Wednesday, September 07, 2011

தக்காளி சூப்


தக்காளி சூப்

தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த தக்காளி - 5
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 6 பல்
சோள மாவு - 1 மேஜைக் கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை

1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

3. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.

4. தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும்.

5. சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.

6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.

7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
Download As PDF

No comments:

Post a Comment