். கொழுக்கட்டை வெந்திருக்கும்.

பிடி கொழுக்கட்டை

*பிடி கொழுக்கட்டைக்கு பச்சரிசியைக் களைந்து, தண்ணீர் வடித்து, உலர்த்தி, மிஷினில் ரவையாக உடைத்துக் கொள்ளலாம்.
*தேவையான தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு, வெல்லம் கரைந்ததும், அரிசி ரவையைப் போட்டு, ரவை வெந்ததும், தேங்காய்த் துருவல், ஏலத்தூள் சேர்த்து இறக்கி, பிடியாகப் பிடித்து ஆவியில் வேக வைக்கவும்.
*வெல்லக் கரைசல் கெட்டியான பின், ரவையைப் போட்டால், ரவை வேகாது. அதனால், வெல்லம் கரைந்ததுமே அரிசி ரவையைச் சேர்த்தால், ரவை நன்றாக வெந்துவிடும். கொழுக்கட்டை மிருது வாகவும் இருக்கும்.

Download As PDF

சேமியா வடை:

சேமியா வடை: தேவையான பொருட்கள்:

வேக வைத்த சேமியா - கால் கப்
மைதா - ஒரு மேஜைக்கரண்டி
தேங்காய்த் துருவல் - ஒரு மேஜைக் கரண்டி
பூண்டு - 1
பச்சை மிளகாய் - 1
பெரிய வெங்காயம் - 1
கொத்துமல்லி இலை - சிறிதளவு.

செய்முறை:

சேமியாவை இரண்டு நிமிடம் வெந்நீரில் போட்டு, வேக வையுங்கள். பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளுங்கள். கொத்தமல்லி இலையையும் பொடியாக நறுக்குங்கள். பிறகு பூண்டை அரைத்து, இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, அத்துடன் தேங்காய்த் துருவல், உப்பு, மைதா, வேக வைத்த சேமியா ஆகியவற்றையும் சேர்த்து, நன்றாக பிசைந்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, வடையாக சேமியா கலவையைத் தட்டி, எண்ணெயில் போட்டு, இருபுறமும் திருப்பி வேக வைத்து எடுக்கவும்.

Download As PDF

Monday, August 22, 2011

முட்டை கட்லெட் செய்முறை


முட்டை கட்லெட்

தேவையான பொருட்கள்:
முட்டை - 4
உருளை‌க் ‌கிழ‌ங்கு - 4
வெங்காயம் - 1
மிளகாய்தூள் - 1 கரண்டி
மசாலாதூள் - 1 தேக்கரண்டி
தேங்காய்பால் - அரை கப்
மிளகுதூள் - 1 ‌சி‌றிது
மைதா - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 250 கிராம்
உ‌ப்பு - தேவையான அளவு


செய்முறை:

முட்டை, உருளைக்கிழங்கை த‌னி‌த்த‌னியாக வேகவைத்து தோல் ‌நீ‌க்‌கவு‌ம்.

ஒரு மு‌ட்டையை 2 பாகமாக அ‌ல்லது 4 பாகமாக வெ‌ட்டி வை‌‌க்க‌வு‌ம்.

கி‌ண்ண‌த்‌‌தி‌ல் ‌சி‌றிது ‌நீ‌ர் ‌‌வி‌ட்டு அ‌தி‌ல் உப்பு, மிளகு தூ‌ள் போட்டு கலக்கி, அ‌தி‌ல் வேகவை‌க்காத ஒரு மு‌ட்டையை உடை‌த்து அடி‌த்து வை‌‌க்கவு‌ம். வெங்காயத்தை மிக பொடியாக நறுக்கவும்.

உருளைக்கிழங்கை ம‌சி‌த்து அ‌தி‌ல் தேங்காய் பால், வெங்காயம், மைதா, உ‌ப்பு, மசாலா, ‌மிளகா‌ய் தூ‌ள் போட்டு நன்கு பிசைந்து கொ‌ள்ளவு‌ம்.

அ‌ந்த மாவை ‌சி‌றிது எடு‌த்து கையில் வட்டமாகத் தட்டி நடுவில் வெ‌ட்டி வை‌த்து‌ள்ள ஒரு பா‌தி முட்டையை வைத்து மாவை மூட வேண்டும்.

