Wednesday, August 01, 2012

நிறைவான வாழ்க்கை வேண்டுமா?


ஒருவருக்குத் தீங்கு செய்பவர்கள் தம்மால் தீங்கு
செய்யப்பட்டவர்களின் கண்களின் முன்பாகவே கேடு அடைவது
திண்ணம்.
தூரத்திலிருந்து துன்பம் செய்கிறவனை வெறுப்பதைக்
காட்டிலும் அருகிலிருந்து துன்பம் செய்கிறவனை அதிகம்
வெறுக்க வேண்டும். புறப்பகையைவிட உட்பகையே
அபாயகரமானது.
புண்ணியத்தினால் கிடைத்த தனம் குறைவுபடாது. தன்னுடைய
தனத்தைத் தான் மட்டுமே அனுபவிப்பது தகுதியுடையதல்ல.
யாசகர்கள் எதைக் கேட்க நினைத்தார்களோ அதைக் கொடுத்தால்
அல்லாமல் அவரால் தரப்பட்ட புகழ் நில்லாது.
ஒருவருக்கு லாபத்துக்குக் கொடுப்பதைக் காட்டிலும்
இரப்பவர்க்குக் கொடுப்பதில் அனேகங்கோடி
இன்பமுண்டாகும்.
சிங்கத்துக்கு தான் வந்த வழியைத் திரும்பிப் பார்த்தல்
இயற்கை.
யார் எதைச் சொன்னாலும் குற்றமுடையோர் தம்மைப்பற்றித்
தாம் சொல்கிறார்கள் என்ற எண்ணிக் கொள்வார்கள். அவர்களிடம்
குற்றம் இருக்கிற குற்றம்தான் இதற்குக் காரணம்.
இருவர் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கும் போது, அதில்
அன்னியர் தலையிடுவது அறிவுடைமையாகாது.
ஒருவனுக்குப் பிறக்குமிடம், பழகும் இடம், உறையும் இடம்
ஆகியவை நல்ல இடங்களாக இருப்பின் நன்மை பயக்கும்.
நல்ல குலத்தில் நல்லோருக்குப் பிறந்து, நல்லோருடன்
வளர்ந்து, பெரியோர்களுடன் சேர்ந்து பெருமைகொண்டு வாழ்பவன்
வாழ்க்கையில் குறையேதுமில்லாமல் நிறைவே
நிறைந்திருக்கும்.
நல்லது செய்பவன் எந்நாளும் மனத்திருப்தியோடு வாழலாம்.
பொல்லாங்கு செய்பவன் புழுங்கி புழுங்கிச் செத்துக்
கொண்டிருப்பான்.
-அதிவீரராமபாண்டியன்-
Download As PDF

No comments:

Post a Comment