Friday, December 27, 2013

சில தமிழ் ஜோக்ஸ்


கண்ணா நீ கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன் ,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன் ,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன் ,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன் …
 

ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா



அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது

உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே !
வருத்த படாதே !
ஃபீல் பண்ணாதே !
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள் !
 

காதல் ஒரு மழை மாதிரி ,
நனையும் போது சந்தோஷம் .
நனைந்த பின்பு ஜலதோஷம் .
 

மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?
 ஐந்து கேள்விப்பா நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ? முதல் மூணும் கடைசி இரண்டும்வெரிகுட் கீபிடப் 

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம் .
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு ???????
 

என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க ?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான் .
 

நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் .
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் .
 

டாக்டர் என் மனைவி ஓவரா டி . வி . பாக்குறா ” எந்த அளவுக்கு பாக்குறாங்க ?” கரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு !!!
 

வக்கீல் : உனக்கு திருமணமாகிவிட்டதா ?
சர்தார் : ஆகிவிட்டது .
வக்கீல் : யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய் ?
சர்தார் : ஒர் பெண்ணை .
வக்கீல் : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள் ?
சர்தார் : ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே !!!..
 

சார் ,
டீ மாஸ்டர்டீ போடறாரு ,
பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு ,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு ,
நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க ?..
 

” நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க ”
” அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை …. பத்திரமா இருக்கும்

 ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய் .
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய் . சாவுகிராக்கி அது XEROX காப்பிடா !
 

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு .
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும் .
 


இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி . வி யில சொன்னாங்க . நீங்க கேட்டீங்களா ? இல்லை அவங்களே சொன்னங்க

நன்றி தமிழ் rokkers இணையம் 
Download As PDF

சிறந்த பொய்


ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.
நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.

அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று கத்தினான்.

உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.

உடனே சொன்னான்,''இல்லை,இல்லை,நீ பொய் சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.ஏழை சொன்னான்,''நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.
 


நன்றி தமிழ் rokkers இணையம் 
Download As PDF

சமையலில் செய்யக்கூடாதவை... ....செய்ய வேண்டியவை....


சமையலில் செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

....செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்
நன்றி தமிழ் rokkers இணையம் 

Download As PDF

புது வருடத்தை புன்னகையுடனும்! புது கவிதையுடனும்! வரவேற்போம்!!!

நமக்கு புதிய அனுபவங்களை கற்றுத்தந்து விடை பிரியாமல் போன புதிய வருடத்தையும்! 
இனி வர இருக்கின்ற புதிய வருடத்தில் 
புதியனவற்றையும், புது  புது அனுபவங்களையும் 
புதிய முகத்தினறோடு புன்னகைத்து வரவேற்ப்போம்!! 
ஆயத்தமாவோம்!!!


(எனது பார்வையில்) 
           சிவசுகு
          
Download As PDF

Tuesday, December 24, 2013

தமிழ் வருடங்கள் மொத்தம் 60. அவை யாவன என்பது பின் வருமாறு :




1 பிரபவ**********1987 - 1988
2 விபவ***********1988 - 1989
3 சுக்ல************1989 - 1990
4 பிரமோதூத******1990 - 1991
5 பிரசோற்பத்தி****1991 - 1992
6 ஆங்கீரச*********1992 - 1993
7 ஸ்ரீமுக***********1993 - 1994
8 பவ*************1994 - 1995
9 யுவ ************1995 - 1996
10 தாது************1996 - 1997
11 ஈஸ்வர*********1997 - 1998
12 வெகுதானிய****1998 - 1999
13 பிரமாதி********1999 - 2000
14 விக்கிரம*******2000 - 2001
15 விஷு*********2001 - 2002
16 சித்திரபானு****2002 - 2003
17 சுபானு********2003 - 2004
18 தாரண*********2004 - 2005
19 பார்த்திப*******2005 - 2006
20 விய**********2006 - 2007
21 சர்வசித்து*****2007 - 2008
22 சர்வதாரி ******2008 - 2009
23 விரோதி*******2009 - 2010
24 விக்ருதி*******2010 - 2011
25 கர************2011 - 2012
26 நந்தன********2012 - 2013
27 விஜய********2013 - 2014
28 ஜய**********2014 - 2015
29 மன்மத*******2015 - 2016
30 துன்முகி******2016 - 2017
31 ஹேவிளம்பி***2017 - 2018
32 விளம்பி*******2018 - 2019
33 விகாரி********2019 - 2020
34 சார்வரி*******2020 - 2021
35 பிலவ********2021 - 2022
36 சுபகிருது******2022 - 2023
37 சோபகிருது*****2023 - 2024
38 குரோதி********2024 - 2025
39 விசுவாசுவ*****2025 - 2026
40 பரபாவ********2026 - 2027
41 பிலவங்க******2027 - 2028
42 கீலக*********2028 - 2029
43 சௌமிய *****2029 - 2030
44 சாதாரண******2030 - 2031
45 விரோதகிருது**2031 - 2032
46 பரிதாபி*******2032 - 2033
47 பிரமாதீச******2033 - 2034
48 ஆனந்த******2034 - 2035
49 ராட்சச******2035 - 2036
50 நள*********2036 - 2037
51 பிங்கள******2037 - 2038
52 காளயுக்தி****2038 - 2039
53 சித்தார்த்தி****2039 - 2040
54 ரௌத்திரி****2040 - 2041
55 துன்மதி******2041 - 2042
56 துந்துபி*****2042 - 2043
57 ருத்ரோத்காரி**2043 - 2044
58 ரக்தாட்சி *****2044 - 2045
59 குரோதன******2045 - 2046
60 அட்சய******2046 - 2047


