Sunday, January 07, 2018

யார் ஏழை ...?

படித்து பகிர்தவை:
ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..
சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..
இதில் யார்_பணக்காரர்...?
3'ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா,
ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் வேண்டும் என்று கேட்கிறார்,
அதற்கு அந்த மேலாளர் பாலுக்கு நீங்கள் தணியாக பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் பணத்தை செலுத்தி பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்...
ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு
ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,
டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...
பணம் உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....
இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,.....
நம் கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....
தொடக்கம் நாமாக இருப்போமே...
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.
சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.
பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம்.
Download As PDF

Monday, November 06, 2017

கவலைகளை விட்டொழியுங்கள்!!!

படித்து பகிர்ந்தவை,,,
ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.
பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .
குரங்குக்குக் கொஞ்சம் பயம்
வந்து விட்டது.
கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
இது கொத்துனா உடனே மரணந்தான்.
குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது
" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,
எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , 
மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.
"ஐயோ. புத்தி கெட்டுப் போய்
நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".
குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.
கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*

அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.
குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.
குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.
அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.
அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*

குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
*
நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.
கவலைகளை விட்டொழியுங்கள்.
மகிழ்ச்சியாய் இருங்கள், , ,
ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்
துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்
பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்
எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்
அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.
ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.
பசிக்கும் போது உணவருந்துங்கள்.
பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்.
எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.   
என்றும் என்றென்றும் நட்புடன்...
Download As PDF

Sunday, November 05, 2017

இவ்வளவு தானா வாழ்க்கை???

படித்து பகிர்ந்தது!!!
உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்!
"உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்."
மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்....
"இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது."
ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம்....
"இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்."
அரசியல்வாதியின் கல்லறையில்...
"தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது."
ஒரு விலை மகளின் கல்லறை வாசகம்...
"இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு செய்யாதீர்கள், பாவம் இனி வர முடியாது இவளால்."
இவ்வளவு தானா வாழ்க்கை?
ஆம் அதிலென்ன சந்தேகம்.
ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான்.
அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.
நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்?
நமது பதவியா?
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது படிப்பா?
நமது வீடா?
நம் முன்னோர்களின் ஆஸ்தியா?
நமது அறிவா?
நமது பிள்ளைகளா?
எது நம்மைக் காப்பாற்றப் போகிறது?
ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை.
பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.
கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.
ஒரே முறை வாழப்போகிறோம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம்.
நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிரம் மடங்காக....
பிறரை வாழ வைத்து வாழ்வோம்.
Download As PDF

Saturday, July 15, 2017

நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் செயல்கள் ..!!!


சில நல்ல செயல்கள் நம்முடைய தோஷத்தை விளக்கி நமக்கு நம்மை செய்யும் ......
1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் .
இந்த விவரத்தை மாற்றி சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும்
குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சினிக்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும் ....
2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் .
3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய
பணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து
ஆயுளை விருத்தி செய்யும் .
4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும் .
5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல்
தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .
6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் .
7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,
நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் ,மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .
8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,
புதன் கிழமை
தோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை ,பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )
நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில் ,
மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .
9.நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது ,இறந்த நாகத்தின் உடலை
கண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,
குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து
அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் .
( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )
10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது,
வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள் ....
இவைகள் பொதுவானவை
ஒரு முறை செய்யும் பரிகாரம் அல்ல
வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை
புரிந்து செய்தாலும் ,தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்
Download As PDF

Wednesday, March 09, 2016

தினமும் ஏதேனும் ஒரு வகை பழச்சாறுகள் குடியுங்கள்,,,,,

தினமும் ஏதேனும் ஒரு வகை பழச்சாறினை அருந்தி பயன்களை பெறுங்கள்!

தினமும் ஏதேனும் ஒரு வகை பழச்சாறினை அருந்தி வந்தால் ஆரோக்கியம் கிடைக்கும்.
மேலும், நோயெதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
ஆப்பிள் பழச்சாறு
ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது.
ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை குணமாகும்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை சாப்பிட்டால் பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுத்தால் உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.
திராட்சை சாறு
திராட்சை சாறு தொடர்ந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), மஞ்சள் காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.
திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.
ஆரஞ்சு சாறு
தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்ச் சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம். இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது.
ஆரஞ்சு சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுத்தால் குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்தும் அருந்தலாம்.
எலுமிச்சை சாறு
நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்ற பயன்படுகிறது. எலுமிச்சை சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.
தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும்.
வெள்ளை வெங்காய சாறு
வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்தினாலும் மற்றும் எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.
உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சை சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.

