Wednesday, July 27, 2011

கால்களில் கிளம்பும் "கப்சை' விரட்டுங்கள்


கால்களில் வலி ஏற்பட்டால் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். வலி தொடர்ந்து இருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது. பாதங்களின் வண்ணம் மாறுகிறதா? தட்ப வெப்பம் எப்படியிருக்கிறது? பாதங்களில் வெடிப்பு, கீறல் இருக்கிறதா? உள்ளங்கால் களில் தோல் உறிகிறதா என்று அடிக்கடி கால்களை கவனித்து கொள்ள வேண்டும். கொப்புளம், சேற்றுப்புண் இருந்தால் சாதாரணமாக விட்டு விடக் கூடாது.
கால்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
கால் விரல்களின் நடுவில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.
கால் நகங்களை, சீராக வெட்ட வேண்டும். 
நகங்களின் ஓரங்களை வெட்டக்கூடாது. 
அவ்வாறு வெட்டினால், நகம் வளர்வதற்கு தடையாக இருக்கும். பிளேடு, கத்தரிக்கோல் பயன்படுத்தாமல், நகம் வெட்டியை பயன்படுத்துவது நல்லது. 
கால்களை, சோப்பு போட்டோ அல்லது 2-3 சொட்டு நோய்க் கிருமி எதிர்க்கும் திரவத்தை தண்ணீரில் கலந்தோ கழுவலாம். சிலர் வெறும் காலோடு நடப்பர். 
வெறும் காலோடு நடப்பதன் மூலம் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. 
செருப்பு போடும் போது, வெயிலைத் தடுக்கும் கிரீமை கால்களில் தடவ வேண்டும். 
கால்களுக்கு வீட்டு வைத்தியம் செய்யும் போது, கவனமாக இருக்க வேண்டும். 
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட் டிருப்போர், வருடத்திற்கு ஒரு முறை போடியாட்ரிக் மருத்துவரை அணுகுவது சிறந்தது. இல்லையென்றால், புண் மற்றும் கொப்புளம் ஏற்பட்டு, மிகப்பெரிய நோயை உண்டாக்கும்.
கால்களில் ஏற்படும் பூஞ்சை பாதிப்பு: மழைக்காலங்களில் தான் கால்களில் சேற்றுப் புண் ஏற்படும். ஈரமான செருப்பு மற்றும் ஷூ, ஈரப்பதமான தட்ப வெப்ப நிலை, ஈரமான பாதம் காரணமாக கால்களின் பாதங்களை பூஞ்சை பாதிக்கும். கால் விரல்களின் நடுவில் வெள்ளை நிறங்கள் ஏற்படுவது, உள்ளங்கால் கீறலாகவோ அல்லது கனமாகவோ இருப்பது, நகங்களில் நிறம் மாறுவது போன்றவை இவற்றின் அறிகுறிகளாகும்.
சிகிச்சை: எப்போதும் பாதங்களை கழுவி சுத்தமாகவும், ஈரமில்லாமலும் வைத்துக் கொள்ள வேண்டும். பருத்தி சாக்சை பயன்படுத்துவது சிறந்தது. ஒரே ஷூவை தொடர்ந்து போடாமல், மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஷூ அணிந்து இருக்கும்போது, பொது இடங்களிலோ அல்லது வீட்டிற்கு வந்து ஷூவை கழட்டும் போதோ, துர்நாற்றம் அடிக்கும். அத்துர்நாற்றத்தைத் தடுக்க என்ன செய்வது என்று பார்ப்போம்...
சிகிச்சை: நறுமணம் இல்லாத நோய் எதிர்க்கும் சோப்பை பயன்படுத்தி, பாதங்களை கழுவ வேண்டும். பாதங்களை நன்கு காய வைத்தபின் ஷூவை போட வேண்டும். வீட்டிற்குள் நுழைந்தவுடனே, கால் கழுவ வேண்டும். டால்கம் பவுடர் போடலாம்.
Download As PDF

