Wednesday, September 07, 2011

இறால் வடை


இறால் வடை

தேவையானப் பொருட்கள்
இறால் - 1/4 கிலோ
பச்சரிசி ரவை - 2 க‌ப்
ப மிளகாய் - 5
க‌றிவே‌ப்‌பிலை, கொத்தமல்லி
மஞ்சள் தூள் - 1 ‌சி‌ட்டிகை
கரம் மசாலாத் தூள், இஞ்சி, பூ‌ண்டு ‌விழுது - தலா 1 தே‌க்கர‌ண்டி
எண்ணெய் - 1 க‌ப்
உப்பு


செய்முறை

இறா‌லை தோ‌ல் உ‌ரி‌த்து கழு‌வி, இர‌ண்டிர‌ண்டாக நறு‌க்‌கி அ‌தி‌ல் மஞ்சள் தூள், மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, தூ‌ள் உப்பு அனைத்தையும் போட்டு பிசைந்து கொள்ள வேண்டும்.

பச்சை மிளகாய், க‌‌றிவே‌ப்‌பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி இறாலுட‌ன் சே‌ர்‌க்கவு‌ம்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு இறாலை வதக்‌கவு‌ம். ந‌ன்கு வத‌ங்‌கியது‌ம் இற‌க்‌கி ஆற ‌விடவு‌ம்.

ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் அ‌ரி‌சி மாவை‌க் கொ‌ட்டி அ‌தி‌ல் இறா‌ல் வத‌க்கலை சே‌ர்‌க்கவு‌ம்.

மா‌வி‌ல் தேவையான அளவு உ‌ப்பு சே‌ர்‌த்து ‌சி‌றிது த‌ண்‌‌ணீ‌ர் தெ‌ளி‌த்து வடை மாவு பத‌த்‌தி‌ற்கு ‌பிசையவு‌ம்.

வாணலியில் 2 க‌ப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டி போட வேண்டும்.

வடை இரு ப‌க்கமு‌ம் ந‌ன்கு வெ‌ந்து பொ‌ன்‌னிறமானது‌ம் எடு‌த்து ப‌ரிமாறவு‌ம்.
Download As PDF

தக்காளி சூப்


தக்காளி சூப்

தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த தக்காளி - 5
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 6 பல்
சோள மாவு - 1 மேஜைக் கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை

1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

3. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.

4. தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும்.

5. சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.

6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.

7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
Download As PDF

ரவா லட்டு


ரவா லட்டு

தேவையான பொருட்கள்

ரவை - 3/4 கிலோ
சர்க்கரை - 1/2 கிலோ
முந்திரி - 10
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
பால் - 1/4 லிட்டர்
நெய் - 50 கிராம்
திராட்சை - 10


செய்முறை

1. ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

2. சர்க்கரையையும், ஏலக்காயையும் மிக்ஸியில் தனித்தனியே பொடித்துக் கொள்ளவும்.

3. பிறகு சர்க்கரையையும், ரவையையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

4. இந்த கலவையில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.

5. பிறகு காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக சேர்த்து உருண்டை பிடிக்கவும்.


குறிப்பு

1. சூடாக இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும். அப்போது தான் உருண்டை உதிராமல் இருக்கும்
Download As PDF

Thursday, September 01, 2011

மனதில் மகிழ்வில்லை என்று ஒருவர் கூறினால் என்ன அர்த்தம்?



மனம் மகிழுங்கள் தொடர் :
னதில் மகிழ்வில்லை என்று ஒருவர் கூறினால் என்ன அர்த்தம்
அவர் எதிர்பார்த்தபடி அவர் வாழ்க்கை அமையவில்லைஅவர் எண்ணப்படி பல விஷயங்கள் நடைபெறவில்லை என்று அர்த்தம். அவரது மகிழ்வின்மைக்குக் காரணம் தேடினால் அடிப்படை இதுவாகத்தான் இருக்கும்.. எனவே அவர் என்ன செய்கிறார்தம் மனதில் மகிழ்விற்கு "நோவேகென்ஸி" போர்டு மாட்டிவிட்டு வருத்தம்,சோகம்அயர்வு இப்படி பலவற்றையும் வாடகையே இல்லாமல் குடியமர்த்திக் கொள்கிறார்.
சரி! எதிர்பார்ப்பு என்பது என்னஅது வயது,பால்வாழ்க்கைத்தரம் போன்றவற்றைப் பொருத்து ஆளுக்கு ஆள் மாறுபடும் ஒன்றாகும்.
 
