Thursday, November 17, 2011

குழந்தைகள் பற்றி சில குறிப்புகள்

கொலுசு அணிவிப்பது ஏன்? 
கொலுசு அணிவது என்பது ஓல்டு பேஷன் என்பவர்களும் உண்டு. ஆனால், இந்த பாயிண்டுகளை படித்து பாருங்கள், "கொலுசு' ஆச்சரியப்பட வைக்கும். தங்கத்துக்கு அடுத்து அத்தனை பெருமைகளும் கொண்டது வெள்ளி. வெள்ளி நகைளை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் சொல்லியிருக்கின்றன. நம் உடம்பில் உள்ள தேவையில்லாத சூட்டை உடனுக்குடன் வெளியேற்றி உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இன்னொரு ஸ்பெஷல் விஷயம் சருமத்தை ஆரோக்கியமாக ஜொலிக்க வைக்கும்.
குழந்தைக்கு கொலுசு போடுவது குழந்தையின் உணர்வுகளை அம்மாவிற்கு உணர்த்தத்தான். தூளியில் படுத்திருக்கும் குழந்தை விழித்ததும் காலை ஆட்ட ஆட்ட கொலுசு சப்தமிட்டு குழந்தை எழுந்ததை அறிவிக்கும்.
குழந்தை அடுத்தடுத்த பருவங்களில் அதாவது, தவழும்போது நடக்க தொடங்கும்போதும் குழந்தையின் கொலுசு சத்தம் கேட்பது அம்மாவுக்கு இனிய சங்கீதம் மட்டுமல்ல... குழந்தை எங்கே இருக்கிறது என்பதை அறிவிக்கும் மணியும் கூட.
கொலுசு ஓசை கேட்காவிட்டால் குழந்தை எங்கு சென்றுவிட்டதோ என்று அச்சம் கொள்வாளாம் அந்த குழந்தையின் அம்மா!
வாவ்! இனியாவது உங்க குழந்தை செல்வங்களுக்கு கொலுசு போடுவீங்கதானே!


பெற்றோரின் வசீகரம்!
குழந்தையை கொஞ்சுபவர்கள் அது அம்மா ஜாடை, அப்பா ஜாடை, மாமா ஜாடை என சொல்லி சொல்லி மகிழ்வர். லண்டனில் செயின்ட் ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் "பெற்றோரின் வசீகரம், அழகு அவர்களின் வாரிசுகளில் மகன், மகள் யாருக்கு தொடரும்' என்ற ஆய்வை பேராசிரியர்கள் டேவிட் பெரட், எலிசபெத் கார்னவெல் ஆகியோர் செய்தனர்.

ஆய்வின் முடிவு...
குடும்பத்தில் மரபு வழியாக சில விஷயங்கள் ஒரே மாதிரியாக தொடரும். அந்த வகையில் ஒரு குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக தொடருவதில் வசீகரமும் ஒன்று. 
நூற்றுக்கணக்கான குடும்பங்களின் போட்டோ ஆல்பம் உடல் ரீதியான சில விஷயங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தோம். அதில் பல வித்தியாசமான தகவல்கள் கிடைத்தன. பல குடும்பங்களில் பெற்றோரின் வசீகரம், அழகு அவர்களின் மகள்களிடம் தொடர்வதை தான் காண முடிந்தது. அதே சமயம், அவர்களை போல, மகன்கள் அவ்வளவு வசீகரமாக இல்லை.
தாய், தந்தை இருவரிடத்தும் உள்ள வசீகரம் தான் மகள்களுக்கு முழுமையாக போய் சேருகிறது. ஆனால், மகன்களுக்கு முழுமையாக போய் சேருவதில்லை. இதற்கு மரபு ரீதியாக காரணங்கள் இருக்கலாம். அது பற்றி இன்னும் ஆராய வேண்டும். இதுபோல, புஜபலத்துடன் தந்தை இருந்தால், அவருக்கு அதே மாதிரி நல்ல ஆஜானுபாகுவான மகன்கள் வளருவர் என்பதும் எங்கள் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


