இது ஒரு மீட்டர் உயரம் வரை வளரும், தண்டு மற்றும் இலைக்காம்புகள் முட்களால் மூடி காணப்படும். இலைகள் இறகு வடிவ கூட்டிலையைச் சேர்ந்தது. இதன் சிற்றிலைகளுக்கு உணர்வு அதிகம். இதைத் தொட்டால் அவை மூடிக் கொள்ளும். அதனால் தான் இதுக்கு தொட்டாற்சிணுங்கின்னு பெயர் வந்தது. இதன் மலர்கள் பஞ்சு போன்று இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். கனிகள் தட்டையாக இருக்கும். இதன் இலைகள் மற்றும் வேர் மருந்தாகப் பயன்படுகிறது. இலைகளின் சாறு சைனஸ், மூல நோய், காயங்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதன் வேர் சிறுநீரக கோளாறுகளைப் போக்கும் மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது. இதில் இருந்து நார்எபிநெப்ரைன், மிமோலைன், டேனின் போன்ற வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. |
மஷ்ரூம் க்ரேவி
2 days ago


No comments:
Post a Comment