Wednesday, February 04, 2015

உடற்பயிற்சிக்கு பின் செய்ய வேண்டியதும் செய்ய‍க் கூடாததும்! – பயனுள்ள‍ குறிப்புக்கள்

உடற்பயிற்சிக்கு பின் செய்ய வேண்டியதும் செய்ய‍க் கூடாததும்! – பயனுள்ள‍ குறிப்புக்கள்
தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருவது என்பது சிறப்பான ஒன்று. ஆனால்
அப்படி அன்றாடம் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய வேண்டியவைகளை சரியா க செய்யாமல் போனால், உடற்பயி ற்சி செய்வதே வீணாகிவிடும்.
உடற்பயிற்சிக்கு பின், மறுநாள் மீண்டும் உடற்பயிற்சி செய்வதற்கு உடலுக்கு போதிய ஓய்வு தேவைப் படும். அத்தகைய ஓய்வு கிடைக்கா மல் தொடர்ந்து கடினமான உடற்பயிற்சிகளை மேற் கொண்டு வந்தால், உடலில் பிரச்சனைகளை சந்திக்க க்கூடும். 

எனவே உடற்பயிற்சி செய்தபின்  என்னவெல்லாம் செய்ய வேண்டு மென்று கேட்டுத்தெரிந்து கொண் டு, அவற்றைப்பின்பற்ற ஆரம்பியு ங்கள். இங்குஉடற்பயிற்சிக்கு பின் னர் மேற்கொள்ள வேண்டியவை களை பார்க்கலாம்..
• உடற்பயிற்சி செய்து முடித்த பின், உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும் உடற்பயிற் சிகளை மேற்கொள்ளவேண்டு ம். இப்படிசெய்வதால், கடுமை யான உடற்பயிற்சியின் போது அதிகமாக இருந்த இரத்த அழு த்தம் மற்றும் இதயத் துடிப்பு சாதாரண நிலைக்கு வந்து, இ தனால் தீவிரமானபிரச்சனை ஏதும் நேராமல்தடுக்கும்.
•  ஏனெனில் உடற்பயிற்சியின் போது அதிகமாக வியர் த்ததால், உடையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் குடிப்புகுந்திருக் கும். அத்தகைய உடையை நீண்ட நே ரம் உடுத்தினால், சருமத்தில் நோய்த் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிக ம் உள்ளது. எனவே தவறாமல் உடற் பயிற்சிக்கு பின், உடைகளை மாற்று வதோடு, அதனை துவைத்து விடவும் வேண்டும்.  
உடையைமாற்றி துவைத்தபின், குளித்துவிடவேண்டு ம். வெறும் உடையை மட்டும் மாற்றினால், சருமத்தில் வியர்வை படலம் ஏற்பட்டு, பாக் டீரியாவின்வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆக வே உடற்பயிற்சிக்கு பின்னர் குளித்துவிடு வது நல்லது.
•உடற்பயிற்சிக்குபின்போதிய அளவில்தண் ணீர் குடிக்காமல் இருந்தால், உட ற்பயிற்சியின்போது கடுமையான காயங்களைக் கண்ட உடல் தசை கள் ரிலாக்ஸ் ஆகாது. ஆகவே உ டற்பயிற்சிக்குபின்னர் எவ்வளவு தண்ணீர் குடிக்கமுடியுமோ அவ் வளவு தண்ணீர் குடியுங்கள். இதனால் உடல் பழைய நிலைக்கு வரும்.
Download As PDF

எக்ஸெல் – அதிகம் பயன்தரும் சில வித்தியாசமான ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