இதனை முட்டை கலவை‌யில் நனைத்து ரொட்டி தூளில் ‌பிர‌ட்டி தவா‌‌வி‌‌ல் போ‌ட்டோ அ‌ல்லது எ‌ண்ண‌ெ‌‌யி‌ல் பொ‌ரி‌த்தோ எடு‌க்கலா‌ம் மு‌ட்டை க‌ட்லெ‌ட் தயா‌ர்
Download As PDF

காலிபிளவர் பஜ்ஜி செ‌ய் முறை:


காலிபிளவர் பஜ்ஜி

காலிபிளவர் பஜ்ஜி சாப்பிட்டிருக்கீர்களா? எ‌ன்ன இல்லையா... இதோ உங்களுக்கான செய்முறை. 
தேவையான பொரு‌ட்க‌ள்:

காலிபிளவர் - 1
எண்ணெய் - பொ‌ரி‌க்க
கடலை மாவு - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு

செ‌ய்யு‌ம் முறை:


காலிபிளவரை சுடு‌நீ‌ரி‌ல் ‌மு‌க்‌கி எடு‌த்து ‌பி‌ன்ன‌ர் பூ‌க்களை த‌னி‌த்த‌னியாக ‌பி‌ரி‌த்து லேசாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பஜ்ஜிமாவுடன் தேவையான அளவு தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி காய ‌விடவு‌ம். 

வேக வைத்த காலிபிளவரை பஜ்ஜிமாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான காலிபிளவர் பஜ்ஜி தயார்
Download As PDF

விரும்பிய காட்சிகளை வெட்ட!


விரும்பிய காட்சிகளை வெட்ட!

நாம் வீடியோ காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அல்லது திரைப்படங்களை ரசிக்கையில், சில காட்சிகளை மட்டும் தனியே ஒரு பைலாக எடுத்து வைத்தால் நல்லது என்று எண்ணுவோம். குறிப்பாக ஒரு நடனக் காட்சி அல்லது காமெடி நம்மைக் கவரலாம். அப்போது எப்படி ஒரு குறிப்பிட்ட அளவில் உள்ள காட்சியை மட்டும் தனியே பிரித்து பைலாகக் கொள்வது என்ற பிரச்சினை உங்களுக்கு ஏற்படும். இந்த பிரச்சினயைத் தீர்க்க வீடியோ கட்டர் http://www.freevideocutter.com/ என்ற புரோகிராம் இலவசமாக என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. 

இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்த பின் புரோகிராமினை இயக்கவும். பின் "Open Video" என்ற கட்டளையைக் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் வீடியோ பைலைத் தேர்ந்தெடுக்கவும். இந்த புரோகிராம் அந்த வீடியோவின் பார்மட், பிட் ரேட், பிளே ஆக எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றைப் படித்தறிந்து, வீடியோ தம்ப்நெயில் படங்களை ஸ்லைடுகளாக உருவாக்கும். ட்ரேக் பாரில் இடது பக்கம் எந்த ஸ்லைடிலிருந்து கட் செய்திட வேண்டும் என்பதனைக் குறிக்கவும். வலது பக்கம் முடிந்திடும் ஸ்லைடைத் தேர்ந்தெடுக்கவும். பின் சேவ் செய்திட விரும்பும் பார்மட்டைத் தேர்ந்தெடுக்கவும். பின் சேவ் வீடியோ கட்டளை கொடுக்கவும். MPEG4, DivX, MP3, FLV, WMV என்ற பார்மட்கள் அனைத்தையும் இது கையாள்கிறது. நீங்கள் பதிய விரும்பும் பார்மட்டினையும் இதில் முடிவு செய்திடலாம். 

