"அச்சச்சோ மறந்து போச்சே" என்று பலரும் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். இதற்கு காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப்பொருட்களை தொடர்ந்து சாப்பிட வேண்டும். உங்களுக்காக சில குறிப்புகள்: 1. ஞாபகசக்தியை அதிகரிக்கம் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீட்சை,திராட்சை, மாதுளை,ஆரஞ்சு முதலியன. 2. சமையலில் சீரகம்,மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. 3. பள்ளிக் குழந்தைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்து கொள்வது மிகவும் அவசியம். அதற்கு தினமும் இரவில் 12 பாதாம் பருப்புகளை ஊறப்போட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் நரம்புகளும் பலமாகின்றன. அரைக்கும் முன் பாதாமின் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாமில் 490 கிராம் பாஸ்பரஸ், தாதுஉப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் இதில் உள்ளது. 4. கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பீட்ரூட், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா ஆகியவற்றிலும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இதை தவிர பால், தயிர் முதலியவற்றையும் உணவில் சோ்க்க வேண்டும். நினைவாற்றல் குறைவதற்கு மிக முக்கிய காரணம் கவலைகள் தான். இரத்த ஓட்டக்குறைவும், நோய்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூனளக்கு சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளையை சோர்வடையால் பார்த்துக் கொள்வது நினைவாற்றலை அதிகரிக்கும். |
அம்ருத் சப்ஜி
3 hours ago


No comments:
Post a Comment