அவ்வாறு விழுந்த பின் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள்: 1.முதலாவதாக போனில் எதனை எல்லாம் பிரித்து எடுத்து வைக்க முடியுமோ அவற்றை எல்லாம் பிரித்து எடுத்திடவும். கைத்தொலைபேசி கவர், பற்றரி கவர், பற்றரி, சிம் கார்ட், மெமரி கார்ட் ஆகியவை இதில் அடங்கும். 2. அடுத்து கைத்தொலைபேசியில் எங்கெல்லாம் தண்ணீர் இருக்கும் என்று எண்ணுகிறீர்களோ அங்கு சிறிய மெல்லிய துணி, அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு சுத்தம் செய்து நீரை உறிஞ்சி எடுக்கவும். முழுவதுமாக உலர செய்திடவும். 3. ஹேர் ட்ரையர் ஒன்று இருந்தால் அதனை எடுத்து கைத்தொலைபேசியை மீதாகப் பயன்படுத்தி ஈரத்தை உலர்த்தவும். குறிப்பாக பற்றரி வைத்திடும் இடத்தில் உள்ள ஈரத்தை முழுமையாக நீக்கவும். இவ்வாறு உலர வைக்கையில் ஹேர் ட்ரையரை கைத்தொலைபேசிக்கு மிக அருகே கொண்டு செல்லக் கூடாது. அது கைத்தொலைபேசியின் சில பகுதிகளைப் பாதிக்கலாம். எனவே சற்று தள்ளி வைத்து 20 முதல் 30 நிமிடம் வரை இவ்வாறு உலர வைக்கும் வேலையை மேற்கொள்ளவும். இந்த வேலையை மேற்கொள்கையில் கைத்தொலைபேசியை வெவ்வேறு நிலையில் வைத்து உலர வைக்கவும். இதனால் வெவ்வேறு இடங்களில் ஒட்டியிருக்கும் ஈரம் வெளியேறி உலரும். இதே போல பற்றரி, சிம் கார்டு ஆகியவற்றில் உள்ள ஈரத்தையும் உலர வைக்கவும். நன்றாக உலர்ந்த பின்னர் காற்றோட்டமான இடத்தில் வெகுநேரம் வைத்த பின்னர் பற்றரி, சிம் ஆகியவற்றைப் பொருத்தி இயக்கவும். அப்போதும் சரியாக இயங்கவில்லை எனில் இன்னும் சில மணி நேரம் காத்திருந்து ஈரம் தானாக உலரும் வரைப் பொறுத்திருக்கவும். அதன் பின்னரும் இயங்கவில்லை எனில் கைத்தொலைபேசியை சரி செய்திடும் பணியாளரிடம் சென்று நீரில் விழுந்ததை மறைக்காமல் கூறி நீங்கள் மேற்கொண்ட செயல்களையும் கூறி சரி செய்திடச் சொல்லவும். |
மூங்தால் (பாசிப்பயறு) சப்ஜி
5 days ago


No comments:
Post a Comment