Thursday, September 01, 2011

பித்ருக்களின் முழு ஆசி பெற்றுத்தரும் ஆடி அமாவாசை விரதம் !


பித்ருக்களின் முழு ஆசி பெற்றுத்தரும் ஆடி அமாவாசை விரதம் !



இறைவனின் சிருஷ்டியில் ,  எந்த நேரமும்நாளும் நல்ல நாட்களே. கிரக சுழற்சி காரணமாக , ஒரு சில தினங்களில் அந்த அருள் அலைகள்,அபரிமிதமாக வெளிப்படுகின்றன. அப்படிப்பட்ட முக்கியமான தினம் தான்வரவிருக்கும் ஆடி அமாவாசை. இதில் என்ன அப்படி விசேஷம் என்றுநாம் பார்க்கவிருக்கிறோம்இன்றையகட்டுரையில்.

எந்த ஒரு பெற்றோருக்கும்தன்னோட குழந்தைகளை  நல்லா கவனிக்கணும். தன்னோட சக்திக்கும் மீறி அவங்களுக்கு நல்லது பண்ணனும்னு ஆசை இருக்கும். நூற்றுக்கு தொண்ணூத்தொம்பது பேருஅப்படித்தான். ஒன்னு ரெண்டு தவறுவதும் உண்டு. பெற்ற பிள்ளைகளைவிட தன்னோட சுயநலம் முக்கியம்னு  நெனைக்கிற பெற்றோர்களும் உண்டு. 
அப்படி கண்ணும் கருத்துமா - உசிரையே உங்க மேல வைக்கிற பெற்றவர்களை - நீங்க எப்படி கவனிச்சுக்கணும் அவங்களுக்கு வயசானாஅவங்களை கடின வேலை  எதுவும் செய்ய விடாமமருத்துவவசதிஆரோக்கியமான உணவு எல்லாம் கொடுத்து கவனிக்கலாம். 

இது உங்களை வளர்த்ததுக்கு நீங்க செய்ய வேண்டிய நன்றிக்கடன். கடமை.   ஐயாஅவங்க விதி முடிஞ்சு போச்சு. மேல போயிட்டாங்க. ... அதுக்கு அப்புறம்வீட்லே படம் மாட்டி மாலை மட்டும் மாட்டிட்டா போதாது ..! அவங்க ஆத்மா சாந்தி அடைய வைக்கணும். அவங்கபூரிச்சுப்போய் உங்களை ஆசீர்வாதம் பண்ணனும். இதுவும் உங்க கடன் தான். எப்படின்னு கேட்குறீங்களாபத்து மாசம் அம்மா வயித்துலேஇருந்தது ஒரு கடன்.  உங்க மூன்று தலைமுறையோட ஜீன்ஸ் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்க வழிவகுத்த உங்கள் தந்தை தாத்தா ,கொள்ளுத் தாத்தா - இப்படி உங்க முன்னோர்களுக்கும்நீங்க பெரிய கடன் பட்டு இருக்கிறீங்க .  இதை எப்படி தீர்க்கப்போறீங்கநீங்க பண்ற கர்மத்துலே தான்இந்த கடன் அடையும்.

நீங்க கடனாளியா இருந்தா - உங்களுக்கு எப்படி மனசுலே நிம்மதி கிடைக்கும்?  சரிகடன் கொடுத்தவன் - நீங்க திருப்பி கொடுக்கிறவரைக்கும் உங்களை படுத்தி எடுத்திட மாட்டாங்கநீங்க கொடுக்கலைனாஉங்க குழந்தைகளை தானே கேட்பாங்க !  இந்த மாதிரி தான் சார்பித்ரு கடனும்.  நம் உடம்பே பஞ்ச பூதங்களின் கலவை தான். நாம இயற்கையில் இருந்து எடுத்துக்கிடுறோம். என்ன ஆட்டம் போட்டாலும்ஒருநாள் இயற்கையிலேயே அடங்கி விடுகிறோம். மேல போனஆத்மா - நீங்க  கொடுக்கிற எள்ளுப் பிண்டத்துக்கு - ஆலாப் பறக்குமாம். நீங்க பிண்டத்தை ,  பஞ்ச பூதமாகிய நீரில் கரைக்கிறது அவங்களுக்கு - சரியாக மேலுலகம் சென்று அடைகிறது. நீங்க பிண்டம் கொடுக்கும்போதே அவங்க ஆத்மா நீங்க உலகத்திலே எந்த மூலைல இருந்தாலும்உங்க கிட்டக்கவே நிற்குமாம்.

