Friday, November 29, 2013

மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகள்

மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும் படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
மதுவின் பொதுவான மூலக்கூறு எதில் ஆல்கஹால் பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு எதில் ஆல்கஹால் (Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.
1. ரம்.... 50-60%
2. விஸ்கி, பிராந்தி, ஜின்---40-45%
3. ஷெர்ரி, போர்ட்---20%
4. ஒயின்---10-15%
5. பீர்--4-8 % பொதுவாக...
6. சாராயம்--40-50%
மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது
கிளர்ச்சி நிலை (excitement:
முதலில் மது அருந்தியவுடன் ஏற்படுவது கிளர்ச்சி. தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும்.
ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால்தான் உடனடி போதை ஏற்படுகிறது.
மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில்தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும் பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா என்று கவனம் இருக்காது.
இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.
இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது
1. தசை கட்டுப்பாடு இழக்கும்.
2. தொடு உணர்வுகள் குறையும்.
3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை கியவை பாதிக் கப்படும்.
இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்
1. வாய் வார்த்தைகள் குளறுதல்,
2. நடையில் தள்ளாட்டம்,
3. அதிக மயக்கம்,
4. ஞாபக மறதி
5. அதிக குழப்பம்
ஆகியவை ஏற்படும்.
பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில்தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரி யாது.
கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால்தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன. மது அருந்தி சாலையில் நடப் போருக்கும் வாகனங்கள் வரும் தூரம் வேகம் ஆகியவை தெரியாது.
Download As PDF

Sunday, November 24, 2013

முக்கியமான ஆவணங்கள் தொலைந்தால் ,...எப்படி திரும்ப பெறுவது ?

Posted Imageஎவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கேதெரிந்துகொள்ளலாம்.

இன்ஷூரன்ஸ் பாலிசி!

யாரை அணுகுவது..? பாலிசியை விநியோகம் செய்த கிளையைஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்? ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

மதிப்பெண் பட்டியல்!

யாரை அணுகுவது..? பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.
வ்வளவு கட்டணம்? உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.
கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள். நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

ரேஷன் கார்டு!

யாரை அணுகுவது..? கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை
எவ்வளவு கட்டணம்? புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும். கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும். நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
டிரைவிங் லைசென்ஸ்!
யாரை அணுகுவது? மாவட்டப் போக்குவரத்து அதிகாரி. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்? கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்). கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

பான் கார்டு!

யாரை அணுகுவது? பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.
எவ்வளவு கட்டணம்? அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய். கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள். நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
பங்குச் சந்தை ஆவணம்!

யாரை அணுகுவது? சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.
எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள். நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

கிரயப் பத்திரம்!
யாரை அணுகுவது..? பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய். கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

டெபிட் கார்டு!

யாரை அணுகுவது..? சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? கணக்குத் தொடர்பான விவரங்கள். எவ்வளவு கட்டணம்? ரூ.100.
கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.
நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

மனைப் பட்டா!

யாரை அணுகுவது..? வட்டாட்சியர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.? நகல் பட்டா கோரும் விண்ணப்பம். எவ்வளவு கட்டணம்? ரூ.20. கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

பாஸ்போர்ட்!
யாரை அணுகுவது..? மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்? ரூ.4,000. கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.
நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
கிரெடிட் கார்டு!

யாரை அணுகுவது? நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள். எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்)கால வரையறை: 15 வேலை நாட்கள். நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும். 
Download As PDF

இந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாதாம்பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம்.ஆனால் சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.

அது போன்ற பொருட்களின் பட்டியலை பார்க்கலாம்.வெங்காயம்


Posted Image


வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும், அப்போது தான் கெட்டுப் போகாமல் இருக்கும்.


பூண்டு


Posted Image


பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது கெட்டுப் போக ஆரம்பித்துவிடும்.
பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.உருளைக்கிழங்கு

Posted Image


உருளைக்கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது.
உருளைக்கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.
காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும், பாலிதீன் பையில் வைக்கக் கூடாது.
இதே போன்று கருணைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கையும் பிரிட்ஜில் வைக்க கூடாது.


தேன்Posted Image


உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான்.
ஆனால் தற்போது கடைகளில் வாங்கப்படும் தேனில் சுவை மற்றும் பலவற்றுக்காக பலவித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது.
எனினும் தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.


