Monday, December 26, 2011

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்



பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
காய்கறி வகைகளில் ஒன்றான இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.
உடல் சூட்டைத் தணிக்கும், சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும்.
புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.
மருத்துவத்தில் பூசணிக்காயின் நீர்விதை பயன்படுத்தப்படுகின்றது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது
ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.
வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும், இரத்தசுத்தியாகும்.
பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது இரத்தக்கசிவு ஏற்பட்டால் இரத்தக்கசிவை நிறுத்திவிடும். 

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் இரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.
பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும்(தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும்.
Download As PDF

ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்



ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் 


ஓன்லைன் மூலம் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
இதே நேரத்தில் ஓன்லைன் மூலம் கொள்ளையடிப்பதும் அதிகரித்து வருகிறது. இவற்றில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. ஓன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் தங்களின் வங்கி கணக்கை கொடுத்து அதற்கு பணம் அனுப்ப சொல்லலாம்.
2. இணையதளம் பயன்படுத்தும் நாம் இமெயில் மற்றும் வங்கி கணக்கு பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கு தனி உலாவியும் மற்றபடி தளங்களை பார்ப்பதற்கு தனி உலாவியும் பயன்படுத்தலாம்.
3. Crack செய்து கொடுக்கும் மென்பொருளை ஒரு போதும் தரவிறக்காதீர்கள் இதனுடன் தற்போது உங்கள் கடவுச்சொல்லை அனுப்பும் ஸ்கிரிப்டும் கூடவே வருகின்றது.
4. பணம் அனுப்பும் தளத்தின் முகப்பில் “https” என்று இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்.
5. கடவுச்சொல் தட்டச்சு செய்யும் போது உலாவியில் ஏதாவது தகவல் வந்து Ok , close என்று இருந்தால் நீங்கள் Esc பொத்தானை மட்டும் அழுத்துங்கள். ஏன் என்றால் ok, cancel , close எதை அழுத்தினாலும் ஒரே வேலையைத் தான் செய்யும்.
5. உலாவி பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது இடையில் Close அல்லது Restart. ஆனால் கண்டிப்பாக உங்கள் கவனம் உலாவியின் மேல் இருக்கட்டும்.
6. கடவுச்சொல்லை ஒரு போதும் உங்கள் கணணியில் சேமித்து வைக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள் நுழையுங்கள்.
7. நெட்கபேகளில் சென்று பேங்க் Transaction செய்வதை கூடுமானவரை தவிர்க்க பாருங்கள். பயன்படுத்தியே ஆகவேண்டும் என்றால் Firefox உலாவியை பயன்படுத்தி Transaction செய்யுங்கள்.
Download As PDF

தண்ணீரில் கைத்தொலைபேசி விழுந்தால்



நாம் அடிக்கடி செய்திடும் ஒரு காரியம் நம் கைத்தொலைபேசியை தண்ணீரில் போடுவது. குளியலறைகளுக்கும் எடுத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம்.
அவ்வாறு விழுந்த பின் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள்:
1.முதலாவதாக போனில் எதனை எல்லாம் பிரித்து எடுத்து வைக்க முடியுமோ அவற்றை எல்லாம் பிரித்து எடுத்திடவும். கைத்தொலைபேசி கவர், பற்றரி கவர், பற்றரி, சிம் கார்ட், மெமரி கார்ட் ஆகியவை இதில் அடங்கும்.
2. அடுத்து கைத்தொலைபேசியில் எங்கெல்லாம் தண்ணீர் இருக்கும் என்று எண்ணுகிறீர்களோ அங்கு சிறிய மெல்லிய துணி, அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு சுத்தம் செய்து நீரை உறிஞ்சி எடுக்கவும். முழுவதுமாக உலர செய்திடவும்.
3. ஹேர் ட்ரையர் ஒன்று இருந்தால் அதனை எடுத்து கைத்தொலைபேசியை மீதாகப் பயன்படுத்தி ஈரத்தை உலர்த்தவும். குறிப்பாக பற்றரி வைத்திடும் இடத்தில் உள்ள ஈரத்தை முழுமையாக நீக்கவும்.
இவ்வாறு உலர வைக்கையில் ஹேர் ட்ரையரை கைத்தொலைபேசிக்கு மிக அருகே கொண்டு செல்லக் கூடாது. அது கைத்தொலைபேசியின் சில பகுதிகளைப் பாதிக்கலாம். எனவே சற்று தள்ளி வைத்து 20 முதல் 30 நிமிடம் வரை இவ்வாறு உலர வைக்கும் வேலையை மேற்கொள்ளவும்.
இந்த வேலையை மேற்கொள்கையில் கைத்தொலைபேசியை வெவ்வேறு நிலையில் வைத்து உலர வைக்கவும். இதனால் வெவ்வேறு இடங்களில் ஒட்டியிருக்கும் ஈரம் வெளியேறி உலரும்.
இதே போல பற்றரி, சிம் கார்டு ஆகியவற்றில் உள்ள ஈரத்தையும் உலர வைக்கவும்.
நன்றாக உலர்ந்த பின்னர் காற்றோட்டமான இடத்தில் வெகுநேரம் வைத்த பின்னர் பற்றரி, சிம் ஆகியவற்றைப் பொருத்தி இயக்கவும். அப்போதும் சரியாக இயங்கவில்லை எனில் இன்னும் சில மணி நேரம் காத்திருந்து ஈரம் தானாக உலரும் வரைப் பொறுத்திருக்கவும்.
அதன் பின்னரும் இயங்கவில்லை எனில் கைத்தொலைபேசியை சரி செய்திடும் பணியாளரிடம் சென்று நீரில் விழுந்ததை மறைக்காமல் கூறி நீங்கள் மேற்கொண்ட செயல்களையும் கூறி சரி செய்திடச் சொல்லவும்.
Download As PDF