பாதைமாற்றும் போதை தேவையா


தினமலரில் வந்தவை!!! 
என்ன தம்பி எப்படி இருக்கீங்க   நான் உங்களுடன் சாட்டிங்  செய்கிறேன்  
காலம் மாறும் போது கலாசாரத்தையும் மாற்றி கொள்கின்றனர் இளைஞர்கள். புகை, மது, போதை பாக்கு, போதை ஊசி, கஞ்சா... என இளைஞர்களை பாதை மாற்றும் விஷயங்களில் இருந்து தப்பிக்க முடியுமா? "பாதை மாற்றும் போதை தேவையா?' என, ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளை கேள்வியாய் நோக்கினோம். ஒற்றைக் குரலில் "தேவையில்லை' என்றனர்.
திவ்யா : கிராமத்தில் சிகரெட் புகைப்பதை, யாரும் பார்த்தால் "வீட்டில் சொல்வார்கள்' என்ற பயம் மாணவர்களிடம் உள்ளது. கே.ராபியத் :பசரியா சினிமா, "டிவி' சீரியல்கள் போதை குறித்த தவறான எடுத்துக்காட்டுகளை காட்டுகின்றன.
பி.ஜான்ஸிராணி : பெற்றோர்கள், தேவைக்கு அதிகமாக பணம் கொடுக்கின்றனர். இளைஞர்கள் கைநிறைய சம்பாதிக்கும் போது, நல்லது, கெட்டது தெரியாமல், தவறான நண்பர்களுடன் போதையால் சீரழிகின்றனர்.
கே.ராபியத் பசரியா : சினிமா, "டிவி' சீரியல்கள் போதை குறித்த தவறான எடுத்துக்காட்டுகளை காட்டுகின்றன. கல்வி நிறுவனங்கள், பெயருக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்தாமல், நம்மால் இரண்டு பேராவது திருந்துகிறார்களா? என்று கவனிக்க வேண்டும்.
ஜெ.ஜெம்மா லில்லி கிரேஸ் : கடைகளில் காட்சிப் பொருளாய் போதை பாக்கு பாக்கெட்களை தொங்க விடுகின்றனர். பிள்ளைகள் பார்க்கும் வகையில் அப்பா, மது குடித்தால், குடும்பமே அழிந்துவிடுமே.
ஆர்.உமா மகேஸ்வரி : கிராமத்தில் மாணவர்களிடம் மது, சிகரெட், கஞ்சா போன்ற போதை பழக்கம் குறைவு தான். ஆனால் நகரத்தில் தந்தை ஒரு பக்கம், மகன் ஒரு பக்கம் குடிக்கின்றனர்.
எஸ்.திவ்யா : கிராமத்தில் சிகரெட் புகைப்பதை, தெரிந்தவர்கள் யாரும் பார்த்தால் வீட்டில் சொல்வார்கள் என்ற பயம் மாணவர்களிடம் உள்ளது.
நா.சத்தீஸ்வரி : சுற்றுசூழலுக்கு இருப்பதைப் போல, போதை ஒழிப்பு குறித்த பாடத்திட்டம் உருவாக்க வேண்டும். அதன் பாதிப்புகளை சிறுவயதிலிருந்தே தெரிந்து கொள்ள வேண்டும்.
சமீம் அப்ரோஸ் : சந்தோஷங்களை பகிர்ந்து கொள்வதற்காக நண்பர்கள் குடிக்கின்றனர். ஆனால் சண்டையுடன் வீடு திரும்புகின்றனர். நகரங்களில் இரவு விருந்தில் விடியும் வரை, ஆணும், பெண்ணும் அரை போதையில் கும்மாளமிடுகின்றனர்.
எம்.பாத்திமா நுஸ்ரா : திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததை கொண்டாட, நண்பர்களுடன் மது குடிக்கின்றனர். தள்ளாட்டத்துடன் வாகனத்தில் செல்லும் போது, விபத்தில் உயிரிழக்கின்றனர்.
எஸ்.செய்யது சாபிரா பேகம் : பெற்ற பிள்ளைகளிடம் சிகரெட் வாங்கி கொடுக்கச் சொல்லி தந்தை வேலை வாங்குகிறார். வாங்கி வரும்போது வாயில் வைத்தபடிதான் வருகிறான் மகன். வருமானத்துக்காக மதுக்கடைகளை நடத்தும் அரசு, தொழில் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கலாம்.
Download As PDF

