Monday, August 22, 2011

மீன் குழம்பு செய்முறை


மீன் குழம்பு

தேவையானவை :

மீன் - 1/4 கிலோ
தக்காளி - இரண்டு
சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி
புளி - எலுமிச்சையளவு
மிளகாய்த் தூள் - 4 தே‌க்கர‌ண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே‌க்கர‌ண்டி
கடுகு, வெந்தயம், எண்ணெய் - தா‌ளி‌க்க
க‌றிவே‌ப்‌பிலை - ‌சி‌றிது
இ‌ஞ்‌சி - ‌‌‌சி‌றிது
பூ‌ண்டு - ஐந்து ப‌ல்
‌மிளகு - அரை தே‌க்கர‌ண்டி


செய்முறை :

‌மீனை சு‌த்த‌ம் செ‌ய்யவு‌ம். இ‌ஞ்‌சி, தக்காளி, வெங்காய‌ம் ஆகியவற்றை நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். பூ‌ண்டை தோலு‌ரி‌த்து வையு‌ங்க‌ள்.

‌மி‌க்‌ஸி ஜா‌‌ரி‌ல் ‌சி‌றிது த‌க்கா‌ளி, ‌சி‌றிது வெ‌ங்காய‌ம், இ‌ஞ்‌சி, பூ‌ண்டு, ‌மிளகு, க‌றிவே‌ப்‌பிலை ஆ‌‌கியவ‌ற்றை‌ப் போ‌ட்டு அரை‌‌க்கவு‌ம்.

பு‌ளியை‌க் கரை‌த்து அ‌தி‌ல் உ‌ப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சே‌ர்‌க்கவு‌ம்.

அடுப்பில் குழ‌ம்பு பாத்திரத்தை வைத்து தா‌ளி‌த்து க‌றிவே‌ப்‌பிலை சே‌ர்‌த்த ‌பிறகு வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவு‌ம்.

‌பிறகு புளி‌க் கரைசலை ஊ‌ற்‌றி‌க் கொ‌‌தி‌‌க்கு‌ம் போது அரை‌த்து வை‌த்த ‌விழுதை சே‌ர்‌க்கவு‌ம்.

குழம்பு கொதித்து சு‌ண்டி வரு‌ம் போது, கழுவிய மீனைப் போட்டு 10 ‌நி‌மிட‌‌த்‌தி‌ல் இறக்கவு‌ம்.
Download As PDF

No comments:

Post a Comment