வாழைப்பழம்


Posted Image


வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும்.
இதேபோன்று பூசணிக்காய், பிரட், தக்காளி, அன்னாசி போன்றவற்றையும் பிரிட்ஜில் வைப்பதை தவிர்த்து விடுங்கள்.
Download As PDF

மன அழுத்தத்தை குறைக்கும் ஆரோக்கியமான உணவுகள்


ணவு என்பது உயிர் வாழ நமக்கான நாடி துடிப்பாக அமைகிறது. ஆனால் அதற்கு ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.உண்ணும் உணவே மருந்தாக அமையும் என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள் அல்லவா? ஆம், அது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
உணவை கொண்டே பல நோய்களை குணப்படுத்தலாம்.
சொக்லெட்
சொக்லெட்களுக்கான உங்கள் ஏக்கத்தை தீர்த்துக் கொள்ளுங்கள். அதில் உள்ள அனான்டமைன் மூளையில் உள்ள டோபமைன் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். அதனால் மனம் அமைதி பெற்று மன அழுத்தம் நீங்கும்.
நட்ஸ்
நட்ஸில் செலினியம் என்ற கனிமம் உள்ளது. இந்த கனிம குறைபாட்டினால், சோர்வு மற்றும் படபடப்பு ஏற்படும். அதனால் ஒரு கை நட்ஸ்களை உண்டால், மனம் அமைதியாக இருக்கும்.
கீரை வகைகள்
பாப்பாய் என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்திற்கு பிடித்த ஸ்பினாச் என்ற பசலைக் கீரையில் மக்னீசியம் வளமையாக உள்ளது.இது மனதை அதீத செயலாற்றலில் இருந்து பாதுகாக்கும். வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச்சத்து உணவில் இருந்தால், அதுவும் மனதை சாந்தமாக்கும்.
பாஸ்தா
முழு தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாஸ்தாவில் மக்னீசியம் வளமையாக உள்ளது. இந்த மக்னீசியம் குறைபாடும், மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
கோதுமை பிரட்
முழு தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் கோதுமை பிரட்டுகளுக்கும் பாஸ்தாவை போன்ற குணங்கள் உண்டு.அதனால் உணவில் சாண்ட்விச், ரொட்டி ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால் மன அழுத்தத்தை நீக்கலாம்.
ப்ளூ பெர்ரி
சுவைமிக்க பழமான இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தை நீக்கி அமைதியை ஏற்படுத்தும்.
பாதாம்
பாதாமில் ஜிங்க் மற்றும் வைட்டமின் பி12 உள்ளதால், இதனையும் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.ஊட்டச்சத்துள்ள இந்த உணவு, மன நிலையை சீராக வைத்து டென்ஷனை குறைக்கும்.
க்ரீன் டீ
உங்களுடைய பொழுதை ஒரு கப் க்ரீன் டீயுடன் தொடங்கினால், அதை விட மன அமைதி வேறு எதிலும் கிடையாது. சொல்லப்போனால் பல பிரச்சனைகளுக்கு அது உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மீன்
சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களில் ஒமேகா-3 கொழுப்பமிலம் வளமையாக உள்ளதால், அது மூளைக்கு செலினியம் மற்றும் ட்ரிப்டோபைனை செலுத்தும். அதனால் மனம் அமைதியாக இருக்கும்.
ஓட்ஸ்
உடம்பில் உள்ள செரோடோனின் அளவை ஓட்ஸ் அதிகரிக்க வைப்பதால், அது உடம்பில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, மனதை அமைதிப்படுத்தும்.
பால்
பாலில் ட்ரிப்டோபைன் இருப்பதால், செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். அது மனதை ஆசுவாசப்படுத்தும்.
வாழைப்பழங்கள்
குறைவான நார்ச்சத்தை கொண்ட வாழைப்பழங்கள் வாய்வு இடர்பாட்டை குறைக்கும். அதனால் மனது அமைதி பெற்று, நாள் முழுவதும் மன சோர்வு இல்லாமல் இருக்கலாம்.
சாதம்கார்போஹைட்ரேட் சாந்தப்படுத்தும் குணத்தை உடையவை. அதனால் சாதம் இதற்கு பெரிதும் துணை புரியும்.மேலும் குறைவான கொழுப்பை கொண்ட சாதம் செரிமானத்தையும் சுலபமாக்கும்.
மேற்கூறிய சில உணவுகளை தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
அது மனக்கலக்கத்தை குறைக்க உதவும். இதனுடன் சேர்த்து அதிக அளவில் தண்ணீர் குடிக்க மறந்து விடாதீர்கள். இது உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவும்.
Download As PDF

Friday, November 15, 2013

தெனாலிராமன் கதைகள் - நீர் இறைத்த திருடர்கள்


ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.
இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான்.

"அதற்கு என்ன செய்யலாம்?" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.

"வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.

அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன்.

திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.

பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.

சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.

இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், "நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று பேசிக் கொண்டு சென்றனர்.

அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, "நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!" என்று கூறினான்.

திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.

நன்றி தமிழ் படைப்புகள் இணையம் 
Download As PDF

பழமொழியும் அதன் அர்த்தங்களும்

1. ஊரோடு ஒத்து வாழ்
ஊரோது ஒத்து வாழ் என்றால், நீ எந்த ஊரில் இருந்தாலும், அது சொந்த ஊராக இருந்தாலும் சரி, வேறு ஊராக இருந்தாலும் சரி . அக்கம் பக்கம் உள்ளவர்களிம் அன்புடனும் ஆதரவுடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்பதே இத‌ன் உ‌ண்மையான பொருளாகும்.2. எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்
அதாவது பெரிய பணக்காரன், அவரிடம் 7 தலைமுறைக்கு எக்கச்சக்கமான பணம், அவரது வாரிசுகளோ வேலை செய்யமால் அப்பா சம்பாதித்ததை கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய்தாலும் ஒரு நாள் அது கரைந்து, ஓட்டாண்டியாக வேண்டும்.