எக்ஸெல் – அதிகம் பயன்தரும் சில வித்தியாசமான ஷார்ட் கட் கீ தொகுப்புகள்
ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்:
எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென
விண்டோவில்ஒவ்வொரு ஒர்க்ஷீட்டிற்கும் மாறுவதற் கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு  சென்று செயல்படுத்த வேண்டும்.
கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கா ன சுருக்கு வழி ஒன்று எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தரப்பட்டுள்ளது. ஒர்க் ஷீட் மாற விருப்பப்படுகையில், Ctrl+F6 கீகளை அழுத்தவும். இந்த கீகளை அழுத்துகை யில், ஒர்க்புக்குகளின் டேப்கள் வரிசையாகத் தேர்ந் தெடுக்கப்படுவதனைப்பார்க்க லாம். 5ஒர்க்புக்குகள் திறந்தி ருந்தால், ஐந்தாவது ஒர்க்ஷீட் செல்ல, ஐந்து முறை Ctrl+F6 கீகளை அழுத்த வேண்டும்.
அவசிய சுருக்கு வழிகள்:
எந்த அப்ளிகேஷன் புரோகிராமிலும், அனைவருக்கும் அனைத்தும் முக்கியமானவை என்று கருத முடியாது. உங்களுக்கு முக்கியமானது மற்றவர்களுக்குச் சாதாரணமாகஇருக்கலாம். அதே போல மாற்றியும் சொல்ல லாம். இருப்பினும் இங்கு அதிகம் பயனுள்ள சில வித்தியாசமான ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. அச்சடித்து உங்கள் மேஜைக்கு அரு கே ஒட்டி வைத்துப் பயன்படுத்தலாம்.
Control + “C”: Copy 

Control + “X”: Cut
Control + “V”: Paste
F2:அப்போதைய செல்லை எடிட்செய் திட. (எளிதாக எடிட்செய்திடும் வகையில் செல்ரெபரன்சஸ் அனைத்தும் வண்ணத்தில் அமைக்கலாம்)
F5: Go to
F11:உடனடி சார்ட் கிடைக்க
Shift+F3: பேஸ்ட் செயல்பாட்டிற்கான விஸார்ட் கிடை க்கும்.
Control + F3: பெயரை வரையறை செய்திடலாம்.
Control + “+” அப்போதைய தேர்வுக்கு ஏற்றபடி செல், படுக்கை மற்றும் நெட்டுவரிசையினை இடைச்செருகு ம். 

Control + “–”: அப்போதைய தேர்வுக் கு ஏற்றபடி செல், படுக்கை மற்றும் நெட்டு வரிசையினை நீக்கும்.
Shift + Space: முழு படுக்கை வரிசையும் அப்போதைய ஏரியாவிற்காக தேர்ந்தெடுக்கப்படும். இது என்ன என் று கொடுத்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.
Control+ Space: முழுநெட்டு வரி சையும் அப்போதைய ஏரியாவிற்கா க தேர்ந்தெடுக்கப்படும். இது என்ன என்று கொடுத்துப்பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.
Control + “!” (அல்லது Control + Shift + “1”:எண்ணை 2 தசம ஸ்தானத்தில் பார்மட் செய் திடும்.
Control + “$” (அல்லது Control + Shift + “4”):கரன்சியா க பார்மட்செய்திடும்.
Control + “%” (அல்லது Control + Shift + “5”): சதவீதத் தில் பார்மட் செய்திடும்.
Control + “/” (அல்லது Control + Shift + “7”):சயின்டிபிக் ஆக பார்மட் செய்யப்படும்.
Control + “&” (அல்லது Control + Shift + “6”):அப்போது தேர்ந்தெடுக்க ப்பட்டிருப்பதனைச் சுற்றி சிறிய பார் டர் அமைக்கப்படும்.
எக்ஸெல்-ஆல்ட்+ஷிப்ட்: எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுட ன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்க லாம்

F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.
F2 +ALT+SHIFT: அப்போது செயல் பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.
F3 +ALT+SHIFT: நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபி ள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம். 

