Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Saturday, July 25, 2015

தொட்டால் சினுங்கி: என் மனதில் தோன்றிய விந்தை கவிதை

தொட்டால் சினுங்கி:
இந்த வகையான செடியின் சிறப்பம்சமே தொட்டால் சுருங்கும் தன்மையை இயல்பாய் (வரமாய்) பெற்றிருப்பதே !

இந்த  தொட்டால் சுருங்கும் சிணுங்கியினை எனது பரியமானவர்களுடன் ஒப்பிட்டு 
என் மனதில் தோன்றிய விந்தையினை கவிதையாக வடிதுளேன் (என் மனைவிக்காக),,,

தொட்டால் சினுங்கி !
 உன்னை தொட்டால் மட்டும் சுருங்கும் சினுங்கி !!
ஆனால் என்னை தொட்டாலும் சுருங்கும் என் வீட்டுச்சினுங்கி !!!

                                                                                 சிவசுகு (சுகுவள்ளி),,,
Download As PDF

Wednesday, July 16, 2014

ஆசை!

இணையத்தில் படித்ததும் பதிந்ததும்!!!
சின்னதும், பெரியதுமாய்
அளவுகளில் மட்டுமே
வித்தியாசப்பட்டு,
அனைவருக்குள்ளும்
விரவிக் கிடக்கிறது ஆசைகள்!

ஆசைப்பட்டதை
அடையும் அருகதை,
இருக்கிறதோ, இல்லையோ
ஆனாலும்,
ஆசைப்பட அருகதை தேவையில்லை!

பெண்ணின் மீது ராவணனும்,
மண்ணின் மீது துரியோதனனும்
ஆசைப்படாது போயிருந்தால்...
இரு பெரும் காவியங்களேது!

முற்றும் துறந்த போதும்,
விட்டு வைத்ததா ஆசை
விசுவாமித்திரரை!

துன்பத்திற்கு காரணமாகவும்,
அனுபவங்களுக்கு ஆதாரமாகவும்
நல்லதும், கெட்டதும்
ஆசைகளின்றி
சிருஷ்டிக்கப்படவில்லை
இப்பிரஞ்சம்!

— கா.இளையராஜா, விருத்தாசலம்.
Download As PDF

Sunday, March 30, 2014

எனது சிந்தையில் தோன்றிய விந்தை கவிதை ....

எனது சிந்தையில் தோன்றிய விந்தை கவிதை ....
என்னுள்ளே நிகழும் குழப்பம் -2;

* இந்த வாழ்க்கை ஓட்டத்தில் ஏதாவது ஒரு விசயத்தில் தினமும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்,,,
* ஏன் நமக்கு மட்டும் இப்படி ஏற்படுகிறது என்ற ஒரு கேள்வி கணைகள் நமக்குள்ளே !
* உதாரணமாக ; ஒரு தவறு செய்து விட்டால் அந்த தவறை ஏற்க்க நமது மனம் மறுக்கிறது .
* இதற்க்கு காரணம் ;
  பிறர் முன்பு நாம் அவமானப்பட்டு விடுவோமோ என்ற என்னமா ?
  இல்லை மனக்குழப்பமா ?
  பொறாமை குணமா ?
* யார் எப்படி போனால் என்ன நாம் மட்டும் நமது குடும்பத்தாருடன் உயர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற சுயநல என்னமா?
   இல்லை கையாலாகாத தனமோ!
* இப்படி புரியாத புதிர்க்கெல்லாம் மனிதன் வைத்த பெயர்தான் கடவுள் ,,,,
* நமக்கு ஏற்படுகின்ற இந்த குழப்பத்திற்கு தீர்வு நம்மிடைமே உள்ளது ..
* இதனை புரிந்துகொள்ள தானோ கடவுளை நாடுகிறது நமது மனம் ,,
எது எப்படியோ ! நமது கஷ்டமான சந்தர்ப்பங்களில் நமது மனதிற்கு தேவையான ஆறுதல் கிடைத்தால் சரி .....

      சிவசுகு ,,,
Download As PDF

Thursday, March 13, 2014

கண்ணாடி


கண்ணாடியில் தெரியும்

என் பிம்பம்

அது நானல்ல..

ஏமாற்றுகிறது கண்ணாடி

என்னை எங்கோ ஒளித்து

எதையோ காட்டுகிறது

என் வீட்டுக் கண்ணாடி



சின்னச் சின்ன சிறகுகள் எனக்குண்டு..

அதைக் கொண்டு

வானம் தொட்டு வரும்

வழக்கம் எனக்குண்டு

இறக்கை கொண்டு இமயம் மீதும்

சிறிது

இளைப்பாறி வருவதுண்டு

சிக்கவில்லை அது என் சின்ன

கண்ணாடிக்குள்..

