Friday, January 08, 2016

ஒயின் குடித்தால் உடலுக்கு ஆரோக்கியமா?




wine_1298908c.jpg

ஒயின் குடித்தால் முகம் பிரகாசமாக ஜொலிப்பதோடு, சில ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.
ஒயின் கெட்ட கொலஸ்ட்ரால் ஆன triglyceride அளவை அதிகரிப்பதாகத் கூறப்படுகிறது.
 
உதாரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் ட்ரைகிளிசரைட் அதிகரித்தே காணப்படுகிறது. எனவே அத்தகையவர்களுக்கு ஒயின் ஏற்றதல்ல.
 
ஒயின் என்பது உண்மையில் ஒரு மது. மதுவில் உள்ளது வெற்றுக் கலோரிகளே.
 
ஒரு கிராம் மதுவில் 7 கலோரிகள் இருக்கிறது, இதனால் அது உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிறது.
 
வழக்கமாக மது அருந்தாதவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக ஒயின் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் அவசியம் இல்லை.
 
ஒயின் உட்பட எந்த மதுவையும் குடிக்காதிருப்பது நிச்சயம் நல்லது. அதிலிருந்து பெறக் கூடிய ஒரு சில நல்ல பயன்களை ஏனைய உணவு வகைளிலிருந்து தாராளமாகப் பெறலாம்.
 
ஆண்கள் தினமும் இரண்டு டிரிங்ஸ்சும், பெண்கள் தினமும் ஒரு டிரிங் மட்டுமே ஒயின் அருந்தலாம்.
 
ஒரு டிரிங் என்பது 5 அவுன்ஸ் அல்லது 140 மில்லி லீட்டர் ஆகும். அளவை மிஞ்சினால் ஈரல் பாதிப்படைவது உட்பட மதுவின்அனைத்து தீமைகளும் வந்து சேரும்.
 
wine_drink_002.jpg
 
ரெட் ஒயின்
 
ரெட் ஒயின் உடலிலுள்ள பெண் ஹார்மோன் ஆன ஈஸ்ரோஜன் அளவை குறைப்பதால் மார்புப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.
 
வயதான காலத்தில் கண்களில் Macular Degeneration பாதிப்பு ஏற்படுகிறது, ரெட் ஒயின் குடிப்பதால் இந்தப்பிரச்சனையில் இருந்து குணமாகலாம்.
 
heme oxygenase அளவை அதிகரிப்பதால், மூளையின் நரம்பு செல்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
 
வெள்ளை ஒயின் நுரையீரல் செயல்பாட்டிற்கு சிறந்தது மேலும் ரெட் ஒயின் நுரையீரல் புற்றுநோய்க்கு சிறந்தது.
 
ரெட் ஒயின் enzyme SIRT1 யின் அளவை அதிகரிப்பதால், இந்த என்சைம் இன்சுலின் ஹார்மோன் அதிகரிப்பதற்கு உதவுகிறது.
 
இதனால் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் அருந்தலாம்.
 
ஸ்பெயினில் மேற்கொண்ட ஆராய்ச்சியில், வாரத்திற்கு 2 முதல் 7 கிளாஸ் ஒயின் குடித்தல் மன அழுத்தம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
ரெட் ஒயின் குடலில் ஏற்படும் கட்டிகளை 50 சதவீதம் குணப்படுத்துகிறது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
Procyanidins என்ற ப்ளேவானாய்டு ரெட் ஒயினில் உள்ளதால் இரத்த குழாய்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
 
ரெட் ஒயினில் உள்ள piceatannol என்ற அந்த வேதிப்பொருள் இளம் கொழுப்புச் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது. அதாவது அது உடலைப் பருமனடையச்செய்யும் ரசாயன நடைமுறையை தாமதப்படுத்துகிறது.
 
ரெட் ஒயினில் உள்ள இந்த வேதிப்பொருள் கொழுப்பு செல்களை உருவாக்கும் இன்சுலின் திறனை சிறப்பாகத் தடை செய்கிறது.
 
wine_drink_003.jpg
 
ஒயின் தயாரிப்பு
 
மதுரசம் செய்ய பழங்கள், சர்க்கரை, ஈஸ்ட் அவசியம். இது புளிப்பு தன்மையை கொடுக்கும். முதலில் பழங்களை நன்றாக கழுவி சுத்தமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து பழங்கள் மூழ்கும் வரை ஊற வைக்க வேண்டும்.
 
பழங்கள் நன்கு ஊறிய பிறகு அதை கைகளால் நசுக்க வேண்டும். தேவையான அளவு சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து மூடி வைக்க வேண்டும்.
 
அது நன்கு புளித்து வரும். இதன் பிறகு அதனை வடிகட்டி மறுபடியும் மூடி வைக்க வேண்டும். இதே போல் பதினைந்து தடவை வடிகட்டி அதில் உள்ள கசடுகளை நீக்கினால், தண்ணீர் போன்ற திரவம் கிடைக்கும், அதுதான் ‘ஒயின்’.
Download As PDF