பக்கத்து வீட்டு பக்குவம்: நெல்லை சிக்கன் ரோஸ்ட்

தினமலரில் வெளி வந்தது


ஒவ்வொரு மண்ணிலும், சமையலின் கைப்பக்குவமும், ருசியும் மாறும். தாமிரபரணி தண்ணீரில் மணக்க, மணக்க நெல்லை சிக்கன் ரோஸ்ட் செய்ய கற்றுத் தருகிறார், மதுரை பார்சூன் பாண்டியன் சமையல் நிபுணர் ராமர். எலும்புள்ள, எலும்பில்லாத சிக்கனை பயன்படுத்தலாம்.
தேவையானவை :
சிக்கன் - கால் கிலோ
பச்சை மிளகாய் - ஐந்து
பெருஞ்சீரகம், பட்டை, லவங்கம்,ஏலம்,
அன்னாசி பூ சேர்த்து - ஐந்து கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 20 கிராம்
கடலை மாவு - 20 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க, தாளிக்க
வெங்காயம் - 100 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:மசாலா பொருட்களை, மிக்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அல்லது, சிறு உரலில் இடித்து வைக்கலாம். பச்சை மிளகாயை இடித்து வைக்கவும். சிக்கன், கடலை மாவு, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து, எண்ணெயில், அரை வேக்காட்டில் பொரித்தெடுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். மசாலா பொடி, உப்பு சேர்த்து, பொரித்த கோழித்துண்டுகளை சேர்த்து கிளற வேண்டும். மிதமான சூட்டில் இறைச்சி நன்றாக வெந்திருக்கும்.
சமையல் நேரம் : 40 நிமிடங்கள்
Download As PDF

Monday, July 25, 2011

தூக்கம் விட்ற காசுகள்,

  வெளி நாட்டில் வசிக்கும் எனது அருமை நண்பர்களே கீழே உள்ள படத்தை பார்க்கவும் ,,,,

Download As PDF

இந்து மதம்-அறிமுகம்பெயர் வந்தவிதம்
பாரசீகத்தினர் சிந்து நதிக்கு கிழக்குப் பக்கம் வசிப்பவர்களை சிந்துக்கள் என்றும் அவர்களது இறையுணர்வு முறையை (மதத்தை) சிந்து மதம் என்றும் அழைக்கலாயினர். பாரசீக மொழியில் ச எழுத்து ஹ சப்தத்துடன் பேசப்படும். ஆகவே சிந்து ஹிந்துவாயிற்று.


இயல்பாக விளைந்த ஒன்றை கோட்பாடுகள், விதிமுறைகள் என்று கட்டம் கட்டும் முயற்சி பின்னர் நடந்தது. இன்றைய இந்து மதத்தை ஒரு வரியில் சொல்லுவதாக இருந்தால் வேதத்தை நம்புபவர்கள்என்று சொல்லலாம். இவர்களது விதிமுறைகள் என்று ஆரம்பித்தால் ஒரு வரியில் சொல்வதானால் எல்லாமேஎன்று வேண்டுமானால் சொல்லலாம். மற்றபடி ஒரு வரியிலோ அல்லது ஒரு பக்கத்திலோ கூட சொல்லுவது கடினம்.