F6 +ALT+SHIFT ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிரு ப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந் தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.
F9 +ALT+SHIFT திறந்திருக்கும் அனைத்து ஒர்க் ஷீட்க ளிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால் குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.
F10+ALT+SHIFT ஸ்மார்ட் டேக்கிற்கா ன மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்ப டும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்று ம் மெசேஜ் திறக்கப்படும்.
F11+ALT+SHIFT: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக் கப்படும்.
F12 +ALT+SHIFT: பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப் படும்.
Download As PDF

கணிணியில் நம்மால் ஏற்படும் சாதாரண தவறுகளு ம், சரிசெய்யும் வழிகளும்! கணிணியில் நம்மால் ஏற்படும்

கணிணியில் நம்மால் ஏற்படும் சாதாரண தவறுகளு ம், சரிசெய்யும் வழிகளும்!
கணிணியில் நம்மால் ஏற்படும்
சாதாரண தவறுகளும், சரிசெய்யும் வழிகளும்!
1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்:
பலரின்டெஸ்க்டாப்,எதனையும் ஏற்றுக்கொள்ளும் நம் மேஜை டிராயர்மாதிரி, குப்பை யாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில்வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதி ல்லை. இதனாலேயே விண் டோஸ் இயக்கம், “பல ஐகான் கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கி ன்றன அவற்றைச் சரி செய்திடலாமா?” என்று பிழைச் செய்தி காட்டுகிறது.
இதனை எப்படி சரி செய்திடலாம்? அவ்வப்போது பயன் படுத்தப்படா மல் இருக்கும் ஐகான்களுக்குரிய பைல்களை, சார்ந்த ட்ரைவ்களுக் குக்கொண்டு சென்று வைக்க வே ண்டும். பைல்களைஇணையத்தில் இருந்து டவுண்லோட் செய்கையி ல், பெரும்பாலும் டெஸ்க் டாப்பி லேயே டவுண்லோட் செய்து வக்கிறோம். அவரச வழி க்கு இது சரிதான். ஆனால் அடுத்து, அந்த பைலின் தன் மை, பொருள் சார்ந்து அதனை, அதற்கான ட்ரைவிற் குக் கொண்டு செல்ல வேண்டும்.
2. ஷட்டவுண் செய்திட பவர் பட்டன்:
இது லேப்டாப் கம்ப்யூட்டர் சார்ந்த செய்தி. பலர் லேப் டாப் கம்ப்யூட்டரின் பணிமுடிந்தவுடன், அதனைமுறையாக ஷட் டவுண் செய்தி டுவதில்லை. பவர் பட்டனை அழுத்தி, கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடிவிற்கு க் கொண்டு வருகிறோம். அல்லது கொ ண்டு வருவதாக நினைக்கிறோம். பல லேப்டாப்களில் இந்த பவர் பட்டன் , லேப்டாப் கம்ப்யூட் டரை ஸ்லீப் மோட் என்னும் செயலற்ற நிலைக்குத் தான் கொண்டு செல்லும்.
இது ஒன்றும் மோசமான தவறு அல்ல. இது போல த் தூங்கும் லேப்டாப், சில நொடிகளில் இயக்கத்தி ற்கு வந்துவிடும். ஆனாலு ம் இவ்வாறு செய்வது தவறு. இத ற்கான காரணங்கள் 2. முதலாவதாக, ஸ்லீப் மோட் என்பது முற்றிலும் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலை அ ல்ல. பேட்டரியின் பவர் அப்போதும் செலவழிந்து கொண்டுதான் இருக்கு ம். எனவே, தொடர்ந்து அது மின்சார சாக்கெட் ஒன்றில் இணைக்கப்பட்டி ருந்தாலே , பாதுகாப்பாக இருக்கும். இல்லையேல், அதன் பேட்டரி பவர் தீர்ந்துபோய், மொத்தமும் சக்தி அற்ற பேட்டரி கொண்ட லேப்டாப் தான் உங்களுக்குக் கிடை க்கும்.
