Tuesday, August 30, 2011

கொழுக்கட்டை

கொழுக்கட்டை




* தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலத்தூள் சேர்த்து பூரணம் செய்யலாம்.
* உப்புக் கொழுக்கட்டைக்கு உளுத்தம் பருப்பை ஊற வைத்து, பச்சை மிளகாய், உப்பு போட்டு அரைத்து, இட்லி தட்டில் வேக வைத்து உதிர்த்து, கடுகு தாளித்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, கொழுக்கட்டை மாவினுள் வைத்து, சோமாசி போல அரை வட்டமாக செய்து, ஆவியில் வேக வைக்கலாம்.
* பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, முத்துக் கொதி வந்ததும், பச்சரிசி மாவு போட்டு, சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கிளறி, கொழுக்கட்டை செய்தால், உருண்டை மிருதுவாக இருக்கும்; மேலாக வெடிக்காது.
* அதிக நேரம் கொழுக்கட்டையை அடுப்பில் வைத்தால் கெட்டியாகி விடும். கொழுக்கட்டை வைக்கும் பானையிலிருந்து ஆவி வரும் போது, இறக்கி விடலாம். கொழுக்கட்டை வெந்திருக்கும்.

பிடி கொழுக்கட்டை

*பிடி கொழுக்கட்டைக்கு பச்சரிசியைக் களைந்து, தண்ணீர் வடித்து, உலர்த்தி, மிஷினில் ரவையாக உடைத்துக் கொள்ளலாம்.
*தேவையான தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு, வெல்லம் கரைந்ததும், அரிசி ரவையைப் போட்டு, ரவை வெந்ததும், தேங்காய்த் துருவல், ஏலத்தூள் சேர்த்து இறக்கி, பிடியாகப் பிடித்து ஆவியில் வேக வைக்கவும்.
*வெல்லக் கரைசல் கெட்டியான பின், ரவையைப் போட்டால், ரவை வேகாது. அதனால், வெல்லம் கரைந்ததுமே அரிசி ரவையைச் சேர்த்தால், ரவை நன்றாக வெந்துவிடும். கொழுக்கட்டை மிருது வாகவும் இருக்கும்.

Download As PDF

No comments:

Post a Comment