ஆரம்பம்
இயல்பாக தோன்றிய ஒன்றிற்கு ஆரம்ப கால வரலாறு அறிவது கடினம். இந்துப் பெரியோர்களைக் கேட்டால் மனிதகுலம் தோன்றிய போதிலிருந்து இருந்து வருவதாக கூறுவார்கள். ஐரோப்பிய அறிஞர்கள் இந்து மதம் கிறிஸ்துவுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கூறுகிறார்கள். ஆனால் இதைத் தவறென்று நிரூபிக்க கிறிஸ்துவுக்கு 5000 ஆண்டுகள் முந்தைய கல்வெட்டுக்கள், சிலைகள் ஏராளமாக இந்தியாவில் இருக்கின்றன.
இயல்பு
பழங்காலத்தில் பூமியில் இருந்த மதங்களில் இன்றளவும் உயிர்ப்புடன் இருந்து உலகிலுள்ள பெரிய மதங்களில் ஒன்றாக இருப்பது இந்து மதம் மட்டுமே. மற்றப் பெரிய மதங்களான புத்த மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாம் ஆகியவை கடந்த சுமார் 2500 வருடங்களில் தோன்றியவை. இதில் புத்த மதம் நேரடியாக இந்து மதத்திலிருந்து தோன்றியது.
கிறிஸ்தவ மதம், இஸ்லாம் ஆகியவை தோன்றிய போது அந்த இடங்களில் ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த மதங்கள் அவற்றை எதிர்க்க முயன்று அழிந்து போயின. இந்து மதத்தில் புதுக் கருத்துக்களுக்கும் வழிமுறைகளுக்கும் எப்போதுமே இடம் இருப்பதால் அத்தகைய நிலை ஏற்படவில்லை. மேலும் மற்ற மதங்கள் வெளியிலிருந்து புகும் போதும், அவற்றைப் புகுத்திய அரசர்கள் வலுக்கட்டாயமாக திணிக்காதவரை, இந்து மதம் அதை எதிர்த்ததில்லை. மாறாக இருபுறமும் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமே நிகழ்ந்தது.
எண்ணற்றக் கடவுள்கள், சிலை வழிபாடுகள், இயற்கை வழிபாடுகள் எல்லாம் இந்து மதத்தில் உண்டு. உருவமற்ற எங்கும் நிறைந்த கடவுள் தத்துவமும் மிகச் சிறந்த விளக்கங்களுடன் இதில் உண்டு. ஒன்றுக்கொன்று எதிர் மறையான கருத்துகள் இதில் ஏராளம். இவை குழப்பம் ஏற்படுத்துவதற்கு பதிலாக இவற்றில் ஈடுபடும் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இந்த எதிர்மறைகளில் இருந்து நேரடி இறையுணர்விற்கு இவை சிந்திக்கும் மனிதனை தூண்டிவிடுகின்றன

Download As PDF

Sunday, July 24, 2011

உருத்திராட்சம் அணிவது ஏன்?


