Monday, November 18, 2019

செவ்வாழைப்பழம் பயன்கள் மற்றும் அவசியம்

நமது தமிழர்கள் போற்றிய முக்கனிகள் மா, பலா மற்றும் வாழை ஆகும். இதில் வாழை பழம் நமது அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் ஒரு பழமாகி விட்டது. பல சத்துகளை கொண்ட ஒரு இயற்கையான திட உணவாக வாழைப்பழம் இருக்கிறது. வாழைப்பழங்களில் பல வகைகள் இருக்கின்றன. அதில் ஒரு வகை தான் “செவ்வாழை பழம்”. இந்த வகையான வாழை பழத்தின் தாயகம் மத்திய அமெரிக்க நாடு என கூறப்பட்டாலும், பல ஆண்டுகளாகவே நமது நாட்டில் பயிரிடப்படுகிறது. இந்த செவ்வாழைபழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நரம்பு தளர்ச்சி
உடலில் ஏற்படும் சில பாதிப்புகளாலும், மனதில் ஏற்படும் மிகுந்த அழுத்தங்களாலும் சிலருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்படுவதால் உடலில் பலம் குறைவதோடு ஆண்மை குறைபாடும் ஏற்படுகிறது. நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் இரவு வேளைகளில் செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை குறைவு பிரச்சனைகள் நீங்கும்.

நோய் எதிர்ப்பு
செவ்வாழை பழத்தில் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் தன்மை அதிகம் உள்ளது சுற்றுப்புற சூழ்நிலைகள் மற்றும் தட்ப வெப்ப மாறுபாடுகளால் உற்பத்தியாகி மனிதர்களை தொற்றும் தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும்.
வயிற்று பிரச்சனைகள்
ஒரு மனிதனின் உடலில் வயிறு முக்கியமான ஒரு உறுப்பாகும். இந்த வயிறு ஆரோக்கியமாக இருந்தாலே பல நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.
இதயம்
செவ்வாழைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த பொட்டாசியம் உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கிறது. இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க செவ்வாழைப்பழங்களை அதிகம் சாப்பிடலாம்.
கண்கள்
முகத்தில் இருக்கும் ஒரு முக்கிய உறுப்பு கண்கள். இந்த கண்களை கொண்டு தான் நாம் அனைத்தையுமே காண்கிறோம். எனவே கண்பார்வை நலமாக இருப்பது அனைவருக்கும் அவசியமாகும். செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் எ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது. மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுப்பதில் சிறப்பாக செயலாற்றுகிறது.
கர்ப்பிணி பெண்கள்
கருவுற்றிருக்கும் பெண்கள் கருவுற்ற சில மாத காலங்கள் வரை ஆங்கிலத்தில் மார்னிங் சிக்னஸ் எனப்படும் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்த பிறகு பல பெண்களுக்கு வாந்தி வருதல், தலைசுற்றல், உடல் மற்றும் மன சோர்வு நிலை போன்றவை ஏற்படும். இக்காலத்தில் உடலில் சத்து தேவைகளை செவ்வாழைப்பழம் பூர்த்தி செய்கிறது. கர்ப்பிணி பெண்கள் தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் இதில் அதிகம் இருக்கும் பொட்டாசியம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நன்மைகளை ஏற்படுத்துகிறது.
ஈறுகள், பற்கள்
செவ்வாழைபழம் அதிகம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. பலருக்கு ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. செவ்வாழை பழத்தில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் சத்து பற்கள் வலுவிழப்பதை தடுத்து பற்களின் ஆரோக்கியத்தை காக்கிறது.
கல்லீரல்
சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் செவ்வாழைப்பழம் சிறப்பாக செயல்படுகிறது. தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகிறது.
சிறுநீரக கற்கள்
ஒரு சிலர் தக்காளி விதைகள், ஆடை நீக்காத பால் போன்ற கால்சியம் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. செவ்வாழைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகமிருப்பதால், இப்பழங்களை சாப்பிட்டு வரும்போது உடலில் கால்சியம் சேர்மானத்தை அளவுடன் வைக்க உதவுகிறது. எனவே சிறுநீரகங்கள் நலமாக இருக்க செவ்வாழை பழங்கள் அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.
சுறுசுறுப்பு
செவ்வாழைப்பழம் பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக பொட்டாசியம் சத்து வாழைப்பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது. தினமும் காலையில் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும். மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச் செய்வதில் வாழைப்பழம் உதவுகிறது. எப்போதும் சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களுக்கு செவ்வாழைபழம் சிறந்த உற்சாக உணவுப்பொருளாக இருக்கும்.

Download As PDF