கைத்தொலைபேசியில் கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டம் உபயோகிப்பவர்களின் கவனத்திற்கு



கூகுள் ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டத்தில் தகவல்களை எளிதில் களவாட முடியும் என ஜேர்மன் தொழில்நுட்ப பாதுகாப்பு ஆய்வாளர் பாஸ்டியன் கொனிங்ஸ் எச்சரித்துள்ளார்.
மேலும் பயன்பாட்டாளர் பொது இணையதள இணைப்பை தொடர்பு கொள்ளும் போது அவரது தொலைபேசி தகவல்கள் அனைத்தும் திருடப்படக் கூடிய அபாயம் உள்ளது எனவும் எச்சரித்துள்ளார்.
இந்த நிபுணர் ஜேர்மனியின் உல்ம் பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். இவர் டெர்ஸ்பைகல் இதழுக்கு அளித்த பேட்டியில் தகவல் திருடப்படும் தொலைபேசியில் உள்ள தொடர்பு விவரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை பார்வையிட முடியும் என அவர் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட நபர்கள் வெளிநாடு செல்ல திட்டமிடுவதை கண்காணிக்க இணையதள திருடர்கள் இந்த முறையை பயன்படுத்துவதாக கூறியுள்ளார். இந்த ஓபரேடிங் சிஸ்ட செயல்பாடு குறித்து நிபுணர் கோனிங்ஸ் குறிப்பிட்ட நிறுவனத்திடம் எச்சரித்துள்ளார்.
இருப்பினும் நிறுவனம் தரப்பில் இருந்து வரவில்லை. திறன் வாய்ந்த தகவல் திருட்டு நபர்கள் கூகுள் இணைப்புகளையே வெளித் தொடர்புக்கு பயன்படுத்துகிறார்கள் என்றும் கோனிங்ஸ் கூறினார்.
கூகுளின் பெரும் சேவையில் உள்ள விவரங்கள் குறிப்பாக அங்கீகார விவரங்கள் போன்ற தகவல்களை தகவல் திருட்டு நபர்கள் எடுக்கும் நிலை உள்ளது என கோனிங்ஸ் கூறியுள்ளார்.
Download As PDF

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்



சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவைகள்


ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று.
1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.
2. சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.
3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை(Bloated with air) உருவாக்குகிறது.
எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.
5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள்(Don�t Loosen Your Belt). ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.
6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.
7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய்(டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.
சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.
8. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். மருத்துவத் துறையில் நவீன மூட நம்பிக்கைகள் பலவும் இதுபோல உண்டு.
Download As PDF

