Wednesday, July 27, 2011

பாதைமாற்றும் போதை தேவையா


தினமலரில் வந்தவை!!! 
என்ன தம்பி எப்படி இருக்கீங்க   நான் உங்களுடன் சாட்டிங்  செய்கிறேன்  
காலம் மாறும் போது கலாசாரத்தையும் மாற்றி கொள்கின்றனர் இளைஞர்கள். புகை, மது, போதை பாக்கு, போதை ஊசி, கஞ்சா... என இளைஞர்களை பாதை மாற்றும் விஷயங்களில் இருந்து தப்பிக்க முடியுமா? "பாதை மாற்றும் போதை தேவையா?' என, ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளை கேள்வியாய் நோக்கினோம். ஒற்றைக் குரலில் "தேவையில்லை' என்றனர்.
திவ்யா : கிராமத்தில் சிகரெட் புகைப்பதை, யாரும் பார்த்தால் "வீட்டில் சொல்வார்கள்' என்ற பயம் மாணவர்களிடம் உள்ளது. கே.ராபியத் :பசரியா சினிமா, "டிவி' சீரியல்கள் போதை குறித்த தவறான எடுத்துக்காட்டுகளை காட்டுகின்றன.
பி.ஜான்ஸிராணி : பெற்றோர்கள், தேவைக்கு அதிகமாக பணம் கொடுக்கின்றனர். இளைஞர்கள் கைநிறைய சம்பாதிக்கும் போது, நல்லது, கெட்டது தெரியாமல், தவறான நண்பர்களுடன் போதையால் சீரழிகின்றனர்.
கே.ராபியத் பசரியா : சினிமா, "டிவி' சீரியல்கள் போதை குறித்த தவறான எடுத்துக்காட்டுகளை காட்டுகின்றன. கல்வி நிறுவனங்கள், பெயருக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்தாமல், நம்மால் இரண்டு பேராவது திருந்துகிறார்களா? என்று கவனிக்க வேண்டும்.
ஜெ.ஜெம்மா லில்லி கிரேஸ் : கடைகளில் காட்சிப் பொருளாய் போதை பாக்கு பாக்கெட்களை தொங்க விடுகின்றனர். பிள்ளைகள் பார்க்கும் வகையில் அப்பா, மது குடித்தால், குடும்பமே அழிந்துவிடுமே.
ஆர்.உமா மகேஸ்வரி : கிராமத்தில் மாணவர்களிடம் மது, சிகரெட், கஞ்சா போன்ற போதை பழக்கம் குறைவு தான். ஆனால் நகரத்தில் தந்தை ஒரு பக்கம், மகன் ஒரு பக்கம் குடிக்கின்றனர்.
எஸ்.திவ்யா : கிராமத்தில் சிகரெட் புகைப்பதை, தெரிந்தவர்கள் யாரும் பார்த்தால் வீட்டில் சொல்வார்கள் என்ற பயம் மாணவர்களிடம் உள்ளது.
நா.சத்தீஸ்வரி : சுற்றுசூழலுக்கு இருப்பதைப் போல, போதை ஒழிப்பு குறித்த பாடத்திட்டம் உருவாக்க வேண்டும். அதன் பாதிப்புகளை சிறுவயதிலிருந்தே தெரிந்து கொள்ள வேண்டும்.
சமீம் அப்ரோஸ் : சந்தோஷங்களை பகிர்ந்து கொள்வதற்காக நண்பர்கள் குடிக்கின்றனர். ஆனால் சண்டையுடன் வீடு திரும்புகின்றனர். நகரங்களில் இரவு விருந்தில் விடியும் வரை, ஆணும், பெண்ணும் அரை போதையில் கும்மாளமிடுகின்றனர்.
எம்.பாத்திமா நுஸ்ரா : திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததை கொண்டாட, நண்பர்களுடன் மது குடிக்கின்றனர். தள்ளாட்டத்துடன் வாகனத்தில் செல்லும் போது, விபத்தில் உயிரிழக்கின்றனர்.
எஸ்.செய்யது சாபிரா பேகம் : பெற்ற பிள்ளைகளிடம் சிகரெட் வாங்கி கொடுக்கச் சொல்லி தந்தை வேலை வாங்குகிறார். வாங்கி வரும்போது வாயில் வைத்தபடிதான் வருகிறான் மகன். வருமானத்துக்காக மதுக்கடைகளை நடத்தும் அரசு, தொழில் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கலாம்.
Download As PDF

No comments:

Post a Comment