வண்ணம் எனக்குண்டு

இன்பம் இழைத்து ஆசையில் ஊறி

அன்பில் தோய்ந்து அழுகையில் நனைந்து

துன்பம் துடைத்த

வானவில் வண்ணம் எனக்குண்டு..

கறுப்பு வெள்ளையாய் காட்டுகிறது

கண்ணாடி...

காதல் எனக்குண்டு

கண்ணம் குழிந்து கண்ணில் வழியும்

காட்டவில்லை அதை

என் வீட்டு கண்ணாடி...

வடுக்களும் எனக்குண்டு

தீச்சொல் பட்டு வஞ்சம் எரிந்து

நெஞ்சம் துளைத்த

வடுக்களும் எனக்குண்டு

நல்ல வேளை

அதையும் காட்டாது

எதையோ காட்டி

நிற்கின்றன..

எல்லார் வீட்டுக் கண்ணாடிகளும்.
Download As PDF

Friday, November 15, 2013

தெனாலிராமன் கதைகள் - நீர் இறைத்த திருடர்கள்


ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.
இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான்.

"அதற்கு என்ன செய்யலாம்?" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.

"வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.

அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன்.

திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.

பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.

சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.

இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், "நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று பேசிக் கொண்டு சென்றனர்.

அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, "நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!" என்று கூறினான்.

திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.

நன்றி தமிழ் படைப்புகள் இணையம் 
Download As PDF

Saturday, April 13, 2013

தமிழா! நீ பேசுவது தமிழா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?


அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...


தமிழா!
நீ
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?


தமிழா!
நீ
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?


தமிழா!
நீ
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?


தமிழா!
நீ
பேசுவது தமிழா?

-----காசி ஆன‌ந்த‌ன் 
 photo newnew.gif
Download As PDF

Thursday, November 08, 2012

மனிதம்


தாகம் தணிக்க
அடைத்து வைத்த மாசு நீர்!
ஏழைகளுக்கு நிலமில்லை,
உழுதவனுக்கும் சொந்தமில்லை!

ஒற்றையறையில் காற்றடைத்து
குளிரூட்டி நிதமும் நித்திரை!

ஆகாயத்தை ஓட்டை போட்டு
அண்ணாந்து வேடிக்கை!

ஒற்றைக் குச்சியில் நெருப்படைத்து
புகைவழியே சுகம் தேடி
அலையும் மானிடா!

(ஐம்)பூதங்களையும் சித்திரவதை செய்ய
எப்போதிருந்து பழகினாய்?


பனிமலைஎல்லாம்
கரையும் நேரத்தில்
பனி உறைய வீட்டுக்கு வீடு
குளிர்சாதன பெட்டி!


மரக்காட்டை எரித்து
கான்கிரீட் தோட்டத்தில
துளசி விதைக்கிறாய்!

இயற்கையிலிருந்து விலகி நின்று
விசித்திரத்தை பழகி
பெட்டிதட்டினால்
எல்லாம் வரும் என்று
பகுத்தறிவு பேச
வெட்கமாயில்லை?



பக்கத்துவீட்டு எழவு
தெரியாமல்
வலை அரட்டை நண்பனின்
ஜலதோஷத்திற்காக
கண்ணீரா?


நடுச்சாலையில்
உயிர் துடிக்கும் நேரத்தில்,
வெறுப்பாய் ரத்தம் பார்த்து
செவி அடைத்து
அலுவலகம் போக
கைக்கடிகாரம் பார்க்கிறாயே,

நாளையே நீ துடிக்க
இன்னொருவன்
கடிகாரம் பார்ப்பானே!

உன்னால்,
மனிதனுக்கு சிரச்சேதம்!
இயற்கைக்கு உயிர்ச்சேதம்!

மரித்துப்போனமனிதத்திற்கு
பூச்செண்டு தர
மனதில் மனிதம் விதை,

விருட்சம்கொண்டே
பல விழுதுகள் தாங்கி
நாளைய உலகுக்கு
நீயே ஒரு நல்பாதை!
 photo newnew.gif
Download As PDF

Sunday, September 09, 2012

ஹைக்கூ கவிதை


மன்னிப்பு

எல்லா குற்றங்களையும்
மன்னிக்கும் ஒரே நீதிமன்றம்
அம்மாவின் இதயம்..

பிரிவு

உடல்களுக்கிடையே தொலைவை
அதிகரித்து
மனங்களை நெருக்கமாக்கும்
ஒரு பாலம்

வாழ்க்கை

தாய்க்குப்பின்...
தாரம்!
தாரத்துக்குப் பின்...
ஓரம்!

டாஸ்மார்க்

மது
நாட்டுக்கு வருவாய்,
வீட்டுக்கு செலவாய்,
டாஸ்மார்க்

விழிநீர் சேகரிப்புத் திட்டம்!

