Friday, October 14, 2011

பீட்ரூட் மசால்..


BEETROOT MASAL. பீட்ரூட் மசால்..

BEETROOT MASAL:-

NEEDED:-


BEETROOT - 250 GMS


CHANNA DHAL - 1 CUP PARABOILED




TO GRIND:-


RED CHILLIES - 4 NOS.


SOMPH - 1/2 TSP


GRATED COCONUT - 2 TSP


FRIED CHANNA DHAL- 1 TSP


SALT - 1 TSP
SMALL ONION - 2 NOS


GARLIC - 1 POD


FOR FRY :-


OIL - 2 TSP


MUSTARD - 1 TSP


ORID DHAL - 1 TSP


KALPAASIPPUU - I INCH


BAY LEAF - 1 INCH


CURRY LEAVES - 1 ARK


METHOD :-
PEEL ., WASH AND SQUARES THE BEETROOTS. GRIND ALL THE INGREDIENTS WITH LITTLE WATER. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD KALPASIPPUU., BAY LEAF AND CURRYLEAVES. THEN ADD THE BEETROOTS AND SAUTE WELL. AFTER 5 MINUTES ADD THE MASALA AND SAUTE WELL. ADD LITTLE WATER AND COVER THE PAN WITH A LID. AGAIN COOK FOR 5 MINUTES THEN ADD THE CHANNA DHAL. STIRR WELL. KEEP IT FOR 2 MINUTES IN FIRE AND OFF THE GAS. SERVE HOT WITH CURD RICE. CHILDREN LIKE THIS HOT AND SWEET BEETROOTS.





பீட்ரூட் மசால்:-


தேவையானவை :-

பீட்ரூட் - 250 கிராம்


கடலைப்பருப்பு - 1 கப் பதமாக வேகவைத்தது.


அரைக்க:-


வரமிளகாய் - 4


சோம்பு - 1/2 டீஸ்பூன்


துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்


பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்


உப்பு - 1 டீஸ்பூன்


சின்னவெங்காயம் - 2


பூண்டு - 1




தாளிக்க:-


எண்ணெய் - 2 டீஸ்பூன்


கடுகு - 1 டீஸ்பூன்


உளுந்து - 1 டீஸ்பூன்


கல்பாசிப்பூ - 1 இஞ்ச்


பட்டை இலை - 1 இஞ்ச்


கருவேப்பிலை - 1 இணுக்கு




செய்முறை:-
பீட்ரூட்களைத் தோல்சீவிக் கழுவி சின்ன சதுரங்களாக நறுக்கவும். எல்லா மசாலா சாமன்களையும் ஒன்றாகப் போட்டு லேசாக தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., பட்டை இலை., கல்பாசிப்பூவைப் போடவும். பின் பீட்ரூட்டைப் போட்டு வதக்கவும். 5 நிமிடம் வதக்கிய பிறகு அதில் மசாலாவைப்போட்டு நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். 5 நிமிடம் கழித்து கடலைப்பருப்பைப் போட்டு நன்கு கிளறவும். 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து சூடாக தயிர் சாதத்தோடு பரிமாறவும். இனிப்பும் உறைப்புமான இந்த பீட்ரூட் மசாலாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Download As PDF

No comments:

Post a Comment