இந்த சுழல் முறையில் மீண்டும் தொடரும் 
Download As PDF

தெரிந்து கொள்ளலாமே (இறந்தவர் வீட்டிற்கு சென்று வந்ததும் குளிக்க வேண்டும் என்று சொல்ல காரணம் )???




ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.

சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.


இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.

இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.
 

நன்றி தமிழ் raakkersஇணையம் 
Download As PDF

உங்கள் விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணாமல் போய்விட்டதா?

Posted Image


உங்கள் விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணாமல் போய்விட்டதா? கவலையை விடுங்கள். இலகுவாக கண்டுபிடித்து விடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மொபைலில் ஜிமெயில் லாகின் செய்து இருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் ஈசியாக எடுத்து விடலாம்.

குறிப்பு :உங்க மொபைலை யாரும் திருடி இருந்தால் அதை கண்டுபுடிக்க முடியாது ஏன் என்றால் உடனே வேற சிம் மாற்றி விடுவார்கள் (சிம் மட்டும் மாற்றினால் கூட நான் சொன்ன முறையில் கண்டு புடிக்கலாம்)

உதாரணமாக வீட்டில் வைத்த மொபைலை காணவில்லை என்று வைத்து கொள்ளுங்கள். அதுவும் silent mode.. சைலென்ட் வைக்காமல் இருந்திருந்தால் கூட ஈசியாக அந்த மொபைல்க்கு கால் செய்து எடுத்து விடலாம் ஆனால் சைலென்ட் வைத்து உள்ளோம் பிறகு என்ன?

வீடு முழுவதும் கஷ்டபட்டு தேடி நம்ம மொபைலை கண்டுபுடிப்போம் அல்லவா? நான் சொல்வதை முயற்சி செய்து பாருங்கள் சைலென்ட் silent வைத்து இருந்தாலும் ரிங் குடுக்க முடியும் உங்களுக்கு, இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

முதலில் கிழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும்

குறிப்பு :உங்கள் கணினி அல்லது நண்பர்கள் கணினி அல்லது மொபைலில் காணமல் போன ஆண்ட்ராய்ட்டு மொபைலில் ஜிமெயில் லாகின் செய்த அதே

ஜிமெயில் முகவரியை லாகின் செய்து விட்டு கிழே உள்ள தளத்திற்கு செல்லவும்


https://www.google.c...vicemanager?u=0 

உங்கள் மொபைல் மாடல் மற்றும் கடைசியாக எந்த இடத்தில் அந்த மொபைல் லாகின் செய்தது என்ற தகவல் இருக்கும் வலது பக்கத்தில் மேப் யிலும் வரைபடத்தில் அந்த இடத்தை பார்க்கலாம்.

அல்லது ரிங் என்பதை கிளிக் செய்து உங்கள் மொபைல்க்கு ரிங் குடுக்க முடியும்! 