கவித்துவா (எ) பிரகல்யா
சோகங்கள் தரும் அழுகைத் துளிகளை சேமித்து வை.....
சந்தோசம் தரப் போகும் "ஆனந்த கண்­ணீருக்காக"!!

இறப்பு

வித்தகன்
இயந்திர உலகில்
நிரந்தர தூக்கம்!

சொந்த பந்தம்

ரகுமா ரிப்னஸ்
உன் பாக்கெட்டில் காசு இருக்கும் வரை
கூடவே இருக்கும் ஊழல்கள்....

சிரிப்பு

ஆர்.ஈஸ்வரன், வெள்ளகோவில்
மருத்துவம் இல்லை
வலி தீர்ந்தது
மழலையின் சிரிப்பு

சுத்தம்

ஆ.முத்துவேல்
சுனாமியே வா,
என்னை சுத்தப்படுத்து,
கூவம் ஆறு...

முதியோர் இல்லம்!

கவித்துவா (எ) பிரகல்யா
விழுதுகள் விரட்டி அடித்ததால் ...
ஆல மரங்கள் அடைக்கலம் புகுந்தன!!

வியர்வை

கூடல்
உள்ளேயே இருந்தால் சோம்பல்,
வெளியேறினால் உழைப்பு,
தொழிலாளியின் வியர்வை........

நம்பிக்கை உள்ளவரை!

கே.கே
கடவுளும், காதலும் - உண்மை
அதன்மேல் நம்பிக்கை உள்ளவரை!

வெங்காயம்

ஓ.எஸ்.பாலாஜி
அழ வைப்பதில் என்னை மிஞ்சிவிட்டனரே!
மெகாசீரியல்களை எண்ணி கண்ணீர் வடித்தது
வெங்காயம்...

ஆண்டவன்

மாயாண்டி சந்திரசேகரன்
அன்று
நின்று கொன்றவன்
இன்று செய்வதறியாது
நின்று கொண்டான்
Download As PDF

Friday, June 15, 2012

எனக்குள்ளும் ஒருவன்


எனக்குள்ளும் ஒருவன்


நான் ஜதார்த்தவாதியாம்
சுயநலவாதியாம் - இல்லை
நான் நடைமுறைவாதியடா 
என்னை வாழவிடு


மனிதமே..!!!
மேவிய இரு
பனிக்கட்டிகளுக்குள்ளும்
துடிக்கிறது ஒரு நுண்ணுயிர்
நீல வானச் சுவர்
எல்லை கடந்து - எனை
அழைக்கிறது ஓர் கூக்குரல்
எனக்குள்ளே ஒருவன்
அவன் கைகாலிழந்து
முடமாகிப் போனவனா - இல்லை
இதயமிழந்தவன்
இரக்கமிழந்தவன்
பெண்ணின்
அந்தரங்கப் படுசுடுகாடு
தனித்து நான்
பிணமாகிப் போனேன்
மரணத்தை முத்தமிட
ஓர் யுத்தம் தொடங்கப்போகிறேன்
சிரிப்பை அம்மணமாக்கி
குதூகலிக்கிறது
ஓர் காதல் நாடகம்
அழிக்கபடுகிறது
ஏதுமறியாப் பச்சைக்கரு
சந்நியாசப் பாதைவழி
நான் சறுக்கிக் கொள்வேன்
அன்றென்னை அந்நியனாய்
உணரப் போகிறது இந்தப்
பெண்கள் கூட்டம்
திருமணத்திலும்
மரண ஊர்வலத்திலும்
ஒருகிளையில் பூத்த
பூக்கள் தானே - அவை..!!
அதை அதிஷ்டம்
என்றனர் சிலர்...
தாவரங்களும்
உயிர்களாமே...?
விஞ்ஞானம் சொல்கிறது
உயிர்வதை
கொடிய பாவம்
சமயவழி காட்டியது...!!!
மூடவாழ்வின்
முட்டாள்த் தனத்தில்
மூழ்கிக் களிப்பதற்காய்
எனக்குள்ளும்
ஒரு மாற்றான்
மனது முடமாகிப் போனவன்.
நன்றி lankasri இணையம் 
Download As PDF

Wednesday, February 29, 2012

ஹைக்கூ கவிதை


தென்றல்


விரைந்து சென்றது காற்று
வேகத் தடை போட்டது இயற்கை
தென்றல்
காதலின் ஆரம்பித்தது
கடைக்கண்ணால் அவள் பார்வை
தென்றல்
களைத்து வீடு சென்றேன்
அரிதாய்க் கிடைத்தது இன்சொற்கள்
தென்றல்
கதிரவனின் கோபம்
காற்றின் கருணை மனு
தென்றல்
கட்டில் முழக்கம் ஒலிக்கிறது
முத்தத்தோடு அணைப்பு
தென்றல்
பிள்ளைகள் வெய்யிலில்
இயற்கை அன்னையின் முத்தம்
தென்றல்
பிளவு பட்டது நம் இனம்
ஒன்று பட்டு வாழ்ந்தால்
தென்றல்.