பின் நீங்கள் குறிப்பிடும் பைல் பெயரில், தேர்ந்தெடுத்த பார்மட்டில் வெட்டப்பட்ட வீடியோ காட்சி பைலாகக் கிடைக்கும். ஆடியோ மட்டும் வேண்டும் என்றாலும், அதனை எம்பி3 பைலாக சேவ் செய்திடலாம்.
Download As PDF

மீன் குழம்பு செய்முறை


மீன் குழம்பு

தேவையானவை :

மீன் - 1/4 கிலோ
தக்காளி - இரண்டு
சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி
புளி - எலுமிச்சையளவு
மிளகாய்த் தூள் - 4 தே‌க்கர‌ண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே‌க்கர‌ண்டி
கடுகு, வெந்தயம், எண்ணெய் - தா‌ளி‌க்க
க‌றிவே‌ப்‌பிலை - ‌சி‌றிது
இ‌ஞ்‌சி - ‌‌‌சி‌றிது
பூ‌ண்டு - ஐந்து ப‌ல்
‌மிளகு - அரை தே‌க்கர‌ண்டி


செய்முறை :

‌மீனை சு‌த்த‌ம் செ‌ய்யவு‌ம். இ‌ஞ்‌சி, தக்காளி, வெங்காய‌ம் ஆகியவற்றை நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். பூ‌ண்டை தோலு‌ரி‌த்து வையு‌ங்க‌ள்.

‌மி‌க்‌ஸி ஜா‌‌ரி‌ல் ‌சி‌றிது த‌க்கா‌ளி, ‌சி‌றிது வெ‌ங்காய‌ம், இ‌ஞ்‌சி, பூ‌ண்டு, ‌மிளகு, க‌றிவே‌ப்‌பிலை ஆ‌‌கியவ‌ற்றை‌ப் போ‌ட்டு அரை‌‌க்கவு‌ம்.

பு‌ளியை‌க் கரை‌த்து அ‌தி‌ல் உ‌ப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சே‌ர்‌க்கவு‌ம்.

அடுப்பில் குழ‌ம்பு பாத்திரத்தை வைத்து தா‌ளி‌த்து க‌றிவே‌ப்‌பிலை சே‌ர்‌த்த ‌பிறகு வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவு‌ம்.

‌பிறகு புளி‌க் கரைசலை ஊ‌ற்‌றி‌க் கொ‌‌தி‌‌க்கு‌ம் போது அரை‌த்து வை‌த்த ‌விழுதை சே‌ர்‌க்கவு‌ம்.

குழம்பு கொதித்து சு‌ண்டி வரு‌ம் போது, கழுவிய மீனைப் போட்டு 10 ‌நி‌மிட‌‌த்‌தி‌ல் இறக்கவு‌ம்.
Download As PDF

சிக்கன் பிரியாணி செய்முறை


சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள்:-

பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு,
பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்காளி - தலா 2, பெரிய வெங்காயம் - 2, புதினா - 1/2 கட்டு, கொத்துமல்லி - 1/4 கட்டு, பட்டை கிராம்பு ஏலக்காய் - தலா 3, பிரியாணி இலை - 2, மிளகாய்தூள் உப்பு - 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன், கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன், எலுமிச்சை - 1, நெய் - 1 ஸ்பூன், சமையல் எண்ணெய் - 2 ஸ்பூன்.

செய்முறை:- 

பாசுமதி அரிசியை ஊறவிடவும். கோழிக் கறியை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து வைக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு, வெங்காயம், தக்காளியைத் தனித்தனியாக அரைத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு சூடாக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு, பொரிய விடவும்.
பச்சை மிளகாய் விழுதைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். புதினா, சிறிது கொத்து மல்லி சேர்க்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்துள், கரம் மசாலாதூள் சேர்த்து வதக்கி, அதில் கோழிக்கறியைப் போடவும். கறி வதங்கியதும் அரை கப் தண்ணீர் விட்டு, குறைந்த தீயில் வேக விடவும். கறி பாதி வெந்ததும் அரிசியைப் போட்டு வதக்கி, எலுமிச்சை சாறு சேர்த்து, 4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கறை மூடிவிடவும். ஒரு விசில் வந்ததும் கொத்துமல்லி இலை தூவிப் பரிமாறவும்
Download As PDF

