Wednesday, July 27, 2011

பக்கத்து வீட்டு பக்குவம்: நெல்லை சிக்கன் ரோஸ்ட்

தினமலரில் வெளி வந்தது


ஒவ்வொரு மண்ணிலும், சமையலின் கைப்பக்குவமும், ருசியும் மாறும். தாமிரபரணி தண்ணீரில் மணக்க, மணக்க நெல்லை சிக்கன் ரோஸ்ட் செய்ய கற்றுத் தருகிறார், மதுரை பார்சூன் பாண்டியன் சமையல் நிபுணர் ராமர். எலும்புள்ள, எலும்பில்லாத சிக்கனை பயன்படுத்தலாம்.
தேவையானவை :
சிக்கன் - கால் கிலோ
பச்சை மிளகாய் - ஐந்து
பெருஞ்சீரகம், பட்டை, லவங்கம்,ஏலம்,
அன்னாசி பூ சேர்த்து - ஐந்து கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 20 கிராம்
கடலை மாவு - 20 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க, தாளிக்க
வெங்காயம் - 100 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:மசாலா பொருட்களை, மிக்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அல்லது, சிறு உரலில் இடித்து வைக்கலாம். பச்சை மிளகாயை இடித்து வைக்கவும். சிக்கன், கடலை மாவு, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து, எண்ணெயில், அரை வேக்காட்டில் பொரித்தெடுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். மசாலா பொடி, உப்பு சேர்த்து, பொரித்த கோழித்துண்டுகளை சேர்த்து கிளற வேண்டும். மிதமான சூட்டில் இறைச்சி நன்றாக வெந்திருக்கும்.
சமையல் நேரம் : 40 நிமிடங்கள்
Download As PDF

No comments:

Post a Comment