மரம்


திருமணத்திற்கு   வாழை
மரணத்திற்கு மூங்கில்
தொடரும் மரத்தின் உறவு
தொட்டில் முதல்
சுடுகாடு வரை மரம்
வாழ்ந்தால் நிழல்
வீழ்ந்தால் விறகு மரம்
வெட்டும் வில்லனுக்கும்
நிழல் தந்தது மரம்
இயற்கையின் விசித்திரம் 
சிறிய விதை
பெரிய விருட்சமானது.

ஆன்மா


வெறும் கையோடு
உலகில் பிறந்தேன்
வெறும் காலோடு
உலக வாழ்வை நீத்தேன்
பிறப்பு, இறப்பு,
இந்த இரு நிகழ்வுகளுக்காக
மெய் உடலில்
சிக்கிக் கொண்டேன்
தாமரை இலை நீர் போல
உடலை விட்டு மறைந்து போனேன்

நன்றி lankasri இணையம் .

Download As PDF

Sunday, January 29, 2012

எனக்கு பிடித்த திரைப்பட பாடல்

பத்ரி எனும் தமிழ் படத்திலிருந்து கீழ்வருமாறு ,,,
"காதல் சொல்வது உதடுகள் அல்ல,
கண்கள் தான் தலைவா,
கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல,
கவிதைகள் தலைவா,

கவிதை என்பது புத்தகம் அல்ல,
பெண்கள் தான், சகியே,
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல,
நீ மட்டும், சகியே,

அடடடடா, இன்னும் என் நெஞ்சம்,
புரியல்லயா?
காதல் மடையா?

இது என்னடி, இதயம் வெளியேறி,
அலகின்றதே,
காதல் இதுவா?

எப்படி சொல்வேன், புரியும் படி,
ஆளை விடுடா!

மன்னிச்சுக்கடி, காதல் செய்வேன்,
கட்டளை படி,

காதல் சொல்வது உதடுகள் அல்ல,
கண்கள் தான் தலைவா,
கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல,
கவிதைகள் தலைவா,

படபடக்கும், எனது,
விழிபார்த்து நடந்திக்கணும்,
சொல்வது சரியா?

தவறு செய்தால், முத்தம்,
தந்து என்னை திருத்திக்கணும்,
தண்டனை சரியா?

எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய்,
சொல்லிவிடுடா,

சொல்லுகிறேன், இப்பொதொரு,
முத்தம் குடுடி,

காதல் சொல்வது உதடுகள் அல்ல,
கண்கள் தான் தலைவா,
கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல,
கவிதைகள் தலைவா."
Download As PDF

Friday, December 23, 2011

கவிதைகள்


1-
வாகன நெரிசல்
நிறைந்த சாலையை
சாமர்த்தியமாய்
கடந்து விடுகிறது பூனை
அதற்கு ஒன்றுமாகி விடக்கூடாது
என்று தொடங்கிய படபடப்பு
அதற்கு ஒன்றுமாகவில்லை
என்ற நிம்மதியில் முடிந்தது
இனி கடந்து போவேன்
படபடப்பின்றி
நிம்மதியுடன்
2-
கை வருடும்போது
ஒரு குழந்தையைப் போல
அமைதியாக இருக்கும்
இந்த கூழாங்கல்
எறியும் போது
ஒரு பறவையைப் போல
பறந்து போய் விடுகிறது
3-
புல்லின் வார்த்தைகள்
பனித்துளிக்குத் தெரியும்
அதை சொல்லத் தொடங்கும் போதெல்லாம்
உலர்ந்து போய்விடுகிறது
4-
எழுதும் இந்த வரியும்
எழுதப் போகும்
அடுத்த வரியும்
எப்படி உருவாகிறது என்று
எனக்குத் தெரியாது
ஒரு வேளை
அந்த வரிகளுக்குத் தெரியுமா
எனக்குத் தெரியவில்லை என்று 
5-
ரயில் தண்டவாளத்தில்
தலை வைத்து
தற்கொலை செய்து கொள்ளும்
கனவை
திரும்ப திரும்ப
ஒத்திகை செய்கிறேன்
ரயிலுக்குள்ளும்
நானே இருந்து
சங்கிலியை இழுத்து விடுவதால்
கூடி வராமல் போகிறது
6-
நதி உறைந்த போது
மீன் சிலையானது
நீர் தளர்ந்து
நதியாகிய போது
நீந்த தெரியாத சிலை
மூழ்கிப் போனது
புதுப்புது மீன்கள்
கடந்து போக

----நன்றி 
தடாகம் இணையம் .
Download As PDF