Friday, December 23, 2011

கவிதைகள்


1-
வாகன நெரிசல்
நிறைந்த சாலையை
சாமர்த்தியமாய்
கடந்து விடுகிறது பூனை
அதற்கு ஒன்றுமாகி விடக்கூடாது
என்று தொடங்கிய படபடப்பு
அதற்கு ஒன்றுமாகவில்லை
என்ற நிம்மதியில் முடிந்தது
இனி கடந்து போவேன்
படபடப்பின்றி
நிம்மதியுடன்
2-
கை வருடும்போது
ஒரு குழந்தையைப் போல
அமைதியாக இருக்கும்
இந்த கூழாங்கல்
எறியும் போது
ஒரு பறவையைப் போல
பறந்து போய் விடுகிறது
3-
புல்லின் வார்த்தைகள்
பனித்துளிக்குத் தெரியும்
அதை சொல்லத் தொடங்கும் போதெல்லாம்
உலர்ந்து போய்விடுகிறது
4-
எழுதும் இந்த வரியும்
எழுதப் போகும்
அடுத்த வரியும்
எப்படி உருவாகிறது என்று
எனக்குத் தெரியாது
ஒரு வேளை
அந்த வரிகளுக்குத் தெரியுமா
எனக்குத் தெரியவில்லை என்று 
5-
ரயில் தண்டவாளத்தில்
தலை வைத்து
தற்கொலை செய்து கொள்ளும்
கனவை
திரும்ப திரும்ப
ஒத்திகை செய்கிறேன்
ரயிலுக்குள்ளும்
நானே இருந்து
சங்கிலியை இழுத்து விடுவதால்
கூடி வராமல் போகிறது
6-
நதி உறைந்த போது
மீன் சிலையானது
நீர் தளர்ந்து
நதியாகிய போது
நீந்த தெரியாத சிலை
மூழ்கிப் போனது
புதுப்புது மீன்கள்
கடந்து போக

----நன்றி 
தடாகம் இணையம் .
Download As PDF

Wednesday, December 21, 2011

வாழைக் காய் சாப்பிட்டால் வாய்வு உண்டா?


Valakkaivaruvalவாழைக் காய் சாப்பிட்டால் வாய்வு.  ஆகையினால் வாழைக்காயை உண்ண வேண்டாம் என்று பெரியவர்கள் கூறுவர்கள். ஆனால் மாமுனிவர்கள் அப்படிக் கூறுகின்றர்களா?
அது தான் இல்லை. வாழைக் காயை நன்றாகச் சாப்பிடு. அப்படிச் சாப்பிட்டால் - உனக்குப் பித்தத்தினால் ஏற்படக் கூடிய வாந்தியானது நின்று போகும். மனக்கவலை அதிகமாகி தன் நிலைமறக்கச் செய்யும் சித்தப் பிரமை என்ற நோய் தீரும். பித்தத்தினால் ஏற்பட்ட காய்ச்சல் அகன்று விடும்.

எந்நேரமும் வாயில் உமிழ்நீர் எனப்படும் எச்சில் சுரந்து கொண்டே இருந்தால் அதனை உடனடியாக நிறுத்தி உன்னை மனங்களிக்கச் செய்யும். வயிறானது கடமுடாவென்று இரைந்து மிகத் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறதா? இந்த வாழைக்காயை சாப்பிடு எல்லாம் தீர்ந்து போகும்.

ஊடம்பெல்லாம் அனல் போல் கொதிக்கின்றது என்று உன் உடலின் மேல் தற்செயலாகக் கை வைத்த மற்றவர்கள் சொல்கிறர்களா?

லொக்கு லொக்கு என்று இருமி மற்றவர்களுக்கு தொந்தரவையும் எரிச்சலையும் கொடுத்து இரவிலும் தூக்கமின்றிச் சிரமப்படுகிறாயா?  உனக்கு வாழைக்காய் தான் சரி.

என் உடம்பில் இரத்தமே இல்லை. கை, கால் எல்லாம் வெளுத்துப போய் விட்டது. ஏன் கண்களைப் பார். இரத்தமில்லாத என்னுடைய நிலைமை உனக்கு புரியும் என்று புலம்புகின்றாயா? உன் புலம்பலை நிறுத்தி வாழைக்காயை சாப்பிடு.அப்புறம் பார் ஆச்சார்ப்படுவாய்.

குடலுள் பசியற்ற தன்மை இருக்கிறதா? எவ்வளவு நல்ல ஆகாரத்தை எதிரே வைத்தாலும் வேண்டாம் போன்ற ஒரு வெறுப்புத் தோன்றுகின்றதல்லவா? ஆகாரத்தின் மேல் பிரியமற்ற நிலைமை இருக்கிறதல்லவா?

அதனை மாற்றி உணவை கண்டோர் வியக்கும் வண்ணம் உள்ளே தள்ளச் செய்யும் சக்தி இந்த வாழைக்காய்க்கே உண்டு.

இப்படிப்பட்ட வாழைக்காயை இனிமேலாவது உணவில் சேர்த்துக் கொள்வதற்குத் தயங்காதீர்கள்.  சரி தானே நம்ப மாட்டீர்களா நான் சொன்னதை.

வாந்தி  பித்தம் பேதி வாய்நீர் வயிறுளைத்
லார்நதவன லங்காத மண்டாவாஞ் சூழ்ந்தேறு
செம்புனலுந் தென்புமுண்டாந் திண்டி மிகப்பெருகு
மம்புவியுள் வாழைக்கா யால்.
Download As PDF