நன்றி தமிழ் ராக்கெர்ச் இணையம் 
Download As PDF

Friday, November 29, 2013

மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகள்

மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும் படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
மதுவின் பொதுவான மூலக்கூறு எதில் ஆல்கஹால் பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு எதில் ஆல்கஹால் (Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.
1. ரம்.... 50-60%
2. விஸ்கி, பிராந்தி, ஜின்---40-45%
3. ஷெர்ரி, போர்ட்---20%
4. ஒயின்---10-15%
5. பீர்--4-8 % பொதுவாக...
6. சாராயம்--40-50%
மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது
கிளர்ச்சி நிலை (excitement:
முதலில் மது அருந்தியவுடன் ஏற்படுவது கிளர்ச்சி. தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும், சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும்.
ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்தத்தில் வெகுவிரைவில் கலக்கும். அதனால்தான் உடனடி போதை ஏற்படுகிறது.
மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில்தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும் பண்புகளும் மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா என்று கவனம் இருக்காது.
இரத்தத்தில் 20 மி.கி. ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.
இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும் போது
1. தசை கட்டுப்பாடு இழக்கும்.
2. தொடு உணர்வுகள் குறையும்.
3. சிந்தனை, புரிந்துணர்வு, மதிப்பிடும் தன்மை கியவை பாதிக் கப்படும்.
இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்
1. வாய் வார்த்தைகள் குளறுதல்,
2. நடையில் தள்ளாட்டம்,
3. அதிக மயக்கம்,
4. ஞாபக மறதி
5. அதிக குழப்பம்
ஆகியவை ஏற்படும்.
பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில்தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரி யாது.
கால நேர, தூர மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால்தான் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன. மது அருந்தி சாலையில் நடப் போருக்கும் வாகனங்கள் வரும் தூரம் வேகம் ஆகியவை தெரியாது.
Download As PDF

Sunday, November 24, 2013

முக்கியமான ஆவணங்கள் தொலைந்தால் ,...எப்படி திரும்ப பெறுவது ?

Posted Image



எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கேதெரிந்துகொள்ளலாம்.

இன்ஷூரன்ஸ் பாலிசி!

யாரை அணுகுவது..? பாலிசியை விநியோகம் செய்த கிளையைஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்? ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

மதிப்பெண் பட்டியல்!

யாரை அணுகுவது..? பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.
வ்வளவு கட்டணம்? உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.
கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள். நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

ரேஷன் கார்டு!

யாரை அணுகுவது..? கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை
எவ்வளவு கட்டணம்? புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும். கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும். நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
டிரைவிங் லைசென்ஸ்!
யாரை அணுகுவது? மாவட்டப் போக்குவரத்து அதிகாரி. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்? கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்). கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

பான் கார்டு!

யாரை அணுகுவது? பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.
எவ்வளவு கட்டணம்? அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய். கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள். நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
பங்குச் சந்தை ஆவணம்!

யாரை அணுகுவது? சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.
எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள். நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

கிரயப் பத்திரம்!
யாரை அணுகுவது..? பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய். கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

டெபிட் கார்டு!

யாரை அணுகுவது..? சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? கணக்குத் தொடர்பான விவரங்கள். எவ்வளவு கட்டணம்? ரூ.100.
கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.
நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

மனைப் பட்டா!

யாரை அணுகுவது..? வட்டாட்சியர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.? நகல் பட்டா கோரும் விண்ணப்பம். எவ்வளவு கட்டணம்? ரூ.20. கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

பாஸ்போர்ட்!
யாரை அணுகுவது..? மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்? ரூ.4,000. கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.
நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
கிரெடிட் கார்டு!

யாரை அணுகுவது? நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள். எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்)கால வரையறை: 15 வேலை நாட்கள். நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும். 
Download As PDF

இந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாதாம்



பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம்.ஆனால் சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.

அது போன்ற பொருட்களின் பட்டியலை பார்க்கலாம்.



வெங்காயம்


Posted Image


வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும், அப்போது தான் கெட்டுப் போகாமல் இருக்கும்.


பூண்டு


Posted Image


பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது கெட்டுப் போக ஆரம்பித்துவிடும்.
பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.



உருளைக்கிழங்கு

Posted Image


உருளைக்கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது.
உருளைக்கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.
காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும், பாலிதீன் பையில் வைக்கக் கூடாது.
இதே போன்று கருணைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கையும் பிரிட்ஜில் வைக்க கூடாது.


தேன்



Posted Image


உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான்.
ஆனால் தற்போது கடைகளில் வாங்கப்படும் தேனில் சுவை மற்றும் பலவற்றுக்காக பலவித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது.
எனினும் தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.