உருத்திராட்சம் எப்படி உண்டானது? அதை மனிதர்கள் எவ்வாறு அணிய வேண்டும்? எந்த மந்திரங்களைக் கூறித் தா¢க்க வேண்டும்? அதில் எத்தனை பேதமுகங்கள் உள்ளன என்று காலாக்னி உருத்திரரைப் பூதாண்டார் கேட்டார்.
இக்கேள்விக்கு காலாக்னி உருத்திரர். ஆயிரம் திவ்ய வருஷங்கள் நான் கண்களை மலர்த்திக் கொண்டிருந்தேன். எனது மலர்த்திய கண்களிலிருந்து நீர்த்துளிகள் பூமியின் கண்ணே விழுந்தன. அக்கண்ணீர்த் துளிகள் அன்பர்களுக்கு அனுக்ரகம் செய்ய வேண்டிய காரணத்தால் ஸ்தாவரமாகிப் பொ¢ய உருத்திராட்சங்களாயினஎன்றார்.
உருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத் தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இது. இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்.
உருத்திராட்சத்தை தரிசித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன.
நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சம் உத்தமம். இலந்தைப்பழ அளவு மத்திபம். கடலை அளவு அதமம். புழுக்கள் குடைந்ததும், நசுக்கியதும், நோயுற்றதும் அணியக்கூடாத உருத்திராட்சங்கள்.
இரே அளவுள்ளதும், உறுதியானதும், பொ¢யதும், சம முத்துகள் பொன்றுள்ளதுமான உருத்திராட்சங்களைப் பட்டுக் கயிற்றில் கோத்து உடலில் அணிய வேண்டும்.
இனி உருத்திராட்சத்தின் முகங்களையும் அதன் அதிதேவதைகளையும் காண்போம். இருமுக உருத்திராட்சம் பரத்துவ சொரூபம். இதை அணிந்தால் பரத்துவத்தை அடையலாம்.
இருமுக உருத்திராட்சம் அர்த்தநா¡£ஸ்வரா¢ன் உருவம் உடையது. இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.
மும்முக உருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.
நான்கு முக உருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.
ஐந்து முக உருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.
ஆறுமுக உருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும், சுத்தியும் எய்தும்.
அறுமுக உருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.
ஏழு முக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை சப்தமாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.
எட்டு முக உருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்களும், கங்கையும் ப்¡£தி அடையும். அதிதேவதை அஷ்டவசு.
இன்பது முக உருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்பமடையும். இதன் அதிதேவதை நவசக்தி.
பத்துமுக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன். இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் பா¢காரம் ஏற்படும்.
பதினொரு முக உருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.
பன்னிரண்டு முக உருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.
பதின்மூன்று உருத்திராட்சம் போகத்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.
உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக உருத்திராட்சம் சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
108 உருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.
உருத்திராட்சத்தின் அடி பிரம்மா. நாளம் விஷ்ணு. முகம் உருத்திரர். பிந்து சமஸ்தேவர்கள். அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.
உருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண்ணியம். தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். குறிப்பாகச் சிவனடியார்களால் போற்றப்படும் இரு முகம், ஐந்து முகம், பதினொரு முகம், பதினான்கு முகம் கொண்ட உருத்திராட்சங்களை அன்போடு பூசித்து அணிகின்ற மானிடர்கள் தா¢த்திரம் உடையவராய் இருந்தாலும் எல்லாரையும்விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.
தீட்சை பெற்ற பெண்களும் உருத்திராட்சத்தை அணியலாம். உருத்திராட்ச தா¢சனம் பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும். குவிக்கும்.
பிறப்பு இறப்பு தீட்டுக்காலங்களில் உருத்திராட்சம் அணியக்கூடாது. சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சா¢ப்போரும், புனிதம் மிக்க உருத்திராட்சத்தை அணிந்திருப்போரும் சிவ பக்தர்களில் தலைசிறந்தோர் என்று கூறுகின்றனர்.
ஆயமாமணி ஆயிரம் புனைந்திடில் அவரை
மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர்
பாயுமால் விடைப் பரமெனப் பணிகுவர் என்றால்
தூயமாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர்
என்று உருத்திராட்சத்தின் மேன்மையைப் பிரம்மோத்தர காண்டம் சிறப்பித்துக் கூறுகின்றது.
Download As PDF

கீதாசாரம்


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுததாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமுமாகும்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