சில எளிய தியானப் பயிற்சிகள்


சில எளிய தியானப் பயிற்சிகள்

தியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். விண்வெளிப் பயணம் செல்பவன் காணும் பிரம்மாண்டங் களைக் காட்டிலும் உள் நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தில் அதிகமாக நாம் காண முடியும். நம்மில் நாம் அறியாத எத்தனையோ ரகசியங்கள்புதைந்து இருக்கின்றன. கோடிக்கணக்கில் செல்வத்தைப் புதைத்து வைத்து விட்டு அதை மறந்து போய் பிச்சைக்காரர்களாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் போலத் தான் நாமும் இருக்கிறோம். அந்தப் புதையலுக்கு நம்மை அழைத்துப் போகும் மார்க்கம் தான் தியானம்.
ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. மனம் வெளியே தான் எல்லா சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன என்ற தவறான அபிப்பிராயத்தில் இருக்கிறது. எனவே இந்த உள்நோக்கிய பயணத்தை அதை சுவாரசியமேயில்லாத செயலாக எண்ணி முரண்டு பிடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதன் அபிப்பிராயங்களை அலட்சியம் செய்து உறுதியாக ஆரம்பித்து அதை விட உறுதியாகத் தொடர்ந்து முயன்றால் ஒழிய இதில் வெற்றி அடைய முடியாது. இதை ஆரம்பத்திலேயே மனதிற்குள் உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம். முதலில் எளிமையான சில தியானப் பயிற்சிகளை அறிந்துகொள்வோம். மனதைத் தியானத்தில் லயிக்க வைப்பதில் ஓரளவு வெற்றி பெற்ற பின் மற்ற மேலான தியானப் ப்யிற்சிகளுக்குச் செல்லலாம். 
 
முதல் தியானம் மூச்சின் மீது கவனம் வைக்கும் தியானம். இது கிட்டத்தட்ட ஆல்ஃபாஅலைவரிசைக்குச் செல்லச் செய்த பயிற்சியைப் போன்றது தான்.

1) 
அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். தரையில் சம்மணமிட்டு அமரமுடிந்தவர்கள் அப்படி அமரலாம். முடியாதவர்கள் ஒரு நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம். முடிந்த வரை நேராக நிமிர்ந்து இருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சுஇயல்பானதாக இருக்கட்டும்.
2) 
மூச்சு உங்கள் மூக்கின் வழியாக உள்ளே சென்று வெளி வரும் பயணம் வரை அதன் மீதே உங்கள் கவனத்தை வைத்திருங்கள். மூச்சு முழுமையாகவும் சீராகவும் மாற ஆரம்பிக்கும்.
3) 
இனி மூச்சை எண்ண ஆரம்பியுங்கள்.
4) 
மூச்சை உள்ளிழுங்கள். ஒன்று. வெளியே விடுங்கள். இரண்டு. மீண்டும் உள்ளே இழுங்கள். மூன்று. வெளியே விடுங்கள். நான்கு........
5) 
உங்கள் கவனம் ஆரம்பங்களில் கண்டிப்பாக மூச்சை விட்டு மற்ற விஷயங்களுக்குச்செல்லலாம். அதை உணர்ந்த உடனேயே மீண்டும் மூச்சிற்கே கொண்டு வாருங்கள்.எண்ணிக்கையைத் தொடருங்கள்.
6) 
உங்கள் மூச்சு தானாக ஆழமாகும்அமைதியாகும்வேகம் குறையும். எண்ணிக்கையைத் தொடருங்கள். நூறு ஆகும் வரை எண்ணி விட்டு நிறுத்துங்கள். பின் கண்களைத் திறந்து,நிதானமாக எழுந்து தியானத்தை முடியுங்கள்.
7) 
இந்த தியானத்தின் போது உடலில் பல்வேறு உணர்வுகளை நீங்கள் உணர்வீர்கள். மூச்சு மூக்கு தொண்டை பகுதிகளில் சென்று வரும் போதும்நுரையீரல்வயிற்றுப் பகுதிகளை நிறைத்து திரும்பும் போதும் இது வரை உணர்ந்திராத சில நுண்ணிய உணர்வுகளை நீங்கள் உணர ஆரம்பிக்கலாம். அதை உணரும் போதும் உங்கள் எண்ணிக்க்கையை நிறுத்தி விடாதீர்கள்.
8) 
ஆரம்ப காலங்களில் சிலருக்கு தசைப்பிடிப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். நீங்கள்உட்காரும் நிலையை சற்று மாற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் மூச்சின் எண்ணிக்கை செய்வது தடைப்படாமல் இருக்கட்டும்.
 