அப்புறம் விடாமுயற்சிக்கும் இந்த பழமொழியை சொல்லலாம்.
இதனை செட்டிநாட்டில் [குந்தி தின்றால் குன்றும் மாளும்] என்று பேச்சு வழக்கில் கூறுவார்கள்  3. நொறுங்கத் தின்றால் நூறு வயது!
கொஞ்சம் உணவே சாப்பிட்டாலும் நன்கு மென்று அரைத்து பின்னர் உள் விழுங்குவதுதான் சிறந்து. அப்போதுதான் வயிற்றுக்கு அதிகம் வேலை கொடுக்காமல் உடனே செரிமானம் ஆகும். நன்கு மெல்லாமல் நீங்கள் நிறையத் தின்றாலும் நொதித்தல் மூலம் கொஞ்சம் சத்தினை உடல் எடுத்துக் கொண்டு மீதியை பின்பக்கமாக வெளியேற்றிவிடும். எனவே கொஞ்சமாகத் தின்றாலும் நன்கு அரைத்து மென்று திங்க வேண்டும். அவ்வாறு தின்றால் நூறு வயது வாழலாம் என்கிறது இந்த பழமொழி.

ஆடு, மாடுகள் மேய்ந்த பலமணி நேரம் கழித்தும்கூட அசைபோடுவதை நீங்கள் கண்டிருக்கலாம்.


4. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு
காகம் தனது குஞ்சு கருப்பாகவே இருந்தாலும் அதன்மீது அன்பு காட்டி, இரைதேடி வந்து தன் அலகால் உணவூட்டும். ஆனால் மற்ற பறவையினங்கள் காகம் கருப்பாக இருப்பதால் சற்று அஞ்சி ஒதுங்கியே இருக்கும். அதனால் காகம் தனது குஞ்சை வெறுக்குமா? வெறுக்காது! அது தனது குழந்தை அல்லவா? அதைப்போல தனது பிள்ளைகள் என்னதான் அழகாக இல்லாவிட்டாலும் கூன்,குருடு,செவிடாகவே இருந்தாலும் ஒரு தாயானவள் அரவணைத்துப் பாதுகாப்பாள்!


Download As PDF

தமிழ் அரிச்சுவடி என்பது என்ன?

தமிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இதனை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது. தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், உயிர்மெய் எழுத்துக்களும், ஆய்த எழுத்தும் உள்ளன. தற்காலத்தில் வழங்கும் கிரந்த எழுத்துக்கள் சில தமிழ்நெடுங்கணக்கைச் சேர்ந்ததல்ல.

மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றுடனும் உயிரெழுத்து சேரும்போது உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் ஆகும். உயிர் மெய்யெழுத்துக்கள் மொத்தம் 12x18 = 216 ஆகும். இவற்ருடன் 12 உயிர் எழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துக்கள். தமிழ் நெடுங்கணக்கில் சேரா கிரந்த எழுத்துக்கள் (ஜ, , , ஹ வரிசைகள்) 52ம் க்ஷ, ஸ்ரீ முதலான எழுத்துக்களும் இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பலரும் எதிர்த்தும் வருகின்றனர்.
Download As PDF

தமிழரின் நம்பிக்கைகள்

நம்பிக்கைகள் : 
வேப்பமரமும் அரசமரமும் இணைந்து வளர்ந்திருந்தால் அங்கே தெய்வம் இருப்பதாக நம்புதல், பிள்ளை இல்லாதவர்கள் அரசமரத்தைச் சுற்றுதல், நல்லநாள், இராகுகாலம், குளிகைகாலம் பார்த்தல், சகுனம் பார்த்தல், கனவுகளுக்கு விளைவு உண்டு என்று நம்புதல், பிறந்த குழந்தைக்கு மண் பொட்டு இடுதல், மணம் முடிந்து வரும் பெண் வலக்காலை எடுத்துவைத்துப் புக்ககத்தில் நுழைதல், தும்மினால் வாழத்துதல், கணவனை இழந்தோர் மஞ்சள் பூ, பொட்டு, வளையல்களை விலக்குதல், ஆண்கள் புதன் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகல், கிரகணம் பிடித்திருக்கும் நேரத்தில் உணவு உண்ணாமை, அப்போது, கருவுற்ற பெண்கள் துரும்பைக் கிள்ளினால் கருச் சிதையும் என்றெண்ணுதல், சனிக்கிழமைகளில் யாராவது இறந்துவிட்டால், 'சனிப்பிணம் துணை தேடும்' என்று பாடையில் ஒரு கோழியைக் கட்டிச் சென்று பிணத்துடன் புதைத்தல் முதலியன சில நம்பிக்கைகள். 
Download As PDF