Showing posts with label சமையல் டிப்ஸ். Show all posts
Showing posts with label சமையல் டிப்ஸ். Show all posts

Sunday, January 19, 2014

உருளைக்கிழங்கு பட்டாணி குருமா



தேவையானப்பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
பச்சை பட்டாணி - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


அரைக்க:
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 2 அல்லது 3
பூண்டுப்பற்கள் - 2
இஞ்சி - 1" துண்டு
பச்சை மிளகாய் - 1 அல்லது 2

தாளிக்க:
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - ஒரு சிறு துண்டு
கிராம்பு - 2

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பட்டாணியையும் வேக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவல், கசகசா, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்றாக அரைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றைப் போடவும். சோம்பு சற்று சிவந்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் வத்ங்கியவுடன், தக்காளியைச் சேர்த்து அத்துடன் உப்பு மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக மசிந்தவுடன் சாம்பாரி பொடியைச் சேர்த்து கிளறவும். பின்னர் அதில் உருளைக் கிழங்கு, பட்டாணியைச் சேர்த்து கிளறி விடவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து பிரட்டி விடவும். பின்னர் அதில் கிழங்கு மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்க்கவும். நன்றாக கிளறி விட்டு, மூடி வைத்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்தவுடன், இறக்கி வைத்து எலுமிச்சை சாற்றை சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறி விடவும்.

நன்றி அடுப்பங்கரை இணையம் 
Download As PDF

Sunday, January 05, 2014

வாழைத்தண்டு சூப்

Posted Image

வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால் கீழ்கண்ட நோய்களுக்கு கண்கண்ட மருந்தாகும். மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும். இதற்கு எல்லாம் வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி பயங்கரமான வலி ஏற்படும். இந்த கற்களை அகற்ற வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும். வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.

மேலும் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உபாதைகளையும், வெள்ளைப்படுதலையும் குணப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றும். தோல் நோய்களைக் குணப்படுத்தும்.

உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும். நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும்.

இடுப்பில் கையை வைத்து பின்னோக்கி வளைய வேண்டும்.

கையை பிரித்து குதிகால் அல்லது கணுக்காலை பற்றி பிடிக்க வேண்டும். வயிற்றை முன்னோக்கி தள்ளி ஆசனத்தை சரி செய்யவும்.

30 எண்ணிக்கை சாதாரண மூச்சில் இருக்கவும்.

குதிகால்கள் மீது அமர்ந்து ஓய்வு எடுத்து திரும்பவும் செய்யவும். மூன்று முறை செய்தால் போதும்.

பலன்கள்:

ஆஸ்த்மா, ரத்த சோகை போக்கும். சிறு வயதில் ஆரம்பித்தால் உயரம் பெறலாம். கண் பார்வை தெளிவடையும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. கூன் முதுகு நிமிர்கிறது. 
Download As PDF

Friday, December 27, 2013

சமையலில் செய்யக்கூடாதவை... ....செய்ய வேண்டியவை....


சமையலில் செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

....செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்
நன்றி தமிழ் rokkers இணையம் 

Download As PDF

Tuesday, April 30, 2013

பானகம்:-மற்றும் , BUTTERMILK. நீர்மோர்.



தேவையானவை:-

வெல்லம் - 1 கப்
எலுமிச்சைச் சாறு - 1/2 டேபிள் ஸ்பூன்
சுக்குப் பொடி - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்
புளி - 1 சுளை ( விரும்பினால்)
தண்ணீர் - 1 லி

செய்முறை:-
வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். புளி சேர்ப்பதாக இருந்தால் இந்தத் தண்ணீரில் புளியையும் போட்டுக் கரைத்து வடிகட்டலாம். எலுமிச்சைச்சாறு, சுக்குப் பொடி, உப்பு, ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்கு கலக்கி வழங்கவும். 


PAANAGAM.  பானகம்.:-

NEEDED:-

JAGGERY - 1 CUP
LEMON JUICE - 1/2 TBLSPN,
SUKKUP PODI - 1 PINCH
SALT - 1 PINCH
CARDAMOM POWDER - 1/2 TSP
TAMARIND - 1 POD ( OPTIONAL)
WATER - 1LITRE.

METHOD:-
SOAK JAGGERY IN WATER AND FILTER IT. ( IF DESIRED SOAK AND SQUEZE THE TAMARIND IN THIS WATER . ) ADD LEMON JUICE, SUKKUP PODI, SALT, CARDAMOM POWDER. MIX WELL AND SERVE. 