 இன்னொரு எளிய தியானத்தையும் அறிந்து கொள்ளலாம். இது தீப ஒளிச்சுடர் தியானம். 
இந்த தியானத்தை அரையிருட்டு அறையில் செய்வது நல்லது. உங்கள் கண்பார்வைக்கு நேரான ஓரிடத்தில் இரண்டு அல்லது மூன்று அடிகள் தூரத்தில் மெழுகு வர்த்தி அல்லதுவிளக்கு பற்ற வைத்துக் கொள்ளுங்கள். மேலே சொன்ன தியானத்தின் முதலிரண்டு படிகள் இந்தத் தியானத்திற்கும் பொருந்தும். முறையாக அமர்ந்துகண்களை மூடி மூச்சை சீராக்கிக் கொள்ளுங்கள். மூன்றாவதாக மூச்சில் முழுக்கவனம்வைப்பதற்குப் பதிலாககண்களைத் திறந்து அந்த எரியும் தீபத்தின் ஒளிச்சுடரில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்

எண்ணங்கள் அந்த தீப ஒளியை விட்டு ஓட ஆரம்பிக்கும் போதெல்லாம் மனதை மென்மையாக திரும்பவும் அந்த தீப ஒளிக்கே கொண்டு வந்து விடுங்கள். மனம் மெழுகுவர்த்தி பற்றியோவிளக்குபற்றியோ எண்ணக் கூட விடாதீர்கள். அந்த சுடர் மிகப்பிரகாசமாக எரிகின்றதுமிக மங்கலாக எரிகின்றது என்பது போன்ற எண்ணங்களைக் கூட வளர்த்தாதீர்கள். உடனே அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடக்கூடும். தீப ஒளியில் மனம் லயிக்கப் பாருங்கள். மனம் அதை விட்டுச் செல்லும் போதெல்லாம் சலிக்காமல் அந்த தீபச்சுடருக்கே திரும்பக் கொண்டு வாருங்கள். நீங்கள் உறுதியாகஇருக்கிறீர்கள் என்று அறிந்த பின் உங்கள் மனம் சிறிது சிறிதாக அலைவதை நிறுத்தி வசப்படும். தியான நிலை கைகூடும். சுமார் 20 முதல் 30நிமிடங்கள் இந்த தியானத்தைச் செய்து முடியுங்கள்.
 
இந்த இரண்டு தியானங்களையும் முடித்த பின்னரும் தடாலென்று எழுவதுஉடனே பரபரப்பான சூழ்நிலைக்கு மாறுவது கூடாது. சற்று நிதானமாக தியான நிலையில் இருந்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள். அப்போது தான் அந்த தியானத்தால் பெற்ற அமைதியின் ஒரு பகுதியை மனதின் ஆழத்தில் நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
 
 தினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும்மாலை ஒரு தியானமும் செய்யலாம். அப்படி இரண்டு முறை செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டு தியானங்களில் ஒன்றையாவது தினமும் செய்யுங்கள்.
 

நன்றி:விகடன்-என்.கணேசன்/கே.எம் தர்மா -பதிவு.

Download As PDF

விபாசனா தியான முறை - செய்முறை பயிற்சிவிபாசனா தியான முறை:

1) 
மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். சத்தங்களே இருக்கக்கூடாது என்பதல்ல நம்மை அதிகமாக அலைக்கழிப்பது போன்ற சத்தங்கள் இருக்கக் கூடாது என்பது முக்கியம். 

2) 
உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ,பத்மாசனத் திலோநாற்காலியிலோ அமருங்கள். நீண்ட நேரம் அமர்கையில் உங்களுக்குசிரமமாக இருக்கும்படியாக மிக இறுக்கமாக அமராதீர்கள். அதே நேரம் கூன் போட்டோவிறைப்பாகவோ இல்லாமல் முடிந்த அளவு நேராக நிமிர்ந்து இருங்கள். உதாரணத்திற்கு வயலின் தந்தி மாதிரி இருக்கச் சொல்கிறார்கள். ஒரேயடியாக இறுக்கமாகவோ,தளர்ச்சியாகவோ இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

3) 
உங்கள் வலது உள்ளங்கை இடது உள்ளங்கையின் மீது இருக்கும்படியாக கைகளை திறந்த நிலையில் மடியில் வைத்துக் கொள்ளவும் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டாம். கண்களை மூடியோலேசாகத் திறந்தோ வைத்துக் கொள்ளலாம்.

