Sunday, July 24, 2011

பெண்மை


ஒவ்வொரு மனித உயிரும் இந்த மண்ணை தொடும்போது ஒரு பெண் முழுமை அடைகிறாள்,ஆனுக்கு உழைப்பை மட்டும் கொடுத்த கடவுள்  பாசத்தை கூட கடமையை ஆக்கிவிட்டான் ,பெண்களுக்கு மட்டும் பாசத்தையும் ,நேசத்தையும் கொடுத்து உலகத்தையே பெண்மையில் ஆழ்த்திவிட்டான்.இதனால் தான் என்னவோ ஆண்களின் கற்பை விட பெண்களின் கற்பு புனிதமாக இந்த உலகமே கொண்டாடுது .ஒருவரை அன்பால் வீழ்த்த பெண்கள் அன்றி வேறு எவரும் இல்லை .இந்த உலக கதைகளும் கட்டுரைகளும் பெண்கள் சார்ந்தே  அமைய்கின்றன அதற்கு அவளவு பலம்  என்றும் தோற்றது இல்லை . ஒருவன் என்ன தான் தவறு செய்தாலும் இந்த உலகம் மன்னிக்கும் ஆனால் பெண்மைக்கு தீங்கு நினைத்தாள் ,அடுத்த ஜென்மம் இல்லை இந்த ஜென்மமே தண்டனை கிடைக்கும் தன்னை அறியாமலே தண்டனை பெறுவான்  . பெண்மையை பெண்களே போற்றும் அளவுக்கு புனிதம் குறையா வண்ணம் காத்திடுவோம் இந்த உலகம் அழியும் வரை ......என்றும் பெண்மையை போற்றிடுவோம்  .
 இவன்
எனது மின்னங்க்ச்சலில் வந்தவை 
Download As PDF

மனைவி


காலையில் விடிந்ததும்
என் விழி திறக்கக் காத்திருக்கும் உன் முகம்...
என் தலையை கோதிக்கொண்டே
நீ கொடுக்கும் அந்த முத்தம்...
நீ ஆடை மாற்றுகையில் உதவிக்கரம்
என்ற பெயரில் நான் செய்யும் சிலுமிஷங்கள்...

நான் குளிக்கையில் என் கைக்கெட்டும் தூரத்தில் ஆடை இருந்தும்
உன்னை எடுத்துத் தரச்சொல்லும் கள்ளத்தனம்...

நீ எனக்கு உணவூட்டுகையில் சுவைக்கும்
உன் விரல்கள்...

எனக்கு சட்டை அணிவிக்கையில் உன் கன்னம் வருடும்
என் விரல்கள்
நான் பிரிகையில் ஒரு கனம் சேரும்
நம் இதழ்கள்...

அலுவலக பணிகளுக்கிடையே அடிக்கடி சிணுங்கும்
உன் தொலைப்பேசி அழைப்புகள்...
மதிய உணவின் போது உன் பரிவை நினைவுகூறும்
உன் கை மனம்...
உன்னை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில் பணியைம் முடிக்கும்
அந்த கடைசி நிமிடம்...
வீட்டிற்க்குள் நுழையும்போது என்னை ஆவலாய் எதிர்நோக்கும்
உன் விழிகள்...
என் கலைப்பை போக்க நீ கொடுக்கும்
உன் இதழ் பட்ட தேனீர்...

சமையலரை ஒத்தாசை என்று சொல்லிவிட்டு உன் இடையை மட்டும் சுற்றிக்கொள்ளும்
என் கைகள்...
என் மடியில் அமர்ந்தபடி என் தலைதட்டி நீ கொடுக்கும்
இரவு உணவு...
நாம் உறங்குவதர்க்காய் நீ விரித்துவைத்திருக்கும் நெடுநாள் தோழியான
உன் போர்வை...
இடம் நிறைய இருந்தும் சங்கினுள் நுழைந்த நத்தை போல்
என் கழுத்தில் புதையும் உன் முகம்...

என்னை உறங்க வைப்பதாய் எண்ணி நீ சொல்லிக்கொண்டே உறங்கும்
நம் நினைவுகள்...
மணவறையில் நாம் விரல் பிடித்து நடந்ததை மறக்காத
உன் ஆழ் தூக்க விரல் பினைப்பு...

என் நெஞ்சை வருடும் உன் மூச்சுக்காற்றை ரசித்துக்கொண்டே இழுக்கும்
அந்த தூக்கம்...
நம்மைக் கண்டு பொறாமையில் விரைவாய்
விடியும் காலை...
இவைதான் என் ஆசையின் கோர்வைகள்...
இவன்
முகம் தெரியாத நண்பர்    




Download As PDF

என் அம்மா


மழையில் நனைந்து கொண்டே
வீட்டுக்கு வந்தேன்
"
குடை எடுத்துட்டுப்
போக வேண்டியது தானே'
என்றான் அண்ணன்

"
எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே'
என்றாள் அக்கா
"
சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா

தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல ;
மழையை !''
Download As PDF

