Wednesday, January 18, 2012

குத்துவிளக்கில் எத்தனை முகம், யாரை எப்படி வணங்க வேண்டும்


குத்துவிளக்கில் எத்தனை முகம்

1. குத்துவிளக்கில் ஒருமுகம் ஏற்றினால்- மத்திம பலன்
2. இருமுகம் ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை
3. மும்முகம் ஏற்றினால்- புத்திர சுகம், கல்வி கேள்விகளில் விருத்தி.
4. நான்கு முகம் ஏற்றினால்- பசு, பால், பூமி, சேர்க்கை
5. ஐந்து முகம் ஏற்றினால்- சர்வ பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லட்சுமி கடாட்சம் ஆகியவை பெருகும்.



யாரை எப்படி வணங்க வேண்டும் 
* இறைவனை வணங்கும் போது தலைக்கு மேலே ஒரு அடி தூக்கி, இரு கரங்களையும் கூப்பி வணங்க வேண்டும்.
 
* குரு மற்றும் ஆசிரியர்களை வணங்கும் போது நெற்றிக்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.
 
* தந்தையை வணங்கும் போது வாய்க்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.
 
* அறநெறியாளர்களை வணங்கும் போது மார்புக்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.
 
* நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற தாயை வயிற்றுக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.
Download As PDF

No comments:

Post a Comment