Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Tuesday, November 29, 2011

தமிழமுதம் கசக்கிறதாம்






தமிழ் மறந்து...!
விஷ்ணுதாசன்
தங்கக் குடுவையில் அமுதம் தந்தால்
'ச்சீ' என முகம் சுளிக்கிறார்!
தகரக் குடுவையில் இனிப்பான விஷமென்றால்
முகம் மலர்ந்து சுவைக்கிறார்!
தமிழமுதம் கசக்கிறதாம்- அந்த
ஆங்கில விஷம் இனிக்கிறதாம்!
நாகரீக மோகத்திலே ஜவ்வாது
சாக்கடை பேதமறியா அலறுகிறார்!
தாரக மந்திரமாம் தமிழைப் பொல்லார்
தட்டி தலைக்குனிவு செய்கின்றார்!
அடுக்குமோ இவ்வநியாயம் - இதுபோல்
நடக்குமோ எந்நாட்டிலும்!
புத்தி மங்கிய புது நாகரீகப் புத்திசாலிகள்
புவிமீது பேரன்புத் தமிழ் மறந்தார்!
தாரத்தின் சொற்கேட்டு தாயை நிந்திக்கும்
தற்குறி புருஷரன்றோ இவர்கள்!
பேரம்பேசி விற்றாயோ தமிழ் பண்பாட்டை
பாரமெனத் தூக்கி எரிந்தாயோ!
ஜென்மம் முக்திபெற தமிழனாய்ப் பிறந்தாய்
தமிழ் மறந்து நடமாடும் கூடானாய்!

Download As PDF

Wednesday, November 23, 2011

என்ன பிடிக்கும் என் தேவதைக்கு


படித்ததில் பிடித்தது: 
மங்கிய  ஆடையோடு
ஒப்பனையற்ற முகத்தோடு,
சமையலறை நெடியோடு,
அலுக்காமல் அங்கும் இங்கும்
சுற்றிவரும்
என் வீட்டு தேவதையின்
புன்னகையில்
எங்கள் மனபாரம் குறைந்து போகும்…
அவரவர்க்கு பிடித்தம் என்ன
அது அவள் மட்டும் 
அறிந்த வித்தை..
அப்பாவின் பசியறிந்து,
தங்கையின் ருசியறிந்து,
தம்பியின் குணம் அறிந்து,
எந்தன் மனமறிந்து,
நளபாகம் செய்யும் பாங்கு
அவளுக்கே வாய்த்த ஒன்று…
எனக்கு பிடிக்கும் என்பதால்
சிவப்பு நிற புடவையையும்,
தம்பிக்கு பிடிக்கும் என்று,
நெற்றியில் குங்குமமும்,
தங்கைக்கு பிடிக்கும் என்று,
தலைநிறைய மல்லிகையுமாய் 
எங்கள் பிடித்தத்தை பற்றிய 
அவள் இதயத்தின் பிடித்தம்
இதுவரை நான் அறிந்ததில்லை…
எனக்கு பிடிக்கும் என்று
ரோஜா செடிவளர்க்க,
தம்பிக்கு பிடிக்கும்  என்று, 
தொட்டி மீன்களுக்கு பெயர் வைக்க,
தங்கைக்கு பிடிக்கும் என்று,
மாலைநேர தொலைக்காட்சி நிகழ்சிகளை
தியாகம் செய்ய, என 
எங்கள் விருப்பத்தை
அணு அணுவாய் ரசிக்கும்
எங்கள் குழந்தைத் தாய்க்கு
என்ன பிடிக்கும் என்று
இதுவரை நாங்கள் அறிந்ததில்லை…
என் எதிர்கால உறவிற்காய்,
உறங்காமல் கனவு காணவும்,
எங்கள் வரும் காலம்
வளமாய் மாற
அம்மனுக்கு விரதம்
இருக்கவும்,
எங்கள் செல்லச் சண்டையில்
சமாதான தூதுவனாய் மாறவும்,
பக்கத்து வீட்டுக்கு குழந்தைக்கு
பசிக்கையில் உணவூட்டவும்
எப்படி முடிக்கிறது
இவளுக்கு மட்டும்….
நாங்கள் சிரிக்கையில் சிரித்து,
அழுகையில் அழுது,
எங்கள் விருப்பத்தில் தன்
விலாசம் மறைத்த
என் தேவதைக்கு
என்ன பிடிக்கும் என்று
இதுவரைத் தெரியவில்லை
எங்களுக்கு…..