இரண்டவாதாக, நீங்கள் எப்போதும் கம்ப்பயூட்டரை நிறுத்தி வைக்க, ஸ்லீப் மோடி னை விரும்புவதாக இரு ந்தால், அது கம்ப்யூட்டரை ரீபூட் செய்தி டும்வாய்ப்பினையே இழக்கிறது . விண்டோஸ் சுமுகமாக இயங் க வேண்டும் என்றால், அது முற் றிலும் நிறுத்தப்பட்டு, பின்னர் ரீ பூட் செய்யப்பட வேண்டும்.
3. மவுஸ் பயன்படுத்தி புரோகிராம் இயக்கம்:
ஒரு புரோகிராமினை இயக்க ஒவ் வொரு முறையும், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிரா மின் இயக்க பைல் பார்த்து கிளிக் செய்வது அல்லது அதன் ஐகான் மீது டபிள் கிளிக் செய்வது போன்ற பழைய பழக்கங்க ளைவிட்டுவிடுங்கள். அல்லது குயிக் லாஞ்ச் ஏரியாவி ல், புரோகிராம் ஐகான்களை வை த்து, அதில் ஒரேஒருமுறை கிளிக் செய்வதன்மூலம் அவற்றை இய க்கலாம்.
இப்போது இன்னும் வேகமான முறை ஒன்றுள்ளது. விஸ்டா மற் றும் விண்டோஸ் இயக்கத்தொகு ப்புகளில், ஸ்டார்ட் பட்டனை அடு த்துள்ளஇடத்தில்உள்ள புரோகிராம்களில் வரிசைப்படி , அதற்கான எண்ணை விண்டோஸ் கீயுடன் அழுத்தி னால், அந்த புரோ கிராம் இயக் கப்படும். எடுத்துக் காட்டாக, ஸ்டார்ட் பட்டனை அடுத்து, இ ன்டர்நெட் எக்ஸ்புளோரர், பெ யிண்ட், குவார்க் எக்ஸ்பிரஸ் என வைத்திருந்தால், விண்+1, விண் +2 என அழுத்தினால், இன்டர்நெ ட் எக்ஸ்புளோ ரர் அடுத்ததாக பெயிண்ட் எனத்திறக்கப்படும்.
4. பாதுகாப்பற்ற பிளாஷ் ட்ரைவ்:
டேட்டாவினை எடுத்துச் செல்ல, பிளாஷ் ட்ரைவ்கள் மிகவும் வசதி யானவைதான். ஆனால் இதில் உள்ள டேட்டாவினை மற்றவர் அறியாதபடி என்கிரிபட் செய்து நாம் வைப்பதில்லை. இதனால், அது தொலைந்திடும் பட்சத்தில், நம் தனிப்பட்ட தகவல்கள் மற்றவருக்குக் கிடைத்திடும் சூழ்நிலைகள் உருவாகிவி டும். இதில் டேட்டாவினை எளிதாக என் கிரிப்ட் செய்திட, இணையத்தில் கிடைக் கும் போன்ற புரோகிராம்களைப் பதிந்து இயக்குவது நல்லது.
5. கண்ணை மூடிக் கொண்டு நெக்ஸ்ட் அழுத்துவது:
திடீரென நம் டெஸ்க்டாப்பில் ஏதோதோ படங்களுடன் ஐகான் கள் தோன்றி நம்மை ஆச்சரியப்ப டுத்தும். நாம் பயன்படுத்தும்வெப் பிரவுசரிலும் இதேபோல் சிலதோ ற்றமளிக்கும் இவை தோன்றுவத ற்கு நாம்தான்காரணம் என்று உங்களுக்குத்தெரியுமா ? சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய் திடுகையில், என்னஏது எனப் படிக் காமலேயே, அடுத்தடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்துகிறோம்.
இதன்மூலம் அந்த புரோகிராம்க ளைத் தயாரித்த நிறு வனங்களின் சோதனை டூல்கள், புரோகிராம்களை நம்கம்ப்யூட்டரில் நிறுவ நாம் சம்மதம்அளிக்கிறோம். மே லும் நமக்குத் தேவைப்படாத சில இயக் கத்திற்கும் இசைகிறோம். இதுபோல நாம் நம்மை அறியாமல் அளிக்கும் சலு கைகள், நம் கம்ப் யூட்டரில் மால்வேர் புரோகிராம்களை நிறுவி, நம்மைசிக்கவைக்கின்றன. எனவே, ஒரு புரோ கிராமினை இன்ஸ்டலேஷன் செய் கையில், இணையப் பக்கம் வழியாக ஒன்றை டவுண் லோட் செய்கையில், நம்மிடம் எதற்கு இசைவு கேட்கப்படுகி றது என்று சரியாகப் படி த்துப் பார்த்து இயங்க வேண்டும்.
6. ஒரே ஒரு பேக் அப் அபாயம்:
பலர் தங்கள் பைல்களுக்குப் பேக் அப் எடுப்பதே இல் லை. இது மிகப் பெரிய தவறு. சிலர் ஒரே ஒரு பேக் அப் பைலுடன் நிறுத்தி விடுகின்றனர். இதுவும்தவறுதான். எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றைப் பயன் படுத்தி, முழுமையான பேக் அப் காப்பி ஒன்றை உருவாக்குவதும், அதற் கான சாப்ட்வேர் ஒன் றை இயக்கி, குறிப்பி ட்ட கால கட்டத்தில் பேக் அப் காப்பி அமைப்பதுவும் மட்டுமே சரியான வழியாகும்.
Download As PDF

நீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா? அப்ப நீங்க உண்ண‍ வேண்டிய உணவுகள் இவைதானுங்க!

நீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா? அப்ப நீங்க உண்ண‍ வேண்டிய உணவுகள் இவைதானுங்க!
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு . . .
தற்போது மக்கள் சுவையான உணவுகளை சாப்பிடுகி றேன் என்ற பெயரில் கலோரிகள் மற்றும் கொலஸ்ட் ரால் வளமாக
நிறைந்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வரு கின்றனர். இப்படி கொலட்ஸ்ரால் அதிகம் நிறைந்த உணவுகளை உட் கொண்டால், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்களுக்கு உள் ளாகக் கூடும் என்பது தெரியுமா? அதிலும் கொ லட்ஸ்ரால் உடலில் அதிகம் இரு ந்தால், உயர் இரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம் போன்ற பிரச்ச னைகள் உடலி ல் சீக்கிரம் வந்து விடும்.
பொதுவாக கொலட்ஸ்ராலானது செல் மென்படலங்க ளின் சீரான செயல்பாடுகளுக் கு மிகவும் இன்றியமையாதது. ஆனால் சாதாரணமாக நமது உடலிலேயே செல் மென்படல ங்களின் செயல்பாடுகளுக்கு வேண்டிய கொலஸ்ட்ராலான து உற்பத்தி செய்யப்படும் என் று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண் டும் என்பதில்லை.
அதிலும் வயதாக ஆக, உண்ணும் உணவுகளில் அதிகம் கவனம் செ லுத்தவேண்டும். இல்லாவிட்டால், பல்வேறு பிரச்சனைகளை விரை வில் சந்தித்து, சீக்கிரம் மரணத்தை தழுவ வேண்டியி ருக்கும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ 30 வயதிற்குமேல் கொலஸ்ட்ரா ல் குறைவாக நிறைந்த உணவுக ளை தேர்ந்தெடுத்து உட் கொண்டு வர வேண்டும்.
இங்குகொலஸ்ட்ரால் குறைவாக உள்ள சிலஉணவுகள் பட்டியலிட ப்பட்டுள்ளன. அவற்றைப்படித்து அதனை உணவில்சேர்த்து ஆரோக்கியமான வாழ்க் கையை வாழத்தொடங்குங்கள்.
அரிசி தவிடு மற்றும் கைக்குத்தல் அரிசி
இந்த இரண்டிலும் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருப்பதால், இவற்றை உட் கொண்டு வந்தால், உடலில் கொலஸ்ட் ரால் அதிகமாவதைத் தடுக்கலாம்.
ஆளி விதை
உடலில்உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்ற னர். மேலும் இதனை வைரஸ் காய்ச்சலின்போது சிறிது வாயில் போட்டு மென்றால், வைரஸ் காய்ச்சலானது விரை வில் குணமாகும்.
பூண்டு
மிகவும் பிரபலமான உணவின் சுவையை யும், மணத் தையும் அதிகரிக்கும் பூண்டில் கூட கொலஸ்ட்ரால் இல்லை. அதுமட்டு மின்றி, இவை உடலில் உள்ள அதிகப் படியான கொலஸ்ட்ராலை கரைக்கவும் செய்யும்.
பாதாம்