நீர்மோர்

தேவையானவை:-
தயிர் - 1 கப்
தண்ணீர் - 5 கப்
ஜீரா - 1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை - 1 டீஸ்பூன் பொடியாக அரிந்தது
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:-
தயிரை மத்துக் கொண்டு நன்கு கடையவும். அதில் உப்பு, இரண்டாகக் கீறிய பச்சைமிளகாய், ஜீரகம் பெருங்காயப் பொடி, கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை போட்டுத் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வழங்கவும். தேவைப்பட்டால் ஐஸ்துண்டுகள் சேர்க்கவும்.

BUTTERMILK.  நீர்மோர்.

BUTTERMILK:-

NEEDED:-
CURD -  1 CUP
WATER - 5 CUPS
JEERA - 1 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH
CURRY, CORIANDER LEAVES - 1 TSP CHOPPED
GREEN CHILLY - ( OPTIONAL). 1 NO.
SALT - 1 TSP

METHOD:-
BEAT CURD WELL WITH A LADDLE/ MATHU. ADD SALT, HALVED GREEN CHILLY, JEERA, ASAFOETIDA POWDER, CURRY, CORIANDER LEAVES. ADD WATER, MIX WELL AND SERVE. IF DESIRED ADD ICE CUBES.

நன்றி தேனுஸ் recipe இணையம் 
 photo newnew.gif
Download As PDF

மணத்தக்காளிக் கீரை மண்டி :-



தேவையானவை:-

மணத்தக்காளிக் கீரை அல்லது பொன்னாங்கண்ணிக் கீரை அல்லது அரைக்கீரை, அல்லது முளைக்கீரை அல்லது அகத்திக் கீரை. - ஒரு கட்டு.
சின்ன வெங்காயம் - 10 தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.
அரிசி களைந்த கெட்டித்தண்ணீர் - 2 கப்
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் நைசாக அரைக்கவும்.
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளி வைக்கவும். 
உப்பு - 1/2 டீஸ்பூன்


செய்முறை:-
கீரையை நன்கு கழுவி ஆய்ந்து நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும், சீரகம் போட்டுப் பொறிந்ததும், வரமிளகாய் சின்ன வெங்காயம் தாளிக்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் கீரையை சேர்க்கவும்.  2 நிமிடம் கீரையை வதக்கியபின் அரிசி களைந்த கெட்டித் தண்ணீரை ஊற்றவும். கொதித்து வரும்போது சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். 

வெங்காயமும் கீரையும் வெந்தபின் உப்பு,  அரைத்த தேங்காய் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும். இதை சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். சூப் போல அப்படியேயும் குடிக்கலாம்.


NEEDED:-
MANATHAKKAALIK KEERAI - 1 BUNCH
SMALL ONION - 10 NOS PEEL AND HALVED
RICE WASHED WATER - 2 CUP
COCONUT - 1 TBLSPN. GROUND FINELY
OIL - 2 TSP
ORID DHAL - 1 TSP
JEERA - 1/2 TSP
RED CHILLIE -1 NO HALVED
SALT - 1/2 TSP


METHOD:-

CLEAN, WASH AND CHOP THE GREENS. HEAT OIL IN A PAN ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN  ADD JEERA, RED CHILLIE AND SMALL ONIONS. SAUTE FOR A MINUTE THEN ADD THE GREENS. SAUTE FOR ANOTHER 2 MINUTES THEN ADD THE RICE WASHED WATER. BRING TO BOIL AND SIMMER IT FOR ANOTHER 5 MINUTES. ADD THE SALT AND COCONUT PASTE AND REMOVE FROM FIRE.
WE CAN DRINK THIS OR CAN EAT THIS MIXED WITH PLAIN RICE. 


நன்றி தேனுஸ் recpie இணையம் 
 photo newnew.gif
Download As PDF

குடை மிளகாய் சட்னி

குடை மிளகாய் சட்னிகுடை மிளகாயில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. 

தேவையான பொருட்கள்... 
குடை மிளகாய் - 2 
எண்ணெய் - 1 ஸ்பூன் 
கடுகு- அரை ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கடலை பருப்பு - 1 ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 
தனியா - அரை ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 2 
எள்ளு - அரை ஸ்பூன் 
சீரகம் - சிறிதளவு 
கறிவேப்பிலை - சிறிதளவு 


செய்முறை.... 
• குடை மிளகாயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

• கடாயில் எண்ணெய் ஊற்றாமல் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, எள்ளு, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும் 

• பின்னர் அதே கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி குடைமிளகாயை போட்டு நன்றாக வதக்கவும் 

• வதக்கியவை ஆறியவுடன் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் 

• கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து சட்னியில் கொட்டவும் 

• சுவையான குடைமிளகாய் சட்னி ரெடி.


நன்றி மாலைமலர் இணையம் 
 photo newnew.gif
Download As PDF

Thursday, October 25, 2012

பாசிப்பயறு சுண்டல்.