குழந்தைகளின் எதிர்பார்ப்பு ஓர் எளிய வட்டத்திற்குள் நிற்கும் பீட்ஸாஐஸ்க்ரீம்வீடியோ கேம்ஸ் இப்படி ஏதாவது ஓர் எதிர்பார்ப்பு அவர்களுக்கு நிறைவேறவில்லை என்றால்அடம்,அழுகைபிடிவாதம் இத்தியாதி. ..... எதிர்பார்த்ததுகிடைத்துவிட்டால் பார்க்கவேண்டுமே அவர்கள் மகிழ்ச்சியை. இதையெல்லாம் பார்க்கும் ஒரு பெண் "இதென்ன சிறுபிள்ளைத்தனம்?" என்பார். ஆனால் அவர் எதிர்பார்த்த டிஸைனில் புடவைநகை கிடைக்கவில்லை அல்லது அதற்குக் கணவர் ஓக்கே சொல்லவில்லை என்றால் மகிழ்ச்சி தொலைந்து முகம், "உம்". கணவர்கள்எதிர்பார்ப்பு வேறு ரகம். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு நாலு கால் ஆசனம்பணம்பினாமி பெயர்களில் சொத்து என விரியும்.. இப்படி எதிர்பார்ப்பு என்பது எண்ணற்ற வகையில் ஆளுக்கேற்ப மாறுபடும்;அது நிறைவேறாத போது அதற்கேற்ப ஏமாற்றமும் மாறுபடுகிறதுஅதற்கேற்ப மன மகிழ்வும் தொலைகிறது.
இவையனைத்தும் உணர்த்தும் உண்மை - நினைத்ததெல்லாம் நிறைவேறிய முழு மனிதரென்று எவருமே உலகில் இல்லவே இல்லை என்பதையே!
 
"எனவே கனவான்களேநான் எப்பொழுது மகிழ்வடைவேன் என்றால்..."என்று ஒரு காலநிர்ணயம் செய்து கொள்வது அபத்தம். உலக வாழ்க்கை முழு நிறைவற்றது என்றானபின்சில சமயம் உற்சாகம்சில சமயம் ஏமாற்றம்சில சமயம் வெற்றிசில சமயம் தோல்வி என்பது இயற்கை விதி. "இன்பம் பாதிதுன்பம் பாதி,இரண்டும் சேர்ந்த கலவை நான்" என்பதுதான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது நாடகமேடையாக இருக்கலாம். நாமெல்லாம் நடிகர்களாக இருக்கலாம். அதற்காக,நாடகம்போல் அனைத்துக் காட்சிகளும் முடிந்து இறுதியில் சுபம் என்று திரை இழுத்து மூடும்போது கைதட்டி மகிழலாம் என்று காத்திருந்தால்நமது வாழ்க்கை நாடகம் முடிந்திருக்கும். ஏனெனில் அது ஒரேஒரு காட்சி மட்டுமே. மறுநாள் அடுத்தக் காட்சி கிடையாது. பேருந்து நிலையத்தில் காத்திருந்து பேருந்து வந்ததும் ஏறி அமர்ந்து கொள்வதுபோல் மகிழ்ச்சி வந்ததும் மகிழ்ந்து கொள்ளலாம் என்பது வாழ்க்கையில் நடக்காது. மகிழ்ச்சி என்பது ஓரிடத்தில் அமர்ந்திருக்கவில்லை நாம் நடந்து போய் அடைவதற்கு. கவலைகளெல்லாம் முடிந்து, "அப்பாடா வந்து சேர்ந்துவிட்டோம்" என்றும் மகிழ்வடைய முடியாது.
மகிழ்வு என்பது ஒரு தீர்மானம். அந்தத் தீர்மானத்தை நாம் உளமாற எடுக்க வேண்டும். முடிந்தது விஷயம்.சிக்கலெல்லாம் அந்தத் தீர்மானத்தை எடுப்பதில்தான். நாம் விடும் ஒவ்வொரு மூச்சும் நகரும் ஒவ்வொரு வினாடியும் சந்தேகமேயின்றி உணர்த்தும் ஒரு விஷயம் நமது வாழ்நாள் குறைந்து கொண்டே போகிறதுஎன்பதைத்தான். பிறந்த நொடியிலிருந்து நமது நெஞ்சில் கட்டித்தொங்கவிடப்பட்டுள்ளது "கவுண்ட் டௌன்" (count down) கடிகாரம். அதிலுள்ள ஒரே சௌகரியம்கவுண்ட் டௌன் எண்ணிக்கை நமக்குத் தெரியாது என்பது மட்டுமே. ஆயினும் இதில் நாம் உணர வேண்டியது இப்புவியில் நமது அவகாசம் குறைவு என்பதையே!. புவியின் வரலாற்றையும் இன்னமும் சுற்ற அதற்குள்ள வாய்ப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமது வாழ்க்கை அவகாசம் ஒரு புள்ளி மட்டுமே.
இதைச் சரியானபடி கருத்தில் கொண்டால் போதும். நிகழ்காலத் தருணத்தைநொடியை உபயோகமாய்,மகிழ்வாய் மாற்ற முடியும். இதற்குக் குதர்க்கமாய் அர்த்தம் புரிந்து கொண்டு, "இவ்வளவு தானே அவகாசம்! ஓர் ஆட்டம் ஆடிவிடலாம்" என்று வாழ்க்கையில் கெட்டக் குத்தாட்டம் போட்டால் அடைவது மகிழ்ச்சியில்லைஅதுகானல் நீர்! உலக வாழ்க்கை முழு நிறைவற்றதே. ஆனால் உலகில் அழகும் அற்புதமும் நிறைந்துள்ளன. இறைவன் படைக்கும் போதே நிரப்பி வைத்தவை அவை. எனவே நாம் மகிழ்வாயிருக்கவரிந்துகட்டி இறங்கி உலகில் அனைத்தையும் செப்பனி்ட்டால்தான் ஆச்சு என்று கவலைப்படாமல்நமது கண்களால் நாம் சரியான கோணத்தில் பார்த்தாலே போதுமானது. அதற்காகத் திருடன் செயினை லவட்டிக் கொண்டு ஓடும்போதுஅவன் ஓடும் அழகை ரசிப்பது மடமை. தீமையைத் தவிர்தடு என்பதையும் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சிந்தனையாளர் கூறினார் - "ஒரு ரகசியம் சொல்கிறேன்நீ மனம் மகிழ வேண்டுமானால்மனம் மகிழ்."  என்ன புரிகிறது?  யாரும் நம் வீட்டுக் கதவைத் தட்டி "இந்தா மகிழ்வு" என்று இலவச டிவிவேட்டிசேலை போல் தரப் போவதில்லை,நாமும் கடைக்குச் சென்று ஒரு கிலோ மகிழ்வு கொடுப்பா என்று வாங்கி வரப் போவதில்லை.