நன்றி muthukkmar blogspot .
Download As PDF

ஹைக்கு கவிதைகள்



மரம்


திருமணத்திற்கு   வாழை 
மரணத்திற்கு மூங்கில்
தொடரும் மரத்தின் உறவு 
தொட்டில் முதல் 
சுடுகாடு வரை மரம் 
வாழ்ந்தால் நிழல் 
வீழ்ந்தால் விறகு மரம் 
வெட்டும் வில்லனுக்கும் 
நிழல் தந்தது மரம் 
இயற்கையின் விசித்திரம்  
சிறிய விதை 
பெரிய விருட்சமானது.


புன்னகை


புன்னகை செய்வதற்கு 
மட்டுமே உங்கள் இதழ்களை 
பயன் படுத்துங்கள்
மற்றவர்கள் மனம் 
புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்.



ஆன்மா

வெறும் கையோடு
உலகில் பிறந்தேன்
வெறும் காலோடு
உலக வாழ்வை நீத்தேன்
பிறப்பு, இறப்பு,
இந்த இரு நிகழ்வுகளுக்காக
மெய் உடலில்
சிக்கிக் கொண்டேன்
தாமரை இலை நீர் போல
உடலை விட்டு மறைந்து போனேன்.

வாழ்க்கை


விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று...
அரசியல்வாதிகள்: 
ஆயிரம் பாம்புகளிடம் சிக்கிய 
தவளை போல 
அரசியல்வாதிகளிடம் மக்கள். 
நன்ற lankasri கவிதை இனைய தளம் 
Download As PDF

Monday, July 25, 2011

தூக்கம் விட்ற காசுகள்,

  வெளி நாட்டில் வசிக்கும் எனது அருமை நண்பர்களே கீழே உள்ள படத்தை பார்க்கவும் ,,,,

Download As PDF

Sunday, July 24, 2011

அயல் நாட்டு அகதிகள்


அயல் நாட்டு அகதிகள் 
Download As PDF

பெண்மை


ஒவ்வொரு மனித உயிரும் இந்த மண்ணை தொடும்போது ஒரு பெண் முழுமை அடைகிறாள்,ஆனுக்கு உழைப்பை மட்டும் கொடுத்த கடவுள்  பாசத்தை கூட கடமையை ஆக்கிவிட்டான் ,பெண்களுக்கு மட்டும் பாசத்தையும் ,நேசத்தையும் கொடுத்து உலகத்தையே பெண்மையில் ஆழ்த்திவிட்டான்.இதனால் தான் என்னவோ ஆண்களின் கற்பை விட பெண்களின் கற்பு புனிதமாக இந்த உலகமே கொண்டாடுது .ஒருவரை அன்பால் வீழ்த்த பெண்கள் அன்றி வேறு எவரும் இல்லை .இந்த உலக கதைகளும் கட்டுரைகளும் பெண்கள் சார்ந்தே  அமைய்கின்றன அதற்கு அவளவு பலம்  என்றும் தோற்றது இல்லை . ஒருவன் என்ன தான் தவறு செய்தாலும் இந்த உலகம் மன்னிக்கும் ஆனால் பெண்மைக்கு தீங்கு நினைத்தாள் ,அடுத்த ஜென்மம் இல்லை இந்த ஜென்மமே தண்டனை கிடைக்கும் தன்னை அறியாமலே தண்டனை பெறுவான்  . பெண்மையை பெண்களே போற்றும் அளவுக்கு புனிதம் குறையா வண்ணம் காத்திடுவோம் இந்த உலகம் அழியும் வரை ......என்றும் பெண்மையை போற்றிடுவோம்  .
 இவன்
எனது மின்னங்க்ச்சலில் வந்தவை 
Download As PDF

மனைவி


காலையில் விடிந்ததும்
என் விழி திறக்கக் காத்திருக்கும் உன் முகம்...
என் தலையை கோதிக்கொண்டே
நீ கொடுக்கும் அந்த முத்தம்...
நீ ஆடை மாற்றுகையில் உதவிக்கரம்
என்ற பெயரில் நான் செய்யும் சிலுமிஷங்கள்...

நான் குளிக்கையில் என் கைக்கெட்டும் தூரத்தில் ஆடை இருந்தும்
உன்னை எடுத்துத் தரச்சொல்லும் கள்ளத்தனம்...

நீ எனக்கு உணவூட்டுகையில் சுவைக்கும்
உன் விரல்கள்...

எனக்கு சட்டை அணிவிக்கையில் உன் கன்னம் வருடும்
என் விரல்கள்
நான் பிரிகையில் ஒரு கனம் சேரும்
நம் இதழ்கள்...

