Sunday, May 12, 2013

சில சம்பர்தாயமும் அதன் உண்மை விளக்கமும்

பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?
Photo: பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?

மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்? அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும். எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.

புதுவீட்டில் குடியேறும்போது கோபூஜை செய்வது வழக்கம். 
இதனால் மனம் மகிழ்ந்து லட்சுமி நித்யவாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். பசுவை வணங்கும்போது, வாசனை மலர்கள், பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து, புல், கீரை, பழங்கள் கொடுத்து பசுவை உண்ணச் செய்யவேண்டும். மூன்று முறை வலம் வந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க வேண்டும். முன்னோர் சாபம், பிதுர்தோஷம் கோபூஜையால் நீங்கும். அனாவசிய செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும். ஆபரணங்கள், ஆடை வாங்கும் யோகம் உண்டாகும். அட்சயதிரிதியை நன்னாளில் லட்சுமியின் அம்சமான பசுவை வணங்குவது செல்வத்தை வாரி வழங்கும்.
Download As PDF

No comments:

Post a Comment