Wednesday, January 18, 2012

காய்கறி சூப்


காய்கறி சூப்

 
அந்தந்த சீசனில் கிடைக்கும், விருப்பப்பட்ட காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். 
 
தேவையானவை:  
 
பொடியாக நறுக்கிய காய்கறிகள் - ஒரு கப்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 3
சில்லி சாஸ் - 1  ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1  ஸ்பூன்
சர்க்கரை - ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு  
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
வெங்காயத்தாள் (பொடியாக நறுக்கியது) - 2 ஸ்பூன்  
கார்ன்ஃப்ளார் - 1 ஸ்பூன்.
 
செய்முறை:
 
* முதலில் இஞ்சி, பூண்டு, மிளகாயை மிகவும் பொடியாக நறுக்குங்கள்.
 
* எண்ணெயைக் காய வைத்து இஞ்சி, பூண்டு, மிளகாய், காய்கறி சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 10  நிமிடம் கொதிக்க விடுங்கள்.
 
* பிறகு, சில்லி சாஸ், சர்க்கரை, தக்காளி சாஸ், சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் கொதிக்கவிடுங்கள்.
 
* ஒரு கப் தண்ணீரில் கார்ன்ஃப்ளாரை கரைத்து சூப்பில் சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்கவிட்டு, மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறுங்கள்.
Download As PDF

No comments:

Post a Comment