அலுவலக பணிகளுக்கிடையே அடிக்கடி சிணுங்கும்
உன் தொலைப்பேசி அழைப்புகள்...
மதிய உணவின் போது உன் பரிவை நினைவுகூறும்
உன் கை மனம்...
உன்னை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில் பணியைம் முடிக்கும்
அந்த கடைசி நிமிடம்...
வீட்டிற்க்குள் நுழையும்போது என்னை ஆவலாய் எதிர்நோக்கும்
உன் விழிகள்...
என் கலைப்பை போக்க நீ கொடுக்கும்
உன் இதழ் பட்ட தேனீர்...

சமையலரை ஒத்தாசை என்று சொல்லிவிட்டு உன் இடையை மட்டும் சுற்றிக்கொள்ளும்
என் கைகள்...
என் மடியில் அமர்ந்தபடி என் தலைதட்டி நீ கொடுக்கும்
இரவு உணவு...
நாம் உறங்குவதர்க்காய் நீ விரித்துவைத்திருக்கும் நெடுநாள் தோழியான
உன் போர்வை...
இடம் நிறைய இருந்தும் சங்கினுள் நுழைந்த நத்தை போல்
என் கழுத்தில் புதையும் உன் முகம்...

என்னை உறங்க வைப்பதாய் எண்ணி நீ சொல்லிக்கொண்டே உறங்கும்
நம் நினைவுகள்...
மணவறையில் நாம் விரல் பிடித்து நடந்ததை மறக்காத
உன் ஆழ் தூக்க விரல் பினைப்பு...

என் நெஞ்சை வருடும் உன் மூச்சுக்காற்றை ரசித்துக்கொண்டே இழுக்கும்
அந்த தூக்கம்...
நம்மைக் கண்டு பொறாமையில் விரைவாய்
விடியும் காலை...
இவைதான் என் ஆசையின் கோர்வைகள்...
இவன்
முகம் தெரியாத நண்பர்    




Download As PDF

என் அம்மா


மழையில் நனைந்து கொண்டே
வீட்டுக்கு வந்தேன்
"
குடை எடுத்துட்டுப்
போக வேண்டியது தானே'
என்றான் அண்ணன்

"
எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே'
என்றாள் அக்கா
"
சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா

தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல ;
மழையை !''
Download As PDF

நம் நாடு


கல்வி முடித்து விட்டு  ,வேலை தேடி தேடி அலைந்தேன்...
நான் திறந்த கதவு எல்லாம் ,வேலை வேண்டும் என்றவுடன்?
கதவுகள் தானாக மூட பட்டன . . . மூடியது ஒரு இளைஞனின்  வாழ்க்கையை மட்டும் அல்ல 
அவனின் கனவு இலட்சியம் , உழைப்பு ,எதிர்காலம் குடும்பங்களின் ஏழ்மை.
ஒவொரு   மனிதனையும் சுழற்றி அடிக்கும் ஒரு களம் இந்த வேலை இன்மை .
போராடி போராடி கீழே விழ! மனதிலும் ,உடலிலும் காயங்கள் தான் மிஞ்சியது .
நண்பர்களின்  ஊக்கமும் ,உற்சாகமும் கீழே விழும்போது மருந்தாய் மாறியது .
வேலை தேடி அலையும்  போது பசி கூட நம்மை சீண்டி பாக்கும்.
குடிக்க தண்ணீர் தேடி அலையும்  அவலம்,வேலை கொடுக்க மனம் இருந்தும் 
சம்பளம் கொடுக்க மனம் இல்லை (முதலாளிகளுக்கே உள்ள நல்ல குணம்) . 
கிடைத்த வேலையே காப்பாற்றி கொள்ளவே காலம் ஓடி போச்சு.
சாதிக்க உடலும் மனமும் இருந்தும் ,நம்மை ஒரு கைதி போல் ஆக்கி விடுகின்றன.
முதலாளி சொல்வதை தவிர வேறு செய்ய இயலாது ,முதலாளிகள்  ஆட்டி வைக்கும்  
விளையாட்டு பொம்மைகள் நாம், கீழே விழுந்தாலும் முதலாளிக்கு எந்த பாதிப்பும் இருக்காது .
இந்த ஏற்ற தாழ்வு நம் நாட்டில்  மட்டும் இல்லை இந்த உலக வரைபடத்தின் 
எந்த மூலையிலும் உண்டு .ஒவொரு இளைஞனும் ஒரு காலத்தில் முதலாளிகளே!
நாம் அனுபவித்த கொடுமைகள் நம் சந்ததிகள் அனுபவிக்க வேண்டாம் . . . 
புதிய இளைய சமுதாயத்திற்கு வழி காட்டுவோம் . முதலாளித்துவ  ஆதிக்கத்தை ஒழிப்போம்.
நம் நாட்டை உலக அரங்கில் முன்னிருதுவோம். . .
வாழ்க இந்தியா. . .
Download As PDF