நன்றி lankasri இணையம் ,,,,,
Download As PDF

மண்ணுலக அமிர்தம் ,,, இதை எவ்வாறு பயன் படுத்தலாம்,,?

அட...தயிரை வைத்து இதெல்லாம் செய்யலாமா,,?
சிறந்த அருமருந்தான தயிர், பாலை விட வெகு சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும் சக்தி கொண்டது.
உதாரணத்திற்கு பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
அதுமட்டுமின்றி பாலைத் தயிராக மாற்றும் பக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
மேலும் நன்மை தரும் பக்டீரியாக்களை உருவாக்குவதால், ஜீரணி சக்தியை தூண்டி வயிற்று உபாதைகளை சரி செய்கிறது.
இதன் மற்ற பலன்கள்,
* ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
* அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது வெந்தயம் மற்றும் ஒரு தயிர் கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
* மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
* வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும். புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
* தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 23 நாட்கள் வரை புளிக்காது.
* வெண்டைகாய் வதக்கும்போது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
* வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
* மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

நன்றி lankasri இணையம் ,,,
Download As PDF

Friday, January 08, 2016

ஒயின் குடித்தால் உடலுக்கு ஆரோக்கியமா?
wine_1298908c.jpg

ஒயின் குடித்தால் முகம் பிரகாசமாக ஜொலிப்பதோடு, சில ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.
ஒயின் கெட்ட கொலஸ்ட்ரால் ஆன triglyceride அளவை அதிகரிப்பதாகத் கூறப்படுகிறது.
 
உதாரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் ட்ரைகிளிசரைட் அதிகரித்தே காணப்படுகிறது. எனவே அத்தகையவர்களுக்கு ஒயின் ஏற்றதல்ல.
 
ஒயின் என்பது உண்மையில் ஒரு மது. மதுவில் உள்ளது வெற்றுக் கலோரிகளே.
 
ஒரு கிராம் மதுவில் 7 கலோரிகள் இருக்கிறது, இதனால் அது உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிறது.
 
வழக்கமாக மது அருந்தாதவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக ஒயின் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் அவசியம் இல்லை.
 
ஒயின் உட்பட எந்த மதுவையும் குடிக்காதிருப்பது நிச்சயம் நல்லது. அதிலிருந்து பெறக் கூடிய ஒரு சில நல்ல பயன்களை ஏனைய உணவு வகைளிலிருந்து தாராளமாகப் பெறலாம்.
 
ஆண்கள் தினமும் இரண்டு டிரிங்ஸ்சும், பெண்கள் தினமும் ஒரு டிரிங் மட்டுமே ஒயின் அருந்தலாம்.
 
ஒரு டிரிங் என்பது 5 அவுன்ஸ் அல்லது 140 மில்லி லீட்டர் ஆகும். அளவை மிஞ்சினால் ஈரல் பாதிப்படைவது உட்பட மதுவின்அனைத்து தீமைகளும் வந்து சேரும்.
 
wine_drink_002.jpg
 
ரெட் ஒயின்
 
ரெட் ஒயின் உடலிலுள்ள பெண் ஹார்மோன் ஆன ஈஸ்ரோஜன் அளவை குறைப்பதால் மார்புப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.
 
வயதான காலத்தில் கண்களில் Macular Degeneration பாதிப்பு ஏற்படுகிறது, ரெட் ஒயின் குடிப்பதால் இந்தப்பிரச்சனையில் இருந்து குணமாகலாம்.
 
heme oxygenase அளவை அதிகரிப்பதால், மூளையின் நரம்பு செல்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
 
வெள்ளை ஒயின் நுரையீரல் செயல்பாட்டிற்கு சிறந்தது மேலும் ரெட் ஒயின் நுரையீரல் புற்றுநோய்க்கு சிறந்தது.
 
ரெட் ஒயின் enzyme SIRT1 யின் அளவை அதிகரிப்பதால், இந்த என்சைம் இன்சுலின் ஹார்மோன் அதிகரிப்பதற்கு உதவுகிறது.
 
இதனால் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் அருந்தலாம்.
 
ஸ்பெயினில் மேற்கொண்ட ஆராய்ச்சியில், வாரத்திற்கு 2 முதல் 7 கிளாஸ் ஒயின் குடித்தல் மன அழுத்தம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
ரெட் ஒயின் குடலில் ஏற்படும் கட்டிகளை 50 சதவீதம் குணப்படுத்துகிறது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
Procyanidins என்ற ப்ளேவானாய்டு ரெட் ஒயினில் உள்ளதால் இரத்த குழாய்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
 
ரெட் ஒயினில் உள்ள piceatannol என்ற அந்த வேதிப்பொருள் இளம் கொழுப்புச் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது. அதாவது அது உடலைப் பருமனடையச்செய்யும் ரசாயன நடைமுறையை தாமதப்படுத்துகிறது.
 
