Monday, November 06, 2017

கவலைகளை விட்டொழியுங்கள்!!!

படித்து பகிர்ந்தவை,,,
ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.
பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .
குரங்குக்குக் கொஞ்சம் பயம்
வந்து விட்டது.
கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
இது கொத்துனா உடனே மரணந்தான்.
குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது
" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,
எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , 
மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.
"ஐயோ. புத்தி கெட்டுப் போய்
நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".
குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.
கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*

அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.
குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.
குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.
அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.
அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*

குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
*
நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.
கவலைகளை விட்டொழியுங்கள்.
மகிழ்ச்சியாய் இருங்கள், , ,
ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்
துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்
பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்
எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்
அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.
ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.
பசிக்கும் போது உணவருந்துங்கள்.
பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்.
எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.   
என்றும் என்றென்றும் நட்புடன்...
Download As PDF

Sunday, November 05, 2017

இவ்வளவு தானா வாழ்க்கை???

படித்து பகிர்ந்தது!!!
உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்!
"உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்."
மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்....
"இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது."
ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம்....
"இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்."
அரசியல்வாதியின் கல்லறையில்...
"தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது."
ஒரு விலை மகளின் கல்லறை வாசகம்...
"இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு செய்யாதீர்கள், பாவம் இனி வர முடியாது இவளால்."
இவ்வளவு தானா வாழ்க்கை?
ஆம் அதிலென்ன சந்தேகம்.
ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான்.
அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.
நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்?
நமது பதவியா?
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது படிப்பா?
நமது வீடா?
நம் முன்னோர்களின் ஆஸ்தியா?
நமது அறிவா?
நமது பிள்ளைகளா?
எது நம்மைக் காப்பாற்றப் போகிறது?
ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை.
பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.
கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.
ஒரே முறை வாழப்போகிறோம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம்.
நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிரம் மடங்காக....
பிறரை வாழ வைத்து வாழ்வோம்.
Download As PDF