மற்ற நட்ஸ்களைவிட பாதாமில் மட்டுமே கொலஸ்ட்ரால் குறை வு. மேலும் இதனை எந்த நேரம் வேண்டுமானாலும் பசியெடுக் கும் போது ஸ்நாக்ஸாக எடுத்து க் கொள்ளலாம்.
தக்காளி

தக்காளில் கொலஸ்ட்ராலைக் கரைக் கும் லைகோபை ன் என்னும் பொருள் அதிகம் இருக்கிறது. அத்துடன் தக்கா ளியிலும் புரோட்டீன் நிறைந்துள்ளது.
பார்லி

ஆம், பார்லிகூட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். எனவே பார்லி மாவைக்கொண்டு சப்பாத்தி, பூரி போன்று செய்து சாப்பிட்டால், மிகவு ம் நல்லது.
சாக்லெட்

சாக்லெட்டுகளில் டார்க் சாக்லெட்டி ல் தான் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது. மேலும் டார்க் சாக்லெட் இதயத்திற்கு நல்லது மட்டுமின்றி, நோயெதிர்ப்பு சக்தி யை அதிகரிக்கும்.
க்ரீன் டீ

தினமும் இரண்டுமுறை க்ரீன் டீ குடித்து வந்தால், கொலஸ்ட்ரா லானது குறையும். அதிலும் இதில் சர்க்கரை சேர்க்காமல் தேன் சேர்த் து குடிப்பது இன்னும் சிறந் தது.
ஓட்ஸ்
கொலஸ்ட்ரால் குறைவாக உள்ள இந்திய உணவுப் பொருட்களில் ஒன்றுதான் ஓட்ஸ். தற்போது பல மில்லி யன் மக்கள் தங்களது காலை உண வாக ஓட்ஸைதான் எடுத்து வரு கிறார்கள். மேலும் ஓட்ஸில் நார் ச்சத்து அதிகம் இருப்பதுடன், உடலில் அதிகளவு கொ லஸ்ட்ரால் இரு ந்தால், அதனை குறைக்கும்.
சோயா
சோயாவிலும் கொலஸ்ட்ரால் குறைவாகத்தான்உள்ளது. அத்துட ன் அதில் புரோட்டீனும் அதிகம் நி றைந்துள்ளது. மேலும் இது முட்டை யின் வெள்ளைக்கருவிற்குசிறந்த மாற்றாக இருக்கும்.
கோதுமை

கோதுமையில் நார்ச்சத்து அதிகம் இருப்ப துடன், கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை. எனவே இதனை எப்போதுவேண்டுமானா லும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஸ்மார்ட்டான உணவுகள்
தென்ன ஸ்மார்ட் உணவுகள் என் று கேட்கிறீர்களா? அது வேறொன் றும் இல்லை, சிட்ரஸ் பழங்கள், ப்ளூ பெர்ரி, பச்சை இலைக் காய்க றி, பசலைக்கீரை, ஆலிவ் ஆயில் போன்றவற்றில் கொலஸ்ட்ரால் ம ற்றும் கலோரிகள் குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும் நிறைந் துள்ளது.
Download As PDF