ரெட் ஒயினில் உள்ள இந்த வேதிப்பொருள் கொழுப்பு செல்களை உருவாக்கும் இன்சுலின் திறனை சிறப்பாகத் தடை செய்கிறது.
 
wine_drink_003.jpg
 
ஒயின் தயாரிப்பு
 
மதுரசம் செய்ய பழங்கள், சர்க்கரை, ஈஸ்ட் அவசியம். இது புளிப்பு தன்மையை கொடுக்கும். முதலில் பழங்களை நன்றாக கழுவி சுத்தமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து பழங்கள் மூழ்கும் வரை ஊற வைக்க வேண்டும்.
 
பழங்கள் நன்கு ஊறிய பிறகு அதை கைகளால் நசுக்க வேண்டும். தேவையான அளவு சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து மூடி வைக்க வேண்டும்.
 
அது நன்கு புளித்து வரும். இதன் பிறகு அதனை வடிகட்டி மறுபடியும் மூடி வைக்க வேண்டும். இதே போல் பதினைந்து தடவை வடிகட்டி அதில் உள்ள கசடுகளை நீக்கினால், தண்ணீர் போன்ற திரவம் கிடைக்கும், அதுதான் ‘ஒயின்’.
Download As PDF

Thursday, December 17, 2015

மருத்துவ செய்தி ; தினமும் வெதுவெதுப்பான பாலில் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து குடியுங்கள்!

 

பால் மற்றும் மஞ்சள் நம் உடலில் சேரும்போது உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
மஞ்சளில் உள்ள சத்துக்கள்
மஞ்சள் தூளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-கார்சினோஜெனிக் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள் தான்
மஞ்சளில் மாங்கனீசு, பொட்டாசியம், இரும்புச்சத்து, விட்டமின் பி6, மக்னீசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவையும் மஞ்சளில் உள்ளது.
பாலில் உள்ள சத்துக்கள்
பாலில் பாஸ்பரஸ், புரோட்டீன், கார்போஹைட்ரேட், கால்சியம், நல்ல கொழுப்பு, ரிபோஃப்ளேவின், விட்டமின் டி மற்றும் விட்டமின் பி12 உள்ளது.
இந்த இரண்டினையும் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
மருத்துவ பயன்கள்
1. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், சளி, இருமல் மற்றும் இதர சுவாசப் பிரச்சனைகளுக்கு காரணமான பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் அழிக்கப்படும்.
2. மஞ்சளில் உள்ள மருத்துவ குணத்தால், இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு, உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக ஓடும். மேலும் இது மூட்டு வலிகளையும் சரிசெய்யும்.
3. பாலில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு மிகவும் நல்லது மற்றும் மஞ்சள் எலும்புகளை வலிமையாக்கும். எனவே உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்க தினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.
4. தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால், நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.
5. மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர சத்துக்கள், சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். எனவே தலை வலி அதிகமாக இருக்கும் போது, பாலுடன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர உடனடி நிவாரணம் கிடைக்கும்.
6. பெண்கள் தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர, மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புக்கள் குறையும்.
7. மஞ்சளில் உள்ள சேர்மங்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை உடைத்து, உடல் எடை குறைய உதவும். அதற்கு தினமும் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.
8. முக்கியமாக பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்தால், ப்ரீ ராடிக்கல்களால் (Radicles) சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, சருமத்தின் அழகையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
Download As PDF