GREEN GRAM SUNDAL .பாசிப்பயறு சுண்டல்.

GREEN GRAM SUNDAL:-
NEEDED:-
GREEN GRAM - 1 CUP
SALT- 1/2TSP
GRATED COCONUT - 1 TBL SPN
OIL - 1 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
ASAFOETIDA POWDER - 1 PINCH ( OPTIONAL)
RED CHILLY - 1 NO. HALVED
CURRY LEAVES - 1 ARK

METHOD:-
WASH AND SOAK GREEN GRAM FOR 10 MINUTES. PRESSURE COOK FOR 2 WHISTLES. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD ASAFOETIDA POWDER ,HALVED RED CHILLY AND CURRY LEAVES. SAUTE FOR A MINUTE AND ADD THE COOKED GREEN GRAM WITH SALT. STIRR WELL AND ADD THE GRATED COCONUT. REMOVE FROM FIRE AND SERVE IT .

பாசிப்பயறு சுண்டல்:-

தேவையானவை:-
பாசிப்பயறு - 1 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் -1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
வரமிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளி வைக்கவும்.  
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:-
பச்சைப் பயறைக் கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். பிரஷர் குக்கரில் 2 விசில் சத்தம் வரும்வரை வேகவிடவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பெருங்காயப்பொடி, வரமிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும். அதில் வெந்த பயறு, உப்பு, தேங்காய்த்துருவல் போட்டு நன்கு கிளறிப் பரிமாறவும்.

நன்றி தேநூஸ் ரெசிப்பி 
Download As PDF

மட்டன் உப்புக் கறி


MUTTON UPPUK CURRY. மட்டன் உப்புக் கறி

 MUTTON UPPUK CURRY:-
NEEDED :-
MUTTON - 1/2 KG ( PREFER LAMB)
RED CHILLIES - 10 NOS. REMOVE SEEDS AND MAKE INTO PIECES.
SMALL INION - 15 NOS
GARLIC - 10 PODS
SALT - 2 TSP
OIL - 1 TABLESPN
ORID DHAL - 1 TSP
ANISEED - 1 TSP
CURRY LEAVES - 1 ARK

METHOD:-

PRESSURE COOK THE MUTTON. IF IT IS LAMB THEN NO NEED OF PRESSURE COOKING.. WE CAN DIRECTLY COOK IT IN THE PAN. HEAT OIL IN A PAN . ADD ORID DHAL, ANISEEDS. THEN ADD THE RED CHILLIES AND THEN THE CLEANED HALVED SMALL INION AND GARLIC. SAUTE FOR 2 MINUTES. WASH THE MUTTON PRESSURE COOK AND ADD. SAUTE FOR 2 MINUTES AND SPRAY LITTLE WATER AND COOK FOR 2O MINUTES IN A LOW FIRE . STIRR OCCSIONALLY. ADD SALT AND COOK FOR 2 MINUTES. STIRR WELL AND SERVE HOT WITH RICE AND CHAPPATI.

மட்டன் உப்புக் கறி:-
தேவையானவை:-

மட்டன் - 1/2 கிலோ ( இளம் ஆட்டுக் கறி )
சிவப்பு மிளகாய் - 10. இரண்டாகக் கிள்ளி விதைகளை உதிர்க்கவும்.
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 10 பல்
உப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:-
மட்டனைக் கழுவி பிரஷர் குக்கரில் நன்கு வேக விடவும். இளம் ஆட்டுக் கறியாக இருந்தால் பானிலேயே வேகவைக்கலாம். ப்ரஷர் குக் செய்ய தேவையில்லை. பானில் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் உளுந்து , சோம்பு தாளித்து மிளகாயைப் போடவும். அதில் தோலுரித்து இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்க்கவும். அதில் வெந்த மட்டனைப் போட்டு நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து 20 நிமிடம் சிம்மில் வேக விடவும். அவ்வப்போது கிளறி விடவும். உப்பு சேர்த்து இன்னும் 2 நிமிடங்கள் வேக வைத்து சாதம் சப்பாத்தியுடன் பரிமாறவும்

நன்றி தேநூஸ் ரெசிப்பி 
Download As PDF

காளான் க்ரேவி..


MUSHROOM GRAVY.. காளான் க்ரேவி..

