Wednesday, January 18, 2012

மிளகு குழம்பு


மிளகு குழம்பு

தேவையான பொருட்கள்.....
 
மிளகு - 4 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மல்லி(தனியா) - 2 ஸ்பூன்
பூண்டு - 15 பல்
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
புளி - எலுமிச்சையளவு
 
செய்முறை.......
 
• சின்னவெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் உரித்து முழுதாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
•  மிளகு, சீரகம், மல்லி(தனியா) வேண்டியவற்றை தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்து அரைத்து கொள்ள வேண்டும்.
 
• தேங்காய் வறுக்க மட்டும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டுக் கொள்ள வேண்டும். 
 
•  வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும் பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
 
• வதங்கியபின் புளிக்கரைசல், உப்பு போட்டு அரைத்தவற்றையும் போட்டு கலக்க வேண்டும். 
 
• 1 கப்  தண்ணிர் சேர்த்து மூடி சிம்மில் வைக்க வேண்டும். கால் மணி நேரம் கழித்து ஓரத்தில் எண்ணெய் விட்டவுடன் இறக்க வேண்டும். வத்த குழம்பு  பதத்தில் இறக்கிகொள்ள வேண்டும்.
Download As PDF

மிளகு மோர் சாம்பார்


மிளகு மோர் குழம்பு

தேவையான பொருட்கள்...
மிளகு - 25 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
பொட்டுக் கடலை மாவு - 50 கிராம்
கெட்டியான மோர் - 3 கப்
காய்ந்த மிளகாய் - 6
தனியா - 50 கிராம்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1 கப்
நெய் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு (தேவைக்கேற்ப)
கருவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை....
• முதலில் துவரம் பருப்பை குழைய வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
• பிறகு அகலமான ஒரு பாத்திரத்தில் மோரை ஊற்றி அதில் பொட்டுக்கடலை மாவு, குழைய வைத்த துவரம் பருப்பு, உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்து, மோர்க் கலவையில் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க  வைக்க வேண்டும்.
• கொதித்தபின் அதில் தேங்காய் பாலையும் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வைத்து இறக்க வேண்டும்.
• அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலையை தாளித்து குழம்பில் ஊற்ற வேண்டும்.
• கமகமக்கும் இந்த மிளகு மோர் சாம்பார், வயிற்று வலி, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.
Download As PDF

காலி பிளவர் மிளகு ரோஸ்ட்


காலி பிளவர் மிளகு ரோஸ்ட்

தேவையானவை....
 
காலிபிளவர் பெரியது - 1
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 6 பல்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
 
செய்முறை...
 
* வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக அறிந்து கொள்ளவும்.
 
* காலி பிளவரை பெரிய பூக்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 
* வாணலியில் நெய்விட்டு கடுகு, சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு இரண்டையும் வதக்கவும்.
 
* அத்துடன் காலிபிளவரைச் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மிதமாக சூட்டில் வேக விடவும்.
 
* மிளகு, சீரகம், வரமிளகாய் இவற்றுடன் சிறிது வெங்காயம், சிறிது வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து, நெய்விட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
 
* காலிபிளவர் வெந்ததும், வதக்கிய மிளகு மசாலாவைச் சேர்த்து மிதமான சூட்டில் சிறிது நெய்விட்டு முறுகவிட்டு எடுத்து வைக்கவும்.
Download As PDF

பாகற்காய் ஜுஸ்


பாகற்காய் ஜுஸ்

தேவையான பொருட்கள்....
 
பாகற்காய் – 1 கப்
எலுமிச்சம் சாறு - 2  ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சீரகப்பொடி – 1/4 டீஸ்பூன்
மிளகுப்பொடி – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை  – சிறிதளவு 
 
செய்முறை;
 
* பாகற்காயை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.  
 
• அதனுடன் எலுமிச்சம் சாறு, உப்பு, சீரகப்பொடி, மிளகுப்பொடி சேர்த்து நன்கு கலக்கி கொத்தமல்லி தூவி பருகவும்.  
 
• பாகற்காய் ஜுஸ் தினசரி குடிப்பதால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு படிப்படியாக குறையும். நாட்பட்ட தோல் நோய்கள் குணமாகின்றன.
Download As PDF

எள் சப்பாத்தி


எள் சப்பாத்தி

தேவையானவை:
 
வெள்ளை எள் -  கால் கப் 
கோதுமை மாவு – ஒரு கப்
தனியா – 2 டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்  
நெய் –  2 டீஸ்பூன்
எண்ணெய் - 5 டீஸ்பூன்  
உப்பு – தேவையான அளவு.
 
செய்முறை:
 
* முதலில் எள்ளை வெறும் கடாயில் வறுக்கவும்.
 
• பின்னர் தனியா, மிளகு, சீரகம் மூன்றையும் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து, ஆற வைத்து இதனுடன் வறுத்த எள்ளை சேர்த்துப் பொடிக்கவும்.
 
• கோதுமை மாவுடன் வறுத்து பொடித்த பொடி, உப்பு, நெய் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும்.
 
• இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
 
• இந்த சப்பாத்தி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.  
Download As PDF

கத்திரிக்காய் சட்னி


கத்திரிக்காய் சட்னி

தேவையானப்பொருட்கள்:
 
கத்திரிக்காய் - 4 
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
புளி - நெல்லிக்காயளவு
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்றவாறு
 
செய்முறை:
 
* வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
* கத்திரிக்காயைக் கழுவி துடைத்து, அதன் மேல் சிறிது எண்ணெய்த் தடவி, இடுக்கியால் பிடித்துக் கொண்டு அடுப்பு தீயின் மேல் காட்டி சுட்டெடுக்கவும்.
 
* வெந்த கத்திரிக்காயின் தோலை நீக்கி விட்டு நன்றாக மசித்து விடவும். அல்லது மிக்ஸியில் தேங்காயுடன் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
 
* புளியை தண்ணீரில் ஊறவைத்து, 1 டீஸ்பூன் திக்கான புளிச்சாறு எடுக்கவும். .
 
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும்.
 
* பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள கத்திரிக்காய் விழுது, தேங்காய், புளி ஆகியவற்றுடன் மஞ்சள் தூள், உப்பு இரண்டையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். தேவையான தண்ணீரைச் சேர்த்து தளர விடவும்.
 
* மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
 
* இட்லி, தோசையுடன் தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும்.
Download As PDF

தொப்பை குறைய உடற்பயிற்சி


தொப்பை குறைய உடற்பயிற்சி

 
பாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை  உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும்.  உங்கள்  கால்களை மெதுவாக தரையில் இருந்து  மேலே உயர்த்தவும். உங்கள் கால்கள் 45 டிகிரி கோணத்தில் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும்.
 
கால்களை மட்டும் உயர்த்த வேண்டும். இந்த கோணத்தில் சில நிமிடங்கள் இருந்து பின் பழைய நிலைக்கு வரவும்.  இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும்.
Download As PDF