நம் நாடு


கல்வி முடித்து விட்டு  ,வேலை தேடி தேடி அலைந்தேன்...
நான் திறந்த கதவு எல்லாம் ,வேலை வேண்டும் என்றவுடன்?
கதவுகள் தானாக மூட பட்டன . . . மூடியது ஒரு இளைஞனின்  வாழ்க்கையை மட்டும் அல்ல 
அவனின் கனவு இலட்சியம் , உழைப்பு ,எதிர்காலம் குடும்பங்களின் ஏழ்மை.
ஒவொரு   மனிதனையும் சுழற்றி அடிக்கும் ஒரு களம் இந்த வேலை இன்மை .
போராடி போராடி கீழே விழ! மனதிலும் ,உடலிலும் காயங்கள் தான் மிஞ்சியது .
நண்பர்களின்  ஊக்கமும் ,உற்சாகமும் கீழே விழும்போது மருந்தாய் மாறியது .
வேலை தேடி அலையும்  போது பசி கூட நம்மை சீண்டி பாக்கும்.
குடிக்க தண்ணீர் தேடி அலையும்  அவலம்,வேலை கொடுக்க மனம் இருந்தும் 
சம்பளம் கொடுக்க மனம் இல்லை (முதலாளிகளுக்கே உள்ள நல்ல குணம்) . 
கிடைத்த வேலையே காப்பாற்றி கொள்ளவே காலம் ஓடி போச்சு.
சாதிக்க உடலும் மனமும் இருந்தும் ,நம்மை ஒரு கைதி போல் ஆக்கி விடுகின்றன.
முதலாளி சொல்வதை தவிர வேறு செய்ய இயலாது ,முதலாளிகள்  ஆட்டி வைக்கும்  
விளையாட்டு பொம்மைகள் நாம், கீழே விழுந்தாலும் முதலாளிக்கு எந்த பாதிப்பும் இருக்காது .
இந்த ஏற்ற தாழ்வு நம் நாட்டில்  மட்டும் இல்லை இந்த உலக வரைபடத்தின் 
எந்த மூலையிலும் உண்டு .ஒவொரு இளைஞனும் ஒரு காலத்தில் முதலாளிகளே!
நாம் அனுபவித்த கொடுமைகள் நம் சந்ததிகள் அனுபவிக்க வேண்டாம் . . . 
புதிய இளைய சமுதாயத்திற்கு வழி காட்டுவோம் . முதலாளித்துவ  ஆதிக்கத்தை ஒழிப்போம்.
நம் நாட்டை உலக அரங்கில் முன்னிருதுவோம். . .
வாழ்க இந்தியா. . .
Download As PDF

ஆன்மிகம் சோறு போன்றது


* மிருக இயல்பு, மனித இயல்பு, தெய்வீக இயல்பு என்ற மூன்றுவிதமான இயல்புகளால் மனிதன் உருவாக்கப்பட்டிருக்கிறான். இதில் தெய்வீக இயல்பை வளர்ப்பது ஒழுக்கமாகும். * மரணம் என்பது மிக உறுதியாக இருக்கும்போது, நல்ல ஒரு செயலுக்காக நம் உயிரைத் தியாகம் செய்வது மேலானது.
*
நமக்கு கிடைப்பது வெற்றியோ தோல்வியோ அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். தன்னலம் கருதாமல் சேவையில் ஈடுபடுங்கள். 
*
பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனை தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மிகப்பணியாகும். 
*
ஒரு லட்சியத்தைத் தேர்ந்தெடுங்கள். அதன் வழியே மனதைச் செலுத்தி உங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்துங்கள். உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த கருத்து நிறைந்திருக்கட்டும்.

*
ஆன்மிகம் நமக்கு சோறு போன்றது. மற்றவை எல்லாம் கறி, கூட்டுப் போலத்தான். 
*
நன்மை செய்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டால் மரணமடைந்து விடலாம்.

* உங்களிடம் நேர்மை இருக்கிறதா? பொதுநலத்துடன் சேவை செய்கிறீர்களா? அன்பு இருக்கிறதா? இம்மூன்றும் இருந்தால் பயமே வாழ்வில் தேவையில்லை. மரணம் கூட உங்களை நெருங்க முடியாது.

Download As PDF

Saturday, July 23, 2011

முடியாது என்று சொல்லாதே, * பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல. மாறாக வலிமையை குறித்துச் சிந்திப்பது தான்.


முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை.
பாவம் என்ற ஒன்று உண்டென்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.
சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்ததையும் அப்படி எதுவும் வராமற் போனதையும் தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்தவையாகத்தான் இருக்கும்.

நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! கடவுளிடத்தில் நம்பிக்கை! இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்.

 அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். சரியான வழியில் செல்கின்ற மனம் என்றென்றைக்கும் காத்து ரட்சிக்கும்.

மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளை கடந்தாக வேண்டும்.

* பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல. மாறாக வலிமையை குறித்துச் சிந்திப்பது தான்.

* இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். என்னால் முடியாது என்று சொல்லாதீர்கள். உண்மையில் நாம் வரம்பில்லா வலிமையும் ஆற்றலும் கொண்டவர்கள்
* சுயநலமற்ற தன்மையோடு பணிகளைச் செய்யுங்கள். எந்தஇடத்திலும் வெற்றியை நிர்ணயிப்பது சுயநலமின்மையே. 
*
சுயநலம், சுயநலமின்மை இரண்டுக்கும் உள்ள வேறுபாடு கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் போன்றது.




Download As PDF

சிவ சுகுமாறன்


வீழ்வது நாமாக இருப்பினும் !!! வாழ்வது தமிழாக இருக்கட்டும்!!!

எழுந்திருங்கள். விழித்திருங்கள். நீங்களும் விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள்.
Download As PDF