MUSHROOM GRAVY..:-
NEEDED:-
MUSHROOM - 1 PACKET
BIG ONION - 1 NO
TOMATO - 1 NO
GINGER - 1 INCH PIECE
GARLIC - 4 PODS
RED CHILLI POWDER - 1 TSP
CORRIANDER POWDER - 1 TSP
GARAM MASALA - 1/4 TSP
TURMERIC POWDER - 1 PINCH
SUGAR - 1/4 TSP
SALT - 1/2 TSP
OIL - 2 TSP

METHOD:-

CLEAN AND CUT THE MUSHROOMS INTO 4 PIECES EACH.. PARABOIL FOR 3 MINUTES AND STRAIN THE WATER ., KEEP ASIDE. GRIND ONION., TOMATO SEPERATELY. GRIND GINGER AND GARLIC. HEAT OIL IN A PAN ADD ONION PASTE .. SAUTE TILL BROWN. ADD GINGER GALIC PASTE AND FRY WELL.. TILL OIL SEPRATES. ADD CHILLI PWDR., CORRIANDER PWDR., TUMERIC., GARAM MASALA., SALT AND SUGAR.. FRY FOR 1 MIN AND ADD TOMATO PUREE OR PASTE.. ADD MUSHROOMS AND POUR 1 TUMBLER WATER .. STIRR WELL AND COVER IT AND COOK FOR .5 MIN AND SERVE HOT WITH NAN OR CHAPPATIS OR PHULKAS.. KULCHAS OR FRIED RICES..

காளான் க்ரேவி:-

தேவையானவை :-
காளான் - 1 பாக்கெட்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி - 1 இன்ச் துண்டு
பூண்டு - 4 பல்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
சீனி - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:-

காளானை சுத்தம் செய்து நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 3 நிமிடம் தண்ணீரில் போட்டு அல்லது மைக்ரோ வேவில் அரை வேக்காடாக வேகவைத்து தண்ணீரை வடிக்கவும். வெங்காயம்., தக்காளியை தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி., பூண்டையும் அரைத்துக்கொள்ளவும்.. பானில் எண்ணெயைக் காயவைத்து வெங்காய விழுதைப் போட்டு வதக்கவும்.. பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது போடவும்.. நன்கு வதக்கி., எண்ணெய் பிரிந்ததும் ., மிளகாய்ப் பொடி., மல்லிப்பொடி., மஞ்சள்பொடி., கரம் மசாலா., உப்பு., சீனி போட்டு வதக்கவும். தக்காளி விழுது., காளான் சேர்த்து கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். மூடி போட்டு 5 நிமிடம் வேகவைத்து சூடாக நான்., சப்பாத்தி., ஃபுல்கா ரொட்டி.,குல்ச்சா அல்லது ஃப்ரைட் ரைஸுடன் பரிமாறவும்..

நன்றி தேநூஸ் ரெசிப்பி 

Download As PDF

பாதாம் அல்வா செய்முறை


BADAM HALWA. பாதாம் அல்வா.

BADAM HALWA :-


NEEDED :-


BADAM - 100 GMS


SUGAR - 200 GRAMS


GHEE - 200 GRAMS.


MILK - 1 LADDLE.


KEVRA - FEW STRANDS. ( OPTIONAL)


BELL BRAND YELLOW FOOD COLOUR - 1PINCH



METHOD:-


SOAK THE BADAM IN HOT WATER FOR 2 HOURS. REMOVE THE SKIN AND COAARSLY GROUND IT WITH LITTLE MILK. PLACE IT IN A PAN WITH SUGAR. KEEP IT IN STOVE AND STIRR CONTINUOUSLY WITH MEDIUM FIRE. WHEN IT BECOMES THICK AND STICKY TO THE LADDLE REMOVE FROM FIRE AND ADD THE MELTED GHEE SLOWLY STIRRING SIMULTANEOUSLY. STIRR TILL ALL THE GHEE IS ABSORBED. ADD THE SAFFRON STRANDS AND SERVE HOT.



THIS IS A DELICIOUS HALWA AND SERVED IN THE ENGAGEMENTS AND PENN AZAIPPU IN CHETTINAD MARRIAGES .



பாதாம் ஹல்வா;-


தேவையானவை:-


பாதாம் பருப்பு - 100 கி


ஜீனி - 200 கி


நெய் - 20 கி


பால் - 1 கரண்டி


குங்குமப்பூ - சிறிது.


பெல் ப்ராண்ட் யெல்லோ ஃபுட் கலர் - 1 சிட்டிகை.



செய்முறை :-


பாதாம் பருப்புக்களை 2 மணி நேரம் கொதிநீரில் ஊறவைத்து தோலுரிக்கவும். சிறிது பால் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். பானில் அரைத்த பாதாம் ., ஜீனி போட்டு மிதமான தீயில் கிளறவும். அல்வா சட்டியில் ஒட்டாமல் கரண்டியில் திரண்டு ஒட்டிக் கொள்ளும் போது அடுப்பை அணைத்து பானை கீழே இறக்கி வைக்கவும். உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொண்டே கை விடாமல் கிளறவும். மொத்த நெய்யும் உறிஞ்சப்பட்டபின் தொட்டால் கையில் அல்வா ஒட்டாது. குங்குமப்பூவை போட்டு சூடாக அல்வாவை பரிமாறவும்.



