Sunday, October 09, 2011

தூங்காமல் இருந்தால்....


மனிதர்களின் தினசரிச் செயல்களில் குறிப்பிடத்தக்கது, தூக்கம். தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்கி ஓய்வெடுக்கவில்லையெனில், மறுநாள் ஒழுங்காக வேலை பார்க்க முடியாது.
நாள் முழுவதும் உழைக்கும் நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கத்தான் இந்தத் தூக்கம் அவசியமாகுது (சில உறுப்புகள் 24 மணி நேரமும் இயங்குவது தனிக்கதை.). எனவே, ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது ரொம்ப அவசியம்.
சாப்பிடாம கூட சில நாட்களுக்கு உயிரோடு இருந்துவிடலாம். ஆனால், தூங்காமல் இருக்க முடியாது. ஒருவேளை நம்மால் தூங்க முடியவில்லை எனில் என்ன நடக்கும்?
சில நாட்களுக்கு மனிதன் தூங்காமல் இருந்தால், அவன் ரத்தத்துல இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து நோய் எதிர்ப்புத் தன்மையும் குறையும். தசைகளோட வலிமை குறையும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. உடல் வெப்பநிலை மாறுபடும். இதுமாதிரி உடலுக்குச் சிக்கலை உண்டாக்கும் தூக்கப் பிரச்சினை, உள்ளத்துக்கும் சிக்கலை உண்டாக்கும்.
தூங்காமல் இருப்பதால் இரத்தத்தில் இருக்கும் மனஅழுத்தத்துக்கு காரணமான `கார்ட்டிசோல்' என்னும் இரசாயனத்தின் அளவு கூடுகின்றது. ஞாபகசக்தி குறைவு, வேலைகளில் தவறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். உடலையும், மனசையும் ஒருசேர பாதிக்கும் ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு. எனவே, தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுப்பது முக்கியம்.
Download As PDF

No comments:

Post a Comment