Monday, August 01, 2011

சருமம் தானாகவே புத்துயிர் பெறாது


பொதுவாக ஒருவருடைய சருமத்தின் தன்மை, அவர்கள் குடும்பத்தின் மரபு வழியில் தான் அமையும். நம் பெற்றொருடைய முகத்தில் இருக்கும் சருமகோடுகள், கண், புருவம், மூக்கு, வாய், முகச்சாயல் என்று நமக்கும் அப்படியே இருக்கும். சருமத்தைப் பேணிக் காத்தால், ஆரோக்கியம் அழகு படும். அதற்கு இன்றியமையாதவை:

சுவாசம்: 
    சருமம், நன்றாக சுவாசிக்க வேண்டும். முக சருமத்தின் வழியாக நாம் சுவாசிக்கும் போது, 7 சதவீதம் ஆக்சிஜன், சருமத்தின் வழியாக நம் நுரையீரலுக்கு செல்கிறது.
காற்று: தூய்மையான காற்று, எப்போதும் நம் சருமத்தை மலர்ச்சியாக வைத்து கொள்ள உதவும். கூட்டம் நிறைந்த பகுதியில் நடப்பதை விட, பசுமையான இயற்கைச் சூழலில் சுத்தமான காற்றில் நடப்பது, நம் சருமத்தை அழகாக வைத்து கொள்ள உதவும்.

உடற்பயிற்சி: 
   முறையான உடற்பயிற்சி செய்தால், நம் உடலின் அனைத்து உறுப்புகளும், மனமும் நன்றாக செயல்படும். உடற்பயிற்சி செய்யும் போது ஆக்சிஜன், உடலில் இருக்கும் செல்களின் உள்ளே சென்று, செல்களை சீக்கிரமாக வளர செய்யும்.
நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, நடனப் பயிற்சி இவையெல்லாம், உடம்பின் ரத்த ஓட்டத்தை சீராகவும், ஜீரண சக்தியை அதிகரித்து, தோலைப் பிரகாசமாக வைத்து கொள்ளும்.

உணவுப் பழக்கம்: 
    சுத்தமான உணவை உட்கொள்வது நம் உடலுக்கும், சருமத்திற்கும் நல்லது. பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள், பயிறுகள், எண்ணெய் வகைகளில் எள், ஆலிவ், சூரியகாந்தி, பால், கோதுமை பிரெட், புட்டரிசி, சோயா மற்றும் அசைவம் சாப்பிடுபவர்கள், வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் முட்டை சாப்பிடலாம். மீன், கொழுப்பு நீக்கிய மாமிசத்தையும் சேர்த்து கொள்ளலாம்.

தூக்கம்: 
     நாம் தூங்கும் போது, உடம்பிலுள்ள செல்கள் புத்துயிர் பெறுகின்றன. புதிய செல்களும் முளைக்கின்றன. இவை நம் உடலை அமைதியாகவும், சருமத்தை ஆரோக்கியமாகவும் வைக்கும்.

தண்ணீர்: 
    நாள் ஒன்றுக்கு, 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் நாட்களில் தண்ணீரை முகத்தில் தெளித்து கொண்டே இருந்தால், முகம் புத்துணர்வாய் இருக்கும். மிகவும் குளிர்ச்சியான தண்ணீரோ அல்லது சூடான தண்ணீரோ குடிப்பதை தவிர்த்து, நாம் இருக்கும் அறையின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றாற்போல் தண்ணீர் குடிப்பது, நம் உடலுக்கு நல்லது.
Download As PDF

No comments:

Post a Comment