இது மிக சுவையான அல்வா. செட்டிநாட்டில் திருமணம் பேசி முடித்துக் கொள்ளும் போதும்., பெண் அழைப்பின் போதும் இது பரிமாறப்படும்.
Download As PDF

Tuesday, May 01, 2012

ஸ்பைசி வெஜிடபிள்


பிரைட் ரைஸ், நூடுல்ஸ், வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றுக்கு சுவையான சைடு டிஷ் தேவை. அதற்கு ஸ்பைசி வெஜிடபிள் தயாரித்துக் கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.
தேவையானவை:
காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர் சேர்த்து-1/4 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள்- 1 டேபிள் ஸ்பூன்
சோளமாவு-ஒரு டேபிள் ஸ்பூன்
மைதா மாவு-ஒரு டேபிள் ஸ்பூன்
வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்
அஜினோமோட்டோ- 1 சிட்டிகை
தக்காளி கெச்சப்- 1 டீஸ்பூன்
லெமன் ஜூஸ்- 1/4 டீஸ்பூன்
எண்ணைய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு
உப்பு-தேவைக்கேற்ப
செய்முறை:
காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி தேவையான உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதா மாவு தூவிப் பிசிறி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், அஜினோமோட்டா, தக்காளி கெச்சப் சேர்த்து கிளறவும். தேவையான உப்பு சேர்த்து கிளறி அத்துடன் வெண்ணைய் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் பொரித்த காய்கறிகளைச் சேர்த்து புரட்டி கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி விடவும். மொறுமொறுவென நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த சைடு டிஷ்சை மாலை நேர சிற்றுண்டியாகக் கூட செய்து சாப்பிடலாம்.
Download As PDF

Tuesday, April 03, 2012

ஓட்ஸ் சூப்


ஓட்ஸ் சூப்

தேவையான பொருட்கள்...
 
ஓட்ஸ்  - ஒரு கப்
பால்    - ஒரு கப்
பூண்டு நறுக்கியது (விரும்பினால்) - 3 பல்       
மிளகுத்தூள்     - 1/2 ஸ்பூன்
வெண்ணெய்   - 2 ஸ்பூன்
உப்பு          - தேவைக்கேற்ப.
 
செய்முறை....
 
• ஒரு கடாயில் பூண்டை போட்டு லேசாக வதக்கி அதில் வெண்ணெய்யை உருக்கி அதில் ஓட்ஸை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
 
• பின்பு 2 கப் கொதிக்கும் நீர் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேக விடவும். பின்பு பால், உப்பு, சேர்த்து 2 நிமிடம் வேக விட்டு மிளகு தூள் தூவி இறக்கவும்
 
* ஓட்ஸ் சூப் தயார்.
Download As PDF

Tuesday, February 07, 2012

சமயல்பொருட்கள் ஆங்கில வார்த்தைகள்


மளிகைப் பொருட்கள் / சமயல்பொருட்கள் / காய்கனிகள் / மூலிகை கீரைகளின் ஆங்கில வார்த்தைகள். விடுபட்டவற்றை சொல்லலாம். தவறுகளை சுட்டிகாட்டலாம்.