வாழைப்பழம்


Posted Image


வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும்.
இதேபோன்று பூசணிக்காய், பிரட், தக்காளி, அன்னாசி போன்றவற்றையும் பிரிட்ஜில் வைப்பதை தவிர்த்து விடுங்கள்.
Download As PDF

மன அழுத்தத்தை குறைக்கும் ஆரோக்கியமான உணவுகள்


ணவு என்பது உயிர் வாழ நமக்கான நாடி துடிப்பாக அமைகிறது. ஆனால் அதற்கு ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.உண்ணும் உணவே மருந்தாக அமையும் என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள் அல்லவா? ஆம், அது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
உணவை கொண்டே பல நோய்களை குணப்படுத்தலாம்.
சொக்லெட்
சொக்லெட்களுக்கான உங்கள் ஏக்கத்தை தீர்த்துக் கொள்ளுங்கள். அதில் உள்ள அனான்டமைன் மூளையில் உள்ள டோபமைன் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். அதனால் மனம் அமைதி பெற்று மன அழுத்தம் நீங்கும்.
நட்ஸ்
நட்ஸில் செலினியம் என்ற கனிமம் உள்ளது. இந்த கனிம குறைபாட்டினால், சோர்வு மற்றும் படபடப்பு ஏற்படும். அதனால் ஒரு கை நட்ஸ்களை உண்டால், மனம் அமைதியாக இருக்கும்.
கீரை வகைகள்
பாப்பாய் என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்திற்கு பிடித்த ஸ்பினாச் என்ற பசலைக் கீரையில் மக்னீசியம் வளமையாக உள்ளது.இது மனதை அதீத செயலாற்றலில் இருந்து பாதுகாக்கும். வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச்சத்து உணவில் இருந்தால், அதுவும் மனதை சாந்தமாக்கும்.
பாஸ்தா
முழு தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாஸ்தாவில் மக்னீசியம் வளமையாக உள்ளது. இந்த மக்னீசியம் குறைபாடும், மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
கோதுமை பிரட்
முழு தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் கோதுமை பிரட்டுகளுக்கும் பாஸ்தாவை போன்ற குணங்கள் உண்டு.அதனால் உணவில் சாண்ட்விச், ரொட்டி ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால் மன அழுத்தத்தை நீக்கலாம்.
ப்ளூ பெர்ரி
சுவைமிக்க பழமான இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தை நீக்கி அமைதியை ஏற்படுத்தும்.
பாதாம்
பாதாமில் ஜிங்க் மற்றும் வைட்டமின் பி12 உள்ளதால், இதனையும் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.ஊட்டச்சத்துள்ள இந்த உணவு, மன நிலையை சீராக வைத்து டென்ஷனை குறைக்கும்.
க்ரீன் டீ
உங்களுடைய பொழுதை ஒரு கப் க்ரீன் டீயுடன் தொடங்கினால், அதை விட மன அமைதி வேறு எதிலும் கிடையாது. சொல்லப்போனால் பல பிரச்சனைகளுக்கு அது உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மீன்
சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன்களில் ஒமேகா-3 கொழுப்பமிலம் வளமையாக உள்ளதால், அது மூளைக்கு செலினியம் மற்றும் ட்ரிப்டோபைனை செலுத்தும். அதனால் மனம் அமைதியாக இருக்கும்.
ஓட்ஸ்
உடம்பில் உள்ள செரோடோனின் அளவை ஓட்ஸ் அதிகரிக்க வைப்பதால், அது உடம்பில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, மனதை அமைதிப்படுத்தும்.
பால்
பாலில் ட்ரிப்டோபைன் இருப்பதால், செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். அது மனதை ஆசுவாசப்படுத்தும்.
வாழைப்பழங்கள்
குறைவான நார்ச்சத்தை கொண்ட வாழைப்பழங்கள் வாய்வு இடர்பாட்டை குறைக்கும். அதனால் மனது அமைதி பெற்று, நாள் முழுவதும் மன சோர்வு இல்லாமல் இருக்கலாம்.
சாதம்கார்போஹைட்ரேட் சாந்தப்படுத்தும் குணத்தை உடையவை. அதனால் சாதம் இதற்கு பெரிதும் துணை புரியும்.மேலும் குறைவான கொழுப்பை கொண்ட சாதம் செரிமானத்தையும் சுலபமாக்கும்.
மேற்கூறிய சில உணவுகளை தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
அது மனக்கலக்கத்தை குறைக்க உதவும். இதனுடன் சேர்த்து அதிக அளவில் தண்ணீர் குடிக்க மறந்து விடாதீர்கள். இது உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவும்.
Download As PDF

Friday, November 15, 2013

தெனாலிராமன் கதைகள் - நீர் இறைத்த திருடர்கள்


ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.
இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான்.

"அதற்கு என்ன செய்யலாம்?" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.

"வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.

அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன்.

திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.

பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.

சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.

இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், "நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று பேசிக் கொண்டு சென்றனர்.

அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, "நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!" என்று கூறினான்.

திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.

நன்றி தமிழ் படைப்புகள் இணையம் 
Download As PDF