எதிர்பார்ப்புஏமாற்றம் என்பனவற்றைச் சரியான விகிதாச்சாரத்தில் புரிந்து கொண்டுமகிழ்வு எனும் தீர்மானத்தை மனம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எனில் மனம் மகிழலாம்.
நன்றியுடன் மீள்பதிவு : -( நூருத்தீன்-பதிவு -17)   மேலும்பயணிப்போம் 
Download As PDF

ஒரே நேரத்தில் மூன்று உலவிகளில் உலாவ


ஒரே நேரத்தில் மூன்று உலவிகளில் உலாவ:

இணையதளங்களை வலம்வருவதற்கு அனைவராலும் பயன்படுத்தப் படுவது உலவிகள் மட்டுமே ஆகும். இதற்கு மாற்றாக எதுவும் இல்லை. எனினும் இணைய பயன்பாட்டு அப்ளிகேஷன்கள் ஒரு சில உண்டு. இவையும் உலவிகளில் வடிவிலேயேதான் இருக்கும். இவை இரண்டுக்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் பெரிதாக இல்லாவிட்டாலும், ஒருசில வசதிகள் இதுபோன்ற அப்ளிகேஷன்களில் உண்டு.

அந்த வகையில் Multibrowser என்னும் மென்பொருள் வாயிலாக, ஒரே நேரத்தில் மூன்று உலவிகளில் பணியாற்ற முடியும். அவை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0, 8.0, 9.0, நெருப்புநரி உலவி மற்றும் கூகுள் குரோம் உலவி போன்றவை ஆகும். மென்பொருளை தரவிறக்க சுட்டி

http://multi-browser.com/en


இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில் இருக்கும் அட்ரஸ்பாரில் இணையதள முகவரியினை உள்ளிடவும். பின் என்டர் கீயினை அழுத்தவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட வலைத்தளத்தினை காணமுடியும். பின் நீங்கள் உலவிகளை தேர்வு செய்து அதற்கிடையேயுள்ள மாற்றத்தினை காண முடியும். மேலும் மூன்று உலவிகளிலும் நீங்கள் குறிப்பிட்ட வலைப்பக்கத்தினை ஒரேஇடத்தில் காண முடியும்.
Download As PDF