4) 
உங்கள் கவனத்தை வயிற்றுப் பகுதியில் வையுங்கள். உங்கள் உள் வாங்கும் மூச்சினால் உங்கள் வயிறு விரிவடைவதையும்வெளி விடும் மூச்சினால் வயிறு குறுகுவதையும் கவனியுங்கள். உங்கள் கவனத்தை அதைத் தவிர வேறெதிலும் வைக்க வேண்டாம். ஆரம்ப நாட்களில் அதை விரிவடைகிறது”, “குறுகுகிறது” என்று மனதில் பெயரிட்டு கவனத்தை பலப்படுத்தலாம். ஆனால் அதற்கு மேல் உங்கள் மூச்சை அலசப் போக வேண்டாம். உள் மூச்சு ஆழமாகிறது” “வெளிமூச்சு முழுமையாக இல்லை” போன்ற விமரிசனங்களுக்குப் போகாதீர்கள்.
5) போகப் போக அந்த பெயரிட்டுஅழைப்பதையும் நிறுத்தி வயிற்றின் அசைவுகளை மட்டும் உணர ஆரம்பியுங்கள். இது படிக்க சுலபமாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவு சுலபம் இல்லை.வேண்டுமானால் உங்கள் கைகளை முன்பு சொன்ன நிலையிலேயே வயிற்றை ஒட்டினாற் போல் வைத்துக் கொள்ளலாம். கைகளாலும் அந்த அசைவுகளை உணர்வது தியானத்தை ஆழப்படுத்த உதவும்.

6) 
மூச்சை நீங்களாகக் கட்டுப்படுத்த முயலாதீர்கள். அது இயல்பாகஇருக்கட்டும். மூச்சினால் ஏற்படும் வயிற்றசைவில் மட்டும் வைக்கையில் நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். அப்போது அடுத்த அசைவைப் பற்றி சிந்திக்காதீர்கள். உதாரணமாக உள்மூச்சின் அசைவில் கவனம் வைக்கையில் வெளிமூச்சின் அசைவைப் பற்றி முன்பே நினைக்க ஆரம்பிக்காதீர்கள். உங்களைப் பொறுத்த வரை அந்த ஒரு கணம் மட்டுமே கவனமிருக்கட்டும். மனம் ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும். கடந்த காலத்திலும்எதிர்காலத்திலும் கவனத்தை பெரும்பாலும் சிதற வைக்கும் மனதிற்கு நிகழ்காலம்அதுவும் சுவாரசியம் இல்லாத இந்த மூச்சு ஏற்படுத்தும் அந்த ஒரே அசைவில் கவனம் வைப்பது இமாலயப் பிரயத்தனமாகவே இருக்கும். ஆனால்அவசரமில்லாமல்அலைபாயாமல் அந்த நிகழ்கால கணத்தின் அந்த அசைவில் மட்டுமே மனம் வையுங்கள்.

7) 
மனம் எத்தனை முறை அலைபாய்ந்தாலும் சலிக்காமல் அதைத் திரும்ப வயிற்றின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். இதெல்லாம் நமக்கு சரிப்படாது என்று ஆரம்பத்தில் தோன்றலாம். அது இயற்கையே. ஆனால் எந்தப் புதிய வித்தையும் ஆரம்பத்திலேயே சுலபமாகக் கை கூடாது என்கிற போது அது கைகூடுகிற வரை பொறுமையுடன் பயிற்சி செய்யத் தான் வேண்டும் என்கிற போது இந்த தியானப் பயிற்சியில் ஆரம்பத்திலேயே வெற்றி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் அல்லவா?
8) சில நாட்கள் இப்படியே இந்த தியானத்தை சுமார் 15 முதல் 20நிமிடங்கள் செய்யுங்கள். பின் அடுத்த கட்டமாக மனம் எப்போதெல்லாம்மூச்சின் அசைவை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறதோ அதன் செயலுக்கு ஒரு பொதுவான பெயரை வைத்து உணர்ந்து திரும்பமூச்சின் அசைவுக்கே மனதைக் கொண்டு வாருங்கள். உதாரணத்திற்கு கவனம் வெளியே ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்பதிற்கு சென்றால்சுருக்கமாகசத்தம்” என்று மட்டும் என்றுபெயரிடுங்கள். அடுத்த கணம் மீண்டும் மூச்சின் அசைவுக்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள். மனம் வேறு எதையோ நினைக்கிறது என்று எடுத்துக் கொண்டால் “நினைப்பு” என்று பெயரிட்டு மறுபடியும் மூச்சின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். கால்வலிக்கிறது என்று மனம் சொன்னால் வலி” என்று பெயரிட்டு உடனடியாக கவனத்தை மீண்டும் திருப்புங்கள்.

