Thursday, September 01, 2011

ஒரே நேரத்தில் மூன்று உலவிகளில் உலாவ


ஒரே நேரத்தில் மூன்று உலவிகளில் உலாவ:

இணையதளங்களை வலம்வருவதற்கு அனைவராலும் பயன்படுத்தப் படுவது உலவிகள் மட்டுமே ஆகும். இதற்கு மாற்றாக எதுவும் இல்லை. எனினும் இணைய பயன்பாட்டு அப்ளிகேஷன்கள் ஒரு சில உண்டு. இவையும் உலவிகளில் வடிவிலேயேதான் இருக்கும். இவை இரண்டுக்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் பெரிதாக இல்லாவிட்டாலும், ஒருசில வசதிகள் இதுபோன்ற அப்ளிகேஷன்களில் உண்டு.

அந்த வகையில் Multibrowser என்னும் மென்பொருள் வாயிலாக, ஒரே நேரத்தில் மூன்று உலவிகளில் பணியாற்ற முடியும். அவை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0, 8.0, 9.0, நெருப்புநரி உலவி மற்றும் கூகுள் குரோம் உலவி போன்றவை ஆகும். மென்பொருளை தரவிறக்க சுட்டி

http://multi-browser.com/en


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் இருக்கும் அட்ரஸ்பாரில் இணையதள முகவரியினை உள்ளிடவும். பின் என்டர் கீயினை அழுத்தவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட வலைத்தளத்தினை காணமுடியும். பின் நீங்கள் உலவிகளை தேர்வு செய்து அதற்கிடையேயுள்ள மாற்றத்தினை காண முடியும். மேலும் மூன்று உலவிகளிலும் நீங்கள் குறிப்பிட்ட வலைப்பக்கத்தினை ஒரேஇடத்தில் காண முடியும்.
Download As PDF

No comments:

Post a Comment