ஹார்ட்டிஸ்கினை தனித்தனி பகுதிகளாக பிரிக்க


ஹார்ட்டிஸ்கினை தனித்தனி பகுதிகளாக பிரிக்க:

கணினியில் இயங்குதளத்தினை நிறுவும்போதே தனித்தனி பகுதிகளாக வன்தட்டினை பிரித்திருப்போம். ஒரு சிலர் இயங்குதளத்தை நிறுவும் போது முறையாக வன்தட்டினை பிரிக்காமல் விட்டுவிடுவார்கள். அதாவது C: மட்டுமே பிரித்து வைத்திருப்பர், அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனினும் கோப்புகளை முறையாக கையாள முடியாது. எனவே வன்தட்டினை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்திருப்பதே சிறந்தது.

வன்தட்டினை தனித்தனி பகுதிகளாக பிரிக்க நம்முடைய ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திலேயே வழி உள்ளது. ஆனால் அதில் ஒரு சில வசதிகள் குறைவாக உள்ளது. வன்தட்டினை முறையாக பிரிக்கவும். பிரித்த வன்தட்டில் மாற்றங்கள் செய்யவும், இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கிறன. அதில் ஒன்றுதான் இந்த Aomei Dynamic Disk Manager. மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் பதிந்து கொள்ளவும். பின் வேண்டிய படி வன்தட்டினை முறைப் படுத்தி கொள்ளவும். இந்த மென் பொருள் பீட்டா பதிப்பாகும். மேலும் இந்த மென்பொருள் மூலம் ஏற்கனவே பிரித்த பகுதியையும் மாற்றி யமைத்துக் கொள்ள முடியும். இந்த பீட்டா வெர்சன் ஜீலை 31 வரை மட்டுமே. முழுபதிப்பும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:தமிழ் கம்ப்யூட்டர் 
Download As PDF

கணினியை பற்றி துல்லியமாக முழுவிவரங்களை அறிய


கணினியை பற்றி துல்லியமாக முழுவிவரங்களை அறிய:

கணினியை பயன்படுத்தும் அனைவருக்கும், கணினியை பற்றி முழுமையாக தெரிந்திடாது. ஒரு சிலருக்கு தன்னுடைய கணினியில் என்னென்ன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்கள் இருக்கின்றன என்று தெரியாது. ஒரு சில நேரங்களில் தன்னுடைய நண்பர்கள் அவர்களுடைய கணினியை பற்றி கேட்பார்கள் அப்போதுதான் அவசரம் அவசரமாக தன்னுடைய கணினியில் என்னென்ன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்கள் இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்ப்போம். 

இவற்றை நாம் தெளிவாகவும் காண முடியாது. விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்திலும் கிடைக்காது. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்கவும், கணினியை பற்றிய முழுவிவரங் களையும் அறிய ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது. மென்பொருளை தரவிறக்கசுட்டி
http://arvinsoft.weebly.com/sys-information.html   


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். இதில் தனித்தனி பகுதிகள் உள்ளன. அதன்படி கணினியில் என்னென்ன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்கள் உள்ளன என்பதை மிகவும் தெளிவாக காண முடியும். மிகவும் துல்லியமாக கணினியின் விவரங்களை காண முடியும்.
நன்றி : தமிழ்கம்ப்யூட்டர்

Download As PDF

கணினியின் நிலையை அறிய


கணினியின் நிலையை அறிய:
கணினியில் இருக்கும் வன்பொருள்களை பொறுத்தே கணினியினுடைய வேகமும் அமையும். ஒரு சிலர் தனது கணினி ஆமை வேகத்தில் உள்ளது என்று கூறுவார்கள்,ஒரு சிலரோ எனது கணினி என்னைவிட வேகமாக உள்ளது. என்று கூறுவார்கள் இதற்கு காரணம் கணினியில்இருக்கும் வன்பொருள்கள் ஆகும். மேலும் அதற்கேற்றார் போல் மென்பொருளும் சரியாக அமைய வேண்டும். 

