Thursday, December 08, 2011

மாரத்தான் ஓட்டம்!

"மாரத்தான்' 
என்பது ஒருவர் நிற்காமல் தொடர்ந்து 42 கிலோ மீட்டருக்கு மேல் ஓடும் போட்டியாகும். கிரேக்க நாட்டின் புகழ் பெற்ற இரு நகரங்களாக ஸ்பார்ட்டாவும், ஏதேன்சும் ஒரு காலத்தில் சிறந்து விளங்கின. ஒரு சமயம் ஏதென்ஸ் நகரத்தின் மீது பெர்சியர்கள் போர் தொடுத்தனர். "மாரத்தான்' என்ற இடத்தில் போர் நடந்தது. அப்போது, ஏதேன்சு நகர தலைவன் பிற நாடுகளுக்கு தனது தூதுவனை அனுப்பி தனக்கு உதவும்படி வேண்டினான். அத்தூதுவர்களில் ஒருவன் ஸ்பார்டா நகரை கரடு முரடான பாதைகளில் நிற்காமல் ஓடி, போர் செய்தியை தெரிவித்து விட்டு, மீண்டும் போர் நடைபெறும் "மாரத்தான்' என்னும் இடத்திற்கு வந்து பெர்சிய வீரர்களை எதிர்த்து போரிட்டான். முடிவில் பாரசீகம் தோல்வியுற்றது. தன்னாடு வெற்றி பெற்ற செய்தியை தெரிவிக்க ஏதென்சு நகர் நோக்கி ஓடினான். தன்னாட்டு மக்களுக்கு செய்தியை தெரிவித்து விட்டு, மறுநிமிடம் மூச்சு திணறி தன் உயிரை இழந்தான். எனவே, தொடர்ந்து நீண்ட தூரம் நிற்காமல் ஓடும் ஓட்டத்தை, "மாரத்தான் ஓட்டம்' என்று அழைக்கப்படுகிறது.
 நன்றி lankasri  இணையம் 
Download As PDF

No comments:

Post a Comment