ஜாதிக்காய் - Nutmeg - நட்மெக்
ஜாதிபத்திரி - Mace - மெக்
இஞ்சி - Ginger - ஜின்ஜர்
சுக்கு - Dry Ginger - டிரை ஜின்ஜர்
பூண்டு - Garlic - கார்லிக்
வெங்காயம் - Onion - ஆனியன்
புளி - Tamarind - டாமரிண்ட்
மிளகாய் - Chillies - சில்லிஸ்
மிளகு - Pepper - பெப்பர்
காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் - Red chillies
பச்சை மிளகாய் - Green chillies
குடை மிளகாய் - Capsicum
கல் உப்பு - Salt - ஸால்ட்
தூள் உப்பு - Table salt
வெல்லம்/கருப்பட்டி - Jaggery - ஜாக்கரீ
சர்க்கரை/சீனி - Sugar - ஸுகர்
கற்கண்டு - Sugar Candy
ஏலக்காய்/ஏலம் - Cardamom - கார்டாமாம்
பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை - Almonds
முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு - Cashew nuts
கிஸ்மிஸ் - Dry Grapes
லவங்கம்,கிராம்பு - Cloves - க்லெளவ்ஸ்
கசகசா - Poppy - பாப்பி
உளுந்து - Black Gram - பிளாக் கிராம்
கடலைப் பருப்பு - Bengal Gram - பெங்கால் கிராம்
பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு - Moong Dhal/ Green Gram - மூனிங் தால்/கீரின் கிராம்
பாசிப்பருப்பு - Moong Dal
கடலைப்பருப்பு - Gram Dal - கிராம் தால்
உழுத்தம் பருப்பு - Urid Dhal
துவரம் பருப்பு - Red gram / Toor Dhal- ரெட்கிராம்
கம்பு - Millet - மில்லட்
கேழ்வரகு - Ragi - ராகி
கொள்ளு - Horse Gram - ஹார்ஸ் கிராம்
கோதுமை - Wheat - வீட்
கோதுமை ரவை - Cracked Wheat
சோளம் - Corn
சோளப்பொறி - Popcorn
எள்ளு - Sesame seeds / Gingelly seeds
நெல் - Paddy - பாடி
அரிசி - Rice - ரய்ஸ்
அவல் - Rice flakes
பச்சை அரிசி - Raw Rice
புளுங்கல் அரிசி - Par boiled rice
கடலை மா - Gram Flour
மக்காச்சோளம் - Maize - மெய்ஸ்
வாற்கோதுமை - Barley - பார்லி
பச்சை பட்டாணி - Green peas
சேமியா - Vermicelli
சவ்வரிசி - Sago
ரவை - Semolina
கொண்டை/கொண்டல் கடலை - Chickpeas/Channa
கடுகு - Mustard - முஸ்டார்ட்
சீரகம் - Cumin - குமின்
வெந்தயம் - Fenugreek
சோம்பு,பெருஞ்சீரகம் - Anise seeds
பெருங்காயம் - Asafoetida - அசஃபோய்டைடா
மஞ்சள் - Turmeric - டர்மரிக்
ஓமம் - Ajwain / Ajowan
தனியா - Coriander - கோரியண்டர்
கொத்தமல்லி தழை - Coriander Leaf -கோரியண்டர் லீப்
கறிவேப்பிலை - Curry Leaves
கஸ்தூரி - Musk - மஸ்க்
குங்குமப்பூ - Saffron - சஃப்ரான்
பன்னீர் - Rose Water - ரோஸ் வாட்டர்
கற்பூரம் - Camphor - கேம்ஃபர்
மருதாணி - Henna - ஹென்னா
துளசி - Tulsi
எலுமிச்சை துளசி - Basil
எண்ணெய் - Oil - ஆயில்
கடலை எண்ணெய் - Gram Oil - கிராம் ஆயில்
தேங்காய் எண்ணெய் - Cocoanut Oil - கோக்கநட் ஆயில்
நல்லெண்ணெய் - Gingili Oil/Sesame oil - ஜின்ஜிலி ஆயில்
வேப்ப எண்ணெய் - Neem Oil - நீம் ஆயில்
பாமாயில் - Palm Oil
ஆலிவ் ஆயில் - Olive Oil
பால் - Milk - மில்க்
பால்கட்டி - Cheese - ச்சீஸ்
நெய் - Ghee - கீ
வெண்ணெய் - Butter - பட்டர்
தயிர் - Curd/Yoghurt - க்கார்ட்
மோர் - Butter Milk - பட்டர் மில்க்
கீரை - Spinach - ஸ்பீனச்
அவரை - Beans - பீன்ஸ்
கர்பூரவள்ளி - Oregano
நார்த்தங்காய் - Citron - சிட்ரான்
திருநீர்பச்சை - Ocimum-basilicum
சீத்தாப்பழம் - Custard-apple
மாதுளை - Pomegranate
பரங்கிக்காய்/பூசனிக்காய் - Pumpkin
கருங்காலி மரம் - Cutch-tree
அதிமதுரம்-Liquorice
அருகம்புல் - Bermuda Grass
வல்லாரை கீரை - Pennywort (Centella asiatica)
புதினா இலை - Mint leaves
வெற்றிலை - Betel leaves
நொச்சி இலை - Vitexnegundo (Chaste Tree)
அத்தி - Fig
கீழாநெல்லி - Phyllanthus nururi
தாழை மரம் - Pandanus Odoratissimus,Fragrant Screwpine
தூதுவளை - Purple-fruited pea eggplant
துத்திக்கீரை - Abutilon indicum
பிரமத்தண்டு - Argemone mexicana Linn,(Ghamoya) Papaveraceae
கோவைக்காய் - Coccinia grandis
முடக்கத்தான் கீரை - Cardiospermum halicacabum
குப்பைமேனி - Acalypha indica; linn; Euphor biaceae
நத்தைச்சூரி - Rubiaceae,Spermacoce hispida; Linn;
சோற்றுக்கற்றாழை - Aloe Vera
நாவல் பழம் - Naval fruit (Syzygium jambolana)
பேய் மிரட்டி செடி - Anisomeles malabarica, R.br, Lamiaceae
தேள்கொடுக்கு செடி - Heliotropium
நிலக்குமிழஞ் செடி - Gmelina Asiatica
நெல்லிக்காய் - Amla,Indian Gooseberries
சதகுப்பை (சோயிக்கீரை,மதுரிகை) - Peucedanum grande; Umbelliferae
சிறு குறிஞ்சான் - Gymnema Sylvestre; R.Br.Anclepiadaceqe
அரிவாள்மனை பூண்டு - Sida caprinifolia
அகத்திக்கீரை - Sesbania grandiflora
செண்பகப் பூ - Sonchafa (champa)
சுண்டைக்காய் - Solanum torvum(Turkey Berry)
செம்பருத்தி - Hibiscus(Shoe Flower)
கரும்பு - Sugar cane
நீர்முள்ளி - Long leaved Barleria (Hygrophila auriculata)
அன்னாசிப் பூ - Star Anise
பூவரசு - Portia tree (Thespesia populnea)
ஊசிப்பாலை - Oxystelma Secamone
அமுக்கரா சூரணம்,அசுவகந்தி - Indian winter cherry
கத்தரிக்காய் - Egg plant / Aubergine / Brinjal
கொய்யாப் பழம் - Guava
மரவள்ளிக் கிழங்கு - Tapioca
சர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு - Sweet Potato
சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு - Yam
விளாம் பழம் - Wood apple
முள்ளங்கி - Radish / parsnip
புடலங்காய் - Snake gourd
பாகற்காய் - Bitter gourd
வெண்டைக்காய் - Ladies Finger/ Okra
வேர்கடலை/நிலக்கடலை - Peanut
வாழைக்காய் - Ash Plantain
வாழைப்பழம் - Banana
ஊறுகாய் - Pickle
உருளைக் கிழங்கு - Potato
தேங்காய் - Coconut
இளந்தேங்காய் - Tender Coconut
இளநீர் - Tender Coconut water
பதநீர்/பயினி - Neera /Palmyra juice
கள்ளு - Palm wine/Palm Toddy
சுண்ணாம்பு - Lime
ஆப்பச் சோடா - Baking Soda
தீப்பெட்டி - Match Box
ஊதுபத்தி/ஊதுவர்த்தி - Incence Stick