சரி கணினி ஆமையோ முயலோ எதுவாக இருந்தாலும் இதை எப்படி நாம் சரியாக கணக்கிடுவது என்றால் இதற்கும் மென்பொருள்கள் உண்டு. அதில் ஒன்றுதான்NovaBench. மென்பொருளை தரவிறக்க சுட்டிhttp://novabench.com/download.php
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Start Benchmark Tests என்னும் பொத்தானை அழுத்தவும். சிறிது நேரம் உங்கள் கணினினுடைய RAM மற்றும் வன்பொருள்கள் சோதிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். மேலும் டிஸ்பிளே எந்த அளவு உள்ளது என துல்லியமாக பார்க்கமுடியும். 
அதற்கான காட்சி படத்தையும் காண முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மூலமாக நம் கணினியில் எதாவதுகுறையிருப்பின் அதையும் அறிந்து கொள்ள முடியும்.

Download As PDF

கணினியில் உள்ள வெற்று போல்டர்களை நீக்க


கணினியில் உள்ள வெற்று போல்டர்களை நீக்க:

வீடு என்றால் பூஜைஅறை, சமயல்அறை, படுக்கைஅறை, மற்றும் நம்முடைய வசதிக்கேற்ப தனித்தனி பகுதிகளாக வீட்டினை கட்டி வைத்திருப்போம். அதுபோல கணினியில் உள்ள தகவல்களை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்துகொள்ள நாம் பெரிதும் பயன்படுத்துவது கோப்பறை(Folder) ஆகும். இந்த கோப்பறைகளை நாம் எளிதில் உருவாக்க முடியும். 

புதிதாக கணினியை பற்றி கற்றுக்கொள்ளும் போது, இந்த கோப்பறை உருவாக்கத்தினை பற்றியும் தெரிந்து கொள்வோம். இவ்வாறு உருவாக்கும் போல்டர்களை நாம் முறையாக பராமரிப்பது இல்லை. எதற்காக உருவாக்கி னோம் என்று கூட தெரியாமல் நம் கணினியில் பல்வேறு கோப்பறைகள் இருக்கும். ஆனால் அதைவிட பெரிய கொடுமை என்ன வென்றால் வெற்று கோப்பறைகள் பல நம்கணினியில் இருக்கும்.


இதனால் நம் கணினிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும். நாம் எதாவது ஒரு கோப்பினை தேடும் போது, ஒவ்வொரு கோப்பறையாகதான் சென்று தேட வேண்டும், அவ்வாறு தேடும் போது இந்த வெற்றுகோப்பறைகள் நமக்கு எரிச்சலை உண்டாக்கும். வீட்டு பயன்பாடு என்றால் சரி ஆனால் அலுவலக பயன்பாடு என்றால் சொல்ல தேவையில்லை. 

சரி இவ்வாறு இருக்கும் வெற்று போல்டர்களை நாம் ஒவ்வொன்றாக தேடி நீக்க வேண்டும் என்றாலும் அதுவும் சலுப்பூட்ட கூடிய விஷயம்தான், ஆனால் இதுபோன்ற வெற்று கோப்பறைகளை அழிக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது. மென்பொருளை தரவிறக்கசுட்டி
http://www.filemanagersoft.com/emptyfolderremover.html   


மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Open Folder என்னும் பொத்தானை அழுத்தி எந்த ட்ரைவினை (C: D: E: ) குறிப்பிட்டு ஒகே செய்யவும். சிறிது நேரத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு வெற்று கோப்பறைகள் பட்டியலிடப்படும். அதை தேர்வு செய்து Delete Checked From Disk எனும் பொத்தானை அழுத்தி நீக்கி கொள்ளவும். இதே முறையை பின்பற்றி கணினியில் உள்ள அனைத்து வெற்று கோப்பறைகளையும் நீக்கி கொள்ள முடியும். இதன் மூலம் மேலும் உங்கள் கணினியை நீங்கள் அழகுபடுத்த முடியும்.
Download As PDF

தமிழில் கணனி செய்திகள்: தமிழ் கம்ப்யூட்டர்.

2010-ம் ஆண்டின் பதிவுகள் ஒரே பக்கத்தில்: முகப்பு பக்கம்
தமிழில் கம்ப்யூட்டர் சம்பந்தமான பல விபரங்களை இந்த வலைப்பூவில் காணக் கிடைக்கின்றது. கடந்த 2010 -ஆம் ஆண்டு வெளிவந்த சில கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்.  
 தங்களின் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும்.  அன்புடன்  சிவசுகு 
 (நன்றி கே .எம் .தர்மா வெப்சைட் ) 
Download As PDF