Monday, August 22, 2011

முட்டை கட்லெட் செய்முறை


முட்டை கட்லெட்

தேவையான பொருட்கள்:
முட்டை - 4
உருளை‌க் ‌கிழ‌ங்கு - 4
வெங்காயம் - 1
மிளகாய்தூள் - 1 கரண்டி
மசாலாதூள் - 1 தேக்கரண்டி
தேங்காய்பால் - அரை கப்
மிளகுதூள் - 1 ‌சி‌றிது
மைதா - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 250 கிராம்
உ‌ப்பு - தேவையான அளவு


செய்முறை:

முட்டை, உருளைக்கிழங்கை த‌னி‌த்த‌னியாக வேகவைத்து தோல் ‌நீ‌க்‌கவு‌ம்.

ஒரு மு‌ட்டையை 2 பாகமாக அ‌ல்லது 4 பாகமாக வெ‌ட்டி வை‌‌க்க‌வு‌ம்.

கி‌ண்ண‌த்‌‌தி‌ல் ‌சி‌றிது ‌நீ‌ர் ‌‌வி‌ட்டு அ‌தி‌ல் உப்பு, மிளகு தூ‌ள் போட்டு கலக்கி, அ‌தி‌ல் வேகவை‌க்காத ஒரு மு‌ட்டையை உடை‌த்து அடி‌த்து வை‌‌க்கவு‌ம். வெங்காயத்தை மிக பொடியாக நறுக்கவும்.

உருளைக்கிழங்கை ம‌சி‌த்து அ‌தி‌ல் தேங்காய் பால், வெங்காயம், மைதா, உ‌ப்பு, மசாலா, ‌மிளகா‌ய் தூ‌ள் போட்டு நன்கு பிசைந்து கொ‌ள்ளவு‌ம்.

அ‌ந்த மாவை ‌சி‌றிது எடு‌த்து கையில் வட்டமாகத் தட்டி நடுவில் வெ‌ட்டி வை‌த்து‌ள்ள ஒரு பா‌தி முட்டையை வைத்து மாவை மூட வேண்டும்.

இதனை முட்டை கலவை‌யில் நனைத்து ரொட்டி தூளில் ‌பிர‌ட்டி தவா‌‌வி‌‌ல் போ‌ட்டோ அ‌ல்லது எ‌ண்ண‌ெ‌‌யி‌ல் பொ‌ரி‌த்தோ எடு‌க்கலா‌ம் மு‌ட்டை க‌ட்லெ‌ட் தயா‌ர்
Download As PDF

No comments:

Post a Comment