Friday, June 15, 2012

எனக்குள்ளும் ஒருவன்


எனக்குள்ளும் ஒருவன்


நான் ஜதார்த்தவாதியாம்
சுயநலவாதியாம் - இல்லை
நான் நடைமுறைவாதியடா 
என்னை வாழவிடு


மனிதமே..!!!
மேவிய இரு
பனிக்கட்டிகளுக்குள்ளும்
துடிக்கிறது ஒரு நுண்ணுயிர்
நீல வானச் சுவர்
எல்லை கடந்து - எனை
அழைக்கிறது ஓர் கூக்குரல்
எனக்குள்ளே ஒருவன்
அவன் கைகாலிழந்து
முடமாகிப் போனவனா - இல்லை
இதயமிழந்தவன்
இரக்கமிழந்தவன்
பெண்ணின்
அந்தரங்கப் படுசுடுகாடு
தனித்து நான்
பிணமாகிப் போனேன்
மரணத்தை முத்தமிட
ஓர் யுத்தம் தொடங்கப்போகிறேன்
சிரிப்பை அம்மணமாக்கி
குதூகலிக்கிறது
ஓர் காதல் நாடகம்
அழிக்கபடுகிறது
ஏதுமறியாப் பச்சைக்கரு
சந்நியாசப் பாதைவழி
நான் சறுக்கிக் கொள்வேன்
அன்றென்னை அந்நியனாய்
உணரப் போகிறது இந்தப்
பெண்கள் கூட்டம்
திருமணத்திலும்
மரண ஊர்வலத்திலும்
ஒருகிளையில் பூத்த
பூக்கள் தானே - அவை..!!
அதை அதிஷ்டம்
என்றனர் சிலர்...
தாவரங்களும்
உயிர்களாமே...?
விஞ்ஞானம் சொல்கிறது
உயிர்வதை
கொடிய பாவம்
சமயவழி காட்டியது...!!!
மூடவாழ்வின்
முட்டாள்த் தனத்தில்
மூழ்கிக் களிப்பதற்காய்
எனக்குள்ளும்
ஒரு மாற்றான்
மனது முடமாகிப் போனவன்.
நன்றி lankasri இணையம் 
Download As PDF

No comments:

Post a Comment