Tuesday, August 30, 2011

ஆவாரையின் மருத்துவ குணங்கள்!


ஆவாரையின் மருத்துவ குணங்கள்!

ஆவாரை ‌பி‌த்த‌த்‌தி‌ற்கு‌ம், வாத‌த்‌தி‌ற்கு‌ம் அரு‌மரு‌ந்தாகு‌ம்.

ஆவாரை முழுச்செடியையும் நிழலில் உலர்த்தி சூரணமாக செய்து கொள்ளவும். இதனை 1-2 கிராம் அளவு மோரில் கலந்து உண்ண பித்தம் தணியும்.

பாலில் கலந்து உண்ண வாதம் தீரும். வெற்றிலைச் சாற்றில் உண்ண ஆஸ்துமா குணமாகும். அரிசி கழுவிய நீரில் உண்ண நீரிழிவு தீரும்.

நெய்யில் கலந்து உண்ண குஷ்டம் தீரும். கஞ்சியுட‌ன் சே‌ர்‌த்து உண்ண மயக்கம் தீரும். வெந்நீருடன் கலந்து உண்ண கழுத்துவலி தீரும்.

ஆவாரம் பூவுடன் பச்சைப்பயறு சேர்த்து பொடி செய்து தினமும் தேய்த்துக் குளித்துவர கடும்புள்ளி முகப்பரு போன்றவை நீங்கி தேகம் மினுமினுக்கும்
Download As PDF

No comments:

Post a Comment