Tuesday, February 14, 2012

‘என் ’னில் இல்லாத நான்

நான் இல்லை எனக்குள்.
நெடுங்கால வாழ்வினூடே...
துல்லியம் ஏதும் அறிந்திருக்கவில்லை நான்.

உணர்வின் மேலீட்டோடான,
அறிவின் தேவை மட்டுமே...
அதற்கான இடையீடு எனக்கு!

இலக்கினூடான முடிபும் துணிவும்
செயலினூடான விரிவும் விரைவும்
காலத்தோடு கைப்பற்ற வேண்டி,
அத்தியாவிசயம், சுயத்தேவைகள் என;
செயலிழந்து போக...
என் யதார்த்த இருப்பு அபத்தமாக...
நான் இல்லை எனக்குள்!

இன்னும் எனக்கான பிளவுகளை நிரப்ப,
எதார்த்த சிறகடிப்புகளென்று எதுவுமில்லை என்னில்!
பிம்பமென்று ஒன்றில்லை எனக்கு.
குறைந்த அளவிலான
மெல்லொலியும் கீரிச்சிடுதலும் கூட
என்னில் மையமிட்டு இன்னும் ஆயத்தப்படவில்லை.

எதார்த்தம் தொலைத்திட்ட,
திடமற்ற... தெளிவற்ற...
என்னை அறியப்படவில்லை
இன்னும்
எனக்குள் நான்!
Download As PDF

No comments:

Post a Comment