Download As PDF

Monday, January 30, 2012

சமையல் குறிப்புகள்



பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.

ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.

இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.

மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.

பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.

தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.

எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.

தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

நெய்யை காய்ச்சி இறக்கும் போது 1/2 தேக்கரண்டி வெந்தயத்தை போட்டால் நல்ல வாசனையுடன் இருக்கும்.

கீரையின் பச்சை நிறம் மாறாமல் இருக்க 1 தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்துச் சமைக்க வேண்டும்.

குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு பிடி சோற்றை உருட்டி அதில் போட்டு விட்டால், அதிக உப்பை அந்த சோற்று உருண்டை உறிஞ்சிக் கொள்ளும்.

தோசைக் கல்லில் தோசை வராமல் இருந்தால் வெங்காயத்தை அதில் தேய்த்து விட்டு பின் தோசை சுட்டால் தோசை நன்றாக வரும்.

அரிசி, பருப்பு வகைகளைப் பத்திரப்படுத்தி வைக்கும் போது காய்ந்த வேப்பிலைகளை போட்டு வைத்தால் புழு பூச்சிகள் அண்டாது.

அடி பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய சிறிது நீரில் வெங்காயத்தை போட்டு அதே பாத்திரத்தை கொதிக்க விட்டால் சுத்தமாக மாறிவிடும்.

முள்ளங்கியை வேக வைக்கும் போது சிறிது சர்க்கரையை சேர்த்து வேக வைத்தால் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும்.

வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கியதும் மோர் கலந்த நீரில் போட்டு விட்டால் கருக்காமல் இருக்கும்.

முட்டையை வேக வைக்கும் போது தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து விட்டால் சீக்கிரம் வேகுவதுடன் முட்டையின் ஓட்டையும் எளிதில் பிரிக்கலாம்.

நன்றாக முற்றிய தேங்காயை துருவுவதற்கு கஷ்டமாக இருக்கும். அதற்கு தேங்காயை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு துருவினால், மிகவும் எளிதாகத் துருவலாம்.

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதில் சிறிது பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.

பொங்கல் செய்யும் போது நீர் அதிகமாகி விட்டால், அதில் வறுத்த ரவையை ஒன்று அல்லது இரண்டு கைப்பிடி போட்டு கிளறினால் பொங்கல் நன்கு சேர்ந்து கெட்டியாகி விடும்.

இட்லிக்கு அரைத்த மாவில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டுக் கலந்து வைத்தால், இட்லி மிருதுவாக இருக்கும்.