Download As PDF

விரதம் இருக்கலாமா?நல்லது தான்ஆனால், கெட்டதும் கூட
பார்த்தால் நோஞ்சானாக இருப் பார்; கேட்டால்,” நான் இன்னிக்கு விரதம்; பச்சை தண்ணிகூட குடிக்க மாட்டேன்என்பார். நம்பிக்கை தேவை தான்; ஆனால், உடல் ஆரோக்கியத்துக்கு உலை வைக்கும் அளவுக்கு, கண்மூடித்தனமாக விரதம் இருப்பது பெரிய விபரீதத்தில் கொண்டு விடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
தனியாக உண்ணா நோம்பு இருப்பதாக சொல்பவர்கள் ஒன்றை கவனிக்கத் தவறி விட்டனர். ஒவ்வொருவரும், தினமுமே விரதம் தான் இருக்கிறோம் என்பதை. ஆம், இரவு தூங்கும் போது யாராவது சாப்பிடுகின்றனராஇல்லையே? அதுவும் விரதம் தானே. அதுவே போதும் என்பது தான் டாக்டர்களின் கருத்து.
நல்லது தான்
உண்ணாமல் இருப்பது நல்லது தான்; இதோ கீழ் கண்ட வகையில் இருந்தால்
*
குறைந்த பட்ச உண்ணா நோன்பு தான் உடலுக்கு நல்லது. அதுவும் டாக்டர்களின் ஆலோசனைப்படி செய்தால் உடல் ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கும்.
*
உடலில் உள்ள இன்சுலின் சுரப்பது சீராவது, கொழுப்பு சத்து குறைவது, எடை குறைவது ஆகியவை இதனால் ஏற்படும் நன்மை.
*
இதய நோய், மூட்டு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உட்பட சில வகை நோய்கள் தீர, மருந்துகளுடன் இப்படி சில சமயம் குறைந்தபட்ச நோன்பு இருக்க டாக்டர்களே யோசனை சொல்கின்றனர்.
*
மனஅழுத்தம், சோர்வு நீங்க குறைந்த பட்ச அளவில் வயிற்றை காயப்போடுவது நல்லது தான்.
*
உண்ணா நோன்பால், சில செல்கள் வளர்ச்சி அடையும்; பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும்; அதனால், இளமையுடன் இருக்க முடியும்.
கெட்டது எப்போது?
சாப்பிடாமல் வயிற்றை காயப் போடுவதால் கெடுதலும் உள்ளது. நம்பிக்கை அடிப்படையில், எதையும் பொருட்படுத்தாமல் மாதத்தில் சில நாட்கள் சாப்பிடாமல் இருப்பதும், தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பதும் தேவையில்லாத உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
*
உடலுக்கு தொடர்ந்து போக வேண்டிய சத்துக்கள், வைட்டமின்கள் மறுக்கப்படுகிறது. அதனால், மூளை உட்பட முக்கிய உறுப்புகள் செயல்பாடு பாதிக்கும்.
*
தண்ணீர் கூட குடிக்காமல் இருப் பதால், சிலருக்கு வயிற்றில் பிரச்னை உருவாகும். அதுவே, பெரிய கோளாறில் விட்டு விடும்.
*
கழிவுகளை அகற்றும் பணியை தண்ணீர் செய்கிறது. அது குடிக்காமல் இருந்தால், உடலில் கழிவுகள் சேர்ந்து விடும்.
*
பெண்கள் அடிக்கடி உண்ணாமல் நோன்பு இருப்பது, அவர்கள் உடலில் ரத்த சோகை ஏற்பட வழி வகுத்துவிடும்.
*
சர்க்கரை நோய் வரவும் இது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
டாக்டரை கேளுங்க
விரதம் இருப்பதற்கெல்லாம் டாக்டரை கேட்பதா என்று நினைக்கலாம்; ஆனால், கண்டிப்பாக ஒருவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு டாக்டர் உரிய முறையில் ஆலோசனை வழங்குவார். நாள் முழுக்க உண்ணாமல் இருப்பதால், உடலில் உள்ள கழிவுகள் நீங்கி, கொழுப்பு சீராகிறது என்றாலும், அதை அடிக்கடி செய்யக்கூடாது.
ஒருவருக்கு எத்தனை மணி நேரம், சாப்பாடில்லாமல் உடல் தாங்கும் என்பதை டாக்டர் தான் சொல்ல முடியும்.

விரதம் இருந்தாலும், அடிக்கடி தண்ணீர் குடிப்பது முக்கியம். அப்போது தான் உடலில் உள்ள கழிவுகள் நொறுங்கி, வெளியேற வழி கிடைக்கும்; உடலில் சோர்வும் ஏற்படாது. விரதம் முடிந்ததும், உடனே புல்கட்டு கட்டக்கூடாது; ஜூஸ் குடித்து விட்டு, படிப்படியாக அளவை அதிகரித்து சாப்பிடவேண்டும்.
இப்படியும் ஆபத்து
குண்டாக இருப்பவர்கள், யாரோ சொல்வதை கேட்டு, சாப்பிடுவதை குறைத்துக் கொண்டாலோ, சாப்பிடாமல் விட்டாலோ உடல் எடை குறையும் என்று தவறான போக்கை கையாள்கின்றனர். கேட்டால்,
டயட்டில் இருக்கிறேன் என்பர். இது தான் மகா கெடுதல்.
சாப்பிடாமல் இருந்தால் கொழுப்பு குறையும் என்பது உண்மை. அதேசமயத்தில் தவறான போக்கால், கொழுப்பு தவிர, உடல் பலவீனம் அடைய வாய்ப்பு உண்டு. இந்த இழப்பால், கொழுப்பு அதிகமாகி, மாறான விளைவை தான் ஏற்படுத்தும்.
இப்படி நிலைமை ஏற்பட்டால், சாப்பிடாமல் இருக்கும் ஒருவர், மேலும் குண்டாகி விடும் ஆபத்தும் உண்டு.
பிரஷ் ஜூஸ் போதும்
ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது டாக்டர்களின் கருத்து. தண்ணீர் குடிப்பதுடன், பிரஷ் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது என்பது பலருக்கு தெரிந்தும், இன்னமும் பாட்டில் கூல்டிரிங்க்கை தான் குடிக்கின்றனர்.