இது உண்மைபொய்னு எல்லாம் மடத்தனமா ஆர்க்யூ பண்ணாம ,ஆத்ம பூர்வமா - தர்ப்பணம் பண்ணுங்க. உயிரோட இருக்கும்போது உங்க பிள்ளைகளோ இல்லை உங்க அம்மாவோ எதோ கோபத்திலேசாப்பிடாம படுத்திட்டா  , எப்படி மனசு கஷ்டப்படுறீங்களோ  , அதே அளவுஅக்கறையோட - இந்த காரியத்தையும் செய்து வாருங்கள்.  இந்த பிண்டம் - அந்த ஆத்மாக்களுக்கு சாந்தி தரும். அவங்களுக்கு வலு கொடுக்கிற மிக முக்கிய சக்தி இந்த எள் கலந்த மாவு உருண்டை. கருட புராணம் சொல்லும் தகவல்கள் கடோபநிஷத் சொல்லும் உயிரின் பயணம் குறித்த நிலையை படித்த எந்த ஒரு மனிதனும் பிற உயிர்களை வெறுக்க மாட்டான். பித்ரு தர்ப்பணம் செய்ய தவற மாட்டான்.
இன்றைக்கும் பிராமண சமூகத்தில் - பெற்றோரை இழந்தவர்கள் ,அமாவாசை தர்ப்பணம் செய்ய தவறுவதே இல்லை. நம்மில் குறைந்த பட்சம் - இறந்தவர்களின் திதி வரும் அன்னைக்கு பிண்டம் கொடுத்து வரும் பழக்கம் இருக்கிறது. இவர்கள் அனைவரும்வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உங்கள் முன்னோர்களின் ஆசி உங்களுக்கு முழுவதும் கிடைக்க ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருந்து ,மனமுருகி உங்கள் முன்னோர்களின் ஆசியை வேண்டுங்கள். அவர்களை விடஉங்களுக்கு வரும் இன்னல்களை தடுக்க கூடிய சக்தி வேறு இல்லை. நீங்கள் உயிருள்ள வரைஉங்கள் தாய்தந்தையரின் இறந்த திதி வரும் நாளில் மறக்காமல் ஈம சடங்குகளை குறைவற செய்யுங்கள். இதைவிட உங்களுக்கு பெரிய காரியம்முக்கியமான காரியம் எதுவும் இல்லை. 
வாய்ப்பு இருக்கும் அன்பர்கள்நீங்களும் ஒவ்வொரு அமாவாசைக்கும் -தர்ப்பணம் கொடுக்க ஆரம்பிக்கலாம். காலையில் தினமும் நீங்கள் உணவு உட்கொள்ளும்முன் காகத்திற்கு உணவிடலாம். உங்கள் கடன் தீர்ந்தால்தான்உங்கள் பலம் பெருகும். உங்கள் சந்ததியை நீங்கள் காக்க முடியும்.  உங்கள் உணவை காகம் சாப்பிடும்போதுஉங்கள் கர்ம வினைகள் கரைய ஆரம்பிக்கும்.உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் அத்தனை விஷயங்களும் தன்னைப்போல விலகும். உங்கள் பின்னால்உங்கள் மேல் உயிருக்குயிராக பாசம் வைத்து இருக்கும் ஒரு படையே உருவாகும். நீங்கள் வெகு விரைவில் நிம்மதியும்புகழின் உச்சியிலும் நிற்பீர்கள்.
திடீர்னு இந்த விஷயத்தை இன்னைக்கு ஏன் திரும்ப எடுக்கிறேன்னா.. நாளைக்கு ஆடி அமாவாசை. சூரிய சஞ்சாரத்தில் உத்தராயணம் ,தட்சிணாயனம் என்று இரு பிரிவுகள் இருக்கிறது. இவை ஆரம்பிக்கும் மாதங்களில் விண்ணில் இருந்து அபரிமிதமான சக்தி வெளிப்படுகிறது . அந்த வகையில் - ஆடி மாதத்திற்கும்தை மாதத்திற்கும் - வரும் அமாவாசையில் - நீங்கள் உங்கள் முன்னோர்களை நினைத்து எந்த பூஜைதர்ப்பணம் செய்தாலும்அவர்களை உடனே சென்றடையும்.இறந்தவர்களின் திதி தெளிவாக தெரியாதவர்கள் - இந்த ஆடி அமாவசை யன்றோ அல்லது தை அமாவாசை யன்றோ - பித்ரு பூஜை செய்து ,பிண்டங்கள் கொடுக்கலாம்.  
உங்களின் முன்னோர்களின் ஆசி முதலில்அதன்பின் உங்கள் குலதெய்வம் அதற்குப் பிறகு தான் மற்ற தெய்வங்கள் எல்லாம்..! உங்களுக்கு ஒரு கஷ்டம் நா உடனே ஓடி வர்றது உங்க அப்பா ,அம்மா தாத்தா பாட்டி தான். இவங்களுக்கு பலம் கொடுக்கிறது உங்கள் பித்ரு பூஜையும் தர்ப்பணமும் தான். நாளை - அமாவாசை . அதிலும் ஆடி அமாவாசை. சனிக்கிழமை வருகிறது. அதிலும் சனியின் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில் . கர்ம காரகனான சனிஉங்கள்கர்மங்களை முற்றிலும் அழிக்க ,  நாளை விரதம் இருந்து உங்கள்முன்னோர்களின் ஆசி முழுவதும் கிடைக்க வேண்டுங்கள். இறை நாமம் ஜெபிக்கலாம். பல கோடி மடங்கு பலன்கள் கிடைக்கும். இறையருள் உங்களுக்கு என்றும் துணை நிற்கட்டும். நாளை நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு மேல் - நிறை அமாவாசை. சதுரகிரியில் அதே நேரத்தில் ,சிறப்பு பூஜைகள் நடைபெறும். லட்சக் கணக்கில்  - பக்தர்கள் . நாளை நள்ளிரவு சதுரகிரியில் தங்கி அந்த பாக்கியம் அடைவர். 

உங்கள் அருகில் இருக்கும் ஆலயம் சென்று நீங்களும் நாளைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன் !

Download As PDF

No comments:

Post a Comment