Wednesday, September 30, 2015

சமச்சீர் உணவு

சமச்சீர் உணவு பற்றி பலரும் தெரிந்திராமல் அன்றாட உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர்.
ஆனால், சரிவிகித உணவு என்பது காலை மற்றும் இரவு வேலைகளில் குருணை தானியங்களில் செய்யப்படும் கஞ்சி, அடை, களி போன்றவற்றைச் சாப்பிடலாம். உணவில் அதிகக் கொழுப்பு சேராதிருக்க, தோல் நீக்கிய இறைச்சியே சமச்சீரில் இடம்பெறும்.
எண்ணெயில் பொரித்த காய்கள் எதுவும் சமச்சீரில் இடம் பெறாது. ஆவியில் வேகவைத்த உணவுகளில் சிறிதளவு எண்ணெய் சேர்ப்பது மட்டுமே சமச்சீர்.
மிகவும் பொடியாக நறுக்கிய காய், கீரை, கனிகளில் சத்துக்கள் வெகுவாகக் குறைந்துவிடும். பெரிய அளவில் நறுக்கியதாக இருக்கும்.
உருக்கிய நெய், ஆடை, கொழுப்பு நீக்கிய நீர்மோர் நல்லவை. சப்பாத்தி குருமா, சப்பாத்தி பருப்பு, சப்ஜி சமச்சீர் உணவுதான். ஆனால், சப்பாத்தியுடன் சாஸ், ஜாம் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
வயதுக்கேற்ற டயட்:
உடம்பை குறைப்பதற்காக பலரும் டயட் என்ற பெயரில் தங்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்கின்றனர்.
ஆனால், தங்கள் வயதிற்கேற்றபடி டயட்டினை மேற்கொள்வது நல்லது.
0-1 முதல் வயது வரை:
இந்த வயதுதான் வளர்ச்சிக்கு ஆதாரம், தாய்ப்பால் அதிக ஆற்றலைத் தரும், கொழுப்பு, மாவுச்சத்து, புரதச்சத்துக்கள் நிறைந்த உணவைச் சாப்பிடக்கொடுக்க வேண்டும்.
1-13 வயது வரை:
வளர்ச்சிக்கு உதவும் பருவம் இது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
பால் காய்கறிகள், பழங்கள், அசைவ உணவுகள் சிறுதானியம், அரிசி, கோதுமை, கேழ்வரகு, பருப்பு மற்றும் பயறு வகைகளை உட்கொள்ளலாம்.
14-25 வயது வரை:
எலும்பு வளர்ச்சிக்கு ஆதாரமான உணவுகள் தேவை, உடல் வளர்ச்சிக்குத் தேவையான நட்ஸ், பயறு, பருப்பு, பால் பொருட்கள் அசைவ உணவுகளை சாப்பிடலாம்.
25 வயதுக்கு மேற்பட்டோர்:
அனைத்து உணவுகளையும் சமச்சீரான அளவில் சாப்பிட வேண்டும்.
Download As PDF

Saturday, July 25, 2015

தொட்டால் சினுங்கி: என் மனதில் தோன்றிய விந்தை கவிதை

தொட்டால் சினுங்கி:
இந்த வகையான செடியின் சிறப்பம்சமே தொட்டால் சுருங்கும் தன்மையை இயல்பாய் (வரமாய்) பெற்றிருப்பதே !

இந்த  தொட்டால் சுருங்கும் சிணுங்கியினை எனது பரியமானவர்களுடன் ஒப்பிட்டு 
என் மனதில் தோன்றிய விந்தையினை கவிதையாக வடிதுளேன் (என் மனைவிக்காக),,,

தொட்டால் சினுங்கி !
 உன்னை தொட்டால் மட்டும் சுருங்கும் சினுங்கி !!
ஆனால் என்னை தொட்டாலும் சுருங்கும் என் வீட்டுச்சினுங்கி !!!

                                                                                 சிவசுகு (சுகுவள்ளி),,,
Download As PDF

Tuesday, July 21, 2015

தேங்காய் பாலில் உள்ள நன்மைகள். ஒரு பார்வை

தேங்காய்ப்பாலில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.
தேங்காய் எண்ணெய்யில் சமைத்து சாப்பிட்டால் உணவுகளும் ருசியாக இருக்கும்.

அடங்கியுள்ள சத்துகள்

விட்டமின் சி, விட்டமின் இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீஸியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன.


மருத்துவ பயன்கள்

தேங்காய்ப்பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது.


மெக்னீஸியம் நிறைந்துள்ள தேங்காய்ப்பால் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.


பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்ட தேங்காய்ப்பால், வைரஸ் காய்ச்சல், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று போன்ற உடல் நோய் வராமல் தவிர்க்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


சரும எரிச்சல், சோரியாசிஸ், பாக்டீரியாக தொற்று போன்ற பிரச்னைகளுக்கு, தேய்காய்ப்பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்தாகத் தடவ, நிவாரணம் கிடைக்கும்.


வறண்ட, உடைந்த, நுனி பிளந்த முடிக்கு ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற, தேங்காய்ப்பாலை மயிர்க்காலில் இருந்து நுனி வரை தடவி, ஐந்து நிமிடங்களுக்கு தலையில் மசாஜ் கொடுத்து, 20 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும்.


தேங்காய்ப்பால், ஒரு சிறந்த கண்டிஷனர். பயன்படுத்தும் ஷாம்பூவுடன் சரிபாதி அளவு கலந்து ‘ஹெட் பாத்’ எடுக்க, கூந்தல் மினுங்கும்.


வறண்ட, போஷாக்கு குறைந்த சருமம் உள்ளவர்கள் தேங்காய்ப்பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்க, அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும்.


வயதாவதால் ஏற்படும் சரும சுருக்கங்கள், சருமத் தொய்வு போன்றவற்றைத் தவிர்க்க, காப்பர் மற்றும் விட்டமின் சி அடங்கியுள்ள தேங்காய்ப்பாலை சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர, இளமைப் பொலிவு கிடைக்கும்.


நன்றி லங்காஷிரி இணையம்...

Download As PDF