நம் உடலுக்கு 13 வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள், ஆரஞ்சு உட்பட பல பழங்களில் உள்ளன.
வீட்டில் தயாரிக்கப்படும் பழரசங்களில் தான் அதிக வைட்டமின் சத்துக்கள் உள்ளன. பழங்களை அழுகவிட்டு குப்பையில் போடுவதை விட, அவற்றை ரசமாக பிழிந்தெடுத்து சாப்பிட்டு வந்தாலே, உடலில் எடை குறைந்து விடும்.Download As PDF

யார் கடவுள் ?


கடவுள் மனிதனை படைத்தாரா என்று எனக்கு தெரியாது ஆனால் மனிதன் பல கடவுள்களை படைக்கிறான்.
கடவுள் என்பவர் ஒருவர் என்றால் எதற்காக இத்தனை கடவுள்கள்.
பிறந்த குழந்தைக்கு கடவுள் யார் என்று தெரியுமா ?
தெரியாது!
எந்த
குழந்தையும் எவற்றையும் தானே கற்றுகொள்வதில்லை மாறாக குழந்தை பருவத்தில்
தன் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்வது தான் அதிகம். குழந்தைகளுக்கு ஒரு
குணம் உண்டு, உற்று கவனித்தால் தெரியும் என்னவென்றால், மற்றவர் என்ன
செய்கிறார் அல்லது கூறுகிறார் என்பதை முதலில் உற்று கவனிக்கும் பிறகு அதை
செய்து பார்க்கும், நம்பவில்லை என்றால் முயற்சித்து பாருங்கள். ஆதலால்
நாம் அனைவரும் நம் முன்னோர்களிடம் கற்றுகொண்டது தான் அதிகம். அவர்கள்
கூறிய தெய்வத்தை தான் நாம் வணங்குகிறோம்.
இது அனைவருக்கும்
தெரிந்ததே, இருப்பினும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள்,
என்பது போல் , ஒரு காலகட்டத்திற்கு பிறகு எவராலும் தங்களை மாற்றி
கொள்ளமுடிவதில்லை.
கடவுள் மனிதனை தன் சாயலாக படைத்தார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் !
மனிதன் இது எப்படி சாத்தியம் என்று நினைத்தனோ என்னமோ !
கடவுளை வேறு உருவங்களில் படைக்க ஆரம்பித்துவிட்டான்.
மனிதர்கள் மிகவும் புத்திசாலிகளல்லவா.
திக்கற்றவனுக்கு தெய்வம் துணை!
நம்பிக்கை தான் கடவுள்!

தன் மேல நம்பிக்கை கொண்டவனுக்கு கடவுள் தேவை இல்லை.(தன் நம்பிக்கை)
தன் மேல நம்பிக்கை அற்றவனுக்கு தெய்வம் தான் துணை….
ஏமாறாதீர்கள்:
நம் மக்கள் கடவுளை நம்புகிறார்களோ இல்லையோ கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களை அதிகமாக நம்புகிறார்கள்.
கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார், பின் எதற்காக கடவுளை தேடி அலைகிறீர்கள்!

புரிந்து விட்டது. நீங்கள் கடவுளை தேடி அலையவில்லை மாறாக நீங்கள் உங்கள்
வாழ்கையில் சந்தோஷமாக இருக்க, பொன், பொருள், படிப்பு மற்றும் பல
காரியங்களுக்காக கடவுளை தேடி அலைகிறீர்கள்.
மனிதனின் இந்த சிறுமையான உலக இன்பங்களின் காரணமாக, மனிதன் கடவுளை புரிந்து கொள்ளவும் முடியவில்லை மற்றும் உணரவும் முடிவதில்லை.
காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள், அது போல் உலக இன்பங்கள் கடவுளை உணரும் ஞான கண்களை மறைக்கிறது


Download As PDF

அயல் நாட்டு அகதிகள்


அயல் நாட்டு அகதிகள் 
Download As PDF