உளுந்து வடை செய்யும் போது ஒரு கைப்பிடி கொத்தமல்லித்தழையை சேர்த்து ஆட்டி செய்தால், நறுக்கிப் போட்டு செய்வதை விட வாசனையாக இருக்கும்.

ரவா தோசை செய்யும் போது 2 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென சுவையாக இருக்கும்.

முதல் நாள் வாங்கிய கீரையை மறுநாள் பயன்படுத்தும் போது கீரையின் வேர்பகுதி தண்ணீரில் இருக்குமாறு வைத்திருந்தால், கீரை மறுநாள் வரை வாடாமல் இருக்கும்.

அப்பளம், வடாம், வற்றல் போன்றவை வைத்திருக்கும் பாத்திரத்தில் சிறிது பெருங்காயத்தைப் போட்டு வைத்தால், அவை அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.

உலர் திராட்சையை காற்றுப் புகாவண்ணம் நன்கு மூடிய பாட்டிலில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு வரும்.

காபி போட்ட பின், அந்த காபி தூளை காயவைத்து பாத்திரம் துலக்கினால், பாத்திரங்கள் மின்னும்.

கடலைப் பருப்பை வறுத்து, பின் போளி செய்தால், போளி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

பட்டாணியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைத்தால், வெந்ததும் வாசனை நன்றாக இருக்கும்.

தயிர் பச்சடி நீர்த்துப் போய்விட்டால், அதனுடன் சிறிது நிலக்கடலையை வறுத்து பொடியாக அரைத்து சேர்த்தால் பச்சடி கெட்டியாகிவிடும்.

குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால், தக்களிப் பழத்தையோ அல்லது உருளைக்கிழங்கையோ வெட்டிப் போட்டு கொதிக்க வைத்தால் உப்பு குறைந்துவிடும்.

சாம்பார் செய்யும் போது அதனுடன் ஒரு நெல்லிக்காயைச் சேர்த்துச் செய்தால், சாம்பாரின் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.

சேப்பங்கிழங்கை தோல் உரித்ததும் அதன் கொழகொழத்தன்மை போக சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்து விட்டு பிறகு எடுக்க வேண்டும்.

அடைக்கு அரைக்கும் போது சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் அடை மொறுமொறுப்பாக இருக்கும்.

கொழுக்கட்டை செய்யும் போது மாவுடன் சிறிது பால் சேர்த்துப் பிசைந்து செய்தால் கொழுக்கட்டை விரியாமல் இருக்கும்.
உளுத்தம்வடை செய்யும் போது சிறிதளவு இட்லி மாவு சேர்த்துச் செய்தால், வடை சுடும் போது அதிகம் எண்ணெய் குடிக்காததோடு, சுவையும் நன்றாக இருக்கும்.

பாகற்காயை சிறிது நேரம் உப்பு நீரில் ஊறவைத்து பின்னர் சமைத்தால், கசப்பு குறைவாக இருக்கும்.

கிழங்குகளை வேக வைக்கும் முன், உப்பு நீரில் சிறிது நேரம் ஊறவைத்த பின் வேக வைத்தால் கிழங்கு விரைவில் வெந்து விடும்.

இட்லிக்கான அரிசியுடன் சிறிது அவல் சேர்த்து ஊறவைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போன்று இருக்கும்.

பூரிக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால், பூரி நமத்துப் போகாமல் நீண்ட நேரம் இருக்கும்.

தேங்காய் சட்னி செய்யும் போது, பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கிய பின் அரைத்தால், சுவை கூடுதலாக இருக்கும்.

முட்டை வேக வைக்கும் போது, சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால், முட்டை ஓடு உரிக்க எளிதாக இருக்கும்.

மைக்ரோவேவ் அவனில் சமைக்கும் போது காய்கறிகளை ஒரே அளவாக நறுக்க வேண்டும். இல்லையென்றால் சிறிதாக நறுக்கியவை வெந்தும், பெரிதாக நறுக்கியவை வேகாமலும் இருக்கும்.

அரிசியால் செய்த உணவுகளை மைக்ரோவேவ் அவனில் மறுமுறை சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், விரைவில் சூடாகும்.

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு தயிர் அல்லது முட்டை சேர்த்துச் செய்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.

மீனை சுத்தம் செய்வதற்கு முன் சிறிது நேரம் உப்பு சேர்த்து கிளறி வைத்திருந்தால், மீனிலிருந்து வாடை எதுவும் வராது.

இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவைத்தால், இறால் வாடை மிகவும் குறைவதோடு, சுவையும் கூடுதலாக இருக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சோயா மாவும் கலந்து பிசைந்து சப்பாத்தி செய்தால் மிருதுவாக இருக்கும்.

Download As PDF