Friday, November 29, 2013

மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகள்

மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும் படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
மதுவின் பொதுவான மூலக்கூறு எதில் ஆல்கஹால் பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு எதில் ஆல்கஹால் (Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.
1. ரம்.... 50-60%
2. விஸ்கி, பிராந்தி, ஜின்---40-45%
3. ஷெர்ரி, போர்ட்---20%
4. ஒயின்---10-15%
5. பீர்--4-8 % பொதுவாக...
6. சாராயம்--40-50%
மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது
கிளர்ச்சி நிலை (excitement:
முதலில் மது அருந்தியவுடன் ஏற்படுவது கிளர்ச்சி. தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும்.
ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால்தான் உடனடி போதை ஏற்படுகிறது.
மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில்தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும் பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா என்று கவனம் இருக்காது.
இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.
இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது
1. தசை கட்டுப்பாடு இழக்கும்.
2. தொடு உணர்வுகள் குறையும்.
3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை கியவை பாதிக் கப்படும்.
இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்
1. வாய் வார்த்தைகள் குளறுதல்,
2. நடையில் தள்ளாட்டம்,
3. அதிக மயக்கம்,
4. ஞாபக மறதி
5. அதிக குழப்பம்
ஆகியவை ஏற்படும்.
பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில்தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரி யாது.
கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால்தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன. மது அருந்தி சாலையில் நடப் போருக்கும் வாகனங்கள் வரும் தூரம் வேகம் ஆகியவை தெரியாது.
Download As PDF

No comments:

Post a Comment