குழந்தையின் வலி- அலட்சியம் வேண்டாம்!
வயிற்றுவலி, தலைவலி, கால்வலி, இவற்றில் ஏதேனும் ஒன்று இருப்பதாக குழந்தை சொன்னால், "ஸ்கூலுக்கு மட்டம் போடறதுக்கு சாக்கா... எல்லா சரியாயிடும்' என்று அதட்டும் பெற்றோர்களே அதிகம்.
எல்லா நேரங்களிலும், எல்லா குழந்தைகளும் இப்படி படிப்பிலிருந்து தப்பிக்க மட்டுமே வலிகளை காரணம் காட்டுவதில்லை. அவர்களுக்கு நிஜமாகவே வலி இருக்கலாம். அந்த வலியின் பின்னணியில் பல காரணங்களும் இருக்கலாம்.
15 முதல் 20 சதவீத குழந்தைகள் நாள்பட்ட வலியில் அவதிப்படு கின்றனர். குழந்தைகளுக்கு வருகிற வலி, பெரியவர்களுக்கு வரும் வலியிருந்தும் வேறுபட்டது. காரணம் 5 வயதுக்குப்பட்ட குழந்தைகளால் வலி உணர்ச்சியை தெளிவாக சொல்ல முடியாது. வலியை தவிர மற்ற அறிகுறிகளே பிரதானமாக இருக்கும். வலியை கண்டுபிடிக்கிற முயற்சியில், பல மருத்துவர்களும் பல அறிவுரைகளை சொல்வதால் பெற்றோர் குழம்பியிருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் என்ன செய்தும் வலி நிற்கவில்லை என்கிறபோது எக்கசக்க மன அழுத்தத்துக்கு தள்ளப்படுகிறார்கள். 5 வயதுக்கு மேலான குழந்தைகளால்தான் வலியை ஓரளவு உணர்த்த முடியும். வலியினால் அவதிப்படுகிற குழந்தைகளிடம் வழக்கத்துக்கு மாறான எரிச்சல், சோர்வு, அமைதி போன்றவை காணபட்டாலோ, மூர்க்கத்தனம், தூக்கமின்மை, உணவு பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, செயல் திறனிலோ, கவனத்திலோ குறைவு உண்டானாலோ... அவற்றை வலிக்கான அறிகுறிகளாக கணக்கில் கொள்ளலாம். 
இந்த வலிகளுக்கு உடல்ரீதியான காரணங்கள் இருக்கலாம். அதாவது உடலுக்குள் உள்ள நோயின் விளைவாக வலி ஏற்படலாம். ரத்த சோகை, நுரையீரல் பிரச்னை, புற்றுநோய், உடல் சோர்வு நோய், சிறுநீர் பிரச்னை போன்றவற்றால் கூட வலி வரலாம்.
அடுத்து மனரீதியான மற்றும் சமூக ரீதியான காரணங்கள்... பள்ளியில் ஏற்படும் பிரச்னைகள், பெற்றோருடன் உண்டாகிற சண்டை, பிரிவு, மரணம், நெருங்கிய உறவினரின் பிரிவு, இடமாற்றம், பராமரிக்கிற நபர் மாறுதல் போன்ற பல விஷயங்கள்....
12 முதல் 14 வயது வரையிலான பிள்ளைகளுக்கே வலி அதிகமிருக்கிறது. இதில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். 30 சதவீதத்தினருக்கு முதுகு வலியும், 50 சதவீதத்தினருக்கு தலைவலியும் இருக்கிறது. வயிற்று வலி பரவலாக இருக்கிறது. வயிற்று வலிக்கு கிருமிகளோ, அப்பென்டிக்ஸ் எனப்படுகிற குடல்வால் பிரச்சனையோ காரணம் ஆகலாம். காலை உணவை தவிர்ப்பது, டென்ஷன் போன்றவற்றால் தலைவலி வரும்.
பெரியவர்களுக்கு கொடுக்கும் மருந்துகள் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. வெறும் மாத்திரைகளால் மட்டுமே குணப்படுத்த கூடியதில்லை. குழந்தைகளின் வலிகள். அவர்களுக்கென தனி மருந்து முறைகளும், ஆலோசனைகளும் நிச்சயம் தேவை.
இனி உங்கள் குழந்தை வலிக்கிறது என்று சொன்னால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறுவதே பாதுகாப்பானது!
Download As PDF

No comments:

Post a Comment