Sunday, September 09, 2012

ஹைக்கூ கவிதை


மன்னிப்பு

எல்லா குற்றங்களையும்
மன்னிக்கும் ஒரே நீதிமன்றம்
அம்மாவின் இதயம்..

பிரிவு

உடல்களுக்கிடையே தொலைவை
அதிகரித்து
மனங்களை நெருக்கமாக்கும்
ஒரு பாலம்

வாழ்க்கை

தாய்க்குப்பின்...
தாரம்!
தாரத்துக்குப் பின்...
ஓரம்!

டாஸ்மார்க்

மது
நாட்டுக்கு வருவாய்,
வீட்டுக்கு செலவாய்,
டாஸ்மார்க்

விழிநீர் சேகரிப்புத் திட்டம்!

கவித்துவா (எ) பிரகல்யா
சோகங்கள் தரும் அழுகைத் துளிகளை சேமித்து வை.....
சந்தோசம் தரப் போகும் "ஆனந்த கண்­ணீருக்காக"!!

இறப்பு

வித்தகன்
இயந்திர உலகில்
நிரந்தர தூக்கம்!

சொந்த பந்தம்

ரகுமா ரிப்னஸ்
உன் பாக்கெட்டில் காசு இருக்கும் வரை
கூடவே இருக்கும் ஊழல்கள்....

சிரிப்பு

ஆர்.ஈஸ்வரன், வெள்ளகோவில்
மருத்துவம் இல்லை
வலி தீர்ந்தது
மழலையின் சிரிப்பு

சுத்தம்

ஆ.முத்துவேல்
சுனாமியே வா,
என்னை சுத்தப்படுத்து,
கூவம் ஆறு...

முதியோர் இல்லம்!

கவித்துவா (எ) பிரகல்யா
விழுதுகள் விரட்டி அடித்ததால் ...
ஆல மரங்கள் அடைக்கலம் புகுந்தன!!

வியர்வை

கூடல்
உள்ளேயே இருந்தால் சோம்பல்,
வெளியேறினால் உழைப்பு,
தொழிலாளியின் வியர்வை........

நம்பிக்கை உள்ளவரை!

கே.கே
கடவுளும், காதலும் - உண்மை
அதன்மேல் நம்பிக்கை உள்ளவரை!

வெங்காயம்

ஓ.எஸ்.பாலாஜி
அழ வைப்பதில் என்னை மிஞ்சிவிட்டனரே!
மெகாசீரியல்களை எண்ணி கண்ணீர் வடித்தது
வெங்காயம்...

ஆண்டவன்

மாயாண்டி சந்திரசேகரன்
அன்று
நின்று கொன்றவன்
இன்று செய்வதறியாது
நின்று கொண்டான்
Download As PDF

No comments:

Post a Comment