9) 
நீங்கள் கவனச் சிதறல்களுக்கு வைக்கும் பெயர் எப்போதும் பொதுவாகவும் ஒரு சொல் அளவாகவே இருக்கும்படி சுருக்கமாகவும் இருக்கட்டும். வேறெதையும் நினைக்கவே கூடாது என்று தீர்மானமாக உட்கார்ந்தால் கண்டிப்பாக தோற்றுப் போவீர்கள். மனம் கட்டுப்பாடுகள் அதிகமாக அதிகமாக முரண்டும் அதிகமாகவே பிடிக்கும். மாறாகஒவ்வொரு கவனச்சிதறலையும் நீங்கள் அறிந்திருந்துஅதற்கு ஒரு பெயர் வைத்து அங்கீகரித்துசலிக்காமல் உங்கள் கவனத்தை உடனடியாக மீண்டும் திருப்புவதே பெரிய வெற்றி.

10) 
கவனம் சிதறுகிறது என்பதை உடனடியாக உணர்வதும்அது எது விஷயமாக என்று பொதுவாக அறிந்திருப்பதும்அது விஷயமாக மேற்கொண்டு சிந்தனையை நீட்டிக்காமல் எங்கு கவனம் வர வேண்டுமோ அங்கு உடனடியாக மனதைக் கொண்டு வர முடிவதுமே தியானத்தில் முதல் பெரிய வெற்றி. கவனச் சிதறல் எதிலோ ஆரம்பித்து அதிலேயே தொடர்ந்து சில நேரம் இருந்து அதை அறியாமலேயே இருப்பது தான் தியானத்தின் எதிர்மாறான நிலை.

11) 
உட்கார்ந்த நிலை சில நிமிடங்கள் கழித்து அசௌகரியத்தை ஏற்படுத்தினால் தாராளமாக மாறி உட்கார்ந்து கொள்ளுங்கள். ஆனால் அந்த எண்ணம் தோன்றியவுடனேயே மாற்றம்” என்று பெயரிட்டு அந்த எண்ணத்தை அங்கீகரித்து முழுக் கவனத்துடன் மாறி உட்கார்ந்து மறுபடியும் வயிற்றின் அசைவிற்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள்.

12) 
இப்படி இந்த உள்நோக்கு தியானம் உங்கள் கவனம் செல்லுமிடங்களைக் கூர்மையாக அறியச் செய்வதுடன் கவனத்தின் மீது உங்கள் ஆளுமையை வளர்த்த உதவுகிறது.

13) 
நாளடைவில் தியானத்தில் இருக்காத நேரங்களிலும் உங்களுக்குள் ஏற்படும் உணர்வுகளை அறிந்திருக்க இந்த தியானப் பழக்கம் உதவுகிறது. கோபம் வருகிற போது “கோபம்” என்று பெயரிட்டு அறியும் அளவு விழிப்புணர்வு இருந்தால் கூட மனதிற்கு கவனத்தை அதிலிருந்து வேண்டும் இடத்திற்கு திருப்பவும் எளிதில் முடியும் என்பது அனுபவம்.
விபாசனா என்னும் இந்த உள்நோக்கு தியானம் வாழ்க்கை முறையாக பரிணமிக்கும் போது வாழ்க்கை ஆழப்படுகிறது. அதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதக் கூடிய அளவு மேலும் பல பயிற்சிகள் இருக்கின்றனஎன்றாலும் நம் தற்போதைய குறிக்கோளுக்குத் தேவையான அளவு
அறிந்து விட்டோம் என்பதால் இனி மற்ற தியானங்களுக்குச் செல்வோம்.
Download As PDF